தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

28.4.12

TET வினா விடை - குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - பொது 7

1. தேசிய கலைத் திட்டம் அறிமுகப்படுத்ப்பட்ட ஆண்டு - 2005
2. மனிதனின் வளர்ச்சியை எத்தனை பருவங்களாக பிரிக்கலாம் - 8
3. சிசுப் பருவம் என்பது - 0-1 ஆண்டுகள்
4. குறுநடைப் பருவம் என்பது - 1- 3 ஆண்டுகள்
5. பள்ளி முன் பருவம் என்பது 3-6 ஆண்டுகள்
6. பள்ளிப்பருவம் என்பது - 6- 10 ஆண்டுகள்
7. குமாரப் பருவம் என்பது - 10-20 ஆண்டுகள்
8. கட்டாய இலவசக் கல்வி வழங்கப்படுவது - 14 ஆண்டுகள் வரை
9. ஒரு குழந்தை வரிசைத் தொடர் கிராமப்படி சிந்திக்கத் தொடங்கும் காலம் - 7-8 ஆண்டுகள்
10. குழந்தைகள் தர்க்க முறை சிந்தனை வளர்ச்சியை எதன் மூலம் ஆரம்பிக்கின்றார்கள் - அனுமானம்
11. குழந்தை இவ்வுலகத்தை புரிந்து கொள்ள உதவுவது - இடைவினை ஆற்றல் மற்றும் உள்ள முதிர்ச்சி
12. தன்னடையாளம் எனப்படுவது - குழந்தை வெளியுலகத்தில் இருந்து பிரிந்து தன்னை அடையாளம் கண்டு கொள்வது.
13. தன்னடையாள உணர்வு ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் மாறுபடுவது என்று கூறியவர் - எரிக்சன்
14. குழந்தைகள் தானே தொடங்கும் திறனை பெறுவது - 4-6 ஆண்டுகளில்
15.உடலால் செய்யும் செயல்கள் - நடத்தல், நீந்துதல்
16. உளவியல் என்பது நடத்தையைப் பற்றி ஆராயும் இயல்
17. வெகுநாட்கள் வரை நமது மனச்சுவட்டில் இருப்பவை - பல்புலன் வழிக்கற்றவை
18. பாடம் கற்பித்தலின் முதல் படி - ஆயத்தம்
19. புலன் உணர்வும் பொருளை அறிதலும் சேர்ந்து உருவானது - புலன் காட்சி
20. நினைவு கூர்தலின் முதல் நிலையாக கருதப்படுவது - கற்றல்
21. தவறுகள் செய்யும் மாணவனை திருத்த ஏற்றது - நல்வழி காட்டுவது
22. பெற்றோர், ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு முன் உதாரணமாகத் திகழ்வது - பின்பற்றிக் கற்றல்
23.செயல் வழிக் கற்றல் என்பது - தொடர் கற்றல்
24. மனிதனின் முதல் செய்தல் - ஆராய்ச்சி
25. கற்றல் என்பது - இயக்கமுள்ள உள்ளார்ந்த செயல்
26. கருத்தியல் நிலை தோன்றுவது - 10 வயதுக்கு மேல்
27.ஒழுக்க வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது - பற்றுகள்
28.நல்லொழுக்கத்திற்கான விதைகள் நன்கு ஊன்ற கூடிய நிலை - ஆரம்பக் கல்வி.
29. கற்கும் பொருளுக்கு வளமாக அமைவது - இயற்கை பொருட்கள்
30. ஒழுக்கம் சார்ந்த சார்பு நோக்கத்தை அடைய தேவையான வயது - 11-12

நன்றி:

 

1 கருத்து:


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்