தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

24.7.12

எஸ்.எஸ்.ஏ. கல்வி திட்டத்தில் பல லட்சம் சுருட்டல்?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில் நடந்த பள்ளி மேலாண்மை பயிற்சி வகுப்பு, வாழ்வியல் திறன் பயிற்சி முகாமிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில், முறைகேடு நடந்துள்ளதால், இதுகுறித்து விசாரிக்க தனி குழுவை கலெக்டர் அமைத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், வட்டார வளமையங்கள் மூலம் துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு, கடந்த மார்ச் மாதம் பள்ளி மேலாண்மை பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

அதே போல், ஒவ்வொரு ஒன்றியத்திலும், பள்ளி செல்லா குழந்தைகளுக்கான பகல் நேர சிறப்பு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கடந்த மார்ச் மாதம் வாழ்வியல் திறன் பயிற்சி வகுப்பு நடந்தது.மூன்று நாள் பயிற்சி இந்த இரு பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு, மாவட்டம் முழுவதும் பல லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது.

பள்ளி மேலாண்மை குழு பயிற்சி வகுப்பில், பயிற்சி பெற்ற உறுப்பினர்கள், மூன்று நாள், குறுவள மையத்தில் தங்கி பயிற்சி பெற வேண்டும். ஆனால், எந்த உறுப்பினர்களும் பயிற்சி மையத்தில் தங்கி பயிற்சி பெறவில்லை. பலர் பயிற்சி வகுப்பிற்கு வரவே இல்லை.

பயிற்சி பெறும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் காலை சிற்றுண்டிக்கு 25 ரூபாயும், மதியம் சாப்பாட்டிற்கு 40 ரூபாயும், இரவு சாப்பாட்டிற்கு 40 ரூபாயும், காலை மற்றும் மாலையில் தேநீர் மற்றும் நொறுக்குத்தீனிக்காக 40 ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டது. விதிகள் மீறல் மேலும், பயிற்சி வகுப்பில் ஜெனரேட்டர் வசதி, சாமியானா, ஒலிபெருக்கி உள்ளிட்ட ஏற்பாடு செய்வதற்கும் நிதி ஒதுக்கப்பட்டது.

அதே போல், பள்ளி செல்லா குழந்தைகளுக்கு நடந்த வாழ்வியல் திறன் பயிற்சி வகுப்பிற்கும் ஒரு குழந்தைக்கு, 100 ரூபாய் வீதம் நான்கு நாள் பயிற்சி முகாமிற்கு, தலா 400 ரூபாய் வீதம் ஒதுக்கப்பட்டது. பயிற்சி முடித்த இந்த குழந்தைகளை, அவரவர் வயதிற்கு தகுந்தாற்போல், பள்ளிகளில் சேர்க்க வேண்டும். தொடர்ந்து ஒரு ஆண்டு, இந்த குழந்தைகளை ஆசிரியர் பயிற்றுநர்கள் கண்காணிக்க வேண்டும்.

ஆனால், அனைவருக்கும் கல்வி திட்ட உதவி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள், இந்த இரு பயிற்சி முகாம்களுடைய விதிமுறையை பின்பற்றவில்லை. முறைகேடு புகார் இதற்காக, அனைவருக்கும் கல்வி திட்டத்தில் ஒதுக்கீடு செய்த நிதியில், 60 சதவீதம் பணத்தை அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகள் கூட்டணி அமைத்து முறைகேடு செய்தனர்.

அனைவருக்கும் கல்வி திட்ட பயிற்சி முகாம் செலவினங்களை மேற்கொள்ள, உதவி தொடக்க கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பெயர்களில் வங்கியில் இணைப்பு கணக்கு உள்ளது.

ஓசூர் அருகே தளி ஒன்றியத்தில் நடந்த, பள்ளி மேலாண்மை குழு பயிற்சி வகுப்பு, வாழ்வியல் திறன் பயிற்சி வகுப்பு நடத்தியதில், பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. கலெக்டர் மகேஷ்வரன், முறைகேட்டை விசாரிக்க தனிக்குழு அமைத்துள்ளதால், அதிகாரிகள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்