தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

19.4.11

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஊதியமில்லை? இடைநிலை ஆசிரியர்கள் முறையீடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு உழைப்பூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  

நடைபெற்ற தேர்தலையொட்டி வீடுவீடாகச் சென்று புகைப்படத்துடன்கூடிய வாக்குச்சாவடிச் சீட்டு வழங்கும் பணிக்கு மாவட்டத்தில் 2,766 பேர் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் இடைநிலை ஆசிரியர்கள். அவர்கள் ஏப். 1 முதல் 11-ம் தேதிவரை வீடுவீடாகச் சென்று சீட்டுகளை வழங்கினர். கடந்த 10-ம் தேதி சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியிலிருந்து அடையாளச் சீட்டு வழங்கும் பணியை மேற்கொண்டனர்.  தினமும் வழங்கப்பட்ட சீட்டுகள் குறித்த விவரம் தொலைபேசி மூலம் சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற பயிற்சி வகுப்புகளிலும் அவர்கள் பங்கேற்றனர். ஆனால் இதற்கான உழைப்பூதியம் வழங்கப்படாதது ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

இந்நிலையில், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட கிளை நிர்வாகிகள் மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஆட்சியருமான ராஜேந்திர ரத்னூவை திங்கள்கிழமை சந்தித்து மனு அளித்தனர். 

விவரம்
 மாவட்டத்தில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கப்பட்டு வீடுவீடாகச் சென்று வாக்குச்சாவடிச் சீட்டு, ஒப்புகைக் கையொப்பம் பெற்றபின் வழங்கும் பணியை உரிய நேரத்தில் செய்து முடித்தனர். ஆனால் அதற்கான உழைப்பூதியம் வழங்கப்படவில்லை.  1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பணிச்சுமை சாதாரண வாக்குச்சாவடிகளைவிட இருமடங்காக இருந்தது.   எனவே, அதைக் கருத்தில்கொண்டு ஊதியம் கிடைக்கச் செய்ய வேண்டும். 

மேலும் ஏப். 10-ல் வாக்குச்சாவடிகளில் அமர்ந்து பணியாற்றியோருக்கும் உழைப்பூதியம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றனர் அவர்கள்.

நன்றி:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்