தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

30.4.12

கம்ப்யூட்டர்களில் வீரப்பிள்ளைகளாகும் விளையாட்டுப் பிள்ளைகள்



"கோடை விடுமுறை விட்டாச்சு... ஏரியா பசங்க சேர்ந்து ஜாலியா கிரிக்கெட், கால்பந்து எல்லாம் விளையாடலாம் தான். ஆனால் ஒருத்தன்கூட வெளியே வரமாட்டேன்றாங்க. கேட்டால், கம்ப்யூட்டரிலேயே குத்துச்சண்டை, கிரிக்கெட் எல்லாம் விளையாடுறதா சொல்றாங்க,'' - இது கம்ப்யூட்டர் இல்லாத ஒரு அப்பாவி சிறுவனின் ஆதங்க குரல்.

முன்பெல்லாம், பள்ளி விடுமுறை விட்டால் போதும். விளையாட்டு மைதானங்கள் "ஹவுஸ்புல்' ஆகும். (இப்போ நகரில் எங்கே விளையாட்டு மைதானம் இருக்கிறது? என நீங்கள் கேட்பது புரிகிறது) பல்வகை விளையாட்டுகளால் உடலும் வலுவாகும். ஆனால் இன்று கம்ப்யூட்டர்தான் மாணவர்களுக்கு கதி. நண்பர்கள், உறவினர்களை மறந்துவிட்டு, கம்ப்யூட்டர் முன் "தவம்' இருக்கின்றனர். அது அறிவுசார்ந்த தேடுதலுக்காக அல்ல. விளையாட்டிற்காக.

அதற்கேற்ப, விளையாட்டு தொடர்பான வீடியோ "டிவிடி'க்கள் விற்பனை களைகட்டுகிறது. கார், பைக் ரேஸ் எல்லாம் மாணவர்களுக்கு பழசாகிவிட்ட நிலையில், இன்று குத்துச்சண்டை, கிரிக்கெட், துப்பாக்கிச்சூடு, திருடன் - போலீஸ் விளையாட்டு, விமானம், ரயிலை இயக்குவது, பெண்களுடன் பீச் வாலிபால் என விளையாட்டு "டிவிடி'க்களை அதிகம் வாங்குகின்றனர். 510 விளையாட்டுகள் ஒரே "டிவிடி'யில்கூட கிடைக்கிறது. இதனாலேயே "டிவிடி'க்களின் விலை, தரத்திற்கு ஏற்ப ரூ.40 முதல் ரூ.2700 வரை விற்கப்படுகிறது. கடந்தாண்டைவிட இந்தாண்டு, விலை ரூ.20 சதவீதம் அதிகரித்துள்ளது.

கல்வி, பொதுஅறிவு சம்பந்தப்பட்ட "டிவிடி'க்கள் இருந்தாலும், அதை மாணவர்கள் கண்டுகொள்வதில்லை என்பது வருத்தமான விஷயம். உடல் வலிமை, திறமைகளை வெளிப்படுத்தும் கோடை கால பயிற்சிகள் பக்கம் இவர்கள் தலைவைத்துக்கூட படுப்பதில்லை. ""கோடையில் வழக்கமாகவே விற்பனை அதிகரிக்கும். சீசன் இல்லாத போது, தினமும் 10 "டிவிடி' விற்பனையாகும். தற்போது 50 "டிவிடி' விற்பனையாகிறது. விலையை பற்றி மாணவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்களுக்கு தேவை தரமான "டிவிடி'க்கள்தான்,'' என்கின்றனர் விற்பனையாளர்கள்.

"டிவி'க்கள்தான் மாணவர்களை திசை திருப்புகிறது என்றால், இன்று "வீடியோ கேம்ஸ்', மாணவர்களுக்கு நண்பனாக, உறவினராக இருந்து, உடல், மனநலத்தை பாதிக்க செய்கிறது என்பது உண்மை. இனியாவது பெற்றோர் விழிப்பார்களா?

நன்றி:

29.4.12

TET வினா விடை - தாள் II - தமிழ்

Paper II Tamil

TET வினா விடை - தாள் I - குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும்

Paper I Psychology

மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் சத்துணவு....... "வெரைட்டி ரைஸ்" வழங்குவது பற்றி கருத்து கேட்பு


தொடர் கல்வியை ஊக்கப்படுத்த மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் சத்துணவு வழங்கவும், "வெரைட்டி ரைஸ்" வழங்கினால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவரா என்பது குறித்து கருத்து கேட்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் மாநில அளவில், 40 லட்சம் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையான குழந்தைகளுக்கு தலா, 100 கிராம் அரிசி, எண்ணெய் மற்றும் காய்கறிக்கு, 80 பைசா வழங்கப்படுகிறது. ஆறு முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., படிப்போருக்கு தலா, 150 கிராம் அரிசி, எண்ணெய், காய்கறிக்கு, 80 காசு, 39 காசு விறகுக்கு வழங்கப்படுகிறது.

வரும் கல்வியாண்டு முதல் ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவர்களுக்கும் சத்துணவு வழங்கலாமா? என அரசு ஆலோசித்து வருகிறது. அரசு பள்ளிகளில் மேல்நிலை பயிலும் மாணவர் எண்ணிக்கை, அவர்களில் எத்தனை பேர் வெளியூரில் இருந்து வருகின்றனர்; பெற்றோர் வேலைக்கு செல்வதால் மதிய உணவு எடுத்து வர முடியாத நிலையிலும், வறுமையான நிலையிலும் உள்ளவர்கள் எத்தனை பேர் என்ற விபரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மூலம் சேகரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஒரு லட்சத்துக்கும் குறைவான மாணவர்கள் சத்துணவு சாப்பிட வாய்ப்புள்ளது என கண்டறியப்பட்டு, அவர்களுக்கு அரிசி, எரிபொருள், எண்ணெய் உட்பட பிற செலவுகளுக்கு எவ்வளவு தொகை செலவாகும் என கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

அதுபோல, சத்துணவில் வாரத்துக்கு ஐந்து நாட்கள் முட்டை அல்லது, முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு பழம், ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாசிப்பயறு மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை சத்துணவுடன் வழங்கப்படுகிறது. சாதத்துடன், சாம்பார், பருப்பு போன்றவை தினமும் வைக்கப்படுவதால், குழந்தைகள் அதை விரும்பி உண்ணவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதை மாற்றி, தினமும் தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை, காய்கறி கலந்த உணவு, சாம்பார் சாதம், பருப்பு சாதம் என ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு அரிசி தவிர, மூன்று ரூபாய் செலவீட்டில், "வெரைட்டி ரைஸ்' வழங்கினால், குழந்தைகள் விரும்பி சாப்பிடும். வீணாகாது, என அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

"பள்ளி குழந்தைகளுக்கு இரண்டு செட் சீருடை, இலவச பாடப்புத்தகம், மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள், லேப்டாப், உதவித்தொகை போன்றவை வழங்கப்படுவதால், மாணவ, மாணவியரும், பெற்றோரும் உற்சாகமடைந்துள்ளனர். அதேநேரம், மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் சத்துணவு வழங்கி, அனைவருக்கும், "வெரைட்டி ரைஸ்' வழங்கினால், கூடுதல் வரவேற்பு கிடைக்கும், என அரசு எதிர்பார்க்கிறது. விரைவில் அறிவிப்பு வரும்' என, சத்துணவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி:

 

இரட்டைப் பட்டம் - B.Sc. (Maths) பெற்றவர் பதவியுயர்வு பெற தகுதியுண்டு

Maths Dual Degree Clarification - Rti

புவியியல் - பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு முன்னுரிமைப் பட்டியல்

Bt Geography Pannel as On1!1!2012

வரலாறு - பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு முன்னுரிமைப் பட்டியல்

Bt History Pannel as On1!1!2012

அறிவியல் - பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு முன்னுரிமைப் பட்டியல்

Bt Science Panel as On1!1!12

28.4.12

TET வினா விடை - சமூக அறிவியல் - பொது 3

1. ஒயில் என்ற சொல்லின் பொருள் - நடனம்

2. திருவண்ணாமலை மாவட்டம் புரிசை கிராமம் புகழ் பெறக் காரணம் - கூத்துக் கலைஞர்கள்

3. கிழக்குக் கடற்கரைக் கம்பெனி தமிழ்நாட்டில்- ..... கடற்கரை என்று அழைக்கப்படுகிறது. - சோழமண்டலம்

4. நீலகிரி மலையின் உயர்ந்த சிகரம் - தொட்டப்பெட்டா

5. தமிழ்நாட்டின் கடற்கரை நீள ஏறக்குறைய - 1000 கிமீ.

6. தமிழ்நாட்டின் பெரும்பானமை மொழி - தமிழ்


7. சென்னை மாநிலம் தமிழ்நாடு என்று பெயர், சூட்டப்ட்ட நாள் - 14.01.1968

8.யாருடைய பிறந்த தினம் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது - டாக்டர் ராதாகிருஷ்ணன்

9. யாருடைய பிறந்த தினம் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது - ஜவகர்லால் நேரு

10. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட ஆண்டு - 1956

11. புவி தினத்தை முதன் முதலில் கொண்டாடியவர் - கேலார்ட் நெல்சன்.

 12. மகாத்மாக காந்தியடிகள் பிறந்த தினம் - அக்டோபர் 2, 1869

13. தைத்திங்கள் முதல் நாள் - பொங்கல்.

14. திருவோணம் கொண்டாடப்படும் மாநிலம் - கேரளா

15. கதக்களி நடனம் ஆடப்படும் மாநிலம் - கேரளா

16. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் - ஏப்ரல் 1, 2010

17.ஆகாய விமானம் கண்டுபிடித்தவர் - ரைட் சகோதரர்கள்

18. 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை தொழிற்சாலை அல்லது கடைகளில் பணியமர்த்தக் கூடாது.

19. ஆண்டிஸ் மலைத் தொடர் அமைந்துள்ள கண்டம் - தென்அமெரிக்கா

20. ஆல்ப்ஸ் மலைத் தொடர் அமைந்துள்ள கண்டம் - ஐரோப்பா

21. ராக்கி மலைத் தொடர் அமைந்துள்ள கண்டம் - வட அமெரிக்கா

22. கிளிமஞ்சாரோ அமைந்துள்ள கண்டம் - ஆப்ரிக்கா

23. இந்தியாவில் அமைந்துள்ள பீடபூமி - திபெத் பீடபூமி

24. கிழக்கு ஆசியாவில் காணப்படும் பீடபூமி - திபெத் பீடபூமி

25. வட அமெரிக்காவில் உள்ள பீடபூமி - கொலராடோ பீடபூமி

26. சிந்து கங்கை சமவெளி காணப்படும் இடம் - இந்தியா

27. லியானாஸ் சமவெளி காணப்படும் இடம் - தென்அமெரிக்கா

28. லிம்பார்டி சமவெளி காணப்படும் இடம் - ஐரோப்பா

29. கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர்கள் வரை உயரம் கொண்ட பரந்து விரிந்த நிலப்பரப்புகள் - சமவெளி

30. மலைகளை விட உயரம் குறைவாகவும், பூமி மட்டத்திற்கு மேல் உயர்ந்து தட்டையாகவும் உள்ள நிலப்பகுதிகள் - பீடபூமிகள்

31. 0 டிகிரி அட்சக் கோடு - நிலநடு கோடு

32. 23 அரை டிகிரி வடக்கு அட்ச ரேகை - கடக ரேகை

33. 66 அரை வடக்கு அட்ச ரேகை - ஆர்டிக் வட்டம்

34. 66 அரை டிகிரி தெற்கு அட்ச ரேகை - அண்டார்டிக் வட்டம்

35. 23 அரை தெற்கு அட்ச ரேகை மகர ரேகை

36. பூமியின் மீது வரையப்படும் அட்ச ரேகைகளின் எண்ணிக்கை 180

37. வரைபடத்தில் இடங்களை எளிதில் காண பயன்படுவது - அட்சரேகையும், தீர்க்க ரேகையும் சந்திக்கும் இடம்

38. கிரின்வீச் மைய தீர்க்கக் கோடுகள் - 0 டிகிரி

39. மொத்த வரையப்பட்ட தீர்க்க ரேகைகளின் எண்ணிக்கை - 360

40. மெரிடியன் என்று அழைக்கப்படுவது - தீர்க்க ரேகைகள்

41. புவிக் கோளத்தின் மீது கிழக்கு மேற்காக வரையப்பட்ட கற்பனைக் கோடுகள் - அட்ச ரேகைகள்.

42. பூமியின் சிறிய மாதிரி - புவிக்கோளம்.

43. தீபக்கற்பத்திற்கு எடுத்துக் காட்டு - இந்தியா

44. கடலின் அடிப்பகுதியில் - மலைகள், மலைத் தொடர்கள், குன்றுகள் உள்ளன.

45. தீபகற்பம் என்படுது - மூன்று பக்கம் நீராலும், ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது.

46. பசுபிக் பெருங்கடலின் பரப்பானது புவியின் பரப்பில் - மூன்றில் ஒரு பங்கு

47. பெருங்கடல்களின் மிகப் பெரியது - பசுபிக் பெருங்கடல்

48. கண்டங்களை சுற்றி அமைந்து பெருங்கடல்களின் எண்ணிக்கை- 5

49. ஆழமான மிகப்பரந்த நீர்பரப்புகள் - பெருங்கடல்கள்

50. கிராண்ட் கேன்யான் அமைவிடம் - வடஅமரிக்கா

நன்றி:



TET வினா விடை - சமூக அறிவியல் - பொது 2

1. ஹரப்பா நாகரிகம் - நகர நாகரிகம்

2. திருவள்ளுவர் பிறந்த ஆண்டாக தமிழறிஞர்கள் கருதும் ஆண்டு - கி.மு.31

3. இடைச்சங்கம் நடைபெற்ற நகரம் - கபாடபுரம்

4. பின் வேதகாலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய பெண்களுள் ஒருவர் -கார்கி

5.சுனாமி என்ற சொல் ஜப்பான் மொழியிலிருந்து வந்தது.

6. கடல் மட்டத்தில் நிலவும் காற்றழுத்தத்தின் சராசரி அளவு 1013 மில்லிபார்களாகும்

7.பர்கான் எந்த செயலோடு தொடர்புடையது - படிய வைத்தல் நிலத்தோற்றம்.

8. பான்ஜியா 7 பெரிய தட்டுகளாக உடைக்கப்பட்டுள்ளது.

9. துளசிதாசர் எழுதிய நூல் - இராமசரிதமானஸ்

10. விஜய நகர பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - கி.பி.1336

11. இந்தியக் கிளி என அழைக்கப்பட்ட கவிஞர் - அமிர்குஸ்ரு

12.முதலாம் தரைன் போரில் முகமது கோரியை தோற்கடித்தவர் - பிருதிவிராசன்

13. காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டியவர் - கரிகால சோழன்

14.தர்மபாலர் புகழ்மிக்க பல்கலைக்கழகத்தை விக்ரமசீலம் என்ற இடத்தில் நிறுவினார்

15. பூமியின் மத்தியில் கிழக்கு மேற்காக செல்லும் கோடு - பூமத்திய ரேகை

16. தெற்கு வடக்காக செல்லும் கோடு - தீர்க்கக் கோடு

17. பூமியின் மொத்த கோண அளவு - 360º

18. 0º டிகிரி தீர்க்கக் கோடு என்பது - அட்சக்கோடு

19. சூரிய குடும்பத்தின் நாயகன் - சூரியன்

20. சந்திரன் பூமியை சுற்றிவர ஏறத்தாழ 27.3 நாள்கள் எடுத்துக்கொள்கிறது.

21. பல கோடிக்கணக்கான விண் மீன்கள் தொகுதியை அண்டம் என்பர்

22. பெண்களைக் காத்திட 1930 ஆண்டில் அடையாற்றில் ஒளவை இல்லம் தொடங்கப்பட்டது.

23. மாநகராட்சி தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்

24. இந்தியாவில் இக்காலத்தில் செயற்படும் உள்ளாட்சி அமைப்பை முதன் முதலில் நடைமுறைப்படுத்தியவர் - ரிப்பன் பிரபு

25. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் - முத்துலட்சுமி அம்மையார்

26.தொலை நோக்கியில் மட்டுமே புலப்படும் கோள் - யுரேனஸ்

27. பூமியின் அச்சு 231/2º டிகிரி சாய்ந்துள்ளது.

28. நாளந்தா பல்கலைக்கழகம் குமார குப்தர் காலத்தில் உருவாக்கப்பட்டது.

29. இரண்டாம் அசோகர் என அழைக்கப்பட்டவர் - கனிஷ்கர்

30. மெகஸ்தனிஸ் எழுதிய நூல் - இண்டிகா

31. பணம் மட்டுமே பணத்தின் தேவையை சந்திக்கும் எனஅறு கூறியவர் - வாக்கர்

32. சாலைப் போக்குவரத்தின் சட்ட திட்டங்கள் அமலுக்கு வந்த ஆண்டு - 1989

33. தேசிய மனித உரிமைகள் ஆணையம் 1993 ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

34. உலக எழுத்தறிவு தினம் - செப்டம்பர் 8.

35. தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கடைபிடிக்கப்படும் நாள் - நவம்பர் 19

36. தந்தித் தொடர்பு கண்டுபிடிக்கப்பட்ட வருடம் -1844

37. பருத்தி கரிசல் மண்ணில் அதிகமாக விளைகிறது.

38. நெல் ஒரு அயனமண்டல பயிராகும்.

39. மேக்னடைட் தாதுவை கொண்ட கனிமம் - இரும்பு

40. இந்தியாவின் மிகப்பெரிய நீர் மின்சக்திநிலையம் அமைந்துள்ள இடம் - பக்ராநங்கல்

41. பிளாசி போர் நடைபெற்ற ஆண்டு - 1757

42. கி.பி. 1857-ம் ஆண்டு புரட்சி கானிங் என்பவர் காலத்தில் தோன்றியது.

43. இரும்பு பாதையின் தந்தை என அழைக்கப்படுபவர் - டல்ஹெசி

44. நிலையான நிலவரித் திடிடத்தை அறிமுகப்படுத்தியவர் - காரன்வாலிஸ்

45. ஒழுங்குமுறைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு - 1773

46.அட்லாண்டிக் பேராழி நீண்ட S வடிவம்

47. இந்திய உச்ச நீதிமன்றம் அமைந்துள்ள இடம் - புதுதில்லி

48. பன்னாட்டு நீதிமன்றம் ஹாலந்து நாட்டில் உள்ள ஹேக் நகரில் உள்ளது.

49. இந்திய அரசு கல்வி உரிமைச்சட்டத்தை நடைமுறைப்படுத்திய நாள் - 1 ஏப்ரல் 2010

50. பொருளியலின் தந்தை - ஆடம் ஸ்மித்

51. நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்தின் ஆசிரியர் - ஆடம் ஸ்மித்

52. கல்வியில் செய்யப்படும் முதலீடு மனிதவளம் மூலதனம் எனப்படும்.

53. பொதுப்பேரவையில் தலைவராக 1954 -ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர் - திருமதி. விஜயலட்சுமி பண்டிட்

54. முதல் பானிப்பட் போர் நடைபெற்ற ஆண்டு - கி.பி.1526

55. மாபெரும் வாணிப மையமான கான்ஸ்டாண்டி நோபிள் ஆட்டோமானிய துருக்கியர்களால் கி.பி.1453-ல் கைப்பற்றப்பட்டது.

56. ஆங்கிலப் பேரரசை இந்தியாவில் தோற்றுவித்தவர் - இராபர்ட் கிளைவ்

57. சரஸ்வதி மகால் கட்டியவர் - இரண்டாம் சரபோஜி

58. வேலூர் சிப்பாய் புரட்சி நடைபெற்ற ஆண்டு - 1806

நன்றி:


TET வினா விடை - சமூக அறிவியல் - பொது 1

1. சங்க காலத்தை அறிய உதவும் சான்றுகள்- அசோகரது கல்வெட்டுகள், உத்திரமேரூர் கல்வெட்டுகள், ஆதிச்ச நல்லூர் கல்வெட்டுகள்
2. சங்க காலத்தில் தமிழ்நாட்டில் வடக்கு எல்லை - வேங்கடம்
3. முதற் சங்கம் அமைவிடம் - தென் மதுரை
4. இரண்டாவது சங்கம் அமைவிடம் - கபாடபுரம்
5. மூன்றாவது சங்கம் அமைவிடம் - மதுரை
6. இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல் - தொல்காப்பியம்
7. சங்க காலம் எனப்படுவது - கி.பி. 300 முதல் கி.மி. 300 வரை
8. நிலிந்தரு, குருவிற்பாண்டியன் காலத்தில் அரங்கேற்றப்பட்ட நூல் - தொல்காப்பியம்
9. வஞ்சி யாருடைய தலைநகரம் - சேர அரசர்கள்
10. பனம் பூ மாலையை அணிந்தவர்கள் - சேர அரசர்கள்
11. தொண்டி யாருடைய துறைமுகம் - சேர அரசர்கள்
12. முசிறி யாருடைய துறைமுகம் - சேர அரசர்கள்
13. சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள் - கேவை, கேரளம்
14. உறையூர் யாருடைய தலைநகரம் - சோழர்கள்
15. ஆத்திப் பூ மாலையை அணிந்தவர்கள் - சோபூர்
16. சோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள் - திருச்சி, தஞ்சாவூர்
17. பணடைய சோபூர்களின் சின்னம் எது? புலி
18. சோபூர்களின் துறைமுகம் - காவிரிபூம்பட்டினம்
19.சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் அண்ணன் - செங்குட்டுவன்
20. இமயம் வரைச் சென்று கல் எடுத்து வந்து கண்ணகிக்கு நினைவுச் சின்னம் எழுப்பிய மன்னர் -செங்கட்டுவன்
21.சாலையில் கவனி என்பதற்கான எச்சரிக்கை விளக்கு - மஞ்சள்
22. சாலையில் செல் எதன்பதற்கான எச்சரிக்கை விளக்கு - பச்சை
23. சாலையில் நில் என்பதற்கான எச்சரிக்கை விளக்கு - சிவப்பு
24. பாம்பன் பாலம் அமைந்துள்ள மாவட்டம் - இராமநாதபுரம்
25. கடற்கரை கோயிலும், குகைக் கோயிலும் காணப்படும் இடம் - மாமல்லபுரம்
26. கொனார்க் அமைந்துள்ள மாநிலம் - ஒரிசா
27. கொனார்க்கில் அமைந்துள்ள கோயில் - சூரியனார் கோயில்
28. இந்தியாவின் வடக்கிழக்கில் உள்ளது - அசாம்
29. காசி ரங்கா உயிரியியல் பூங்கா அமைந்துள்ள இடம் - அசாம்
30. மூன்று கோடி மரங்களை நட்டு நோபல் பரிசு பெற்றவர் - வாங்காரி மார்தோய்.
31. இந்தியாவின் தென் கிழக்கு கடற்கரைக் கிராமம் - தனுஷ்கோடி
32. எலிபெண்டா அருவி அமைந்துள்ள இடம் - ஷில்லாங்
33. காஷ்மீரின் தலைநகர் - ஸ்ரீநகர்
34. தால் ஏரி அமைந்துள்ள இடம் - ஸ்ரீநகர்
35. மேகாலயா மாநிலத்தின் தலைநகரம் - ஷில்லாங்
36. புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் - சர் ஐசக் நியூட்டன்
37. பழங்காலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்ட பகுதியின் இன்றைய பெயர் - தருமபுரி
38. இயேசுவை சிலுவையில் அறைந்த தினம் - புனித வெள்ளிக்கிழமை
39. கிருத்துவ மதத்தினரால் கொண்டாடப்படும் விழா - கிறிஸ்துமஸ்
40. சீக்கிய சமயத்தினரால் கொண்டாடப்படுது - மகாவீர் ஜெயந்தி
41. புத்த சமயத்தினரால் கொண்டாடப்படுவது - புத்த பௌர்ணமி
42. பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக் கலை - வில்லுப்பாட்டு
43. கைவினைத் தொழிலாளர்களால் முதன் முதலில் செய்யப்பட்ட பொருள் - செங்கல்
44. வானவில்லில் காணப்படும் நிறங்களின் எணணிக்கை - ஏழு
45. கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் - திருநெல்வேலி
46. சிவப்பு மற்றும் கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் - வேலூர்
47. பத்தமடை அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி
48. தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகழ் பெற்ற இடம் - பந்தமடை
49. தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம் - கன்னியாகுமரி
50. 24 மணி நேரத்தில் 3 அடி உயரம் வரை வளரக் கூடிய தாவரம் - மூங்கில்.

நன்றி:

 

TET வினா விடை - தமிழ் - பொது 4

* சீட்டுக்கவி பாடுவதில் வல்லவர் - அந்தகக் கவிவீரராகவர்

* அந்தகக் கவி வீரராகவர் பிறந்த ஊர் - பூதூர்

* சந்திரவாணன் கோவை என்ற நூலை எழுதியவர் - அந்தகக் கவி வீரராகவர்

* கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தை காத்தவர் - திருஞானசம்பந்தர்

* மதுரையில் ஆடைகள் விற்கும் கடைப்பகுதி இருந்த வீதியின் பெயர் - அறுவை வீதி

* மதுரை நகரின் பெயர் கல்வெட்டில் எப்படி எழுதப்பட்டுள்ளது -மதிரை

* மதுரையில் தாஜ்மகால் போல கட்டப்பட்ட கட்டிடம் - திருமலை நாயக்கர் மகால்

* கடைச் சங்கம் எங்கு நிறுவப்பட்டது - மதுரை

* மதுரை என்ற சொல்லுக்கு இனிமை என்று பெயர்

* திருவிழா நகர், கோயில் நகர் என்று சிறப்பிக்கப்படும் நகர் - மதுரை

* தென்னிந்தியாவில் ஏதென்ஸ் என்று புகழப்படும் நகரம் - மதுரை

* தங்கப் பதுமையாம் தோழர்களோடு இவ்வடிவில் பதுமை என்னும் சொல் உணர்த்தும் பொருள் - உருவம்

* திருவாரூர் நான்மணி மாலையை எழுதியவர் - குமரகுருபரர்

* குமரகுருபரர் பிறந்த ஊர் - திருவைகுண்டம்

* குமரகுருபரர் வாழ்ந்த காலம் - கி.பி.16

* நான்மணி மாலை என்பது - சிற்றிலக்கியம்

* மண் சுமந்தார் என குறிப்பிடப்படுபவர் - சிவபெருமான்

* வாணிதாசன் சொந்த ஊர் - வில்லியனூர்

* வாணிதாசன் இயற்பெயர் - அரங்கசாமி

* தமிழகத்தின் அன்னிபெசன்ட் என்று புகழப்பட்டவர் - ராமாமிர்தம் அம்மையார்

* ராமாமிர்தம் அம்மையார் முதல் போராட்டத்தை தொடங்கிய ஆண்டு - 1938

* திருச்செந்திற் கலம்பகம் எத்தனை உறுப்புகளை கொண்டது - 18

* அம்மானை என்பது - பெண்கள் விளையாடும் விளையாட்டு

* திருச்செந்திற் கலம்பகத்தில் இடம் பெற்ற அம்மானையில் போற்றப்படும் தெய்வம் - முருகன்

* முருகனால் சிறைப்பிடிக்கப்பட்டவன் - வேலன்

* ஈசானதேசிகருக்கு கல்வி கற்றுக் கொடுத்தவர் - மயிலேறும் பெருமாள்

* திருச்செந்திற் கலம்பகம் என்னும் நூலை இயற்றியவர் - சுவாமிநாததேசிகர்.

* கதர் ஆடை என்பது - பருத்தி ஆடை

* இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டவர் - காந்தியடிகள்

* வானம் பார்த்த பூமி என்பது - புன்செய்

* வேளாண் தொழிலில் உள்ள கூறுகள் - 6

* வேளாண் பல்கலைக் கழகம் உள்ள இடம் - கோவை

* சீவகசிந்தாமணி காப்பியத்தின் கதைத் தலைவன் - சீவகன்

* நரிவிருத்தம் பாடியவர் - திருத்தக்க தேவர்

* வீழ்ந்து வெண்மழை தவழும் - என்ற சீவக சிந்தாமணி பாடலில் கூறப்படும் காட்சி - ஒரு நாட்டியம் நடப்பது போல

* காராளர் என்பவர் - உழவர்

* ஆழி என்பதன் பொருள் - மோதிரம்

* வேந்தர் என்பதன் பொருள் - மன்னர்

* கம்பர் பிறந்த ஊர் - தேரழுந்தூர்

* தமிழரின் தற்காப்பு விளையாட்டுகளில் ஒன்று - சிலம்பாட்டம்

* யானைப் போர் காண்பதற்காக மதுரையில் கட்டப்பட்டது - தமுக்கம் மண்டபம்

* விளையாட்டின் விழியாக கிடைப்பது - பட்டறிவு

* விளையாட்டின் அடிப்படை நோக்கம் - போட்டியிடுவது

* பாரதிக்கு பிறகு கவிதை மரபில் திருப்பம் விளைவித்தது யாருடைய படைப்பு - ந.பிச்சைமூர்த்தி

* மருதகாசி பிறந்த ஊர் - மேலக்குடிக்காடு

* திரைக்கவித் திலகம் என்று அழைக்கப்பட்டவர் - மருதகாசி

* பூங்கொடி பூப் பறிக்கிறாள் இத்தொடரில் உள்ள "பூ" என்பது - பொருட் பெயர்

* மதுரை என்பது - இடப் பெயர்

* மீனாட்சி அம்மன் கோயிலில் உயரமானது - தெற்குகோபுரம்

* பாண்டிய நாடு எதற்கு பெ.யர் பெற்றது - முத்து

* மதுரையில் கையில் சிலம்புடன் உட்கார்ந்து இருக்கும் உருவச் சிலை அமைந்த கோயில் - செல்லத்தம்மன் கோயில்

* நான்காம் தமிழ்ச்சங்கத்தை மதுரையில் நிறுவி தமிழ் வளர்த்தவர் - வள்ளல் பாண்டித்துரை

* மீனாட்சியம்மை சிறுமியாக வந்து முத்துமணி மாலையை யாருக்கு பரிசளித்தார் - குமரகுருபரர்

* மதுரையை விழா மல்கு நகரமாக விளங்கச் செய்தவர் - திருமலை நாயக்கர்

* பரஞ்ஜோதியாரின் திருவிளையாடல் புராண கூற்றின்படி தண்டமிழ் பாடல் யாருக்கு அளிக்கப்பட்டது - தருமிக்கு

* மனோன்மணியம் எந்த ஆங்கில கதையை தழுவி எழுதப்பட்டது - மறைவழி

* மனோன்மணியம் என்னும் நாடக காப்பியத்தை எழுதியவர் - பேராசிரியர் சுந்தரனார்

* மனோன்மணியம் என்னும் கவிதை நாடகம் எழுதப்பட்ட ஆண்டு - 1891

* சமுதாய சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் சிறப்பிடம் பெற்ற நூற்றாண்டு - கி.பி.19

* முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை - 30

* இயல், இசை, நாடகம் என முப்பெரும் பாகுபாடு கொண்ட மொழி - தமிழ்

* நாடக பேராசிரியர், நாடக உலகின் இமய மலை என்று போற்றப்பட்டவர் - பம்மல் சம்பந்தனார்

* மறை வழி என்ற நூலை எழுதியவர் - லார்டு லிட்டன்

* தமிழகத்தில் முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் - கதரின் வெற்றி

* தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை என நாடக உலகில் அழைக்கப்படுபவர் - கந்தசாமி

* உலகம் தட்டை இல்லை, உருண்டையானது என்று சரியாக கணிக்கப்பட்ட நூற்றாண்டு - கி.பி.15

* உலகம் உருண்டை என்று யார் சொன்னதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது - கலீலியோ

* "திங்களை பாம்பு கொண்டற்று" என்ற குறள் எதை குறிப்பிடுகிறது - சந்திர கிரகணம்

* உடலை நீர் தூய்மை செய்யும், உள்ளத்தை எது தூய்மை செய்யும் - வாய்மை

* ஆய்த எழுத்து எந்த எழுத்து வகையை சேர்ந்தது - சார்பெழுத்து

* திரு.வி.க இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் தலைப்பில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 430

* திரு.வி.க . பிறந்த ஊர் - தண்டலம்

* உழவர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் நாடகங்களுக்கு பெயர் - பள்ளு

* நொண்டி வகை நாடகங்கள் எந்த காலத்தில் தோன்றின் - கி.பி.12

* அருணாசலக் கவிராயரின் ராம் நாடகம் தோன்றிய நூற்றாண்டு - கி.பி.18

* தெருக்கூத்து நாடகங்கள் எதை மையமாக வைத்து நடத்தப்பட்டன - புராணக்கதைகள்

* குறவஞ்சி நாடகங்கள் நடத்தப்பட்டது - நாயக்க மன்னர்கள் காலத்தில்

* ராஜராஜசோழன் காலத்தில் நடத்தப்பட்ட நாடகம் - ராசராசேச்சுவரம்

* மத்த விலாசம் என்ற நூலை எழுதியவர் - மகோந்திரவர்ம பல்லவன்

* மத்த விலாசம் எழுதப்பட்ட காலம் - கி.பி. 7

* நாடக கலையை பற்றியும், காட்சிகள் பற்றியும், நாடக அரங்கம் பற்றியும் விரிவாக கூறியுள்ள நூல் - சிலப்பதிகாரம்

* தனிப்பாடலுக்கு மெய்பாடு தோன்ற ஆடுவதற்கு - நாட்டியம் என்று பெயர்

* கூத்துவகைகள், நாடக நூல்கள் குறித்து யார் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது - அடியார்க்கு நல்லார்

* நாட்டின் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவது - நாடகம்

* மனித வாழ்க்கையும் காந்தியும் என்ற நூலின் ஆசிரியர் - திரு.வி.க

* திரு.வி.க சென்னையில் தமிழ் ஆசிரியராக பணியாற்றிய பள்ளி - வெஸ்லி பள்ளி

* அக இருளை போக்கும் விளக்கு - பொய்யா விளக்கு

* நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையங்களாக பிரித்தனர் - 72

* சார்பெழுத்துக்கள் எத்தனை வகை - 10

* அறிவுரைக் கோவை என அழைக்கப்படுவது - முதுமொழிக்காஞ்சி

* முதுமொழிக் காஞ்சியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 100

* மோசிக்கீரனார் உடல் சோர்வால் முரசுக் கட்டிலில் தூங்கியபோது கவரி வீசிய மன்னன் - சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை

* நெல்லும் உயிரன்றே என்னும் பாடலை பாடியவர் - மோசிக்கீரனார்

* முதுமொழிக் காஞ்சியில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை - 10

* முதுமொழிக் காஞ்சியின் ஆசிரியர் - மதுரை கூடலூர் கிழார்

* கற்றலை விட சிறந்தது - ஒழுக்கமுடைமை

* மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த ஆண்டு - 1815

* வனப்பு என்ற சொல்லின் பொருள் - அழகு

* "நில்லாமையுள்ளும் நெறிப்பாடும்" என்னும் வரியில் "வழி" என்பதன் பொருள் - உள்

* "பால் பற்றி செல்லா விடுதலும்" என்னும் வரியில் "பால்" என்பதன் பொருள் - ஒருபக்க சார்பு பற்றி

* காளமேகப் புலவர் பிறந்த ஊர் - நந்திக்கிராமம்

* சென்னை துறைமுகம் சார்பில் குடிநீர் கப்பலுக்கு பெயர் - சீனிவாச ராமானுஜம்

* ராமானுஜம் எழுத்தராக பணியாற்றிய இடம் - துறைமுகம்

* ராமானுஜர் உயர்கல்விக்காக சென்ற நாடு - இங்கிலாந்து

* ராமானுஜர் எதற்கு மதிப்புள்ளது என்று தனது ஆசிரியரிடம் வாதிட்டார் - 0

* ராமானுஜர் திண்ணைப் பள்ளியில் படித்த ஊர் - காஞ்சிபுரம்

* பேராசிரியர் ராமானுஜம் அனைத்துலக நினைவுக்குழு அமைக்கப்பட்டுள்ள இடம் - சென்னை

* ராமானுஜர் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்து சேர்ந்த ஆண்டு - 1919

* கணிதமேதை ராமானுஜம் பிறந்த ஆண்டு - 1887

* கணித மேதை ஜாகோபி ஜெர்மனியில் வாழ்ந்த நூற்றாண்டு - 19ம் நூற்றாண்டு

* ராமானுஜர் ஆய்வாலராக இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் ஒரு ஜாகோபி என்று கூறியவர் - லிட்டில்வுட்

* ராமானுஜத்தின் வழிமுறைகளை ரோசர்ஸ் ராமானுஜம் கண்டுபிடிப்புகள் என்னும் தலைப்பில் வெளியிட்டவர் - ஹார்டி

* ராமானுஜத்தை இறைவன் தந்த பரிசு என்று கூறியவர் - ஈ.டி.பெல்



* மெய்யெழுத்துகளுக்கு எத்தனை மாத்திரை - அரை மாத்திரை

* ஒர் எழுத்தை இயல்பாக உச்சரிக்க நாம் எடுத்துக் கொள்ளும் கால அளவுக்கு - மாத்திரை என்னும் பெயர்

* திணை, பால், எண் ஆகியவர்றை உணர்த்தி வந்தால் அது படர்க்கை பெயர்

* தன்மைப் பெயர்களும், முன்னிலை பெயர்களும் படர்க்கை இடப் பெயர்கள்

* ஒருவன் சொல்வதை எதிரே நின்று கேட்பவனை குறிப்பது - முன்னிலை இடம்

* இடம் எத்தனை வகைப்படும் - 3 வகை

* மொழியில் சொற்களை வழங்கும் நிலைக்கு - இடம் என்று பெயர்

* ஒன்றுக்கு மேற்பட்ட பல பொருட்களை குறிக்கும் சொல் - பன்மை

* பல பொருள்களை குறிக்கும் சொல் - பலவின்பால்

* பல ஆடவர்களையும், பல பெண்களையும் தொகுதிகளாக குறிப்பது - பலர்பால்

* ஆண்பால், பெண்பால், பலர்பால் ஆகியவை - உயர்திணைக்கு உரியவை

* எண் எத்தனை வகைப்படும் - இரண்டு

* ஒரே பொருளை குறிக்கும் சொல் - ஒருமை

* மக்களையும் தேவர்களையும், நகரையும் குறிக்கும் சொற்களுக்கு - உயர்திணை

* அளபெடை எத்தனை வகைப்படும் - 2 வகை

* செய்யுளில் ஒசை குறையும்போது அவ்வோசையை நிறைவு செய்ய உயிரெழுத்து நீண்டு ஒலித்தால் அதற்கு உயிரளபெடை என்று பெயர்

* திணை என்பது - ஒழுக்கம்

* சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து - ஏ

* சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் நின்று வினாப் பொருளை உணர்த்தும் எழுத்து - ஏ

* சொல்லுக்கு இறுதியில் வரும் வினா எழுத்துக்கள் - ஆ, ஓ, ஏ

* சொல்லுக்கு முதலில் வரும் வினா எழுத்துக்கள் - எ, யா, ஏ

* வினா எழுத்துக்கள் - 5

* சுட்டெழுத்துக்கள் - 3

* பால் - 5

* பெயர் சொற்களை 2 வகையாக பிரிக்கலாம்.

* ஒரு பொருளை சுட்டிக் காட்டுவது - சுட்டு

* பெயர் சொற்களையும், வினைச் சொற்களையும் 5 பால்களாக பிரிக்கலாம்

* திணை - 2 வகை

* நீட்டி ஒலிப்பதை அளபெடை என்பர் இலக்கணத்தார்

* ஒரு பெண்ணைப் பார்த்து "மான் கொல்? மயில் கொல்?" என்பது - செய்யுள் வழக்கு

* மனிதர் அல்லாத உயிருள்ளவையும், உயிரற்றவையும் - அஃறிணை

உவமையால் விளக்கப்படும் பொருள்

* தாயைக் கண்ட சேயைப் போல - மகிழ்ச்சி

* இலைமறை காய் போல் - மறைபொருள்

* மழைமுகம் காணாப் பயிர் போல - வாட்டம்

* விழலுக்கு இறைத்த நீர் போல - பயனற்றது

* சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்தது போல - மிக்க மகிழ்வு

* உடுக்கை இழந்தவன் கை போல - நட்புக்கு உதவுபவன்

* மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப் போல - மாந்தருள் ஒளிந்திருக்கும் திறன்

* இணருழந்தும் நாறா மலரனையார் - விரித்துரைக்க இயலாதவர்

* குந்தித் தின்றால் குன்றும் மாளும் - சோம்பல்

* வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போல - அறிவற்ற தன்மை

* வளர்ந்த கடா மார்பில் பாய்வது போல - நன்றியின்மை

* புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது - சான்றாண்மை

* சேற்றில் மலர்ந்த செந்தாமரை - குடிபிறப்பின் சிறப்பு

* அனலில் விழுந்த புழுப்போல - தவிர்ப்பு

* கண்ணைக் காக்கும் இமை போல - பாதுகாப்பு

* நீர்க்குமிழி அன்ன வாழ்க்கை - நிலையாமை

* உமி குற்றிக் கைவருந்தல் போல - பயனற்ற செயல்

* பல துளி பெருவெள்ளம் - சேமிப்பு

* நத்தைக்குள் முத்துப் போல - மேன்மை

* ஊமை கண்ட கனவு போல - கூற இயலாமை, தவிப்பு

* பூவோடு சேர்ந்த நார் போல - உயர்வு

* நாண் அறுந்த வில் போல - பயனின்மை

* மேகம் கண்ட மயில் போல - மகிழ்ச்சி

* தாயைக் கம்ட சேயைப் போல - மகிழ்ச்சி

* சிறகு இழந்த பறவை போல - கொடுமை

* மழை காணாப் பயிர் போல - வறட்சி

* நட்புக்கு கரும்பை உவமையாகச் சொன்ன இலக்கியம் - நாலடியார்

* இயற்கை தவம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - சீவக சிந்தாமணி

* திருத்தொண்டர் புராணம் என்னும் அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - பெரியபுராணம்

* இரட்டைக் காப்பியம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை

* வள்ளலார் என்று போற்றப்படுபவர் - இராமலிங்க அடிகளார்

* விருத்தமெனும் ஒண்பாவில் உயர்ந்தவர் - கம்பர்

பொருத்துக

* வாரி - கடல்

* கலிங்கம் - ஆடை

* வயமா - குதிரை

* புலம் - அறிவு

* ஐயை - தாய்

* செறிவு - அடக்கம்

* இகல் - பகை

* நகம் - மலை

* வெச்சி - நிரை கவர்தல்

* கரந்தை - நிரை மீட்டல்

* நொச்சி - எயில் காத்தல்

* வாகை - போரில் வெற்றி

* வாள் - உயர்ந்த

* பராவி - வணங்கி

* கழனி - வயல்

* தொன்மை - பழமை

* பரி - குதிரை

* அரி - சிங்கம்

* மறி - ஆடு

* கரி - யானை

* பாரி -கபிலர்

* அதியமான் - ஒளவையார்

* கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார்

* குமணன் -பெருஞ்சித்தனார்

* சுரத்தல் - பெய்தல்

* உள்ளம் - ஊக்கம்

* வேலை - கடல்

* நல்குரவு - வறுமை

* முப்பால் - திருக்குறள்

* தொல்காப்பியம் - தொல்காப்பியர்

* மகாபாரதம் - வியாசர்

* தமிழ் முதற் காப்பியம் - சிலப்பதிகாரம்

* யாப்பருங்கலம் - புத்தமித்திரர்

* வீரசோழியம் - அமிர்தசாகரர்

* நேமிநாதம் - குணவீர பண்டிதர்

* நன்னூல் - பவணந்தி முனிவர்

* உழத்திப்பாட்டு - முக்கூடற்பள்ளு

* முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்

* ஈரடி வெண்பா - திருக்குறள்

* தென்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்

* திருக்குற்றாலக் குறவஞ்சி - திரிகூடராசப்ப கவிராயர்

* இன்தமிழ் ஏசுநாதர் - திருஞானசம்பந்தர்

* கவிக்குயில் - சரோஜினிநாயுடு

* காதல் இலக்கியம் - சீவக சிந்தாமணி

* புதுவைக்குயில் - பாரதிதாசன்

* யாருக்கும் வெட்கமில்லை - சோ.ராமசாமி

* நம்மாழ்வார் - திருவாய்மொழி

* சமணமுனிவர் - திருப்பாமாலை

* கண்ணதாசன் - இயேசுகாவியம்

* உமறுப்புலவர் - சீறாப்புரணம்

* பாணாறு - பெரும்பாணாற்றுப் படை

* புறம்பு நானுறு - புறநானூறு

* திராவிடச் சிசு - திருஞான சம்பந்தர்

* வியாக்கியான சக்கரவர்த்தி - பெரிய வாச்சான் பிள்ளை

* வீரசோழியம் பாடியவர் - புத்தமித்திரர்

* சூடிக்கொடுத்த சுடர்க்கொடி - ஆண்டாள்

* மருள் நீக்கியார் - அப்பர்

* கிறித்துவக்கம்பன் - கிருஷ்ணப்பிள்ளை

* முடியரசன் - பூங்கொடி

* சிற்பி - நிலவுப்பூ

* நா.காமராசன் - சூரியகாந்தி

* பாரதிதாசன் - குறிஞ்சித் திட்டு* பாஞ்சாலி சபதம் - பாரதியார்

* பாண்டியன் பரிசு - பாரதிதாசன்

* அர்த்தமுள்ள இந்து மதம் - கவியரசு கண்ணதாசன்

* கள்ளிக்காட்டு இதிகாசம் - கவிஞர் வைரமுத்து

* திருவாசகம் - மாணிக்கவாசகர்

* திருப்பாவை - ஆண்டாள்

* பெண்ணின் பெருமை - திரு.வி.க.

* தேவாரம் - திருஞானசம்பந்தர்

* முக்குடற்பள்ளு - ஆசிரியர் பெயர் தெரியவில்லை

* பழமொழி - முன்றுறையரையனார்

* இருண்ட வீடு - பாரதிதாசன்

* ஏலாதி - கணிமேதாவியார்.

நன்றி:

 

TET வினா விடை - தமிழ் - பொது 3

* தமிழ்த் தென்றல் - திரு. வி. கல்யாண சுந்தரனார் (திரு.வி.க)

* பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் - திரு.வி.க

* 'நாமக்கல் கவிஞர்' என அழைக்கப்படுபவர் - வெ.ராமலிங்கம்.

* நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது - பத்மபூஷன்

* குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது - சிலப்பதிகாரம்

* இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் - சிலப்பதிகாரம்

* தமிழ்மொழியின் முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்

* ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன - ஆறு காண்டங்களாக

* மாயணத்தில் "சொல்லின் செல்வர்" என அழைக்கப்பட்டவர் - அனுமன்

* ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் - சுந்தர காண்டம்

* இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் - அசோகவனம்

* சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு - கிட்கிந்தை

* சீதைக்குக் காவலிருந்த பெண் - திரிசடை

* கவிச் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் - கம்பர்

* "கிறிஸ்துவக் கம்பன்" என அழைக்கப்படும் கவிஞர் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை

* இரட்சண்ய யாத்திரிகம் எனும் காப்பியத்தின் ஆசிரியர் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை

* இரட்சண்ய யாத்திரிகம் எந்த நூலின் வழி நூலாகும் - பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (ஆங்கிலம்)

* பில்கிரிம்ஸ் புரோகிரஸ் நூலின் ஆசிரியர் - ஜான் பன்யன்

* இரட்சண்ய யாத்திரிகம் என்பதன் பொருள் - ஆன்மஈடேற்றம்

* இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது - ஐந்து

* எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர் - ஹென்றி ஆல்பர்ட்

* கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்

* கம்பர் இயற்றிய மற்றொரு நூல் - சரசுவதி அந்தாதி

* வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர் - கவிஞர். துறைவன்

* "திருவினாள்" என சிறப்பிக்கப்படுபவர் - லட்சும் தேவி

* தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை - ஏழு

* ஜடாயுவின் அண்ணன் - சம்பாதி

* "சாகித்திய மஞ்சரி" என்னும் நூலின் ஆசிரியர் - மலையாளக் கவிஞர் வள்ளத்தோள்

* திரிகடுகத்தில் இடம்பெறும் பாடல்கள் எத்தனை - 101 வெண்பாக்கள்

* திரிகடுகம் குறிப்பிடும் மருந்துப் பொருட்கள் - சுக்கு, மிளகு, திப்பிலி

* திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர் - நல்லாதனார்

* "ஆக்டியம்" என்ற சொல்லின் பொருள் - ஏளனம்

* நல்குரவு என்ற சொல்லின் பொருள் - வறுமை

* ஞாலம் என்ற சொல்லின் பொருள் - அறிவு

* வசை என்ற சொல்லின் பொருள் - பழி

* வெகுளி என்ற சொல்லின் பொருள் - கோபம் (அ) சினம்

* விளக்கிலிருந்து கிடைப்பது ஒளியா? ஒழியா? - ஒளி

* குறுந்தொகை என்னும் தொகை நூலின் பாடிய புலவர்கள் - 205 புலவர்கள்

* குறிஞ்சித் திணைப் பாடல் பாடுவதில் வல்லவர் - கபிலர்

* குறுந்தொகையில் இடம் பெற்ற பாடல்கள் எத்தனை - 402 பாடல்கள்

* புறநானூறு என்னும் நூலில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யூ.போப்

* புறநானூறு இடம் பெறும் தொகுப்பு - எட்டுத்தொகை

* சீத்தலைச் சாத்தனார் பாடல்கல் இடம் பெறும் சங்க இலக்கிய நூல்கள் - அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை

* சீத்தலை சாத்தனார் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடும் மன்னன் - பாண்டியன் நன்மாறன்

* எந்த நூல் அரங்கேற்றத்தின்பொது குமரகுருபரருக்கு மீனாட்சியம்மை பெண் குழந்தை வடிவில் வந்து மாணிக்கமாலை பரிசளித்தார்? - மீனாட்சியம்மை குறம்

* குமரகுருபரர் வாய் ஊமை நீங்கிய உடன் இறைவனைப் பாடிய ிலக்கியம் - கந்தர் கலிவெண்பா

* குமரகுருபரரின் பேச்சுத்திறன் பெற்ற திருத்தலம் - திருச்செந்தூர் முருகன் திருக்கோவில்

* குமரகுருபரரின் காலம் - 17-ம் நூற்றாண்டு

* குமரகுருபரரின் பெற்றோர் - சண்முக சிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி அம்மையார்

* குமரகுருபரர் பிறந்த இடம் - திருவைகுண்டம் (நெல்லை மாவட்டம்)

* திரிகூடமலை என்பது எதனைக் குறிக்கிறது - திருக்குற்றால மலை

* மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் ஆசிரியர் - குமரகுருபரர்

* குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடமலை வளத்தை யார் கூறுகிறார் - குறத்தி

* குற்றாலக் குறவஞ்சி எவ்வகை இலக்கணம் - சிற்றிலக்கியம்

* குற்றாலக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவர் - திருக்குற்றால நாதர் (சித்திர சபை)

* குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் - திரிகூட ராசப்பக் கவிராயர்

* நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர் - நந்திவர்ம பல்லவன்

* நந்தித் கலம்பகத்தின் காலம் - கி.பி.9-ம் நூற்றாண்டு.

* நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் - ஆசிரியர் பெயர் இல்லை

* காவடிச் சிந்து இலக்கிய வகைகளுள் முதன்மையானது - அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து.

* அண்ணாமலை ரெட்டியாரின் பெற்றோர் - சென்னப்ப ரெட்டியார், ஒவு அம்மையார்.

* அண்ணாமலை ரெட்டியார் பிறந்த ஆண்டு 1861

* அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துவில் பாடப்படும் இறைவன் - கழுகுமலை முருகப் பெருமான்

* அண்ணாமலை ரெட்டியார் ஊர் - சென்னிக்குளம் (திருநெல்வேலி மாவட்டம்)

* காவடிச் சிந்துவின் ஆசிரியர் - அண்ணாமலை ரெட்டியார்

* மூவேந்தர் - சேரர், சோழர், பாண்டியர்

* நான்கு வேதங்கள் - ரிக், யஜீர், சாமம், அதர்வணம்

* அறுசுவை என்பவை - கைப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு

* ஏழு கடல்கள் -உப்புக் கடல், நன்னீர், பால், தயிர், நெய், தேன், கரும்புச் சாறு கடல்.

* நவரசம் என்பவை - நகைப்பு, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி(சினம்), உவகை. சாந்தம்.

* ஐந்திலக்கணம் என்பவை - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி

* எண் வகை மெய்ப்பாடுகள் எவை - நகைப்பு, அழுகை, இளிவு, மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை.

* பசிவந்தால் பத்தும் பறந்து போகும் அந்த பத்து - மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, காதல் வேட்கை முதலியன.

* கலம்பகத்தின் உறுப்புகள் - கலம் -12, பகம் - 6, மொத்தம் = 18

* சிற்றிலக்கியங்களில் எத்தனை வகை - 96 வகை

* ஐந்தமிழ் - இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல் தமிழ், ஆய்வுத் தமிழ்.

* மனச்சோர்வின்றி செயாற்றும் பண்பினை உணர்த்தும் திருக்குறள் அதிகாரம் - ஊக்கமுடைமை.

* நாமக்கல் கவிஞரின் பிறந்தநாள் - 19.10.1988.

* அகத்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை

* புறந்திணை - வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்

* கல்வியில்லாப் பெண் களர்நிலம் போன்றவள் - பாரதிதாசன்

* வைக்கம் வீரர் -பெரியார்

* யாதும் ஊரே யாவரும் கேளிர் - கணியன் பூங்குன்றனார்.

* ஒப்பிலக்கணத் தந்தை என்று அழைக்கப்படுபவர் - கால்டுவெல்

* புலி தங்கிச் சென்ற குகை போன்றது - வீரத் தாயின் வயிறு

* நீர் வழிப் படூம் புணை போல் - ஊழ்வழிச் செல்லும் உயிர்

* கதிரவனைக் கண்ட தாமரை போல - மகிழ்ச்சி

* தணலிலிட்ட மெழுகு போல - கரைதல்

* உடுக்கை இழந்தவன் கைபோல - இடுக்கண் களைபவர்

அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்

* தாயுமானவர் பாடல்கள் - தமிழ்மொழியின் உபநிடதம்

* சிலப்பதிகாரம் - ஒற்றுமைக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதல் காப்பியம், தேசிய காப்பியம், முத்தமிழ் காப்பியம், சமுதாயக் காப்பியம்

* சீவகசிந்தாமணி - மணநூல்

* கம்பராமாயணம் - இராமவதாரம், இராமகாதை, கம்பச் சித்திரம், கம்ப நாடகம்

* அகநானூறு - நெடுந்தொகை

* பழமொழி - முதுமொழி

* பெரிய புராணம் - திருத்தொண்டர்புராணம், சேக்கிழார் புராணம்

* இலக்கண விள்க்கம் - குட்டித் தொல்காப்பியம்

* பட்டிணப்பாலை - வஞ்சி நெடும்பாட்டு

* கலித்தொகை - கற்றறிந்தோர் ஏத்தும் தொகை

* புறநானூறு - தமிழர் வரலாற்றுக் களஞ்சியம்

* பெரும்பாணாற்றுப்படை - பாணாறு

* மலைபடும்கடாம் - கூத்தராற்றுப்படை

* முல்லைப்பாட்டு - பெருங்குறிஞ்சி, நெஞ்சாற்றுப்படை

* குறிஞ்சிப் பாட்டு - காப்பியப்பாட்டு

* வெற்றிவேற்கை - நறுத்தொகை

* மூதுரை - வாக்குண்டாம்

* பெருங்கதை - கொங்குவேள் மாக்கதை, அகவற்காப்பியம்

* சிலப்பதிகாரம் - இரட்டைகாப்பியங்கள்

* மணிமேகலை - மணிமேகலை துறவு, பெளத்த காப்பியம்

* நீலகேசி - நீலகேசித்தெருட்டு

அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்

* தமிழ்த்தென்றல், தமிழ் முனிவர், தமிழ்ப்பெரியார், தொழிலாளர் தந்தை - திரு.வி,க.

* தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத ஐயர்

* வைணவம் தந்த செல்வி, சூடிக்கொடுத்த சுடர்கொடி - ஆண்டாள்

* நவீன கம்பர் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை

* ரசிகமணி - டி.கே.சி

* தத்துவ போதகர் - இராபார்ட் - டி - நொபிலி

* தமிழ்நாட்டின் ஜென் ஆஸ்டின் - அநுத்தமா

* தமிழ்நாட்டின் ஜேம்ஸ் உறாட்லி - சுஜாதா

* தென்னாட்டு தாகூர் - அ.கி.வேங்கடரமணி

* மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர்

* இசைக்குயில் - எம்.எஸ்.சுப்புலட்சுமி

* வேதரத்தினம் பிள்ளை - சர்தார்

* கரந்தைக் கவிஞர் - வேங்கடாஜலம் பிள்ளை

* தசாவதானி - செய்குத் தம்பியார்

* செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் - வ.உ.சி

* மே தினம் கண்டவர் - சிங்கார வேலனார்

* பகுத்தறிவு பகலவன், சுயசரிதைச் சுடர் பெரியார் - ஈ.வே.ராமசாமி

* தென்நாட்டு பெர்னாட்ஷா, தென்நாட்டுக் காந்தி, பேரறிஞர் - அறிஞர் அண்ணா

* தமிழ்நாட்டின் மாப்பஸான் - புதுமைப்பித்தன்

* தமிழ்நாட்டின் வோர்ட்ஸ்வோர்த், தமிழ்நாட்டுத் தாகூர் - வாணிதாசன்

* உவமைக் கவிஞர் - சுரதா

* கவிக்கோ - அப்துல் ரகுமான்

* உரையாசிரியர் - இளம் பூரணார்

* கவிமணி - தேசிய விநாயகம்பிள்ளை

* குழந்தைக் கவிஞர் - அழ.வள்ளிப்பா

* தொண்டர் சீர் பரவுவார் - சேக்கிழார்

* குறிஞ்சி மோமான் - கபிலர்

* கவிச்சக்கரவர்த்தி - கம்பன்

* ஆளுடையரசு, மருள் நீக்கியார், அப்பர் - திருநாவுக்கரசு

* ஆளுடையப்பிள்ளை, திராவிட சிசு - ஞான சம்பந்தர்

* முத்தமிழ் காவலர் - கி.ஆ.பெ.விஸ்வநாதம்

* திருக்குறளார் - வி.முனிசாமி

* இராமலிங்கனார் - ஆட்சித் தமிழ் காவலர்

* 20 ஆம் நூற்றாண்டின் ஒளவையார் - பண்டித அசலாம்பிகை

* பேயார் - காரைக்கால் அம்மையார்

* பாட்டுக்கொரு புலவன், மகாகவி, தேசிய கவிஞர் - பாரதியார்

* சிந்துக்குத் தந்தை - அண்ணாமலை செட்டியார்.

* மூதறிஞர் - இராஜாஜி

* சொல்லின் செல்வர் - இரா. பி. சேதுப்பிள்ளை

* காந்தியக் கவிஞர் - நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை

* கிறித்துவக் கம்பர் - எச்.ஏ. கிருஷ்ணப் பிள்ளை

* மகாவித்துவான் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை

* சிறுகதை மன்னன் - புதுமைப்பித்தன்

* சிறுகதை தந்தை - வ.வே.சு.ஐயர்

* புதுக்கவிதை தந்தை - பாரதியார்

* சோமசுந்தர பாரதியார் - நாவலர்

* ரசிகமணி பண்டிதமணி - மு.கதிரேசஞ் செட்டியார்

* தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்

* தமிழ் வரலாற்று நாவலின் தந்தை - ககல்கி

* தமிழ் நாடகத் தந்தை - பம்மல் சம்பந்த முதலியார்

* தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்

* தனித்தமிழ் இசைக்காவலர் - இராசா.அண்ணாமலைச் செட்டியார்.

நன்றி:

 

TET வினா விடை - தமிழ் - பொது 2

1. உலகப் பொதுமறை என்று அழைக்கப்படுவது எந்த நூல் - திருக்குறள்

2. திருவள்ளுவர் வாழ்ந்த ஆண்டு - கி.மு 31

3. ராமலிங்க அடிகள் எழுதிய பாடல்கள் எப்படி அழைக்கப்படுகிறது - திருவருட்பா

4. குறிஞ்சிப்பாட்டு எந்த இலக்கியத்தை சேர்ந்தது - சங்க இலக்கியம்

5. நன் கணியர் என்றால் - மிகவும் நெருங்கிருப்பவர்

6. குழந்தைகள் அமைதி நினைவாலயம் கட்டியவர் - சடகோ சாசாகி

7.உ.வே.சாவின் வாழ்க்கை வரலாறு பற்றி எந்த நூல் மூலம் அறியலாம் - என்சரிதம்

8. இரட்டுறமொழிதல் என்றால் - சிலேடை

9. நாலடியார் என்ற நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யு.போப்

10. தாயுமானவரின் தந்தை பெயர் - கேடிலியப்பர்

11. முத்தே பவளமே என்ற வாழ்த்துப்பாடல் எந்த நூலில் இடம் பெற்றது - தாயுமானவர் தனிப்பாடல் திரட்டு

12. தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம் - இராமநாதபுரம்

13. தாயுமானவர் எந்த காலத்தை சேர்ந்தவர் - கி.பி.18

14. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று பாடியவர் - பாரதிதாசன்

15.யாரை நாம் வள்ளலார் என வழங்குகிறோம் - ராமலிங்க அடிகள்

16. ராமலிங்க அடிகள் எங்கு பிறந்தார் - மருதூர்

17. ராமலிங்கர் பின்பற்றிய நெறி - சன்மார்க்கநெறி

18. ராமலிங்கர் எதற்காக சன்மார்க்க சங்கம் நிறுவினார் - மத நல்லிணக்கம்

19. அகத்து உறுப்பு யாது - அன்பு

20. புறத்து உறுப்புகளால் யாருக்கு பயன் இல்லை - அன்பு இல்லாதவர்

21. உ.வே.சாவின் ஆசிரியர் பெயர் - மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்

22. உ.வே.சா பதிப்பித்த காப்பியங்கள் யாவை - சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை

23. சடகோ எந்த நாட்டு சிறுமி - ஜப்பான்

24. உயிர் எழுத்துக்களலில் குறில் எழுத்துக்கள் எத்தனை -ஐந்து

25. சடகோவுக்குநம்பிக்கா நம்பிக்கை தந்தவர் - தோழி சிசு

26. ஒட்ட பந்தயத்தில் தோற்றவரிடம் எப்படிப் பேச வேண்டும் - அடுத்த போட்டியில் வெற்றி பெறுவாய்

27. நாலடியாரை இயற்றியவர் யார் - சமண முனிவர் பலர்

28. ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழி எந்த நூலை சிறப்பிக்கிறது - நாலடியார்

29.பாரதியார் எவ்வாறு சிறப்பித்துக் கூறப்பப்பட்டார் - பாட்டுக்கொரு புலவர்.

30. தமிழ்ச் சொற்கள் எத்தனை வகைப்படும் - 4 வகை

32. மெய் மயக்கம் எத்தானை வகைப்படும் - 2 வகை

33. தமிழ்ச் சொற்கள் எத்தனண வகைப்படும் - 4 வகை

34. தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் எத்தனை - 13

35 சமவெளி மரங்களில் வாழும் பறவைகளில் ஒன்று - மஞ்சள் சிட்டு.

36. நிலத்திலும் அதிக உப்புத்தனமை உள்ள நீரிலும் வாழும் பறவை எது - பூ நாறை

37. உலகம் முழுவதும் பலநாட்டுப் பறவைகள் வந்கு தங்கி இருக்கும் இடத்துக்குப் பெயர் - பறவைகள் சரணாலயம்

38. இந்தியாவில் உள்ள ராஜநாகம் எத்தனை அடி நீளம் கொண்டது - 15 அடி

39. பாம்பு வகைகளில் எத்தனை வகை பாம்புகளுக்கு நச்சுத்தனமை கொண்டது - 52 வகை

40. நல்ல பாம்பின் நஞ்சு எந்த வலி நீக்கும் மருந்தாக தயாரிக்கப்படுகிறது - கோப்ராக்சின்

41. மனிதர்கள் யானையை வேட்டையாடக் காரணம் - தோலுக்காக

42. உலகம் வெப்பமடையக் காரணம் - வாகனப்புகை

43. மனைக்கு விளக்கம் மடவாள் என்ர பாடல் இடம் பெற்ற நூல் - நான் மணிக்கடிகை

44. வீரச் சிறுவன் என்ற சிறுகதையை எழுதியவர் - ஜானகிமணாளன்

45. தமிழ் பசி என்ற பாடலின் ஆசிரியர் - க.சச்சிதானந்தன்

46. யாழ்ப்பாணக் காவியத்தை எழுதியவர் - க.சச்சிதானந்தன்.

47.பதினெண்கீழ் கணக்கு நூல்களில் இதுவும் ஒன்று - இனியவை நாற்பது.

48. பூதஞ்சேந்தனார் வாழ்ந்த காலம் - கி.பி.2

49. பூதஞ்சேந்தனார் எழுதிய நூலின் பெயர் - இனியவை நாற்பது.

50 குறிஞ்சித் திரட்டு என்ற நூலை எழுதியவர் - பாரதிதாசன்

51.சுப்புரத்தினம் 'ஏர் கவி' என்று பாரதியாரால் அறிமுகம் செய்யப்பட்டவர் - பாரதிதாசன்

52. ஜி. யு. போப் தமிழகத்தில் சமயப் பணியாற்ற வந்த போது அவருக்கு வயது - 19

53. ஜி.யு.போப் எந்த நாட்டை சேர்ந்தவர் - பிரான்ஸ்

54. 'அளபெடை' எத்தனை வகைப்படும் - 2

55. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும் - 5

56. எழுத்துக்கள் எத்தனை வகைப்படும் - 2

57. தமிழில் தோன்றிய முதல் சதுகராதியை தொகுத்தவர் - வீரமாமுனிவர்

58. இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப்பெரிய அகரமுதலி எது - சென்னைப் பல்கலைக் கழக அகராதி.

59. திராவிட மொழிகளின் ஒப்பிலகணத்தை எழுதியவர் - கால்டு வெல்

60. தமிழ்த் தென்றல் -திரு.வி.கல்யாண சுந்தரனார்.

நன்றி:

 

TET வினா விடை - தமிழ் - பொது 1

திருக்குறள்

திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. அவை

1. அறத்துப்பால் - 38 அதிகாரங்கள்

2.பொருட்பால் - 70 அதிகாரங்கள்

3.காமத்துப்பால் - 25 அதிகாரங்கள்

திருக்குறள் 1330 குறள்களைக் கொண்டது.

திருக்குறளுக்கு உரை எழுதிய உரையாசிரியர்கள்


1. பரிமேலழகர்

2. தருமர்

3. மல்லர்

4. மணக்குடவர்

5. திருமலையர்

6. தாமத்தர்

7. கவிப்பெருமாள்

8. பரிதி

9. காளிங்கர்

10. நச்சர்

திருவள்ளுவரின் வேறு பெயர்கள்

1. நாயனார்

2. தேவர்

3. முதற்பாவலர்

4.தெய்வப்புலவர்

5. நான்முகனார்

6. மாதானுபங்கி

7. செந்நாப்போதார்

8.பெருநாவலர்

திருக்குறளின் வேறு பெயர்கள்

1. முப்பானூல்

2. உத்தரவேதம்

3 தெய்வ நூல்

4. திருவள்ளுவம்

5. பொய்யாமொழி

6. வாயுறை வாழ்த்து

7. தமிழ் மறை

8. பொதுமறை

புகழ்பெற்ற நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்

சங்க இலக்கியங்கள்:

பதினெண் மேற்கணக்கு நூல்கள் = எட்டுத்தொகை(8) + பத்துப்பாட்டு(10) நூல்

எட்டுத்தொகை

1. நற்றிணை - 400 +1 -அகம்

2. குறுந்தொகை - 400+1 -அகம்

3.ஐங்குறுனூறு - 500+1 -அகம்

4.அகநானூறு - 400+1 -அகம்

5. கலித்தொகை - 400+1 - அகம்

6.புறநானூறு -400+1 - புறம்

7.பதிற்றுப்பத்து 10+10 - புறம்

8. பரிபாடல் 70, கிடைக்கப்பெற்றது 22 இதில் அகம், புறம் இரண்டும் உள்ளது.

நூல் - தொகுத்தவர் - தொகுப்பித்தவர்

நற்றிணை -------- - பாண்டியன் மாறன் வழுதி

குறுந்தொகை - பூரிக்கோ - ------------------

ஐங்குறுநூறு - கூடலூர்க்கிழார் - சேரல் இரும்பொறை

அகநானூறு - உருத்திரசன்மன் - பாண்டியன் உக்கிரப் பெருவழுதி

கலித்தொகை - நல்லந்துவனார் - ------------------

மற்ற மூன்று நூல்களுக்கும் ஆசிரியர்கள் பெயர் தெரியவில்லை.

பத்துப்பாட்டு

ஆற்றுப்படை நூல்கள்

1. திருமுருகாற்றுப்படை - நக்கீரர்

2. பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார்

3.பெரும்பாணாற்றுப்படை - உருத்திரங்கண்ணனார்

4.சிறுபாணாற்றுப்படை - நல்லூர் நத்தத்தனார்

5. மலைபடுகடாம் (அ) கூத்தராற்றுப்படை - பெருங்கெளசிகனார்

அகநூல்கள்


6.குறிஞ்சிப்பாட்டு - கபிலர்

7.முல்லைப்பாட்டு - நப்பூதனார்

8. பட்டினப்பாலை - உருத்திரங்கண்ணனார்

புறநூல்கள்

9. நெடுநெல்வாடை - நக்கீரர்

10. மதுரைக்காஞ்சி - மாங்குடி மருதனார்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்( சங்கம் மருவிய காலம் கி.பி.100 - 600)


1.நாலடியார் - சமண முனிவர்கள்

2.நான்மணிக்கடிகை - விளம்பிநாகனார்

3.இன்னா நாற்பது - கபிலர்

4.இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்

5.திரிகடுகம் - நல்லாதனார்

6. ஆசாரக்கோவை - பெருவாயிற் முள்ளியார்

7. பழமொழி - முன்றுறை அரையனார்

8. ஏலாதி - காரியாசான்

9.முதுமொழிக் காஞ்சி - கூடலூர்க் கிழார்

10. திருக்குறள் - திருவள்ளூவர்

அகநூல் - 6

ஐந்திணை ஐம்பது - மாறன் பொறையனார்

திணைமொழி ஐம்பது - கண்ணன் சேந்தனார்

ஐந்திணை எழுபது - மூவாதியார்

திணைமாலை நூற்றைம்பது - கணிமேதாவியார்

கைந்நிலை - புல்லங்காடனார்

கார்நாற்பது - கண்ணங்கூத்தனார்

புறநூல் - 1

களவழி நாற்பது - பொய்கையார்

தமிழ்ச்சங்கம் நடைபெற்ற இடங்கள்

முதல் சங்கம் - கடல்கொண்ட தென்மதுரை

இடைச்சங்கம் - கபாடபுரம்

கடைச்சங்கம் - தற்போதைய மதுரை

காப்பியங்கள்

இரட்டைக் காப்பியங்கள் - சிலப்பதிகாரம், மணிமேகலை

சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள்


1.முதல் காப்பியம்

2. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்

3.குடிமக்கள் காப்பியம்

4.தேசியக்காப்பியம்

5.முத்தமிழ்க் காப்பியம்

காண்டங்கள் மொத்தம் 3, காதைகள் மொத்தம் 30

1.புகார்க் காண்டம் -10

2.மதுரைக் காண்டம் - 13

3.வஞ்சிக் காண்டம் -7

உரை எழுதியவர் - அடியார்க்கு நல்லார்.

மணிமேகலை

1.முதல் சமயக் காப்பியம் (பெளத்தம்)

2.எழுதியவர் சீத்தலைச் சாத்தனார்

ஐம்பெருங்காப்பியங்கள்

1. சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்

2. மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்

3. சீவக சிந்தாமணி - திருத்தக்கதேவர்

4. வளையாபதி ---------------------

5. குண்டலகேசி - நாதகுத்தனார்

ஐஞ்சிறு காப்பியங்கள்

1.சூளாமணி - தோலாமொழி தேவர்

2. நீலகேசி -----------------------

3. உதயணகுமார காவியம் ----------------------

4. யசோதா காவியம் ----------------------

5. நாககுமார காவியம் ----------------------

திருமுறைகள்(பக்தி இயக்க காலம்)

திருமுறைகள் மொத்தம் பன்னிரண்டு

தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி

நாயன்மார்கள்


 அறுபத்து மூவர், அவர்களின் முக்கிய நூல்களில் சில

1. சம்பந்தர் - திருக்கடைக்காப்பு

2. நாவுக்கரசர் - திருத்தாண்டகம்

3. சுந்தரர் - தேவாரம்

4. மாணிக்கவாசகர் - திருவாசகம், திருக்கோவை, திருவெம்பாவை

5.திருமூலர் - திருமந்திரம்

6. சேக்கிழார் - பெரியபுராணம்

ஆழ்வார்கள்

* ஆழ்வார்கள் மொத்தம் பன்னிருவர்

* நாலாயிரத்திவ்யப் பிரபந்தம் தொகுத்தவர் நாதமுனிகள்

பன்னிரு ஆழ்வார்கள்

1. பொய்கையாழ்வார்

2. பூதத்தாழ்வார்

3. பேயாழ்வார்

4. திருமழிசையாழ்வார்

5. பெரியாழ்வார்

6. ஆண்டாள்

7. நம்மாழ்வார்

8. மதுரகவியாழ்வார்

9. திருப்பாணாழ்வார்

10. திருமங்கையாழ்வார்

11. தொண்டரடிப்பொடியாழ்வார்

12. குலசேகர ஆழ்வார்

நன்றி:

 

பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்களை ரத்து செய்ய கல்வித்துறை பரிந்துரை

பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்கள் மீதான பிடியை இறுக்க, கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. இந்தப் புகாரில் சிக்கும் ஆசிரியர்கள், "டிஸ்மிஸ்' செய்யப்படுவர் என, துறை அமைச்சர் சிவபதி, ஏற்கனவே அறிவித்துள்ளார். தற்போது கூடுதலாக சம்பந்தபட்ட ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்களை ரத்து செய்யலாம் எனவும், கல்வித்துறை பரிந்துரை செய்ய உள்ளது.

மாணவியரிடம் பாலியல் ரீதியாக பிரச்னைகள் தரும் ஆசிரியர்களால், கல்வித் துறைக்கும், தமிழக அரசுக்கும் அவ்வப்போது தர்மசங்கடமான நிலை உருவாகிறது. இதுபோன்ற புகார்களில் சிக்கும் ஆசிரியர்கள், உடனடியாக, "சஸ்பெண்ட்' செய்யப்படுகின்றனர். பின், சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வுக்கு தடை உள்ளிட்ட, சில நடவடிக்கைகளை கல்வித்துறை எடுக்கும். ஆனாலும், இந்நடவடிக்கைகளால் ஆசிரியர்களுக்கு, பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது.

அமைச்சர் அறிவிப்பு
இந்த விவகாரம் தொடர்பாக, 18ம் தேதி சட்டசபையில் பேசிய பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி, ""பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கடுமையாக்குவது குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது. அவர்களை, "டிஸ்மிஸ்' செய்யலாமா என்பது குறித்து, ஆலோசித்து வருகிறோம்,'' என்றார்.

அதிரடி நடவடிக்கை:
அமைச்சரின் இந்த அறிவிப்பை, வழக்கம்போல் வெறும், "மிரட்டல்' என்றே ஆசிரியர்கள் கருதினர். ஆனால், தற்போது இந்த விவகாரம், "சீரியசாக' மாறியுள்ளது. பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்கள் மீது, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என, பள்ளிக் கல்வித்துறை ஒரு அறிக்கையை தயாரித்து உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய ஆசிரியர்களே, மாணவியரிடம் தவறாக நடப்பதும், பாலியல் புகார்களில் சிக்குவதும், சமுதாயத்திற்கு ஆரோக்கியமான விஷயம் கிடையாது. இதுபோன்று அவ்வப்போது நடக்கும் சில சம்பவங்கள், கல்வித்துறைக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, இவர்களை பணியில் இருந்து நீக்குவதுடன், அவர்களின் சான்றிதழ்களை ரத்தும் செய்யலாம். அப்போது தான், வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்னைகள் நடக்காது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப் பட்டு உள்ளது. இதையே, தமிழக அரசுக்கு பரிந்துரை அறிக்கையாக அனுப்ப, கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.

"டிஸ்மிஸ்' செய்தால், சம்பந்தபட்ட ஆசிரியர்கள், தனியார் வேலைகளிலாவது சேரலாம். ஆனால், அவர்களின் சான்றிதழ்களையே ரத்து செய்வது, அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் உலை வைப்பது போல் ஆகிவிடும். அதிகபட்சமாக, தவறு செய்யும் ஆசிரியர்களை, "டிஸ்மிஸ்' செய்ய அரசு முடிவெடுக்கும் எனவும்; சான்றிதழ்களை ரத்து செய்யும் முடிவை, அரசு எடுக்காது என்றும், கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி:

 

வங்கிக் கிளையை மாற்ற விரும்பினாலும் பழைய அக்கவுண்ட் நம்பரையே பயன்படுத்தலாம்

நீங்கள் ஒரு வங்கியில் கணக்கு எண்ணை வைத்திருக்கிறீர்கள் எனில் வேறு இடத்துக்கு குடியேறினாலும் இனி கவலையே தேவையில்லை... அதே கணக்கு எண்ணை நீங்கள் பின்பற்றலாம் என்கிரது ரிசர்வ் வங்கி.

திருச்சியில் பணிபுரியும் நீங்கள் அங்குள்ள ஒரு வங்கியில் கணக்கு எண்ணை வைத்திருப்பீர்கள். சென்னைக்கு உங்களுக்கு இடமாறுதல் கிடைக்கிறது எனில் சென்னையில் வந்து மீண்டும் ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்க வேண்டிய அவசியம் இல்லை.

சென்னையில் நீங்கள் இருக்கும் இடத்தில் அந்த வங்கியின் கிளை இருந்தால் போதும்.. திருச்சியில் பயன்படுத்திய அதே அக்கவுண்ட் நம்பரையே தொடர்ந்தும் பயன்படுத்திக் கொள்ளலாம்..

இது தொடர்பாக ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கு அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், வங்கி ஒன்றில் வாடிக்கையாளர் கணக்குத் தொடங்கும்போது அவர் வேறு ஒரு கிளைக்கு தமது கணக்கை மாற்றிக் கொள்ள விரும்பினால் அதே அக்கவுண்ட் நம்பரையே அவர் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். புதிய வங்கிக் கணக்கு ஒன்றுக்கான நடைமுறைகள் எதனையும் பின்பற்றத் தேவையில்லை. வேறு ஒரு கிளையில் உள்ள வங்கிக் கணக்கு எண்ணையே தொடர்ந்து பராமரிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

நன்றி:
 

TET வினா விடை - குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - பொது 11

1. அறிவியல் மையங்கள், கண்காட்சி ஆகியவை அகச் சிந்தனையை வளர்க்கும் சில வழிகள் என்று கூறியவர் - கூவர்.
2. மாணவனின் சிந்தனை வினாவிற்கான விடைகளை நோக்கி விரிந்து சென்று பல பொருத்தமான விடைகளை தருவது - விரி சிந்தனை
3. சோதிக்கப்படுவோனின் ஆக்கத் திறனை அளக்கப் பயன்படுவது - தலைப்பு தரும் சோதனை.
4. அகமுகன், புறமுகன் என மனிதர்களை இருவகையாக பிரித்தவர் - யூங்
5. சிக்கல் தீர்வு முறையை சோதனையை அறிமுகப்படுத்தியவர் - ஆஸ்போர்ன்.
6. புதுமைப்பயன் சோதனையை அறிமுகப்படுத்தியவர் - மால்ட்ஸ் மேன்
7. புதுமையான தனித்தன்மையுள்ளவற்றை புனையும் திறன் - ஆக்கத்திறன்.
8. ஆக்கத்திறனும், நுண்ணறிவும் வெவ்வேறான பண்புகள் என்று கூறியவர் - டரான்சு
9. மாணவனின் சிந்தனை வினாவிற்கான சரியான விடைகளைத் தேடி குவிந்து செல்லும் முறை - குவிச்சிந்தனை முறை
10. தார்ஸ்டன் கருத்துப்படி நுண்ணறிவு - ஏழு வகைப்படும்.
11. இரட்டைக் காரணி கோட்பாட்டில் சிறப்புக் காரணிக்கான எழுத்து - எஸ்
12. பொதுக் காரணியை தீர்மானிப்பது - மரபு
13. இரட்டைக் காரணி கோட்பாட்டில் பொதுக் காரணிக்கான எழுத்து - ஜி.
14. நுண்ணறிவுக் கோட்பாடுகள் - மூன்று வகைப்படும்.
15. நுண்ணறிவினை மூன்று வகையாக பிரித்தவர் - தார்ன்டைக்
16. நுண்ணறிவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் - ஆல்பிரட் பினே.
17. நுண்ணறிவு என்பது பொதுத் திறன் என்று கூறுபவர்கள் - ஒற்றைக் காரணி கோட்பாட்டினர்.
18. ஒருவரின் நுண்ணறிவு ஈவை பொதுத் திறன் மதிப்பினைக் கொண்டு அளவிட முடியும் என்று கூறியவர் - ஆல்பிரட் பினே.
19. நுண்ணறிவின் தன்மையை விளக்கிட இரட்டைக் காரணி கோட்பாட்டைக் கூறியவர் - சார்லஸ் பியர்மென்
20. வெக்ஸலரின் நுண்ணறிவு சோதனைக்கான வயது - 7-15
21. நுண்ணறிவு ஈவு என்ற சொல்லை பயன்படுத்தியவர் - டெர்மன்.
22. உளவியலறிஞரின் கருத்துப்படி நுண்ணறிவு என்பது - 16 வயது வரை இருக்கும்
23. 20 வயதான ஒருவரின் நுண்ணறிவு ஈவு கணக்கிட தேவைப்படும் கால வயது - 16 வயது
24. சொற்சோதனையை மேற்கொண்டவர் - வெக்ஸ்லர்.
25. ஆக்கத் திறன் மதிப்பீட்டிற்கு உதவும் 3 வகையான சோதனைகளை உருவாக்கியவர் - கில்பர்ட்
26. மின்ன சோடா சோதனையில் அடங்கியவை - 7 மொழிச் சோதனை உருப்படிகள் மற்றும் 3 படச் சோதனை உருப்படிகள்.
27. பொருட்களை புதிய பயன்பாட்டிற்காக பயன்படுத்துதல், - பயன் சோதனை.
28. புதியவனவற்றைக் கண்டு பிடிப்பதற்கான ஆக்கச் சிந்தனையில் நான்கு படிகள் இருப்பதாக கூறியவர் - கிரகாம் வாலஸ்.

நன்றி:

TET வினா விடை - குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - பொது 10

1. உயர் அறிவாண்மை குழந்தைகளிடம் காணப்படும் உயர்திறமைகள் - உயர் அறிவாண்மை, உயர் செயலாக்கம், உயர் ஆக்கத்திறன்.
2.மாணவர்கள் கற்கும் வேகத்திற்கு வழங்கப்படும் நூல்கள் நிரல் வழிக் கற்றல் நூல்கள்.
3. தனியாள் வேறுபாட்டிற்கு காரணமாக இருப்பது - மரபு மற்றும் சூழ்நிலை
4. தனியார் வேறுபாடுகள் ஆறு பரப்புகளில் காணப்படுகிறது என்று கூறியவர் - டைலர்.
5. மாணவர்களின் சமூகப் பண்புகளை வளர்ப்பதற்கு உதவுவன - அறிவு வளர்ச்சி, ஒழுக்க வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி
6. மாணவர்களிடம் மனநலத்தை வளர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் - இலக்கிய மன்றம் நடத்துதல், கல்வி சுற்றுலா மற்றும் போட்டிகள் நடத்துதல், சாரணர் இயக்கம் போன்றவற்றில் பங்கு கொள்ள செய்வது
7. சரியான இலக்குகளை முடிவு எடுக்க முடியாத நிலையில் ஒருவருக்கு ஏற்படும் போராட்டம் - மனப்போராட்டம்.
8. ஆக்கச் சிந்தனையில் நான்காவது படி - சரி பார்த்தல்.
9. ஆளுமையின் வகைகள் - இரண்டு
10. ஆளுமைக் கூறுகளின் வகைப்பாட்டினை கூறியவர் - ஐஸென்க்
11. ஆளுமையைத் தோற்றுவிக்கும் காரணிகள் - இரண்டும்.
12. ஆளுமையை தோற்றுவிக்கும் காரணிகள் - உயிரியல் காரணிகள், சமூகவியல் காரணிகள், உளவியல் காரணிகள்
13. மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் தரும் என்று கூறியவர் - திருவள்ளுவர்.
14. ஆளுமை என்பது ஒருவரது பண்புகளின் தனித்தன்மை வாய்ந்த அமைப்பு என்று கூறியவர் - கில்போர்டு
15. ஆளுமை என்பது மனிதர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட சூழ்நிலையில் என்ன செய்வார்கள் என்பதை முன்கூட்டியே அறிய உதவுவது - கேட்டல்.
16. மனிதர்கள் தங்களின் சூழ்நிலைக்கேற்ப ஏற்படுத்திக் கொண்ட பொருத்தப்பாடு, நிலையான பழக்கங்கள் இவற்றின் ஒருங்கிணைப்பே என்று கூறியவர் - கெம்ப்
17. மனநலம் என்பது மனநிறைவு, மனவெழுச்சி, முதிர்ச்சி, பொருத்தப்பாடு எனக் கூறுபவர்கள் - உளவியலறிஞர்கள்.
18. ஒரு மாணவன் பள்ளியில் பக்கத்து மாணவனின் புத்தகத்தை திருடுவது - பிரச்சினை நடத்தை.
19. சிறந்த மன நலன் உள்ள ஆசிரியர்களால் மட்டுமே - நல்ல மநிலை உள்ள மாணவனை உருவாக்க முடியும்.
20. மாணவர்களின் நுண்ணறிவு, ஆக்கத்திறன் போன்றவை - உள்ளார்ந்த ஆற்றல்கள்.
21. சமுதாயத்தில் சுருங்கிய இலட்சிய பதிப்பாக செயல்படுவது - பள்ளி
22. மனநலம் என்பது ஒருவனது ஆளுமையின் நிறைவான இசைவான செயற்பாட்டை குறிப்பது என்று கூறியவர் - ஹேட்பீல்டு
23. ஒருவரின் மனநலத்தை தீர்மானிக்கும் காரணிகள் - நான்கு
24. ஒருவர் நடத்தை பிறழ்ச்சிகள் ஏதுமின்றி, பிறரோடு இணைந்து போகும் தன்னிணக்கமே மன நலம் என்று கூறியவர் - மார்கன் கிங்
25. மனநலமுடையோரின் நடத்தைகள் யாவன?
26. வாழ்க்கையில் குறிக்கோள்களையும், இலட்சியங்களையும் பெற்றிருப்பவர், நுண்ணறிவும், சரியான முடிவுகளை மேற்கொள்பவர், நகைச்சுவை உணர்வு, தன்னம்பிக்கை மற்றும் சமூகப் பொருத்த பாட்டினை பெற்றிருப்பவர்.
27. ஒருவரது மனநலத்தை தீர்மானிப்பவை - மரவு வழிக் காரணிகள், உடல் நலக் காரணிகள், குழந்தைப் பருவத்தில் அடிப்படை தேவைகளில் திருப்தி.
28. தனக்கும் மற்றவர்களுக்கும் பயனும், மகிழ்ச்சியும் விளைகின்ற வாழ்க்கையில் எல்லா சூழலிலும் பொருத்தப்பாடு செய்து கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் - மனநலமுடையோர்.
29. உளவியலின் அடிப்படையில் மன நலம் என்பது - மனநிறைவு பெறுதல், மனவெழுசி, முதிர்ச்சி பெறுதல், சூழலுடன் பொருத்தம்பாடு செய்தல் போன்றவை.
30. ஒரு குறிக்கோளை அடைய முடியாமல் தடுக்கப்படும் போது மனசிதைவு ஏற்படுகிறது என்று கூறியவர் - மார்கன் கிங்

நன்றி:


TET வினா விடை - பொதுவானவை - குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் 9

1. கனவுகள் ஆய்வு என்ற நூலை எழுதியவர் - சிக்மண்ட் பிராய்ட்
2. குழந்தையின் பல்வேறு பருவங்களில் ஏற்படும் வளர்ச்சி மாற்றங்களை ஆராயும் உளவியலின் பிரிவு - பருவ வளர்ச்சி உளவியல்
3.ஒருவனது உள்ளத்திலுள்ளவற்றை அவன் விருப்பு, வெறுப்பின்றி ஆராய்ந்து விவரித்தாலும், அவ்வாறு விவரிக்கப்பட்டவற்றைப் பகுத்தாய்ந்து வகைப்படுத்தலும் அகநோக்கு முறையாகும் என்று கூறியவர் - வண்ட்டு
4. மனிதர்கள் மேற்கொள்ளும் தற்காப்பு நடத்தைகள் - 60
5. டாரன்சு கூறிய ஆக்கத் திறன் பண்புகள் - 5
6. ஆக்கத் திறன் அடிப்படையில் சிக்கல் தீர்க்கும் முறையில் ஆஸ்போர்ஸ் உருவாக்கிய படிகள் - 5
7. மெதுவாக கற்போரின் நுண்ணறிவு ஈவு - 70 முதல் 90
8. ஒரு கரு இரட்டையர்கள் ஒரே சூழலில் வளர்ந்தால் அவர்களின் நுண்ணறிவு ஈவு - 87
9. கற்றலில் கற்றலினை விளக்கியவர் - வெர்திமர்
10. பொருத்தப்பாடு வாழ்க்கையின் அடிப்படை என்று கூறியவர் - ஹெட்பார்டு
11. கற்பதற்கான 5 படிகளை அறிமுகப்படுத்தியவர் - ஹெட்பார்டு
12. குமில் என்ற நூலை எழுதியவர் - ரூசோ
13. தனியாள் நுண்ணறிவு சோதனை மூலம் மீத்திறன் உடைய மாணாக்கர்களின் நுண்ணறிவு ஈவு - 140
14. டெர்மன் தனது சோதனைக்கு மீத் திறன் உடைய மாணாக்கர்களின் எண்ணிக்கை - 1508
15. டெர்மன் நுண்ணறிவு சோதனை மூலம் மீத் திறன் உடைய மாணாக்கர்களின் நுண்ணறிவு ஈவு - 140
16. உயர் அறிவாண்மை உள்ள குழந்தைகள் தங்களிடம் உள்ள 3 உயர் திறமைகள் மூலம் தங்களுக்கும், சமுதாயத்திற்கும் பயனுள்ள செயல்களை செய்கின்றனர் என்று கூறியவர் - தென்சாலி
17. குற்றம் புரியும் பண்பும், பாரம்பரியம் என்ற ஆய்வு செய்த உளவியல் வல்லுநர் - கார்ல்பியர்சன்
18. புலன் இயக்கப்பருவம் என்பது - 0-2 ஆண்டுகள்.
19. நுண்ணறிவு என்பது தொடர்ச்சியாக வளர்ச்சியடையும் ஓர் ஆற்றல் என்று கூறியவர் - பீனே.
20. ஏபிஎல் என்பது - செயல் வழிக்கற்றல்
21.தொடக்கக் கல்வி பயில வரும் போது குழந்தைகளின் நரம்பு மண்டலம் - 90% வளர்ச்சியடைந்து வருகிறது.
22. உளவியல் சோதனை ஆய்வகத்தை முதன் முதலில் நிறுவியவர் - முதல்வர் லைர்.
23. பெஞ்சமின் புளும் பிரித்த அறிவு சார் எண்ணிக்கை - 6
24. பிறக்கும் குழந்தையின் மூளையின் எடை சுமார் 350 கிராம்.
25. பிறக்கும் குழந்தையின் உயரம் சுமார் 52 செ.மீ.
26. ஆளுமை வளர்ச்சியில் 8 நிலைகள் உள்ளன என்று கூறியவர் - எரிக்சன்
27. ஆய்வில் காணப்படும் பல்வேறு படிகளை உருவாக்கியவர் - ஜான்ரூயி
28. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எல்லோரையும் ஈர்ப்பது - விளம்பரங்கள்
29. நுண்ணறிவு சோதனை ஏழு வகையான அடிப்படை மனத் திறன்களை உடையது என்று கூறியவர் - தர்ஸ்டன்
30. பிறருடைய எண்ணங்களையும், கருத்துக்களையும் நம்மை அறியாமலேயே ஏற்றுக் கொள்ளுதல் - கருத்தோற்றம்
31.குழந்தைகளின் உள மருத்துவ விடுதி முதன் முதலில் நிறுவப்பட்ட இடம் - சிகாகோ
32. கெஸ்டால்ட் கொள்கையை பின்பற்றி தார்ண்னடக்கின் விதி - உடைமை விதி
33. கற்றலின் தேக்க நிலை - பிளாட்டோ
34. மனவளம் குன்றிய குழந்தைகளின் நுண்ணறிவு ஈவு - 80க்கும் கீழ்
35. அருவாண்மைச் சோதனைகளில் மிக குறைவான நுண்ணறிவு ஈவு பெறுபவர்கள் - மனவளம் குன்றிய குழந்தைகள்
36. வகுப்பில் பிற்பட்டக் குழந்தைகளாக கருதப்படுபவர்களின் சதவீதம் 8 முதல் 10%
37. வகுப்பில் உயர் அறிவான்மைக் குழந்தைகளின் சதவீதம் 3 முதல் 5%
38. திருடுதல் என்பது - நெறிபிறழ் நடத்தை
39. பதட்டம் என்பது - மிதமான மனநோய்
40. மனச்சிதைவு என்பது - தீவிரமான மன நோய்
41. பொய்ப் பேசுதல் என்பது - பிரச்சனை நடத்தை
42. ஒழுக்கமின்மை என்பது - பிரச்சனை நடத்தை
43. ஆங்கிலத்தில் நடத்தையென்பதினை குறிக்கும் குறிப்பெழுத்துகள் - S --> R
44. சி.எஸ். மையர்ஸ் வலியுறுத்துவது - நளமுறை உளவியல்
45. கற்பித்தல் சிக்கலை குறைத்து, கற்பித்தல் நிலையினை சுருக்குவது - நுண்நிலைக் கற்பித்தல்
46. மனித வளர்ச்சி = மரபு நிலை x சூழ்நிலை
47. தூண்டலுக்கும் துலங்கலுக்கும் இடையே காணப்படும் இடைவெளி 0,03 விநாடி
48. பரம்பரையாக வரும் மரபு நிலை - உயிரியல் மரபு நிலை
49. செயல் தொடர் ஆராய்ச்சியினை முதன் முதலில் வலியுறுத்தியவர் - ஸ்டீபன் எம். கோரி
50. அக நோக்கு முறையைப் பற்றி விவரித்தவர் - இ.பி. டிட்சனர்.

நன்றி:

 

TET வினா விடை - குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - பொது 8

1. குமாரப் பருவத்தில் நடத்தையை பெருமளவு நிர்ணயிப்பது - ஒப்பார் குழு
2. குழந்தைகளின் இரண்டாம் பிறப்பு எனப்படுவது - குமாரப்பருவம்
3. ஸ்கீமா எனப்படுவது - முந்தைய அறிவு
4. மனிதன் ஒரு சமூக விலங்கு என்று கூறியவர் - அரிஸ்சாட்டில்
5. குழந்தை காதால் கேட்கும் மொழியின் அளவும், தரமும் குழந்தையின் அறிதல் திறன் செயல்பாடுகளுக்கு நேர் விகிதத்தில் இருக்கின்றன என்று கூறியவர் - நெஸ் மற்றும் ஷிப்மேன்.
6. பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளில் சேவைத் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களின் சதவீதம் - 60-80%
7. தனியாள் வேற்றுமைப் பண்புகள் மாறுபடக் காரணம் - நாளமில்லாச் சுரப்பிகளின் மாறுபட்ட செயல்கள்
8. தீவிர மனநோய்க்கு எடுத்துக்காட்டு - மனச்சிதைவு
9. தன்னையே ஆராயும் முறை என்பது - அகநோக்கு முறை
10. உன்னையே நீ அறிந்து கொள் என்று கூறியவர் - சாக்ரடீஸ்
11. ஒருவனது உள்ளத்தில் உள்ளவற்றை தானே விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து முடிவுக்கு வரும் முறை - உற்றுநோக்கல் முறை
12. மாணவனின் முழு வளர்ச்சிக்கு பொறுப்பு ஏற்பது - ஆசிரியர்
13. குழந்தை உளவியல் என்பது - பொது உளவியல்
14. மனிதனின் வளர்ச்சியையும், நடத்தையும் நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது - மரபுநிலையும், சூழ்நிலையும்
15. ஆக்கச் சிந்தனையில் எத்தனை படிகள் உள்ளதாக கிரகாம் வாலஸ் தெரிவித்தார் - நான்கு
16. நுண்ணறிவு ஏழு வகையானது என்றவர் - வெஸ்ச்லர்
17. பிறக்கும் குழந்தை பெற்றோர்களை ஒத்திருக்கும். இது - ஒத்திருக்கும் விதியாகும்.
18. ஒத்த இயல்பு ஒத்தியல்பினை உருவாக்கும் என்ற கோட்பாட்டினை கூறியவர் - கிரிகோர் மெண்டல்
19. ஒரு தாயின் இரு குழந்தைகளில் ஒருவன் நல்லவனாகவும், ஒருவன் தீயவனாகவும் இருப்பது - வேற்றுமுறை விதி.
20. மேதைகள் மேதைகளிடமிருந்து தான் உருவாகின்றனர் என்பதை ஆய்வு செய்தவர் - கால்டன்
21. கார்ல் பியர்சன் ஏழு தலைமுறைகளில் ஆராய்ந்த நண்பர்களின் எண்ணிக்கை - 1260
22. அறிவு வளர்ச்சிக்கு காரணமாக உள்ளவை - சமூகம், வானொலி, தொலைக்காட்சி, ஆசிரியர்
23. ஒரு கரு இரட்டையர் பற்றி ஆய்வு மேற்கொண்ட அமெரிக்க பல்கலைக்கழகம் - அயோவா
24. சூழ்நிலை தாக்கத்தால் அமெரிக்காவில் கலிபோர்னியா கடற்கரையின் ஓரம் வசித்து வரும் சீனர்கள் தங்களிடையே மட்டும் திருமண உறவு வைத்துக் கொள்ள உறுதி செய்தனர்.
25. அறிதல் திறன் வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு - சிந்தனை
26. ஆரம்பக் கல்வி வயதினர் - பின் குழந்தைப் பருவம்
27. ஒப்பர் குழு என்பது - சமவயது குழந்தைகள்
28. அகநோக்கு முறையின் ஆய்வுக்களம் என்பது - உள்ளம்.
29. உளவியல் கற்காத ஆசிரியர் கற்பிக்கும் போது மாணவர்களின் கற்றலில் ஏற்படுவன - பயம் மற்றும் வெறுப்பு, கழிவு, தேக்கம் ஆகியன
30. குழந்தைகளிடம் உயர்வான தன் மதிப்பீட்டை உருவாக்க ஆசிரியர் செய்ய வேண்டியது - பாராட்டும், ஊக்கமும் அளித்தல்
31. தன்னைப் பற்றி குழந்தை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது என்பது - தன் தூண்டல்
32. சிக்கலான மனவெழுச்சி - பொறாமை
33. மன உணர்வுகள் மேலோங்கி நிற்கும் நிலை - மனவெழுச்சி
34. அகநோக்கு முறையின் மூலம் தங்களது நடத்தையினை அளந்தறிய முடியாதவர்கள் - மாணவர்கள், மனநிலை குன்றியவர்கள், நெறிபிறழ் நடத்தையுள்ளவர்கள்
35. வாய், நாக்கு, தொண்டை இவைகளில் அசைவுகள் ஏற்படுத்துவது - பேசுதல்
36. மிகை நிலை மனம் ஏற்படும் வயது - 3-6
37. அடிப்படை மனவெழுச்சி - சினம்
38. மொழி வளர்ச்சிக்கு அடிப்படையான திறன்களை வரிசைப்படுத்துக : கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்
39. பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சியில் தொட்டு உணரும் பருவம் எனப்படுவது - பிறப்பிலிருந்து 18 மாதம் வரை
40. குழந்தைகள் தன் சமூகத்திலிருந்து எதிர்பார்ப்பது - அன்பும், அரவணைப்பும்.
41. மன உணர்வுகளை வெளிப்படுத்த கற்றுக் கொள்ளும் பருவம் - குமரப்பருவம்
42. வயதின் அடிப்படையில் பல்வேறு படிநிலைகள் அமைவது - ஒழுக்க வளர்ச்சி.
43. குழந்தைகள் எதிர்பார்ப்பது - நிபந்தனையற்ற அன்பு
44. சிறு குழந்தைகள் சமூகவியல்பு பெறுவதற்கு முக்கிய இடம் வகிப்பது - குடும்பம்.
45. குழந்தைகளின் அறிவாற்றலின் வளர்ச்சி குறித்து ஆராய்ச்சி செய்தவர்களில் முக்கியமானவர் - பியாஜே.
46. பியாஜே கூறும் அறிவு வளர்ச்சியின் நான்காம் நிலை 12 வயதிற்கு மேல் எனப்படும் முறையான செயல் நிலையானது.
47. அக நோக்கி முறை என்பது - மனிதனின் சொந்த அனுபவங்களின் சுய வெளிப்பாடு.
48. அகநோக்கு முறையானது - அகவய தன்மை கொண்டது.
49. மனித நடத்தையை அளந்தறிய பயன்படும் உளவியல் முறைகளில் பிறரால் சரிபார்க்க முடியாத முறை - அகநோக்கு முறை
50. உற்றுநோக்கல் முறையின் முதற்படி - உற்று நோக்குதல்

நன்றி:


 

TET வினா விடை - குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - பொது 7

1. தேசிய கலைத் திட்டம் அறிமுகப்படுத்ப்பட்ட ஆண்டு - 2005
2. மனிதனின் வளர்ச்சியை எத்தனை பருவங்களாக பிரிக்கலாம் - 8
3. சிசுப் பருவம் என்பது - 0-1 ஆண்டுகள்
4. குறுநடைப் பருவம் என்பது - 1- 3 ஆண்டுகள்
5. பள்ளி முன் பருவம் என்பது 3-6 ஆண்டுகள்
6. பள்ளிப்பருவம் என்பது - 6- 10 ஆண்டுகள்
7. குமாரப் பருவம் என்பது - 10-20 ஆண்டுகள்
8. கட்டாய இலவசக் கல்வி வழங்கப்படுவது - 14 ஆண்டுகள் வரை
9. ஒரு குழந்தை வரிசைத் தொடர் கிராமப்படி சிந்திக்கத் தொடங்கும் காலம் - 7-8 ஆண்டுகள்
10. குழந்தைகள் தர்க்க முறை சிந்தனை வளர்ச்சியை எதன் மூலம் ஆரம்பிக்கின்றார்கள் - அனுமானம்
11. குழந்தை இவ்வுலகத்தை புரிந்து கொள்ள உதவுவது - இடைவினை ஆற்றல் மற்றும் உள்ள முதிர்ச்சி
12. தன்னடையாளம் எனப்படுவது - குழந்தை வெளியுலகத்தில் இருந்து பிரிந்து தன்னை அடையாளம் கண்டு கொள்வது.
13. தன்னடையாள உணர்வு ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் மாறுபடுவது என்று கூறியவர் - எரிக்சன்
14. குழந்தைகள் தானே தொடங்கும் திறனை பெறுவது - 4-6 ஆண்டுகளில்
15.உடலால் செய்யும் செயல்கள் - நடத்தல், நீந்துதல்
16. உளவியல் என்பது நடத்தையைப் பற்றி ஆராயும் இயல்
17. வெகுநாட்கள் வரை நமது மனச்சுவட்டில் இருப்பவை - பல்புலன் வழிக்கற்றவை
18. பாடம் கற்பித்தலின் முதல் படி - ஆயத்தம்
19. புலன் உணர்வும் பொருளை அறிதலும் சேர்ந்து உருவானது - புலன் காட்சி
20. நினைவு கூர்தலின் முதல் நிலையாக கருதப்படுவது - கற்றல்
21. தவறுகள் செய்யும் மாணவனை திருத்த ஏற்றது - நல்வழி காட்டுவது
22. பெற்றோர், ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு முன் உதாரணமாகத் திகழ்வது - பின்பற்றிக் கற்றல்
23.செயல் வழிக் கற்றல் என்பது - தொடர் கற்றல்
24. மனிதனின் முதல் செய்தல் - ஆராய்ச்சி
25. கற்றல் என்பது - இயக்கமுள்ள உள்ளார்ந்த செயல்
26. கருத்தியல் நிலை தோன்றுவது - 10 வயதுக்கு மேல்
27.ஒழுக்க வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது - பற்றுகள்
28.நல்லொழுக்கத்திற்கான விதைகள் நன்கு ஊன்ற கூடிய நிலை - ஆரம்பக் கல்வி.
29. கற்கும் பொருளுக்கு வளமாக அமைவது - இயற்கை பொருட்கள்
30. ஒழுக்கம் சார்ந்த சார்பு நோக்கத்தை அடைய தேவையான வயது - 11-12

நன்றி:

 

கல்வித் தொலைக்காட்சி - நிகழ்ச்சி தயாரிக்க ஆசிரியர்களுக்கு அழைப்பு

Proceedings - Edu TV Programme

கல்வி இணை செயல்பாடுகளில் பகுதி நேர ஆசிரியர்கள் : இணை இயக்குனர் பழனிச்சாமி தகவல்

"கல்வி இணை செயல்பாடுகளில், பகுதி நேர ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர்' என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி இணை இயக்குனர் பழனிச்சாமி தெரிவித்தார்.

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முப்பருவ கல்வி முறை, இந்தாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான, "தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு' முறை குறித்த பயிற்சி, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம், மண்டபம் ஒன்றியங்களில் நடந்த பயிற்சியை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி இணை இயக்குனர் பழனிச்சாமி ஆய்வு செய்து பேசியதாவது:
வரும் கல்வி ஆண்டிலிருந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன் முதல் செப்டம்பர் வரை ஒரு பருவமும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை ஒரு பருவமும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஒரு பருவமும் நடத்தப்படுகிறது. ஒரு பருவத்துக்கு ஒரு புத்தகம் மட்டுமே. இந்தியாவில் முதன் முதலாக தமிழகத்தில் தான் இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம், மாணவர்களின் செயல்பாடுகளை அதிகப்படுத்துவது. மாணவர்கள் எதில் திறமையாக இருக்கின்றனரோ அதில் ஈடுபடுத்துவது.

இதன் மூலம் கல்வியைத் தவிர, மற்ற இணைச் செயல்களான வாழ்க்கை கல்வி, தையல், ஓவியம், விளையாட்டு உள்ளிட்டவற்றில் திறன் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணியில், 16 ஆயிரத்து 450 பகுதி நேர ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர். ஆசிரியர்களும் இதில் பங்கேற்க வேண்டும்.

முப்பருவ கல்வி முறையில், 40 மதிப்பெண்கள் வளரறி மதிப்பீடாகவும் (செயல்பாடுகளை வைத்து), 60 மதிப்பெண்கள் தொகுத்தறி மதிப்பீடாகவும் (தேர்வு முறையில்) வழங்கப்படும். செயல்வழி கற்றல் முறை (அட்டை முறை) இதனால், மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு, ஒன்பதாம் வகுப்பு, அதற்கு அடுத்த ஆண்டு, 10ம் வகுப்பில், இந்த முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்படும்.

இவ்வாறு பழனிச்சாமி கூறினார். 

நன்றி:





முப்பருவ கல்வி முறை குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி நிறைவு

முப்பருவ கல்வி முறை, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை குறித்து, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பயிற்சி முடிவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் தேவராஜன் கூறியிருப்பதாவது
:
வரும் கல்வியாண்டில் (2012-13), ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை மற்றும் தொடர், முழுமையான மதிப்பீட்டு முறை அமலுக்கு வருகிறது. இதையொட்டி, முப்பருவ கல்வி முறைக்கான பாட நூல்களையும், முழுமையான மதிப்பீட்டு முறைப்படி கற்பித்தல் மற்றும் மதிப்பீடு செய்வது குறித்து, ஆசிரியர்களுக்கான வழிமுறை கையேட்டையும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் தயாரித்துள்ளது.

புதிய திட்டம் குறித்து, மண்டல அளவில் அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்களுக்கும், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் இரண்டு நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன. மேலும், 3,000 ஆசிரியர் பயிற்றுநர்கள், அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் ஆகியோருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களை, ஒன்றிய கருத்தாளர்களாகக் கொண்டு, 26ம் தேதி 50 சதவீத ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மீதமுள்ள, 50 சதவீத ஆசிரியர்களுக்கு, 27ம் தேதி பயிற்சி அளிக்கப்படுகிறது. 412 ஒன்றியங்களில், இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, தனியார் சுயநிதிப் பள்ளி ஆசிரியர்களுக்கும், மே இறுதி வாரத்தில் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு தேவராஜன் கூறியுள்ளார்.

நன்றி:


கல்விமுறையின் குறைகளை களைய அமைச்சர் தலைமையில் குழு அமைப்பு

தற்போதைய கல்வி முறையில் உள்ள குறைகளைக் களைந்து, கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி தலைமையில், ஒன்பது பேரை உறுப்பினர்களாக நியமித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இக்குழு, தற்போதைய கல்வி முறையில் உள்ள குறைகளை கண்டறிந்து, தேவையான மாற்றங்களை கொண்டு வர, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யும்.

பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா வெளியிட்டுள்ள அரசாணையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி தலைமையில், ஒன்பது பேர் உறுப்பினர்களாக வல்லுனர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

குழுவின் பணிகள்
  • ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான பாடத் திட்டங்களில் உள்ள குறைகளைக் கண்டறிந்து, மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை, அரசுக்குப் பரிந்துரை செய்தல்.
  • தரமான கல்வியை அளிப்பதற்காக, பள்ளிகளுக்கு தேவைப்படும் இன்றியமையாத கட்டமைப்பு வசதி, தளவாட வசதி, உபகரணங்கள் குறித்து ஆய்வுசெய்து, அரசுக்குப் பரிந்துரை அளித்தல் வேண்டும்.
  • மேம்படுத்தப்பட்ட கல்வி முறைக்கு ஏற்ப, தேர்வு முறைகளில் சீர்திருத்தங்களை செய்ய, பரிந்துரை செய்ய வேண்டும்.
  • அனைத்துப் பள்ளி செயல்பாடுகளையும் மேம்படுத்த, பள்ளி ஆய்வு முறைகளில் தேவைப்படும் மாற்றங்களை பரிந்துரை செய்யும். மேலும், தேவையான இதர பரிந்துரைகளையும் வல்லுனர் குழு அரசுக்கு அளிக்கும்.
  • குழுவின் செயல்பாடுகளுக்கு தேவையான அனைத்து செலவுகளையும், மாநில கல்வியியல் ஆராய்ச்சிப் பயிற்சி நிறுவனம் ஏற்றுக்கொள்ளும்.
வல்லுனர் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் விவரம்:

1. என்.ஆர்.சிவபதி, பள்ளிக்கல்வி அமைச்சர், குழுத் தலைவர்

2. டி.சபீதா, பள்ளிக்கல்வி செயலர், உறுப்பினர்

3. பாலகுருசாமி, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், உறுப்பினர்

4. முனைவர் பாலசுப்பிரமணியன், துறைத் தலைவர் (ஓய்வு), கல்வியியல் துறை, சென்னை பல்கலை, உறுப்பினர்

5. முனைவர் எஸ்.சுவாமிநாதப்பிள்ளை, முன்னாள் இயக்குனர், பாரதியார் பல்கலை, உறுப்பினர்

6. முனைவர் ஜி.பாலசுப்பிரமணியன், சி.பி.எஸ்.இ., முன்னாள் இயக்குனர், உறுப்பினர்

7. முனைவர் சி.சுப்பிரமணியம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர், உறுப்பினர்

8. மணி, பள்ளிக்கல்வி இயக்குனர், உறுப்பினர்

9. சங்கர், தொடக்கக் கல்வி இயக்குனர், உறுப்பினர்

10. தேவராஜன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் உறுப்பினர், செயலர்
.

24.4.12

பள்ளி க்கல்வி துறை: ஆசிரியர்கள் பொது மாறுதல் விண்ணப்பம் 2012 - 13 & இயக்குநரின் செயல்முறைகள்

Gen Tran Dir Proceedings 2012 - 13

முப்பருவ தேர்வு முறை: 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் பயிற்சி

முப்பருவ தேர்வு முறை திட்டம் தொடர்பாக 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாநிலம் முழுவதும் வரும் 26ம் தேதி மற்றும் 27ம் தேதிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் இப்பயிற்சி நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் 2012-13ம் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பு 8ம் வகுப்பு வரை தமிழக அரசு முப்பருவ தேர்வு முறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான மார்க் மற்றும் மதிப்பீடு செய்வது தொடர்பான பயிற்சி வகுப்புகள் வரும் மே மாதம் நடத்தப்படுவதாக இருந்தது.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் இசக்கியப்பன், பொது செயலாளர் குமரேசன், சென்னை மாவட்ட தலைவர் கயத்தாறு, காஞ்சிபுரம் மாவட்ட தலைவி ஜெயராணி ஆகியோர் மாநில ஆசிரியர் மற்றும் பயிற்சி துறை இயக்குனர் தேவராஜனை சந்தித்து, ""வரும் மே மாதத்தில் பி.எட் பயிற்சி வகுப்புகள், பல்கலைக் கழக தேர்வுகள் நடப்பதால் ஆசிரியர்கள் அனைவரும் அதற்கான பணியில் ஈடுபட்டிருப்பர், எனவே, மே மாதத்திற்கு பதிலாக இந்த மாத இறுதிக்குள்ளோ ஜூன் மாதத்தில் முதல் வாரத்திலோ நடத்த வேண்டும்' என வலியுறுத்தினர்.

இதன் அடிப்படையில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரு நாள் பயிற்சி வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் நடத்தப்படுகிறது. 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள் திருத்தும் பணி நடப்பதால் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் இப்பயிற்சி நடத்தப்படுகிறது.

இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.

நன்றி:


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்