தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

1.5.13

திறந்த வெளி பல்கலை.யில் பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு: சட்டப்பேரவையில் விவாதம்

திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் முறைசாரா திட்டத்தின் கீழ் பட்டம் பெற்ற வர்களுக்கு அரசுபணியில் பதவி உயர்வு அளிக்கவேண்டும் என்றும் இதற்கு எதிராக கடந்த ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை 107ஐ ரத்து செய்யவேண்டும் என்றும் சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆர்.ராம மூர்த்தி கேட்டுக்கொண்டார்.

செவ்வாயன்று (ஏப்.30) சட்டம் நீதி நிர்வாகம், பணியாளர் சீர்திருத்தத்துறை மானியக்கோரிக்கைகள் மீது நடைபெற்ற விவாதத்தில் அவர் இதுகுறித்து பேசியதாவது: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். காலத்தில் திறந்த நிலை பல்கலைக்கழகம் மூலம் படித்தவர்களுக்கும் அரசு பதவிகளில் நியமனம் பெறலாம் என்கிற நிலை இருந்தது. இதனால் ஏராளாமானோர் இன்று அரசின் பல பதவிகளுக்கு வந்துள்ளனர். கடந்த திமுக ஆட்சியில் அரசாணை 107- மூலம் 1979ல் திறந்தவெளி பல்கலைக் கழகம் மூலம் படித்து பட்டம் பெற்றவர்களுக்கு அரசு பதவியில் நியமனம் செய்யப்பட தகுதியில்லையெனவும், ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டவர்களுக்கும் பதவி உயர்வு பெற அருகதை இல்லையெனவும் தெளிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் அரசாணை 107 பிறப்பிப்பதற்கு முன்பு நியமனம் செய்யப்பட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அந்த அரசாணையை மறுபரி சீலனை செய்ய வேண்டும்.

அமைச்சர் கே.பி.முனுசாமி
: இதை ஒரு சமூகப்பிரச்சனையாக பார்க்கவேண்டி யுள்ளது. இந்த பிரச்சனையில் உயர் நீதி மன்றமும், உச்சநீதி மன்றமும் வேறு விதமாக தீர்ப்பு வழங்கியுள்ளன. இதை எப்படி தீர்க்கவேண்டும் என்பதை அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்.

உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன்: திறந்த வெளி பல்கலைக் கழகத்தில் முறையான கல்வி, முறைசாரா கல்வி என்று இரு முறைகள் உள்ளன. பத்தாம் வகுப்பு முடித்து பிளஸ் டூ முடித்து விட்டு நேரடியாக பட்டம் பெறும் முறை முறையான கல்வி. 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக பட்டம் முடிப்பது முறை சாரா கல்வி. கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசாணையால் திறந்த வெளி பல்கலைக் கழகத்தில் முறையாக பட்டம் பெற்றவர்களுக்கு எந்த விதபாதிப்பும் இல்லை. அவர்கள் அரசுப் பணியில் இருந்தாலும் எந்த பாதிப்பும் ஏற்பாடாது. ஆனால் முறைசாராக் கல்வி மூலமாக பட்டம் பெற்றவர்கள் பிரச்சனை நீதிமன்றத்தில் உள்ளது.

பாலபாரதி: அரசாணை 107ன் படி பழைய எஸ்எஸ்எல்சி முடித்தவர்கள் தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். 1988 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருவதால் அவர்களுடைய சர்வீஸ் 53 ஆண்டுகள் கடந்துவிட்டது. தற்போது 107 அரசாணை படி பிளஸ்டு முடித்து பட்டம் முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் பதவி உயர்வு வழங்கப் படுகிறது. பழைய எஸ்எஸ்எல்சி முடித்தவர்களுக்கு சர் வீஸ் அதிகமாக இருந்தா லும் பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை. ஆனால் பிளஸ்-2 முடித்து பட்டம் பெற்றவர்களுக்கு சர்வீஸ் குறைவாக இருந்தாலும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இதில் வித்தியாசம் பழைய எஸ்எஸ்எல்சிதான். எனவே இந்த அரசாணையில் ஒரு சிறு திருத்தத்தை அரசு கொண்டுவந்தால் தலைமைச் செயலகத்தில் பணி யாற்றி ஒய்வு பெறக் கூடிய வயதில் உள்ளவர்களுக்கு பெரிய நிவாரணமாக இருக் கும். பதவி உயர்வு பெற்றதாக இருக்கும். அதற்கு அமைச்சர் வழிவகை செய்ய வேண்டும்.

அமைச்சர் கே.பி.முனுசாமி: உறுப்பினர் கோரிக்கை வைத்துள்ளார். இந்த பிரச்சனையில் ஏற்கனவே நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உறுப்பி னருக்கு உள்ள உணர்வு போலவே அரசுக்கும் இந்த பிரச்சனையில் உணர்வு இருக்கிறது. யார் வளர்ச்சி யிலும் தடைக்கல்லாக அரசு இருக்காது. சட்டம் மற்றும் நீதிமன்ற தீர்ப்பு என்று வருகிறபோது அரசு கட்டுப்படவேண்டிய சூழ்நிலை இருக் கின்ற காரணத்தால் அரசு இந்த பிரச்சனையை பரிசீலனை செய்து 107 அரசா ணையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு எவ்வாறு நிவாரணம் தரலாம் என்பதை முடிவு செய்யும்.

ஆர்.ராமமூர்த்தி: அரசாணை 107 உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே அரசாணை 107ஐ ரத்து செய்யவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்