தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

24.5.12

பக்கத்துக்கு பக்கம் வண்ணமயமான முப்பருவ முறை பாட புத்தகங்கள்

பக்கத்துக்கு பக்கம், வண்ண நிறத்தில், மாணவர்களை கவரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள, முப்பருவ முறை பாடத் திட்ட புத்தகங்கள், ஜூன், 1ம் தேதி முதல், மாணவர்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளன.

இந்த கல்வியாண்டு முதல், ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ முறை கல்வி திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இத்திட்டப்படி, மூன்று பருவங்களுக்கான பாடத் திட்டங்களில், தற்போது, ஜூன் முதல், செப்., வரையிலான முதல் பருவப் பாட புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டு உள்ளன.

இப்புத்தகங்களில், பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளதாக, ஆசிரியர்கள் கூறுகின்றனர். எட்டாம் வகுப்புக்கு, 180 பக்கங்கள் கொண்ட தமிழ், ஆங்கிலம் ஒரு புத்தகமாகவும், 300 பக்கங்கள் கொண்ட கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய, மூன்று பாடங்கள், ஒரு புத்தகமாகவும் பிரித்து, இரண்டு புத்தகங்களாக வழங்கப்பட்டுள்ளன. பக்கத்துக்கு பக்கம் கண்களையும், மாணவர்களை கவரும் வகையிலும் வண்ண நிறப் படங்கள், ஓவியங்கள், வரைபடங்கள் இடம் பெற்றுள்ளன. எழுத்துகளும் பெரிய அளவில் அச்சிடப்பட்டுள்ளன. பழைய திட்டத்தில் உள்ளது போல், மாணவர்கள் இனி, அனைத்து புத்தகங்களையும் சுமந்து செல்லத் தேவையில்லை. முன்பு போல் முழு ஆண்டு தேர்வுக்கு அனைத்து பாடங்களையும் படிக்க வேண்டும் என்பதும் இந்த திட்டத்தில் இல்லை.

என்னென்ன மாற்றங்கள்? எட்டாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில், "செம்மொழி மாநாட்டு சிறப்புகள்' என்ற பாடம் மாற்றப்பட்டு, "தமிழ் வளர்த்த சான்றோர்கள்' என்ற புதிய பாடம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. செம்மொழி மாநாட்டு, திருவள்ளுவர் படத்துடன் கூடிய கடைசி அட்டை படம் மாற்றப்பட்டு, வண்ண நிறத்தில் அட்டை தயாரிக்கப்பட்டு உள்ளது.

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்