தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

12.5.12

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கற்பிப்பு கட்டணமும் வழங்க முடிவு

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மணவ, மாணவியருக்கு கற்பிப்புக் கட்டணம் மற்றும் சிறப்புக் கட்டணம், முழுமையாக அரசால் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில், அமைச்சர் முகமது ஜான் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்
:
  • பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் மட்டும் முழுமையாக அரசால் வழங்கப்படுகிறது. கற்பிப்புக் கட்டணம் மற்றும் சிறப்புக் கட்டணம் வழங்கப்படுவதில்லை. ஆதி திராவிட மாணவர்களுக்கு வழங்குவதைப் போல, 75 ஆயிரம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவ, மணவியருக்கும் கற்பிப்புக் கட்டணம் மற்றும் சிறப்புக் கட்டணம் முழுமையாக, 16.44 கோடி செலவில் வழங்கப்படும்.
  • பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதல் 1,000 இடங்களை பெறும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின வகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவர்களுக்கு, அவர்கள் பட்டப்படிப்பு முடிக்கும் வரை, ஆண்டுக்கு, 3,000 ரூபாய் வீதம் வழங்கப்படும்.
  • 112 கல்லூரி விடுதிகளில் மின்விளக்கு மற்றும் மின்விசிறி பயன்பாட்டுக்காக, சூரிய ஒளி உபகரண வசதி, 2.52 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.
  • கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவியரின் ஆங்கில பேச்சாற்றலை மேம்படுத்த, ஒருவருக்கு, 2,800 ரூபாய் வீதம், 6,550 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
  • பள்ளி ஆசிரியர்களுக்கு அனுமதிக்கப்படுவதைப் போன்று, விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்கள் மற்றும் காப்பாளனிகள் ஓய்வு பெறும் போது, அந்த கல்வியாண்டு நிறைவடையும் வரை பணி நீட்டிப்பு வழங்கப்படும்.
  • திறன் வளர்ப்பு பயிற்சி திட்டத்தின் பயிற்சி பெறும் பயனாளிகளுக்கு மாதம், 400 ரூபாய் பயிற்சி கால உதவித் தொகை வழங்கப்படும்.
  • கள்ளர் சீரமைப்புத் துறை சார்பில், மதுரை செக்கானூரணியில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி துவக்கப்படும்.
  • உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, செக்கானூரணியில், உயர் கல்வித் துறை மூலம் மூன்று பாலிடெக்னிக் துவக்கப்படும். பெரியகுளத்தில் சுகாதாரத் துறை மூலம், செவிலியருக்கான கல்லூரி துவக்கப்படும்.
  • பள்ளிவாசல்கள், தர்க்காக்கள் போன்ற வக்பு நிறுவனங்களில் பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பு பணி மேற்கொள்ள, "வக்பு நிறுவன மேம்பாட்டு நிதி' என்ற நிதி புதிதாக உருவாக்கப்படும். இதற்காக தமிழக அரசு, 3 கோடி ரூபாயை நடப்பு ஆண்டில் வழங்கும்.
  • பள்ளிகளில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்குவது போல, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவியர், 7,200 பேருக்கு 2.08 கோடி ரூபாய் செலவில், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் முகமது ஜான் அறிவித்தார்.

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்