அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறைக்கு பின், ஜூன் 1ல் திறக்க வேண்டும் என  பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 
பெரும்பாலான மெட்ரிக் பள்ளிகளில்  மார்ச் இறுதியில் இருந்தே விடுமுறை விடப்பட்டுள்ளன. உயர்நிலை, மேல்நிலைப்  பள்ளிகளில் ஏப்ரல் 21ல் இறுதி தேர்வு முடிந்து, இன்று முதல் விடுமுறை  துவங்கியுள்ளது. விடைத்தாள் திருத்துதல், தேர்வு முடிவு வெளியிடுதல்,  மாணவர் சேர்க்கை போன்ற காரணங்களால் பல பள்ளிகளில், ஆசிரியர்கள் இம்மாத இறுட  வரை பள்ளிக்கு வரும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. துவக்கக் கல்வித்துறையில்  அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்., 30 வரை பள்ளிகள் செயல்படும். 
இந்நிலையில்  கோடை விடுமுறைக்கு பின் அனைத்து பள்ளிகளும் ஜூன் 1ல் திறக்க வேண்டும்.  பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள்  கையில் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 
நன்றி: 


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக