வாக்காளர் அடையாளச் சீட்டை (பூத் ஸ்லிப்) வாக்குச்சாவடிக்கு கொண்டு  செல்லாவிட்டாலும், வாக்களிக்கலாம் எனத் தேர்தல் கமிஷன்  அறிவித்துள்ளது.
தமிழகம் 13ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. கடந்த  தேர்தல் வரை, ஓட்டுப்பதிவிற்கு முந்தைய நாள் அரசியல் கட்சியினர் வீடு  வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்குவர். அதில், வாக்காளர்  பெயர், பாகம் எண், வரிசை எண் ஆகியவை இடம் பெற்றிருக்கும். வாக்காளர்களும்  அதை வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்வர். அங்கிருக்கும் அலுவலர்கள்,  சிலிப்பில் குறிப்பிட்டுள்ள பாகம் எண்ணில் பெயர் இருக்கிறதா என சரி  பார்ப்பர். 
பூத் சிலிப் கொடுக்கிறோம் என்ற பெயரில், அரசியல்  கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதாகப் புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து,  அரசியல் கட்சிகள், "பூத் ஸ்லிப்' வழங்க தேர்தல் கமிஷன் தடை விதித்தது.  அதற்கு பதிலாக, பூத் அலுவலர்கள் மூலம் நேரடியாக வாக்காளர்களுக்கு, "பூத்  ஸ்லிப்' வழங்க உத்தரவிட்டது. அதன்படி, தற்போது வீடு வீடாக பூத் சிலிப்  வழங்கும் பணி நடந்து வருகிறது. ஆனால், பூத் சிலிப்பில் இச்சீட்டு  வாக்காளரின் வசதிக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதை வாக்குச்சாவடிக்கு கொண்டு  வர வேண்டிய கட்டாயமில்லை என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளது. 
இது,  சிலரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பூத் சிலிப் கொண்டு வர வேண்டிய  கட்டாயமில்லை என்றால் அதை ஏன் வழங்க வேண்டும் எனக் கேள்வி எழுந்துள்ளது. இது  குறித்து அதிகாரிகள் கூறுகையில், "பூத் ஸ்லிப்' கொண்டு வந்தால், வாக்காளர்  பட்டியலில் அவர்களின் பெயரை காண்பது எளிதாக இருக்கும். "பூத் ஸ்லிப்'  இல்லாவிட்டால், வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து ஓட்டளிக்கலாம்' என  தெரிவித்தனர். 
நன்றி: 


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக