தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

11.5.12

TET வினா விடை - அறிவியல் - பொது 9

* புரோட்டோ பிளாசத்திலுள்ள நீரின் சதவீத இயைபு - 90%

* அடர்த்தி குறைவான பொருள் - வாயு

* கவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று - கருங்கல் துண்டு

* மூன்றாம் வகை நெம்புகோல் உதாரணம் - மீன்தூண்டில்

* உயிரினங்களைப் பற்றிய அறிவியல் பிரிவு - உயிரியல்

* மனிதனின் கருவுறுகாலம் - 280 நாள்கள்

* அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள் - போலிக்கால்கள்

* வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது - ஹார்மோன்கள்

* புவி நாட்டம் உடையது - வேர்

* இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் - வால்வாக்ஸ்

* யானையின் கருவுறு காலம் - 17 - 20 மாதங்கள்

* டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் - புகையிலை

* ரேபிஸ் - வைரசினால் உண்டாகிறது.

* முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது - ஹைடிரா

* நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு - கிளாமிடோமானஸ்

* மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி - பிளாஸ்மோடியம்

* அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு - மண்புழு

* தாவர வைரஸ்களில் காணப்படும் மரபு பொருள் - ஆர்.என்.ஏ

* எய்ட்ஸ் நோயை உருவாக்கும் வைரஸ் - எச்ஐவி

* பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் - தந்தித் தாவரம்

* இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் - ஹீமோகுளோபின்

* பறவைகளின் உணவு எங்கு அரைக்கப்படுகிறது - அரைவைப்பை

* கரையாத உணவுப் பொருள் கரையும் எளிய பொருளாக மாற்றப்படும் நிகழ்ச்சி - செரித்தல்

* தொற்றுத்தாவர வேர்களில் காணப்படும் பஞ்சு போன்ற திசு --- வெலாமன்

* மெல்லுடலிகளுக்கு எடுத்துக்காட்டு - ஆக்டோபஸ்

* மனிதனில் இரத்த சோகை நோயை உண்டுபண்ணுவது - தட்டைப்புழு

* குழியுடலிகளுக்கு எடுத்துக்காட்டு - ஹைட்ரா

* சைகஸ் - ஜிம்னோஸ் பெர்ம் வகையைச் சேர்ந்தது.

* கிரினெல்லா - சிவப்பு பாசி வகையைச் சேர்ந்தது.

* பாரமீசியம் - சீலியோபோரா வகையைச் சேர்ந்தது

* எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் மருந்து - அசிட்டோதையாமிடின் AZT

* தாவரத்தின் இனப் பெருக்கத்திற்காக உருவாக்கப்பட்ட பகுதி - பூக்கள்

* ஆணி வேரின் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு - பீட்ரூட்

* பறக்கும் தன்மையற்ற பறவை - ஆஸ்ட்ரிக்

* ஆணி வேர் தொகுப்பு காணப்படும் தாவரம் - புளியமரம்

* ஆணி வேர் மாற்றமடைந்திருப்பது - கேரட்

* விதையின் எப்பகுதி தண்டாக வளர்கிறது - முளைக்குருத்து

* பின்னுக் கொடிக்கு எடுத்துக்காட்டு - அவரை

* குமிழ்த் தண்டிற்கு எடுத்துக்காட்டு - வெங்காயம்

* மலரின் ஆண் பாகம் - மகரந்தத் தூள்

* வறண்ட நிலத்தாவரம் - சப்பாத்திக்கள்ளி

* சூழ்நிலை என்ற சொல்லை வரையறுத்தவர் - ரெய்ட்டர்

* நாள் ஒன்றுக்கு மநித உடலிலிருந்து வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு - 1.5 - 2 லிட்டர்

* தவளையின் இரப்பையின் மேற்பகுதியின் பெயர் - கார்டியாக்

* தண்டில் உள்ள சிறுதுளைகளின் பெயர் - லென்டிசெல்

* இலைத் துளையின் இரு மருங்கிலும் அமைந்துள்ளது - காப்பு செல்கள்

* ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும் வாயு - ஆக்ஸிஜன்

* உழவனின் நண்பன் - மண்புழு

* சிதைப்பவை - காளான்

* உயிர்க்காரணி - பாக்டீரியா

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்