தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

8.5.12

குமரியில் மே 17-ல் தேசிய மாநாடு

பொதுக்கல்வியை பாதுகாத்துப் பலப்படுத்தக் கோரி இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கன்னியாகுமரியில் அகில இந்திய மாநாடு மே 17-ம் தேதி தொடங்குகிறது.

இக் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுச்செயலர் க. ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கன்னியாகுமரியில் உள்ள அஜித் பார்க் நகரில், இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் 5-வது தேசிய மாநாடு மே 17-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுக் கல்வியைப் பாதுகாத்துப் பலப்படுத்துவோம், கல்வி தனியார்மயமாவதை எதிர்ப்போம் என்பதை மையப்படுத்தி இந்த மாநாடு நடைபெறுகிறது.

இம் மாதம் 17-ம் தேதி நடைபெறும் மாநாடு தொடக்க விழாவில், அகில இந்தியத் தலைவர் கார்த்திக் மண்டல், சங்கக் கொடியை ஏற்றுகிறார். கல்வியாளர் டாக்டர் கே.என். பனிக்கர் மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். அன்று மாலை 3 மணிக்கு பிரதிநிதிகள் மாநாடும், மாலை 6 மணிக்கு மகளிர் பிரதிநிதிகள் மாநாடும் நடைபெறுகின்றன.

18-ம் தேதி பிரதிநிதிகள் மாநாடும், அதைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் தேர்வும் நடைபெறுகின்றன.

19-ம் தேதி காலை 10 மணிக்கு அனைவருக்கும் தரமான கல்வி பிரச்னைகளும் தீர்வுகளும் என்ற தலைப்பில் தேசியக் கல்விக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் டி.புரந்தேஸ்வரி, தமிழக வனத்துறை அமைச்சர் கே.டி. பச்சைமால் ஆகியோர் பங்கேற்கின்றனர். அன்று மாலை 3 மணிக்கு பேரணியும், மாலை 5 மணிக்கு பொதுக் கூட்டமும் நடைபெறுகின்றன என்றார் அவர்.

பேட்டியின்போது, கூட்டமைப்பின் செயலர் ஆனந்தன், பொதுச் செயலர் சி. வள்ளிவேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்