தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

30.5.12

கோடை விடுமுறையில் பயிற்சி - ஆசிரியர்களுக்கு 2 நாள்கள் ஈடுசெய் விடுப்பு வழங்க கோரிக்கை

மே 29 முதல் 31 வரை நடைபெறுக்கின்ற முப்பருவ கல்வி முறை, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை தொடர்பான பயிற்சியில் பங்கேற்று பயிற்சி பெறும் ஆசிரியர்களுக்கு 2 நாள்கள் ஈடுசெய் விடுப்பு வழங்க வேண்டுமெனத் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் க. இசக்கியப்பன், பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழக அரசு 2012-13-ம் கல்வியாண்டில் 1-8 வகுப்புகளுக்கு முப்பருவ தேர்வுமுறையை அமல்படுத்தியுள்ளது. அதற்கான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை பயிற்சி தொடக்கக்கல்வித் துறையில் 2011-12-ம் கல்வியாண்டு இறுதியில் (ஏப்ரல் மாதத்தில்) நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் 6,7,8 வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் கோடை விடுமுறையான மே 28-31 நாட்களில் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஏப்ரல் 10ம் தேதி எங்களது அமைப்பின் சார்பில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களைச் சந்தித்து பயிற்சிகளை 2012 ஜூன் முதல் வாரத்தில் நடத்திட கோரிக்கை விடப்பட்டது. தற்போது விடுமுறை நாளில் பயிற்சி நடத்தப்பட்டதால் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு 2 நாள்களுக்கு 2012-13ம் கல்வியாண்டில் அந்நாட்களை ஈடு செய்திடும் விதமாக ஈடுகட்டும் விடுப்பு வழங்கிட வேண்டுமென எங்களது அமைப்பின் சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
.


புதிய கல்வியாண்டு - பள்ளிக் கல்வி இயக்குநரின் வாழ்த்தும் அறிவுரையும்

அரசு பள்ளி திறப்பில் மாற்றமில்லை

ஏற்கனவே அறிவித்தபடி, அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் அனைத்தும், 1ம் தேதி திறக்கப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளிகள், 4ம் தேதி முதல் திறக்கப்படுவதாக அறிவித்துள்ளன.

கோடை விடுமுறைக்குப் பின், மீண்டும் பள்ளிக்கு கிளம்ப மாணவர்கள் தயாராகி வருகின்றனர். கடந்த ஆண்டு, பாடப் புத்தகங்கள் கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டதால், 15 நாட்கள் தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால், கல்வியாண்டு முழுவதும் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. பொதுத்தேர்வும், தள்ளிப்போனது. பாடப் புத்தகங்களில் உள்ள குறைகள் சரி செய்யப்பட்டு, புதுப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு முன்கூட்டியே வினியோகிக்கப் பட்டுள்ளன.

ஏற்கனவே அறிவித்தபடி 1ம் தேதி அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், பள்ளி திறந்ததும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஜூன் 1ம் தேதி வெள்ளிக் கிழமை வருகிறது. அதன்பின், சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்கள். எனவே, 4ம் தேதி திங்கட் கிழமையில் இருந்து பள்ளிகளை துவங்குவதற்கு, பெரும்பாலான தனியார் பள்ளி நிர்வாகங்கள் முடிவு செய்து, அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

வேலை நாட்கள் விவரம்
: பள்ளிக் கல்வியின் கீழ் இயங்கும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், ஜூன் 1ல் துவங்கி, 2013 ஏப்ரல் 20ம் தேதி வரை, 200 நாட்கள் வேலை நாட்களாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள், 2013 ஏப்ரல் 30ம் தேதி வரை, 220 நாட்கள் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நன்றி:

 

28.5.12

பணிகள் அரைகுறை: டி.இ.டி., தேர்வு ஜூலை 12க்கு தள்ளிவைப்பு: டி.ஆர்.பி., திடீர் அறிவிப்பு

கேள்வித்தாள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிவடையாததால், ஜூன் 3ம் தேதி நடக்க இருந்த டி.இ.டி., தேர்வு, ஜூலை 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தேதி மாற்றம்: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு: ஜூன் 3ம் தேதி டி.இ.டி., தேர்வு நடைபெறும் என, மார்ச் 7ம் தேதி அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தேர்வுக்கான பணிகள் நடந்து வரும் நிலையில், தேர்வர்களிடம் இருந்து, அரசுக்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கும், "தேர்வை தள்ளி வைக்க வேண்டும்,' என, தொடர்ந்து கோரிக்கை வந்தது.தேர்வுக்கு தயாராவதற்கான கால அவகாசம் குறைவாக உள்ளது என்றும்; டி.இ.டி., தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களே, வேறு பல தேர்வுகளை எழுத இருப்பதாக தெரிவித்து, தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று, டி.இ.டி., தேர்வு, ஜூலை 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அரசு வேலை நாளில் இத்தேர்வு நடைபெறுவதால், அதற்கேற்ப உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் எனக் கூறப்பட்டது.

யார் எழுத வேண்டாம்?இதேபோல், யாரெல்லாம் டி.இ.டி., தேர்வை எழுதத் தேவையில்லை என கேட்டும், பலர் கடிதங்களை அனுப்பினர்.அதன்படி, 2010, ஆக., 23ம் தேதிக்கு முன், ஆசிரியர் தேர்வு தொடர்பான விளம்பரம் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று, அதன்பின் பணி நியமனம் பெற்றவர்கள், டி.இ.டி., தேர்வை எழுதத் தேவையில்லை.இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


காரணம் என்ன?தேர்வை தள்ளி வைப்பதற்கு உண்மையான காரணம் என்னவென்று விசாரித்த போது, அந்த வட்டாரத்தில் கூறப்பட்ட தகவல்:கேள்வித்தாள்கள் இன்னும் தயாராகவில்லை; அதேபோல், "ஹால் டிக்கெட்' தயாரிக்கும் பணிகளும் முடியவில்லை. இதற்கிடையே, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்யாமல் அரைகுறையாக விட்டுள்ளனர்.இப்படிப்பட்ட விண்ணப்பங்களை அப்படியே ஏற்பது, பின்னாளில் பிரச்னை வரலாம். எனவே, விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்யாதவர்கள், தவறுகளை சரி செய்யவும், விடுபட்ட இடங்களை நிரப்பவும், ஒரு வாய்ப்பு தரப்படும்.அதன்படி, விண்ணப்பதாரர், விண்ணப்ப எண்களை இணையதளத்தில் (தீதீதீ.tணூஞ.tண.ணடிஞி.டிண) பதிவு செய்தால், விண்ணப்பத்தின் நிலை மற்றும் அதில் உள்ள தவறுகள் அனைத்தும் தெரிய வரும். இதை சரி செய்த பின், சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்கப்படும். இதுபோன்ற பணிகளுக்காகவும், தேர்வர்கள் நன்றாக தேர்வுக்கு தயாராவதற்கு வசதியாகவும், ஒரு மாதம் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அன்றே சொன்னது "தினமலர்!'"டி.இ.டி., தேர்வை தள்ளி வைப்பது குறித்து, டி.ஆர்.பி., ஆலோசித்து வருகிறது' என்ற செய்தியை, ஏப்., 8ம் தேதி, முதல் பக்கத்தில், "தினமலர்' நாளிதழ் வெளியிட்டது. இதற்கிடையே, கடந்த 18ம் தேதி, "தேர்வு திட்டமிட்டபடி, ஜூன் 3ம் தேதி நடக்கும்; அதில், எவ்வித மாற்றமும் கிடையாது' என, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி பேட்டி அளித்தார். எனினும், தற்போது, ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


ஜூலை 12ம் தேதி விடுமுறை: அரசு வேலை நாளில், டி.இ.டி., தேர்வு நடப்பதால், அதில் பணிபுரியும் ஆசிரியர் பங்கேற்க வசதியாக, அவர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்றும்; வேறொரு நாளில், பணி நாளாக அது ஈடு செய்யப்படும் என்றும் டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி:

26.5.12

CCE பயிற்சி - தேரூர் DIET முதல்வரின் அறிவிப்பு

முப்பருவ கல்வி முறை, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை பயிற்சி தொடர்பாக தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எட்வின் பிரகாசிடம் கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் தொடர்பு கொண்டு பேசினார்.

அவர் கூறியதாவது: 
  • 6,7,8 -ம் வகுப்புகளுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் இரண்டு நாள் பயிற்சி 28.5.2012, 29.5.2012 மற்றும் 30.5.2012, 31.5.2012 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக வழங்கப்படவுள்ளது.
  • நாகர்கோவில் டதி மேல்நிலைப் பள்ளியில், நாகர்கோவில். தோவாளை, அகஸ்தீஸ்வரம், இராஜாக்கமங்கலம் வட்டாரத்தை சார்ந்த ஆசிரியர்களுக்கும் தக்கலை அமலா காண்வென்ட் மேல்நிலைப் பள்ளியில், தக்கலை, குருந்தன்கோடு, திருவட்டார் வட்டாரத்தை சார்ந்த ஆசிரியர்களுக்கும் படந்தாலுமூடு செக்ரட் ஹார்ட் மெட்ரிக் பள்ளியில் கிள்ளியூர், மேல்புறம், முஞ்சிறை வட்டாரத்தை சார்ந்த ஆசிரியர்களுக்கும் பயிற்சி நடைபெறும்.
  • இரண்டு கட்டங்களாக நடைபெறும் பயிற்சியில் எந்த ஒரு பயிற்சியிலும் ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.
  • ஆசிரியர்கள் எந்த மாவட்டத்தில் பணிபுரிந்தாலும் தற்போது வேறொரு மாவட்டத்தில் விடுமுறையை கழிக்க சென்றிருந்தால் அந்த மாவட்டத்தில் அவர்கள் வீட்டுக்கு அருகில் உள்ள பயிற்சி மையத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
  • தற்போது சில ஆசிரியர்களுக்கு தொலைதூர படிப்பில் பி.எட்., போன்ற ஏதேனும் தேர்வுகள் இருந்தால் அவர்களின் தேர்வு நுழைவுச் சீட்டினை பரிசீலித்து அவர்களுக்கு பயிற்சியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
.

முப்பருவ கல்வி முறை - பயிற்சியை ஜூன் முதல் வாரத்தில் நடத்த தஇஆச சார்பில் மீண்டும் கோரிக்கை

மே 29 முதல் 31 வரை நடைபெறவிருக்கின்ற முப்பருவ கல்வி முறை, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை தொடர்பான பயிற்சியை ரத்து செய்து ஜூன் முதல் வாரத்தில் நடத்த வேண்டும் எனத் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் எட்வின் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:

வரும் கல்வியாண்டில், 1 முதல் 8ம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை அமலுக்கு வருகிறது. இதையொட்டி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, பல கட்டமாக பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏப்ரல் மாத இறுதியில் துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் 1 லட்சத்து 14 ஆயிரத்து 402 பேருக்கு, பணியிடை பயிற்சி அளிக்கப்பட்டது.

தற்போது 6,7,8 வகுப்புகளுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு வரும், 28 முதல் 31ம் தேதி வரை, நான்கு நாட்கள் தொடர்ந்து பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இப்பயிற்சி, அனைத்து மாவட்டங்களிலும், நான்கு ஒன்றியங்களை ஒருங்கிணைத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பயிற்சி மையத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த கல்வியாண்டு முழுவதும் சமச்சீர் கல்வி தொடர்பான சிக்கல்களால் ஆசிரியர்களும் மாணவர்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் முழுவதும் பள்ளிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். கடந்த சில நாள்களாகத்தான் ஆசிரியர்கள் கோடை விடுமுறையில் உள்ளனர். இந்நிலையில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை தொடர்பான பயிற்சிக்கு ஆசிரியர்கள் அழைக்கப்பட்டிருப்பதால் அவர்கள் பெரிதும் மன உழைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளளது.

மே மாத இறுதியில் நடைபெற இருக்கின்ற பயிற்சியால் ஆசிரியர்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டுள்ளது.
  • பெரும்பான்மையான ஆசிரியர்கள் உயர்கல்வி பயில்பவர்களாக இருக்கின்றனர்.
  • B.Ed., M.Ed. போன்ற கல்வியியல் பட்டப் படிப்புகளுக்கான பயிற்சி வகுப்புகள் மே மாதத்தில் நடைபெறுகிறது.
  • தொலைநிலைக் கல்வி மூலம் B.A., B.Sc., M.A., M.Sc., B.Ed., M.Ed. போன்ற கல்வி பயில்வோருக்கு தேர்வுகள் எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
  • வெளி மாவட்டங்களில் பணியாற்றுவோர் விடுமுறைக்கு தங்கள் வீடுகளுக்கு சென்றவர்கள் உடனடியாக பணியிடங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
  • திருமணம் போன்ற குடும்ப விழாக்கள் தொடர்பாக திட்டமிட்டவர்களுக்கு அவற்றில் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
  • வழிபாட்டுத்தலங்கள் மற்றும் சுற்றுலா சென்றவர்கள் உடனடியாக திரும்ப இயலாத நிலை
இத்தகு காரணங்களால் மே 29 முதல் 31 வரை நடைபெறுகின்ற பயிற்சியை ரத்து செய்து ஜூன் முதல் வாரத்தில் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
.

முப்பருவ முறை பயிற்சி: பல்கலை தேர்வு எழுதும் ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டாம் - இயக்குநரின் செயல்முறைகள்

Cce Training to UP Teachers-revised Instructions

பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியருக்கு கட்டாய ஓய்வு: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

பாலியல் புகாரில் சிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் மீது, இனி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கட்டாய ஓய்வு, பணி நீக்கம், டிஸ்மிஸ் ஆகிய, ஏதாவது ஒரு தண்டனை வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.


பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர் மீது, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை, சஸ்பெண்ட், பணியிட மாற்றம் போன்ற நடவடிக்கைகள் மட்டுமே, இதுவரை எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த தண்டனைகளால், ஆசிரியருக்கு பெரிய அளவில் பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதனால், ஒழுங்கீனச் சம்பவங்கள், அவ்வப்போது நடந்து விடுகின்றன.

அமைச்சர் அறிவிப்பு:கடந்த மாதம் 18ம் தேதி சட்டசபையில், "பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியரை, "டிஸ்மிஸ்' செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி தெரிவித்தார்.அதை தொடர்ந்து, புகாரில் சிக்கும் ஆசிரியர் மீது, என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என, பள்ளிக் கல்வித்துறை, அறிக்கையை ஒன்றை தயாரித்து, தமிழக அரசுக்கு அனுப்பியது.

அரசாணை வெளியீடு:அதன் அடிப்படையில், தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. 17ம் தேதியிட்ட அரசாணையில், பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா கூறியிருப்பதாவது:மாணவர்களுக்கு முன் உதாரணமாகவும், வழிகாட்டியாகவும் செயல்பட வேண்டிய ஆசிரியர்களில் சிலர், மாணவ, மாணவியரிடம், ஒழுக்கக்கேடான முறையில் நடந்து கொள்கின்றனர்.இதனால், மாணவர் சமுதாயம், குறிப்பாக பெண் குழந்தைகள் மோசமாக பாதிக்கப்படுவது குறித்து, சமீபகாலமாக ஊடகங்களில், செய்திகள் அதிகளவில் வெளி வருகின்றன. இதுகுறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.இந்த அவல நிலையை உடனடியாக களையவும், மாணவ, மாணவியரிடம், ஆசிரியர் தவறான முறையில் நடந்து கொள்ளும் நிலையை முற்றிலும் தவிர்ப்பதற்கும், உரிய நடவடிக்கைகள் எடுக்க, பள்ளிக்கல்வி இயக்குனர், அரசுக்கு பரிந்துரைத்தார். பரிசீலனைக்குப் பின், தமிழக அரசு முடிவை எடுத்துள்ளது.

தண்டனை என்ன
?
  • அதன்படி, தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு கடும் தண்டனையாக, கட்டாய ஓய்வு, பணி நீக்கம் மற்றும் பணியறவு (டிஸ்மிஸ்) போன்ற தண்டனைகள் வழங்கப்படும்.
  • அரசுப் பள்ளி ஆசிரியரைப் பொறுத்தவரை, அரசுப் பணியாளர் நடத்தை விதி 19(2), இதற்குப் பொருந்தும். இவ்விதியை மீறுபவர்களுக்கு, மேற்குறிப்பிட்ட தண்டனைகளுள் ஒன்று வழங்கப்படும். அத்துடன், சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.
ஆலோசனை
  • பள்ளி குழந்தைகளும், மாணவ, மாணவியரும், பிற நபர்களின் தவறான நடவடிக்கைகளில் இருந்து, தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில், அவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
  • மாணவ, மாணவியரின் மனநிலை பிரச்னைகளை களைய, உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கென, பள்ளிக்கல்வித் துறை மூலம், உளவியல் ஆலோசகர், உதவியாளர் மற்றும் அனைத்து வகை வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தி, மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வும், ஆசிரியருக்கு ஆலோசனைகளும் வழங்க வேண்டும்.
இவ்வாறு, செயலர் சபிதா கூறியுள்ளார்.
தனியார் பள்ளி நடவடிக்கை என்ன?தவறு செய்யும் தனியார் பள்ளி ஆசிரியர் மீதான நடவடிக்கை என்ன என்பது குறித்து, நேரடியாக அரசாணையில் எதுவும் தெரிவிக்கப் படவில்லை. எனினும், அரசுப் பள்ளி ஆசிரியருக்கு தண்டனை வழங்க, என்னென்ன நடைமுறைகள் கடைபிடிக்கப் படுகிறதோ, அதே நடைமுறை, தனியார் பள்ளி ஆசிரியருக்கும் பொருந்தும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி:

 

அரசு பள்ளி மாணவர் "யூனிபார்ம்" கலர் மாற்றம் : பெற்றோர் அதிர்ச்சி

தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையான அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் "யூனிபார்ம்" கலர் இந்த கல்வியாண்டு முதல் மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.


தற்போது 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு வெள்ளை கலர் சட்டையும், காக்கி கலர் பேண்ட்டும் சீருடையாக உள்ளது. ஒரு சில பள்ளிகளில் புளு கலர் பேண்ட்டும், மாணவிகளுக்கு வெள்ளை ப்ளவுஸ், புளு கலரில் பாவாடை, தாவணியும் அல்லது பேண்ட், துப்பட்டாவுமாக உள்ளது. ஆனால், இந்த கல்வியாண்டு முதல் யூனிபார்ம் கலர் மாற்றப்பட்டு, மாணவர்களுக்கு "லைட் ப்ரவுன்' கலர் சட்டையும்,"மெரூன்' கலரில் பேண்ட் அல்லது டிரவுசரும்,மாணவிகளுக்கு ப்ளவுஸ், துப்பட்டா, டாப்ஸ் லைட் ப்ரவுன் கலரிலும், பேண்ட் மெரூன் கலரிலும் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

உதவிபெறும் பள்ளிகளும் தப்பவில்லை: உதவி பெறும் பள்ளிகளில் அந்தந்த பள்ளி நிர்வாகம் தான் மாணவர்களுக்கான யூனிபார்ம் கலரை இதுவரை முடிவு செய்தது. ஆனால், இந்த கல்வியாண்டு முதல் அரசு பள்ளிக்கான யூனிபார்ம் முறையே உதவி பெறும் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் அதிர்ச்சி: கோடை விடுமுறை முடிந்து, பெரும்பாலான அரசு பள்ளிகள் ஜூன் 1 ல் திறக்கப்படவுள்ளதால், பெரும்பாலானபெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு செல்ல தயார்படுத்தும் வகையில், பழையகலரிலான யூனிபார்ம்களை ரெடியாக வைத்து உள்ளனர். இந்த நிலையில் யூனிபார்ம் கலர் மாற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "இனி எப்போது துணி எடுத்து யூனிபார்ம் ரெடி செய்ய முடியும்?' என்ற கவலையில் பெற்றோர் ஆழ்ந்துள்ளனர்.

மதுரையை சேர்ந்த உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:அரசு பள்ளி மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 4 செட் சீருடைகளை அரசே வழங்குகிறது. சத்துணவு சாப்பிடாத மாணவர்கள் அதே கலரில் வெளியில் துணி எடுத்து தைத்துக்கொள்ள வேண்டும். அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கடந்தாண்டு யூனிபார்ம்கள், பள்ளி இறுதி நாட்களில் தான் வழங்கப்பட்டன என்றார்.

நன்றி:

 

25.5.12

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு

2012 - 2013 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் / காப்பாளர், பட்டதாரி ஆசிரியர் / காப்பாளர், சி றப்பு ஆசிரியர்கள், ஆரம்ப / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்க்கான பொது மாறுதல் கலந்தாய்வுகள் ஆணையர் தலைமையில் நடைபெற உள்ளது.

இடம் : அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, நாகல்கேணி, குரோம்பேட்டை, சென்னை - 600 044

நாள் : 02.06.2012 முதல் 07.06.2012.


தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு - பயிற்சி கால அட்டவணை

  • First Spell (28th and 29th of May) 
  • Second Spell (30th and 31st of May)
FIRST DAY PROGRAMME

1. 09.30 am -10.00 am Registration, Inauguration & Pre Test

2. 10.00 am-11.30 am CCE Upper Primary General Guidelines PPT Presentation

3. 11.30 am-11.45 am Tea Break

4. 11.45 am-01.00 pm CCE Upper Primary General Guidelines PPT Presentation and Discussion

5. 01.00 pm-02.00 pm Lunch Break

6. 02.00 pm-02.15 pm Dividing Participants into subject groups

7. 02.15 pm-03.45 pm Subject Manual PPT Presentation

8. 03.45 pm-04.00 pm Tea Break

9. 04.00 pm-05.00 pm Discussion on Subject Manual 

10. 05.00 pm-05.30 pm Allotting Subject Units to each participant for preparation and presentation of FA (a) activities (They have to prepare and present their activities on the next day) 
 
SECOND DAY PROGRAMME

1.    10.00 am-11.30 am Presentation of FA (a) activities in the subject by participants. 

2.    11.30 am-11.45 am  Tea Break 

3.    11.45 am-01.00 pm Presentation of FA (a) activities in the subject by participants.-continues 

4.    01.00 pm-02.00 pm  Lunch Break 

5.    02.00 pm-03.30 pm Presentation of FA (a) activities in their subject by participants – continues 

6.    03.30 pm-04.00 pm  Tea Break 

7.    04.00 pm-05.00 pm  Post –Test and valediction 
.
 

24.5.12

பொது மாறுதல் கலந்தாய்வு - 2012 - 13 நெறிமுறைகள்

Trans Norms 2012-13

முப்பருவ தேர்வு முறை: 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு மே 28 - 31இல் பயிற்சி

அனைத்து வகை நடுநிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலைப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 6,7,8 பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு தொடர் மாறும் முழுமையான மதிப்பீட்டு முறை சார்ந்து மே 28 - 31இல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சியானது அனைத்து மாவட்டங்களிலும் நான்கு ஒன்றியங்களை ஒருங்கிணைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பயிற்சி மையத்தில் நடத்தப்பட உள்ளது.

இப்பயிற்சியில் 6 முதல் 8 வகுப்பு வரை பயிற்றுவிக்கும் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

தமிழக அரசின் செய்தி வெளீயீடு எண். 307, நாள். 24.5.2012. 
.

TET வினா விடை - கணிதம் - பொது 2

ஒரு எண் 2ஆல் முழுவதுமாக வகுக்கப்பட்டால் அந்த எண் இரட்டை எண்.
* 2,4,6,8,0 முடிவுறும் எண்கள் இரட்டை எண்கள்.
* 1,3,5,7,9ல் முடிவுறும் எண்கள் ஒற்றை எண்கள்.
ஒரே வகுத்தியைக் கொண்ட முழு எண் 1
எல்லா எண்களையும் வகுத்தியாகக் கொண்ட முழு எண் 1
ஒரு எண்ணின் கடைசி இலக்கம் 2-ல் வகுபட்டால் அந்த எண் 2-ல் வகுப்படும்
ஒரு எண்ணின் கடைசி இரண்டு இலக்கங்கள் 4-ஆல் வகுப்பட்டால் அந்த எண் 4-ல் வகுப்படும்.
ஒரு எண்ணின் கடைசி இரண்டு மூன்று இலக்கங்கள் 8-ல் வகுபட்டால் அந்த எண் 8-ல் வகுப்படும்.
ஒரு எண்ணின்கடைசி மூன்று இலக்கங்கள் 8-ல் வகுப்பட்டால் அந்த எண் 8-ல் வகுப்படும்.
ஒரு எண்ணின் கூட்டுத்தொகை 3 -ல் வகுபட்டால் அந்த எண் 3-ல் வகுப்படும்.
ஒரு எண்ணின் கூட்டுத்தொகை 9-ல் வகுப்பட்டால் அந்த எண் 9-ல் வகுப்படும்.
ஒரு எண்ணின் கடைசி இலக்கம் 0,5 என இருந்தால் அந்த எண் 5-ல் வகுப்படும்.
ஒரு எண்ணின் இலக்கங்கள் ஒன்றைவிட்டு ஒன்று கூட்டிக் கிடைக்கும் தொகையின் வித்தியாசம் 0 அல்லது 11-ன் மடங்காக இருந்தால் அந்த எண் 11-ல் வகுப்படும்.
ஒரு எண் 3 மற்றும் 5-ல் வகுப்பட்டால் முழு எண்ணும் 15ல் வகுப்படும்.
ஒரு எண் 2 மற்றும் 3  -ஆல் வகுப்பட்டால் அந்த எண் முழுவதும் 6 ஆல் வகுப்படும்.
கடைசி இலக்கம் 0-ல் வகுப்பட்டால் அந்த எண் 10-ல் வகுப்படும்.
 * தகு பின்னம் எனில் தொகுதி - சிறியதாகவும், பகுதி - பெரியதாகவும் இருக்கும்
எ.கா: 4/9,  6/7,  2/10
தகா பின்னம் என்பது தொகுதி - சிறியதாகவும், பகுதி - பெரியதாகவும் இருக்கும்.
எ.கா: 8/5, 9/6,  10/3
கலப்பு பின்னம்: ஒரு முழுஎண்ணும் ஒரு பின்னமும் சேர்த்து கலப்பு பின்னம் எனப்படும்.
எ.கா:11/2,  23/4
இயற்கணிதம்:
சமன்பாட்டினை தீர்
X+11 =13
X = 13-11
X=  2
ஃ X = 2
கூட்டுத் தொடர் மற்றும் பெருக்குத் தொடர் காண்பதற்கு,
இரட்டை எண்களின் பொது உறுப்பு 2n
ஒற்றை எண்களின் பொது உறுப்பு 2n +1
கூட்டுத்தொடரின் பொது அழைப்பு a,a+d, a+2d, a+3d இதில் a முதல் எண், d வித்தியாசம்
இயல் எண்களின் கூட்டுத்தொடர் (1,2,3,4,......n)
∑n = n(n+1)/2
இங்கு n என்பது கொடுக்கப்பட்ட தொடரின் கடைசி எண்ணாகும்.
முதல் n ஒற்றை எண்களின் கூட்டுப்பலன் (1, 3, 5, 7, .......n )
Tn = a + (n-1) d  இங்கு  d  என்பது இரு எண்களுக்கிடையே உள்ள வித்தியாசம் ஆகும்.
முதல் n  இயல் எண் வர்க்கங்களின் கூடுதல் n (2, 4, 6, 8, .......n)
∑n2 = n(n+1) (2n +1)/6
முதல் n  இயல் எண் களங்களின் கூடுதல் n (3, 6, 9, .......n)
∑n3 = n (n+1)2/2 
*  ஒரு வட்ட வடிவிலான தாமிர கம்பியின் ஆரம் 35 செ.மீ. இது ஒரு சதுரமாக வளைக்கப்பட்டால் அச்சதுரத்தின் பக்க அளவு
(அ) 220 செ.மீ (ஆ) 55 செ.மீ (இ) 35 செ.மீ (ஈ) 70 செ.மீ
*  கணித ஆய்வுக் கூடத்தால் ஏற்படும் நன்மை
(அ) பாடக் குறிப்பு தயாரிக்கும் திறன் வளர்கிறது.  (ஆ) கற்பித்தல் உபகரணம் தயாரிக்க உதவுகிறது.
(இ) திறன்களை பட்டியலிட உதவுகிறது. (ஈ) காட்சிப்பொருட்கள் மூலம் கற்பதால் கற்றல் பொருள் நிறைந்ததாக விளங்குகிறது.
*  6, 6, 9, 14, 8, 9, 9, 8 என்ற விவரங்களுக்கான இடைநிலை, முகடு மற்றும் வீச்சு ஆகியவற்றின் சராசரி
(அ) 8.5  (ஆ) 10.5  (இ) 8.8  (ஈ) 10.3
*  விதிவரு முறை என்பது
(அ) பல்வேறு எடுத்துக்காட்டுகளிலிருந்து பொது விதி  (ஆ)  தானே - கற்றல் முறை (இ) குழு கற்றல் முறை  (ஈ)  கருப் பொருளிலிருந்து பருப்பொருளை நோக்கிச் செல்லுதல்
*  ஒரு தளத்தை தீர்மானிப்பதற்கான அடிப்படைக் கட்டுப்பாடு---
(அ)  1 புள்ளி (ஆ) 3 புள்ளிகள் (இ) 2 புள்ளிகள் (ஈ) நேர்க்கோட்டிலமையாத 3 புள்ளிகள்
*  ஒரு தொலைக்காட்சிப் பெட்டி 10 %  மற்றும் 20 % ஆகிய தொடர் தள்ளுபடிகள் கொடுத்தபின் ரூ.5760 க்கு விற்கப்படுகின்றது எனில் இதன் குறித்த விலை என்ன?
(அ) ரூ.6000  (ஆ) ரூ.8000 (இ) ரூ.7000  (ஈ) ரூ.5000
*  கீழ்கண்டவற்றில் எது சரி?
(அ)  9 + 3 X 2 - 4 ÷ 2 = 10   (ஆ) 6 + 4 ÷ 2 - 1 = 4  (இ) 4 X 3 + 4 ÷ 2 = 14  (ஈ) 27 ÷ 3 - 2 X 3  = 21
*  20 எண்களின் சராசரி 59 என்க. ஒவ்வொரு எண்ணுடன் 3-ஐக் கூட்டினால் கிடைக்கும் எண்களின் சராசரி
(அ)  56  (ஆ) 62 (இ) 177  (ஈ) 196
*  ஒரு பணியாளர் ரூ. 11,250 -ஐ ஊக்கத் தொகையாகப் பெறுகிறான். இது அவரின் ஆண்டு வருமானத்தில் 15% எனில் அவரின் மாத வருமானம்.
(அ)  ரூ.75000  (ஆ) ரூ. 7250 (இ) ரூ. 6250  (ஈ) ரூ. 6000
*  120 பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகத்தில், ஒவ்வொரு பக்கத்திலும் 45 வரிகள் உள்ளன. ஒரு பக்கத்திற்கு 24 வரிகள் மட்டும் இருந்தால் புத்தகத்தில் எத்தனை பக்கங்கள் இருக்கும்.
(அ)  150  (ஆ) 165  (இ) 275  (ஈ) 225
*  ஒரு மாணவன் -5 -3 = 8 என்று கணக்கிடுகிறான். பிழை ஏற்படுவதற்கான காரணம்.
(அ) முழுக்களின் பெருக்கலைப் பற்றி கருத்து அவனுக்கு புரியாததால்
(ஆ) அவனுடைய கவனமின்மையால்
(இ) முழுக்களின் கூட்டலைப் பற்றிய கருத்து அவனுக்கு புரியாததால்
(ஈ) இதே மாதிரி கணக்குகளில் அவனுக்கு பயிற்சி தேவைப்படுவதால்
*   11 பேனாக்களின் அடக்க விலை 10 பேனாக்களின் விற்ற விலைக்கு சமம் எனில் இலாப அல்லது நட்ட சதவீதத்தைக் காண்க.
(அ) 11%  (ஆ) 1%   (இ) 21%   (ஈ) 10 %
*   பின்வருவனவற்றுள் சார்பாக எண் எது?
(அ) (7, 21)   (ஆ) (3, 15)   (இ) (3,  5)    (ஈ) (6, 2)
*   ஒர் ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 6. அந்த எண்ணிலிருந்து 18 -ஐ கழித்தால் இலக்கங்கள் இடம் மாறும் எனில் அந்த எண்.
(அ) 51  (ஆ) 24  (இ) 33  (ஈ) 42
*   ஏதேனும் மூன்று முக்கோணங்களின் கூடுதல் கீழ்கண்ட வகையில் அமைவதை உற்றுநோக்கிய மாணவன் 30º + 45º + 105º = 180º ,  30º + 60º + 90º = 180º,  45º + 55º + 80º = 180º அவற்றின் கூடுதலிலிருந்து எந்த ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் 180º என்ற முடிவுக்கு வருகிறான். இந்த கற்றல் முறையானது ---
(அ) பகுப்பு முறை (ஆ) செய்து கற்றல் முறை (இ) விதிவரு முறை (ஈ) விதிவிளக்கு முறை
*   500 செ.மீ. + 50 மீ +5 கி.மீ =
(அ) 500 மீ  (ஆ) 555 மீ (இ) 5055 மீ (ஈ) 55 மீ

TET வினா விடை - சமூக அறிவியல் - பொது 11


1. சங்க காலத்தில் தலைசிறந்து விளங்கிய சோழ மன்னர் - கரிகாலன்
2. வேப்பம் பூ மாலையை அணிந்தவர்கள் - பாண்டியர்கள்
3. நீர் வழி போக்குவரத்துக்கு உதவுவது - பரிசல்
4. கடல் பயணம் செய்வோர் எளிதில் திசை அறிய உதவுவது - திசைக் காட்டும் கருவி
5. பள்ளி ஒரு - குடும்பம்
6. மதுரையில் கடைச் சங்கம் ஏற்படுத்தியவர் - இரண்டாம் நெடுஞ்செழியன்
7. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்று அழைக்கப்பட்டவர் - இரண்டாம் நெடுஞ்செழியன்
8. பாண்டியனின் துறைமுகம் - கொற்கை
9. தலையாலங்கானத்துச் செகுவென்ற பாண்டிய நெடுஞ்செழியன் என்று அழைக்கப்பட்டவர் - இரண்டாம் நெடுஞ்செழியன்
10. சங்க காலத்தில் தலைசிறந்து விளங்கிய சோழ மன்னன் - கரிகாலன்
11. பொருநராற்றுப் படையை இயற்றியவர் - முடத்தாமக் கண்ணியர்
12. இந்தியாவில் முதல் விண்வெளி வீராங்கனை - கல்பனா சாவ்லா
13. முதன் முதலில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பிய நாடு - ரஷ்யா, ஆண்டு 1961
14. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் பெயர் - பிர்
15. இந்தியா விண்வெளிக்கு அனுப்பிய முதல் செயற்கைகோள் - ஆரிய பட்டா
16. இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா பயணம் செய்த விண்வெளிக்கலம் - சோயூஸ் T2
17. முதன் முதலில் விண்வெளிக்கு சென்ற மனிதர் - யூரி காசரின்
18. மனிதன் முதன் முதலில் நிலவிற்குச் சென்ற ஆண்டு - 1969
19. முதன் முதலில் நிலவில் காலடி வைத்த மனிதர் - நீல் ஆம்ஸ்ட்ராங்
20. இந்தியா நிலாவிற்கு விண்வெளி கலத்தை அனுப்பிய ஆண்டு - 2008
21. இந்தியா முதன் முதலில் நிலவிற்கு அனுப்பிய விண்வெளி கலத்தின் பெயர் - சந்திராயன் 1
22. இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பயணம் செய்த விண்வெளிக் கலம் - கொலம்பியா
23. கர்நாடக மாநிலம் கோலாரில் கிடைப்பது - தங்கம்
24. இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் - ராகேஷ் சர்மா
25. இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா விண்வெளியில் பயணம் செய்த ஆண்டு - 1984
26. ஆபரணங்கள் செய்யப் பயன்படுவது - தங்கம்
27. கர்நாடக மாநிலம் கோலாரில் கிடைப்பது - தங்கம்
28. கண்ணாடித் தொழிற்சாலையில் பயன்படுவது - மாங்கனீசு
29. வரலாற்றின் உயிர்நாடி - காலம்
30. இந்திய தேசியக் காங்கிரஸ் தொடங்கப்பட்ட வருடம் - 1885
31. சமுதாய உணர்வை குழந்தைகளிடம் வளர்ப்பது - குடும்பம் - பள்ளி


நன்றி:

 

பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்