தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

16.4.12

நுகர்வோர் மன்றத்தில் புகார்: நிவாரணம் பெறுவது எப்படி?

பொதுமக்கள், தாங்கள் வாங்கும் பொருட்களில், தரம் மற்றும் சேவை குறைபாடு இருந்தால், நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் புகார் செய்து, நிவாரணம் பெற அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட சில வியாபாரிகளின் முறையற்ற செயல்களுக்கு முடிவு கட்டும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

புகார் பதிவு முறை
  • புகார் மனுவில், புகார் தாரரின் பெயர், முழு முகவரி, எதிர் மனுதாரரின் பெயர் மற்றும் முகவரி, பொருள் அல்லது சேவையை பயன்படுத்திய விவரங்கள், புகாரின் தன்மை, ரசீதின் நகல் மற்றும் விவரம், நஷ்ட ஈட்டின் விவரம் ஆகியவை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
  • பாதிப்பு ஏற்பட்ட இரண்டு வருடங்களுக்குள், புகாரை பதிவு செய்ய வேண்டும். புகார் பதிவிற்கான கட்டணத்தை, டி.டி., அல்லது போஸ்டல் ஆர்டராக செலுத்த வேண்டும். மேல்முறையீட்டு மனுவுக்கு, கட்டணம் செலுத்த தேவை இல்லை.
  • நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மற்றும் சான்று அளிக்கப்பட்ட நபர் மூலமாகவோ புகாரை பதியலாம்.
யாரை அணுகனும்?
  • நுகர்வோர் வாங்கிய பொருள் அல்லது சேவையின் மதிப்பு, 20 லட்ச ரூபாய்க்கும் குறைவாக இருப்பின், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களையும்; 
  • 20 லட்சம் முதல், 1 கோடி ரூபாய்க்கு குறைவாக இருந்தால், மாநில நுகர்வோர் குறைதீர் மன்றங்களையும்; 
  • 1 கோடி ரூபாய்க்கும் மேல் உள்ளவர்கள், தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தையும் அணுக வேண்டும்.
புகார் கட்டணம்
  • அந்தியோதயா, அன்னயோஜனா குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள், ஒரு லட்ச ரூபாய் வரை, புகார் கட்டணம் செலுத்த தேவை இல்லை. 
  • ஏனைய புகார்தாரர்கள், தாங்கள் வாங்கிய பொருட்கள் மற்றும் சேவை மதிப்பின் அடிப்படையில், புகார் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.

புகார் பதிவு கட்டண விவரம்:
    
பொருட்களின் மதிப்பு 1 லட்சம் ரூபாய் வரை  - கட்டணம் ரூ.100
1 - 5 லட்சம் - 200
5 - 10 லட்சம் - 400
10 - 20 லட்சம் - 500
20 - 50 லட்சம் - 2,000
50 - 1 கோடி - 4,000
1 கோடிக்கு மேல் - 5,000

நுகர்வோருக்கு, எந்த நிலையிலும் நீதி கிடைக்காத பட்சத்தில், உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தை அணுகி, நிவாரணம் பெறலாம்.

நன்றி:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்