தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

3.7.12

திருமணமான பெண் வாரிசுகளுக்கும் கருணை அடிப்படையில் பணி நியமனம்

அரசு ஊழியர்களின், திருமணமான பெண் வாரிசுகளுக்கும் கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கலாம் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

கோவில்பட்டியை சேர்ந்த முருகபூபதி தாக்கல் செய்த மனு
:
எனது தந்தை கிராம உதவியாளராக ( தலையாரி) பணியில் இருந்தபோது, 2010 ஆக.,19 ல் இறந்தார். எனக்கு இரண்டு சகோதரிகள். நான் மூத்தவள். எங்களுக்கு திருமணமாகிவிட்டது. நான் கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்கக்கோரி கோவில்பட்டி தாசில்தாரிடம் விண்ணப்பித்தேன். அவர்," உங்களுக்கு திருமணமாகிவிட்டதால், வேலை வழங்க முடியாது,' என மறுத்துவிட்டார். எனக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மனு நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தூத்துக்குடி கலெக்டர் சார்பில்,"திருமணமான பெண்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கக்கூடாது என அரசு 1977 ல் உத்தரவிட்டுள்ளது,' என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதியின் தீர்ப்பு:
மனுதாரரரின் தந்தைக்கு ஆண் வாரிசு இல்லை. மூன்று பெண் வாரிசுகளுக்கும் திருமணமாகிவிட்டது. அரசு உத்தரவில், வாரிசு எனில் மனைவி, மகன் மற்றும் திருமணமாகாத பெண் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் 2010 ஆக.,30 ல் அரசு ஒரு திருத்தம் செய்துள்ளது. அதன்படி, திருமணமாகாத பெண்கள் கருணை பணி நியமனம் கோரி விண்ணப்பித்தபின், திருமணமாகியிருந்தால் வேலை வழங்கலாம் என உத்தரவிடப்பட்டது.

இச்சூழ்நிலையில், திருமணமான பெண்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கக்கூடாது என ஏற்கனவே அரசு உத்தரவிட்டது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. மனுதாரரின் தந்தை இறப்பதற்கு முன் அனைத்து பெண் வாரிசுகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது. மனுதாரரின் தந்தைக்கு பெண் வாரிசுகளைத் தவிர, வேறு யாரும் இல்லையெனில், திருமணமான பெண்ணிற்கு வேலை வழங்குவதில் தவறில்லை.

ஆண், பெண் வாரிசுகளை அரசு சமமாக பார்க்க வேண்டும். மனுதாரரின் கருணை மனுவை பரிசீலித்து, வேலை வழங்க வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்