தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

12.4.12

டி.இ.டி., தேர்வு : இன்று கடைசி நாள்

டி.இ.டி., தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (டி.இ.டி.,), கடந்த மாதம் 22ம் தேதி முதல், 66 கல்வி மாவட்டங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 4ம் தேதியுடன் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 12ம் தேதி வரை நீட்டிப்பு செய்து, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. எனவே, டி.இ.டி., தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாள்.

தேர்வு குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறும்போது,""16 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டன. அதில், 12 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன. இதுவரை 7.5 லட்சம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. கடைசி தேதிக்குள், மேலும் பல ஆயிரம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்'' என்றனர்.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்