தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

10.5.12

TET வினா விடை - அறிவியல் - பொது 7

* சூரியனுக்கு வெகு தொலைவில் உள்ள கோள் - புளூட்டோ

* ஒன்பது கோள்களில் மிகவும் சிறியது - புதன்

* ஒரியான் என்பது - விண்மீன் குழு

* புவி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொள்ள ஆகும் காலம் - 24 மணி

* சூரியனிடமிருந்து புவியின் அமைவிடம் - மூன்றாவது

* தாவரங்கள் தங்களின் உணவைத் தயாரித்துக் கொள்ளத் தேவைப்படும் வாயு - கார்பன்-டை-ஆக்ஸைடு

* புவிக்கு அருகில் உள்ள வளிமண்டல அடுக்கு - ஸ்ட்ரேட்டோஸ்பியா

* எரிதலை கட்டுப்படுத்தும் வளி மண்டல பகுதிப் பொருள் - நைட்ரஜன்

* புவியின் உள்மையப் பகுதியில் நிலவும் வெப்பநிலை - 1770

* புவியின் வெளி மையப்பகுதியில் ஐந்தில் ஒரு பகுதியில் அடங்கியுள்ள தனிமம் - சிலிக்கன்

* திட்ட அலகு என்பது - SI முறை

* அடி, பவுண்டு, விநாடி என்பது - FPS முறை

* நிலவு இல்லாத கோள் - வெள்ளி

* கோள் ஒன்றினைச் சுற்றி வரும் சிறியபொருளின் பெயர் - நிலவு

* பில்லயன் விண்மீன்கதிர்களின் தொகுப்பு - அண்டம்

* உர்சாமேஜர் என்பது - ஒரு விண்மீன் குழு

* புற ஊதாக் கதிர்களை உறிஞ்சுவது - ஓசோன்

* வேலையின் அலகு - ஜூல்

* 1 குவிண்டால் என்பது - 1000 கி.கி

* கிலோகிராமின் பன்மடங்கு அல்லது துணைப் பன்மடங்கு - டன்

* நீரில் சிறிதளவே கரையும் பொருள் - ஸ்டார்ச் மாவு

* நிழற்கடிகாரத்தை முதல் முதலில் பயன்படுத்தியவர்கள் - சுமோரியர்கள்

* புவி ஒரு முறை சூரியனைச் சுற்றி வர ஆகும் காலம் - 3651/4

* தங்க நகைக் கடையில் பயன்படும் தாரசு - மின்னணு தாரசு

* ஒரு பொருள்களின் மீது செயல்படும் புவிஈர்ப்பு விசை என்பது அதன் எடை.

* திரவங்களின் கன அளவைக் காண உதவும் கருவி - கொள்கலன்

* வரைப்படத்தாள் முறையில் கண்டறிவது - ஒழுங்கற்ற பொருளின் பரப்பு

* அளவுகோலின் அளவீடுகளை செங்குத்தாகப் பார்க்காததால் தோன்றும் குறை - இடமாறுதோற்றப்பிழை

* கன அளவின் அலகு - மீ3

* திரவங்களின் கன அளவை காணப்பயன்படும் அலகு - லிட்டர்

* காந்தத் தன்மையற்ற பொருள் - கண்ணாடி

* இரும்பின் தாது - மாக்னடைட்

* பதங்கமாகும் பொருள் - கற்பூரம்

* அணா கடிகாரத்தில் பயன்படும் உலோகம் - சீசியம்

* அறைவெப்ப நிலையில் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாதது - கிரிக்கெட் மட்டை

* நீரில் கரையாத பொருள் - கந்தகம்

* நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு - கார்பன் -டை -ஆக்சைடு

* நீரில் கரையாத வாயு எது - நைட்ரஜன்

* பனிக்கட்டி நீராக மாறும் நிகழ்ச்சி - உருகுதல்

* நீரில் சிறிதளவே கரையும் பொருள் - ஸ்டார்ச் மாவு

* மின்காந்தம் பயன்படும் கருவி - அழைப்பு மணி

* வெப்ப கடத்தாப் பொருள் - மரம்

* திரவ நிலையிலுள்ள உலோகம் - பாதரசம்

* ஒளியைத் தடை செய்யும் பொருள் - உலோகத்துண்டு

* இலோசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - புடைத்தல்

* ஒரு படித்தான தன்மை கொண்டது - தூய பொருட்கள்

* கலவைப் பொருள் என்பது - பால்

* கலவையில் கலந்துள்ள பகுதிப் பொருட்களின் நிறம், அளவு, வடிவம் ஆகியவை வேறுபட்டால் அவற்றைப் பிரிக்கக் கையாளும் முறை - கையால் தெரிந்து எடுத்தல்

* கோதுமையிலிருந்து உமியை நீக்கும் முறை - தூற்றுதல்

* நீரும் மணலும் கலந்த கலவையைப் பிரிக்கும் முறை - தெளியவைத்து இறுத்தல்

* மின்தடையை அளக்க உதவும் அலகு - ஓம்

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்