தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

21.7.12

பதவி உயர்வுக்கு முன்பே மாறுதல் கலந்தாய்வு: இடைநிலை ஆசிரியர்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கவுன்சலிங் வரும் 30ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன்பே 23ம் தேதி பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை பள்ளிக் கல்வித் துறையில் 6, 7, 8ம் வகுப்புகளில் மட்டுமே இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த வகுப்புகளுக்கு புதிதாக இடைநிலை ஆசிரியர் பணியிடம் என்பது கிடையாது. இதனால் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெற்றாலோ, பதவி உயர்வு பெற்றாலோ மட்டுமே காலியிடம் உருவாகும் நிலை உள்ளது. தற்போது பணி நிரவலுக்காக பல இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் பள்ளிக் கல்வித் துறையில் தற்போதைய நிலையில் பல மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் இல்லாத நிலை உள்ளது.

வரும் 30, 31ம் தேதிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவதற்கான கவுன்சலிங் நடக்கிறது. எனவே அதற்கு பின்னரே இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் தமிழக பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் (பணி மேலாண்மை) ராஜராஜேஸ்வரியிடம் கடந்த 11ம் தேதி கோரிக்கை விடுத்தது. அவரும் பதவி உயர்வுக்கு பின்னர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்துவதாக கூறியிருந்தார். இதனால் ஆகஸ்ட் முதல் வாரம் தான் இடைநிலை ஆசிரியர்கள் கலந்தாய்வு நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் வரும் 23ம் தேதி நடக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வின் போதே இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வும் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. காலியிடங்கள் இல்லாத நிலையில் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது இடைநிலை ஆசிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் இசக்கியப்பன் கூறுகையில், "இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற பின்னர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தினால் காலியிடங்கள் உருவாகும். ஆனால் பதவி உயர்வுக்கு முன்பே பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பள்ளிக் கல்வித் துறை மறு பரிசீலனை செய்ய வேண்டும்" என்றார்.

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்