தேர்தல் ஓட்டுபதிவு அலுவலகங்களுக்கு செல்லும் அலுவலர்களுக்கு, எந்த பூத்  ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை நெட் மூலம் எடுத்து கொடுப்பதாக கூறி,  ராமநாதபுரத்தில் வசூல் செய்த பிரவுசிங் சென்டருக்கு தேர்தல் அலுவலர்கள்  "சீல்' வைத்தனர்.
  
நேற்று ராமநாதபுரம் தொகுதியில் ஆசிரியர்களுக்கு எந்த ஓட்டு சாவடியில்  பணி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை இன்டர்நெட் மூலம் தெரிந்து கொள்ளலாம், என்ற  தகவல் பரவியது. இதை அறிந்து ஆசிரியர்கள், சாலை தெருவில் உள்ள பாக்யா  பிரவுசிங் சென்டருக்கு சென்று பத்து ரூபாய் கொடுத்து, தேர்தல்  வெப்சைட்டிலிருந்து பிரின்ட் அவுட் எடுத்து வாங்கி சென்றுள்ளனர். தகவலறிந்த  ராமநாதபுரம் உதவி தேர்தல் அலுவலர் பிச்சை பிரவுசிங் சென்டருக்கு சீல்  வைத்து பிரின்ட் அவுட் எடுத்தவர்களை விசாரணை செய்து வருகிறார். 
தேர்தல்  அலுவலர் முத்துகுமரன் கூறும்போது, "" தேர்தல் பணியில் யாருக்கு எந்த  ஓட்டுசாவடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தேர்தலின் முதல் நாள்தான் தெரியும்.  ஆனால், தவறான தகவலை பரப்பி, நெட்டிலிருந்து எடுப்பதாக கூறி, பலரும்  பிரவுசிங் சென்டரில் பிரின்ட் அவுட் எடுத்து, அதை விலைக்கு வாங்கி  சென்றனர். இதுபோல் தேர்தல் தொடர்பாக தவறான தகவலை பரப்புவது தவறு என்பதால்  பிரவுசிங் சென்டருக்கு சீல் வைத்து விசாரித்து வருகிறோம்,'' என்றார். 
நன்றி:


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக