தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

24.4.11

தபால் வாக்கு: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

தபால் வாக்குகளை தங்களது கட்சிக்கு சாதகமாக போடுமாறு அரசியல் கட்சியினரோ, அரசு ஊழியர் சங்கங்களோ பிரசாரம் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
 
ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் பணியாற்றிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், போலீஸôர் ஆகியோருக்கு தபாலில் வாக்கு அளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் மொத்தம் 2 லட்சத்து 88 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியாற்றினர்.  

இவர்கள் வாக்களிக்க ஏதுவாக அவர்களுக்கு தபால் வாக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பெட்டியில் அவர்கள் தங்களது வாக்குகளை மே 13-ம் தேதி காலை வரை செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  

தபால் வாக்குகளுக்கு நீண்ட நாள் கால அவகாசம் வழங்கப்பட்டதுக்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், காட்பாடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் துரைமுருகனின் ஆதரவாளர்கள் தபால் வாக்குகளை மிரட்டிப் பெற்று வருவதாகப் புகார் எழுந்தது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியிலும் தபால் வாக்குகள் பணத்துக்கு விற்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.  

இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: தபாலில் வாக்களிக்கும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், அரசு ஊழியர் சங்கங்கள் ஆகியோர் அணுகி பிரசாரம் மேற்கொள்வதாகவும், தங்களுக்குச் சாதகமாக வாக்களிக்க நிர்பந்திப்பதாகவும் பத்திரிகைகளில செய்திகள் வருகின்றன.  

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் ஏப்ரல் 11-ம் தேதி மாலை 5 மணியோடு நிறைவடைந்துவிட்டது. அதன்பிறகு, எந்த அரசு ஊழியரும் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. அரசியல் கட்சிகளுக்காகப் பிரசாரம் மேற்கொள்வதோ, வாக்காளர்களை நிர்பந்திக்கவோ கூடாது.  

இதில் அரசு ஊழியர்கள் யாரேனும் தவறு செய்தால் அவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.  

அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் இப்போது பிரசாரம் மேற்கொள்வதோ, வாக்காளர்களை நிர்பந்திப்பதோ நடத்தை விதிமுறைகளை மீறும் செயல் ஆகும். விதிமுறைகளை மீறுவோர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்