தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

8.5.12

கல்வி கட்டண நிர்ணயம்: நீதிபதிகளிடம் முறையிட, பள்ளி கல்வித் துறை திட்டம்

கல்வி கட்டண நிர்ணய வழக்கில், மேலும் சில விவரங்களை அளிக்கக் கோரி நீதிபதிகளிடம் முறையிட, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான மனு, ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தனியார், சிறுபான்மை பள்ளிகளுக்கு கல்விக் கட்டணத்தை நிர்ணயித்து, முதலில் நீதிபதி கோவிந்தராஜன் குழு, அடுத்ததாக நீதிபதி ரவிராஜ பாண்டியன் குழு உத்தரவுகளை பிறப்பித்தது. கட்டணத்தில் திருப்தியடையாத 300க்கும் மேற்பட்ட பள்ளிகள் சார்பில், ஐகோர்ட்டில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இம்மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பானுமதி, விமலா அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்', கல்விக் கட்டணக் குழுவின் உத்தரவுகளை ரத்து செய்தது. வரும் டிசம்பருக்குள் புதிய கட்டணத்தை நிர்ணயிக்கவும், பள்ளிகளுக்கு போதிய சந்தர்ப்பம் அளிக்கவும் உத்தரவிட்டது. அதுவரை, இடைக்கால ஏற்பாடாக, குழு நிர்ணயித்த கட்டணத்தில் 15 சதவீதம் கூடுதலாக வசூலித்துக் கொள்ளவும் அனுமதியளித்தது.இந்த இடைக்கால ஏற்பாடு, அதாவது 15 சதவீதம் கூடுதல் வசூலிக்க அனுமதித்தது; வழக்கு தொடுத்த பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் என தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட கட்டணமானது, குழு நிர்ணயிக்கும் இறுதி உத்தரவைப் பொறுத்து அமையும் எனவும் கூறப்பட்டுள்ளது.

புகார்
ஐகோர்ட் தெளிவாக உத்தரவிட்டும், சில பள்ளிகள் சார்பில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக, பள்ளி கல்வித் துறைக்கு புகார்கள் வந்தன. எனவே, பெற்றோர், பொது மக்களுக்கு தெளிவுப்படுத்தும் வகையில், மேலும் சில விவரங்களை அளிக்க வேண்டும் என நீதிபதிகளிடம் முறையிடுவது குறித்து, பள்ளி கல்வித் துறை சார்பில் ஆலோசிக்கப்பட்டது. அதன் முடிவில், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யலாம் என முடிவெடுத்திருப்பதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.வழக்கு தொடுத்த பள்ளிகளுக்கு குழு நிர்ணயித்த கட்டணம் எவ்வளவு, கோர்ட் உத்தரவால் மாற்றியமைக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு என்பதை பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் குறிப்பிட வேண்டும்; வாங்கும் கட்டணத்துக்கு ரசீது வழங்க வேண்டும். மேலும், குழுவின் இறுதி உத்தரவு வந்த பின், கூடுதல் தொகையை திருப்பித் தருவதாகவோ, அடுத்த ஆண்டில் சரி செய்து தருவதாகவோ குறிப்பிட வேண்டும் என்றும் நீதிபதிகளிடம் கோர உள்ளது.இது தவிர, வழக்கு தொடுக்காத மற்ற பள்ளிகள் அனைத்தும் ஏற்கனவே குழு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும், அதற்கான ரசீதை வழங்க வேண்டும் என்றும் பள்ளிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் முறையிட உள்ளது. அடுத்த சில நாட்களில் இந்த மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்