தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

13.5.13

கன்னியாகுமரியில் சங்க பொறுப்பாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் சங்க பொறுப்பாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் வைத்து இரண்டு நாள்கள் நடைபெற்றது.

முதல் நாள் 12-05-2013 ஞாயிறு அன்று நடைபெற்ற முதல் அமர்வுக்கு மாநிலத் தலைவர் சு. கயத்தாறு தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் ந. பர்வதராஜன் “நேற்று இன்று நாளை” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

2-வது அமர்வுக்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் ம. எட்வின் பிரகாஷ் தலைமை வகித்தார். முன்னாள் மாநில பொதுச் செயலாளர் ஆ. சுப்பிரமணியன் "சங்க வரலாறு" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

3-வது அமர்வுக்கு விருதுநகர் மாவட்டச் செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் க. இசக்கியப்பன் "சங்கத்தின் எதிர்காலம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

13-05-2013 திங்கள் 4-வது அமர்வு நடைபெற்றது. மாநிலப் பொருளாளர் ஆ. மதலைமுத்து தலைமை தாங்கினார். திருநெல்வேலி மாவட்ட JCTU அமைப்பாளர் சி. முத்துக்குமாரசுவாமி “உலகமயத்தில் தொழிற்சங்கம் சந்திக்கும் சவால்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

5-வது அமர்வுக்கு கன்னியாகுமரி மாவட்ட மகளிரணி அமைப்பாளர்  ஆர் சுஜா ரோஸ் ரெக்ஸ்லின் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் அ. ஜெயராணி “தொழிற்சங்கத்தில் பெண்களின் பங்கு” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் ஆர். ஹெர்பர்ட் ராஜா சிங், மரிய ஜாண் டெல்லஸ், பால் செபாஸ்டின், ஞான செல்வ திரவியம் ஆகியோர் செய்திருந்தனர்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்