தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

11.5.12

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாநாடு கன்னியாகுமரியில் 17ம் தேதி ஆரம்பம்

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் 5வது அகில இந்திய மாநாடு கன்னியாகுமரியில் வரும் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடக்கிறது.

அகில இந்திய தலைவர் கார்த்திக் மண்டல் கொடியேற்றுகிறார். டாக்டர் ஜேம்ஸ் ஆர்.டேனியல் வரவேற்கிறார். டாக்டர் கே.என் பணிக்கர் மாநாட்டை துவக்கி வைக்கிறார்.அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன பொது செயலாளர் முத்துசுந்தரம், அகில இந்திய கல்லூரி மற்றும் பல்கலைக் கழக ஆசிரியர் சங்க பொது செயலாளர் அசோக் பர்மன், இந்திய மாணவர் சங்க பொது செயலாளர் ரித்பிரட் பானர்ஜி, குமரி மாவட்ட கலெக்டர் நாகராஜன் உட்பட பலர் பேசுகின்றனர்.


அன்று மாலை 3 மணி முதல் பிரநிதிகள் நிகழ்வு நடக்கிறது. மாலை 6 மணிக்கு பெண் பிரநிதிகள் நிகழ்வு நடந்து மகளிர் துணைக் குழுவினர் தேர்வு செய்யப்படுகின்றனர்.

18ம் தேதி தொடர்ந்து பிரநிதிகள் நிகழ்வு நடக்கிறது. பின்னர் பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

வரும் 19ம் தேதி காலை 10 மணிக்கு "அனைவருக்கும் தரமான கல்வி பிரச்னைகளும், தீர்வுகளும்' என்ற தலைப்பில் தேசிய கல்வி கருத்தரங்கம் நடக்கிறது. மனித வள மேம்பாட்டு துறை இணை அமைச்சர் புரந்தேஸ்வரி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.தமிழக வனத் துறை அமைச்சர் பச்சைமால், கருத்தாளர்களாக எம்.பிக்கள் ரங்கராஜன், பிஜூ, ஆந்திர மேலவை உறுப்பினர் பாலசுப்பிரமணியன், பிரதீச்சி டிரஸ்ட் தலைமை நிர்வாகி குமார் ராணா உட்பட பலர் பேசுகின்றனர்.

அன்று மாலை 3 மணிக்கு தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்கும் பேரணி நடக்கிறது. மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் நடக்கிறது. புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் மற்றும் சி.ஐ.டி.யு அகில இந்திய தலைவர் பத்மனாபன், எஸ்.எப்.ஐ அகில இந்திய தலைவர் பிஜூ, முன்னாள் எம்.பி பெல்லார்மின், ஜே.சி.டி.யு தலைவர் ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ லீமா ரோஸ், மூட்டா பொது செயலாளர் மனோகர ஜஸ்டஸ் உட்பட பலர் பேசுகின்றனர்.

பொதுக்கூட்டத்திற்கு தமிழ்நாடு எஸ்.டி.பி.ஐ அமைப்பாளரும், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர் முருக செல்வராஜன் தலைமை வகிக்கிறார். முன்னாள் எம்.எல்.சி மாயவன் வரவேற்கிறார். தமிழ்நாடு எஸ்.டி.எப்.ஐ பொருளாளர் பூபாலன் நன்றி கூறுகிறார்.

அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டத்தில் மழலையர் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வியை சேர்க்க வேண்டும். புதிய தாராள மய கொள்கையின் மூலம் கல்வி கொள்ளை லாப நோக்கில் செயல்படுவது உட்பட பல்வேறு கருத்துக்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்