தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

25.5.13

தகுதியுள்ள இடைநிலை ஆசிரியருக்கு பணிபுரியும் பள்ளியிலேயே பதவி உயர்வு - கல்வித்துறை முடிவு

நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை அந்தந்த பள்ளிகளிலேயே பதவி உயர்த்தி காலிப்பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தொடக்க கல்வித்துறையில் மட்டுமே இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பது என்றும் 6ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பது என்றும் கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த காலங்களில் 8ம் வகுப்பு வரையிலான நடுநிலை பள்ளிகளிலும், பத்தாம் வகுப்பு வரையிலான உயர்நிலை பள்ளிகளிலும் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர்.

அரசின் கொள்கை முடிவின்படி தற்போது நடுநிலை முதல் மேல்நிலை வரை அனைத்து வகுப்புகளுக்கும் பட்டதாரி அல்லது முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால் நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களை பதவி உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

இந்த தகுதி உயர்வுக்கு இடைநிலை ஆசிரியர்கள் தமிழ்ப்பாடமாக இருந்தால் பி.லிட் முடித்திருக்க வேண்டும், பிற பாட ஆசிரியர்களாக இருந்தால் இளநிலை பட்டம் மற்றும் பிஎட் முடித்திருக்க வேண்டியது அவசியம். தகுதி உள்ள இடைநிலை ஆசிரியர்களை அந்தந்த பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளி தலைமையாசிரியரிடமிருந்தும் தேவை பட்டியல் கோரப்பட்டுள்ளது.

இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் ஸ்ரீதேவி கூறுகையில், "இடைநிலை ஆசிரியர்களை அந்தந்த பள்ளிகளிலேயே உள்ள காலிப்பணியிடங்களில் தகுதியின் அடிப்படையில் அப்கிரேடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளியின் தலைமையாசிரியரிடமும் காலிப்பணியிட விபரம் மற்றும் அப்கிரேடு செய்ய தகுதியான இடைநிலை ஆசிரியர்களின் தேவை பட்டியல் கோரப்பட்டுள்ளது,” என்றார்.

நன்றி:

 

3 கருத்துகள்:

  1. To upgrade the qualified secondary grade teachers as graduate (B.T) Teachers in the same school is appreciable. For up-gradation, there is no need of vacancy because their designation is to be changed as B.T., but their work is the same that is handling the 6-8 or 6-10.The same procedure should be implemented in all Aided middle, High and Higher Secondary Schools.

    பதிலளிநீக்கு
  2. Intha arivippu unmaithana .innum entha thagavalum kattu letter varavilaiea

    பதிலளிநீக்கு

பிரபலமான இடுகைகள்