தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

19.5.12

STFI மாநாடு - இரண்டாம் நாள் நிகழ்வுகள்

இரண்டாம் நாள் மாநாடு 18.05.2012 அன்று  முற்பகல் 10.00 மணிக்குத் தொடங்கியது.

அகில இந்திய தலைவர் கே.கார்த்திக்மண்டல் தலைமையில் அகில இந்திய துணைத் தலைவர்கள் என்.நாராயணா, சாந்தியராம் பட்டாச்சாரியா, கே.என்.சுகுமாறன், அபிஜித் முகர்ஜி, எம்.சம்யுக்தா, பசவராஜ்குரிகார், சுல்தான்சிங் ஆகியோர் கொண்ட தலைமைக்குழு இரண்டாம் நாள் மாநாட்டிற்குத் தலைமையேற்றது.

அகில இந்தியப் பொதுச்செயலாளர் கே.இராஜேந்திரன் சமர்ப்பித்திட்ட வேலையறிக்கை மற்றும் வரைவு தீர்மானங்கள் மீதும் மற்றும் அகில இந்தியப் பொருளாளர் சத்தியபால்சிவாஜ் சமர்ப்பித்திட்ட வரவு-செலவு அறிக்கையின் மீதும் மாநாட்டுப் பிரதிநிதிகள் விவாதம் மேற்கொண்டனர். தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் திருமதி. வாசுகி விவாதத்தில் பங்கேற்றார். விவாதத்தின் நிறைவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

  1. 0 முதல் 18 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தரமானக் கல்வியை இலவசமாக மத்திய, மாநில அரசுகள் அளிக்கத்தக்க வகையில் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர் அமைப்புகள், இந்தியா முழுவதுமுள்ள பள்ளி ஆசிரியர் சங்கங்கள், ஒத்த கருத்துடைய வெகுஜன அமைப்புகள் ஆகியவற்றை இணைத்துக் கொண்டு “கல்விக்கான மக்கள் இயக்கத்தினை” இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மேற்கொள்வதென்று முடிவாற்றி உள்ளது. கல்விக்கான மக்கள் இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கு தேசத்தின் அனைத்துப் பகுதி மக்களும் ஆதரவளிக்க வேண்டுமாய் 2 ஆம் நாள் மாநாடு வேண்டுகோள் விடுத்துள்ளது.
  2. கல்விக்கு தேசிய மொத்த உற்பத்தியில் 6 சதவிகிதம் நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் 10 சதவிகிதம் மாநில அரசுகளின் நிதிநிலை அறிக்கையில் 30 சதவிகிதமும் கல்விக்கு நிதி ஓதுக்கீடுகள் செய்யப்பட வேண்டும்.
  3. தேசத்தின் இறையாண்மையைப் பாதுகாக்கும் வகையில மத்திய அரசு இந்தியப் பள்ளிக்கல்வியில் நேரடி அந்நியமுதலீடுகளை அனுமதிக்கும் முடிவினை; முற்றாகத் திரும்பப்பெற்றிட வேண்டும்.
  4. கல்வி உரிமைச் சட்டத்தின்படி சுயநிதிப்பள்ளிகளில் ஏழை, எளிய, பின்தங்கிய பள்ளிக் குழந்தைகளுக்கு 25 சதவிகிதம் மாணவர் சேர்;க்கைக்கான கல்விக்கட்டணங்களை மத்திய,மாநில அரசுகள் செலுத்துவதைக் கைவிட வேண்டும். சுயநிதிப்பள்ளிகள் இலவசமாக தரமான கல்வியை அனைவருக்கும் வழங்கத்தக்க வகையில் மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  5. ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் பயன் பெறத்தக்க வகையில் பொது விநியோக முறையை வலுப்படுத்திட வேண்டும்.
  6. பெண்களுக்கு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றங்களில் 33 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தத்தக்க வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிட வேண்டும்.
  7. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 12.5 சதவீத வட்டி வழங்கிடவேண்டும். அஞ்சலகங்கள், வங்கிகள், வட்;டிவீதத்தை உயர்த்தி வழங்கிவரும் காலத்தில் தொழிலாளர் வைப்புநிதிக்குத் தொடர்ச்சியான வட்டி குறைப்பைக் கைவிட வேண்டும்.
  8. ஓய்வூதியத்தை மறுக்கும், மாதஊதியத்தில் இழப்பு ஏற்படுத்தும் புதிய தன் பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்தினை மத்திய அரசு கைவிட வேண்டும். ஓய்வூதிய நிதியில் அந்நிய நேரடி முதலீடுகளை அனுமதிப்பதைக் கைவிட வேண்டும்.
  9. பகுதி நேர முறையில், ஒப்பந்த முறையில், தொகுப்பூதிய முறையில் ஆசிரியர் நியமனம் செய்வதை மத்திய,மாநில அரசுகள் கைவிட வேண்டும்.
  10. ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு சட்டமன்ற மேலவைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை வழங்கிட வேண்டும்.
மேற்கண்ட  உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் 2ஆம் நாள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்