தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

17.4.12

அதிகாரிகளை மிரட்டும், "செகரட்டரி!"

"கல்வித் துறையில, அமைச்சரோட, "செகரட்டரி' ஒருத்தர், அதிகாரிகளை கண்டபடி மிரட்டுதாராம் வே...'' என, பெஞ்ச் விவாதத்தை துவக்கினார் அண்ணாச்சி.

""யாருங்க அது...'' எனக் கேட்ட அந்தோணிசாமியிடம், தன் சட்டை பாக்கெட்டில் இருந்த, "செல்வத்தை' எடுத்து, இடுப்பு, "பெல்ட்டில்' வைத்தபடியே, தொடர்ந்தார் அண்ணாச்சி...

""சர்வ சிக்ஷா அபியான்னு, "சென்ட்ரல் கவர்மென்ட்'டோட திட்டம் ஒண்ணு இருக்குல்ல... அது மூலமா, வட்டார வள மையங்கள்ல, கம்ப்யூட்டர், ஜெராக்ஸ் மிஷின்கள்லாம், வாங்கி வைக்க, நிதி வழங்கி இருக்காவ வே...

""இந்த வேலைகளைச் செய்ய, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிங்க, கல்வித் துறை அதிகாரிங்கள, "கான்டாக்ட்' செஞ்சாங்க. அவங்க, செயலரை அடையாளம் காட்டிட்டு, ஒதுங்கிட்டாக...

""அந்த பி.ஏ.,வோ, இது தான் சாக்குன்னு, தான் சொல்ற கடைங்கள்ல தான், மிஷின்கள் வாங்கணும்ன்னு, வாய்மொழி உத்தரவு போடுதாராம் வே...

""இவங்க ஏதாவது கேள்வி கேட்டா, ஏக வசனத்துல திட்டித் தீர்க்குதாராம்... அதிகாரிங்க பாவம்... வெளியில சொல்ல முடியாம திணறிட்டிருக்காவ வே...'' என்று கூறி முடித்தார் அண்ணாச்சி.

""வெற்றி பெற்றதோட, தொகுதியையே மறந்துர்ற எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில, சென்னையை அடுத்த, திருப்போரூர் எம்.எல்.ஏ., மனோகரன், கொஞ்சம் வித்தியாசமா இருக்காரு பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.

""அப்படி என்ன ஓய் செய்யறார் அவர்?'' எனக் கேட்டார் குப்பண்ணா.

""தினமும் ஆபீஸ் வந்து, மக்கள்ட்ட மனு வாங்கறார் பா... வாங்கி, குப்பைல போடாம, சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கூப்பிட்டு, "உடனே நடவடிக்கை எடுக்கணும்'ன்னு உத்தரவும் போடுறார்...

""சட்டசபை கூட்டம் நடக்கும் போதெல்லாம், ஆபீசுல யாரும் இருக்க மாட்டாங்க... ஜனங்க ஏமாந்து திரும்பிடுவாங்களேன்னு நினைச்ச அவர், ஆபீசு வாசலில், "பொது மக்களுக்கு அன்பு வேண்டுகோள்: சட்டசபை நிகழ்ச்சி முடியும் வரை, வார நாட்களில் என் மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு, மாலை 5 மணிக்கு பிறகு வாருங்கள். விடுமுறை நாட்களில் வழக்கப்படி வரலாம்'ன்னு நோட்டீசு ஒட்டியுள்ளார் பா...'' என்றார் அன்வர்பாய்.

""இப்படி எல்லாம் வேலை செய்யப்படாது... செஞ்சா, மத்த எம்.எல்.ஏ.,க்கள், மேலிடத்துல, "போட்டு' குடுத்துடுவான்னு அவருக்குத் தெரியாதோ...'' என, கிண்டலடித்தார் குப்பண்ணா.

""திருவள்ளூர் ஸ்கூல், "முக்கிய' அதிகாரி, பணத்தை திருப்பிக் கொடுத்துட்டாராம் ஓய்...'' என, அடுத்த மேட்டருக்குத் தாவினார் குப்பண்ணா.

""யாருங்க... நாம ஏற்கனவே பேசினோமே, அந்த ஸ்கூலா...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

""ஆமாம் ஓய்... திருவள்ளூர், பென்னலூர்பேட்டை பள்ளி, "முக்கிய' ஆசிரியர், "ஸ்டூடன்ட்ஸ்' கிட்டே பணம் வசூலிச்ச விவகாரம், மேலதிகாரிக்கு தெரிஞ்சு போய், "செம டோஸ்' விட்டாராம் ஓய்...

""உடனே, பணத்தை எடுத்துண்டு, பூண்டி ஸ்கூல்ல பரிட்சை எழுதிட்டு, வெளில வந்த, தன் ஸ்கூல், "ஸ்டூடன்ட்ஸ்' எல்லாரையும் கூப்பிட்டு, வினியோகம் பண்ணிட்டாராம்...

""அது எப்படிங்க... எல்லா, "ஸ்டூடன்ட்ஸ்'சும் சூழ்ந்திருப்பாங்களே...'' என, சந்தேகம் கிளப்பினார் அந்தோணிசாமி.

""அங்க தான், "காமெடி'யே இருக்கு... சூழ்ந்துண்ட, "ஸ்டூடன்ட்ஸ்'சைப் பார்த்ததும், மிரண்ட, "முக்கிய' ஆசிரியர், விட்டா போதும்ன்னு நினைச்சு, கையில் வச்சிருந்த மொத்த பணத்தையும், அவாகிட்ட கொடுத்துட்டு, கிளம்பிட்டாராம் ஓய்...'' என, வயிறு குலுங்க சிரித்தபடியே எழுந்தார்;

பெஞ்ச் கலைந்தது.

நன்றி:

டீ கடை பெஞ்ச்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்