தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

11.4.12

ஆசிரியர் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் தாமதம்

பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு தற்காலிக முன்னுரிமைப் பட்டியல் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தமிழக பள்ளி ஆசிரியர்கள் பதவி மூப்பு பட்டியல் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் இடை நிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்கள் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராகவும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாகவும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாகவும் ஆண்டு தோறும் பதவி உயர்வு வழங்கப்படும். இதற்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில், தற்காலிக பட்டியல் பணி மூப்பு அடிப்படையில், அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆசிரியர்கள் வேலை நாட்களில் இருக்கும் போதே பட்டியலை சரி பார்த்து, பெயர் விடுபட்டாலோ, தவறுகள் இருந்தாலே, முதன்மை கல்வி அலுவலகத்தில் தெரிவித்து, சரி செய்து கொள்ளலாம். இதை தொடர்ந்தே, பள்ளிக்கல்வித்துறையால் பதவி உயர்வு இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

ஆனால் இந்த ஆண்டு வேலை நாட்கள் ஏப்., 28 ல் முடியும் நிலையில், இது வரை தற்காலிக பட்டியல் அனுப்பப்படாததால் ஆசிரியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்