தமிழகத்தில் தேர்தலுக்கு பின், ஒரு மாதம் தாமதமாக மே 13ம் தேதி ஓட்டு  எண்ணப்படுவதால், அன்றைய தினம் வரை தபால் ஓட்டு போட வாய்ப்பு உள்ளது. 
தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் ஓட்டுச் சாவடிக்கு சென்று ஓட்டு போடுவது  வழக்கம்.  ஆனால், தேர்தல் பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள், ராணுவத்தினர்,  போலீசார் உட்பட பலர் அன்றைய தினம் ஓட்டுச் சாவடிக்கு சென்று ஓட்டு போட  முடியாது.  தேர்தல் நாளில் ஓட்டு போட முடியாத வாக்காளர்கள், தபால் மூலம்  ஓட்டு போட வாய்ப்பு வழங்கப்படுகிறது. 
தபால் ஓட்டுக்கான விண்ணப்பம்   ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் நடத்தும் அதிகாரி மூலம் வழங்கப்படுகிறது.   வழக்கமாக, தேர்தல் முடிந்து 15 நாட்களுக்குள் ஓட்டு எண்ணிக்கை நடக்கும்.  அதுவரை வாக்காளர்கள் தபால் ஓட்டு போடுவார்கள். தற்போது, தமிழகத்தில் ஏப்ரல்  13ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தாலும், பிற மாநில தேர்தலை கருத்தில்  கொண்டு ஒரு மாதத்துக்கு பின், மே 13ம் தேதி ஓட்டு எண்ணப்படுகிறது.  எனவே,  தேர்தல் முடிந்தாலும், ஒரு மாத இடைவெளிக்கு பின்பே ஓட்டு எண்ணப்படுகிறது.   அன்றைய தினம் காலை 8 மணி வரை வாக்காளர்கள் தபால் ஓட்டு போட முடியும். 
இது  குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி கூறியதாவது: 
மற்ற வாக்காளர்கள் ஏப்ரல்  13ம் தேதியே ஓட்டு போட்டு விடுவர். தபால் ஓட்டு போடுபவர்களுக்கு மட்டும் மே  13ம் தேதி வரை அவகாசம் உள்ளது.  அவர்கள் ஓட்டு எண்ணிக்கை நடக்கும்  இடத்துக்கு காலை 8 மணிக்குள் தபால் ஓட்டு கொண்டு வந்தால் கூட ஏற்றுக்  கொள்ளப்படும். அதுபோல, அஞ்சல் ஊழியர்கள் மூலம் தபால் ஓட்டுகளை காலை 8  மணிக்குள் ஓட்டு எண்ணும் இடத்தில் பட்டுவாடா செய்யவும் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி: 



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக