- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
30.7.11
சாஸ்திரா பி. எட். - அரசாணை
தலைப்புகள்:
அரசாணைகள்,
கல்வித் துறை செய்திகள்,
பி.எட்.
29.7.11
பள்ளிகளை இன்று புறக்கணிக்காதீர்' : அரசு உத்தரவு
பள்ளிகளை இன்று (ஜூலை 29) ஆசிரியர்களும், மாணவர்களும் புறக்கணிக்கக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
சமச்சீர் கல்வி தொடர்பாக மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோரும் இன்று ஒரு நாள் பள்ளிகளை புறக்கணிக்க வேண்டும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் தி.மு.க.,வின் அழைப்புக்கு யாரும் ஆதரவு தெரிவித்துவிடக் கூடாது என்பதில் அரசும் உறுதியாக உள்ளது.
இதனால் நேற்று டெலிபோன் உத்தரவாக அதிகாரிகள் பள்ளிகளுக்கு தகவல் அனுப்பியுள்ளனர். அதன்படி, இன்று பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்களும், மாணவர்களும் எக்காரணம் கொண்டு வராமல் இருக்கக் கூடாது. பள்ளிக்கு வந்தபின்பு வெளியே செல்வதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். யாரும் அவசிய காரணங்களை தவிர்த்து அனுமதி, விடுப்பு எடுக்கக் கூடாது,' என உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
பள்ளிக் கல்வித் துறையை பொறுத்தவரை சமச்சீர் கல்விக்கு ஆதரவு கருத்துடைய ஆசிரியர், மாணவர்கள் இருந்தால்கூட தற்போதைய நிலையில் யாரும் வெளிப்படுத்த தயாராக இல்லை. அதேசமயம் துவக்கக் கல்வியில் ஒரு சில ஆசிரியர் கட்டணியினர் ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளது. தனியார் (மெட்ரிக்) பள்ளிகள் சமச்சீர் கல்விக்கு எதிரான நிலையில் இருப்பதால் அங்கு இப்பிரச்னை எழவில்லை.
நன்றி:
தலைப்புகள்:
கல்வித் துறை செய்திகள்,
சமச்சீர்க் கல்வி,
நாளிதழ் செய்திகள்
28.7.11
ஆக 5-க்குள் சமச்சீர் கல்வி புத்தகங்களை வழங்க வேண்டும்- தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
சமச்சீர் கல்வி பாடத்திட்டப் புத்தகங்களை வரும் ஆகஸ்ட் 5-ம் தேதிக்குள் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வழங்கப்பட்டுவிட வேண்டும் என உச்சநீதி மன்றம் தமிழக அரசுக்கு இன்று உத்தரவிட்டது.
திமுக அரசு அறிமுகப்படுத்திய சமச்சீர் கல்வியை இப்போதைய ஜெயலலிதா அரசு ரத்து செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஜெயலலிதா அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்றம், அனைத்து வகுப்புகளுக்கும் இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என கடந்த 18-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. மேலும் வருகிற 22-ந்தேதிக்குள் மாணவர்கள் அனைவருக்கும் சமச்சீர் பாட புத்தகங்கள் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. மேலும் ஆகஸ்ட் 2 ந்தேதிக்குள் சமச்சீர் பாட புத்தகங்களை வினியோகிக்க உத்தரவிட்டது. தற்போது இந்த வழக்கு குறித்த இறுதி விசாரனை நடைபெற்று வருகின்றது.
கடந்த 2 நாட்களாக அரசுத் தரப்பு வாதம் நடந்து வந்தது. அப்போது ஆகஸ்ட் 2 ந்தேதிக்குள் சமச்சீர் பாட புத்தகங்களை வழங்க இயலாது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆகஸ்ட் 5 ந்தேதிக்குள் சமச்சீர் பாட புத்தகங்களை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவுவிட்டுள்ளது.
மேலும் தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் வரும் செவ்வாய்கிழமை விசாரணை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமச்சீர் கல்வி சட்டத்தை 2011 அல்லது அதற்குப் பின்னர் அமல்படுத்தலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், சட்டத் திருத்தத்தை அரசு கொண்டு வந்தது ஏன்?
சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளது. அந்த மனு மீதான 2வது நாள் விசாரணை நேற்று நடந்தது. நேற்று அரசுத் தரப்பு வாதத்தை வழக்கறிஞர் பி.பி.ராவ் தொடர்ந்தார்.
அப்போது அவர் வாதிடுகையில் குறுக்கிட்ட நீதிபதிகள், சமச்சீர் கல்வி திட்டம் தொடர்பாக கடந்த தி.மு.க. அரசு கொண்டு வந்த சட்டத்தை 2011 அல்லது அதற்குப் பின்னர் அமல்படுத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் தெளிவான உத்தரவிட்டிருந்தும், சட்டத் திருத்தத்தை அதிமுக அரசு கொண்டு வந்தது ஏன் என்று கேட்டனர்.
அதற்குப் பதிலளிதத ராவ்,
தமிழக அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் தேவையற்றது என்பதை தைரியத்துடனும், உரத்த குரலிலும் ஏற்றுக்கொள்கிறேன். இதுபோன்ற தவறுதலான சட்ட திருத்தம் தேவையில்லை என்று, சரியான ஆலோசனை தமிழக அரசுக்கு வழங்கப்படவில்லை. இது போன்ற தேவையற்ற ஒரு செயலால், தேவையற்ற சிக்கலில் நாங்கள் மாட்டிக் கொண்டு இருக்கிறோம் என்றார் ராவ்.
தமிழக அரசின் வழக்கறிஞரே அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. தனது வாதத்தை தொடர்ந்த ராவ் மாலையில் முடிவு செய்தார். அப்போது அவர் கூறுகையில், தான் நீதிபதிகளிடம் தமிழக அரசின் புதிய சட்டத் திருத்தம் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் தமிழக அரசின் கருத்து அல்ல, அவை தனது சொந்தக் கருத்துக்கள் என்று கூறினார்.
பி.பி.ராவின் பேச்சால் தமிழக அரசுக்குப் பெரும் தர்மசங்கடமும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. வழக்கின் நிலையை மிகவும் பலவீனப்படுத்தி விட்டது ராவின் பேச்சு என்ற கருத்தும் எழுந்துள்ளது. தமிழக அரசின் சார்பாக ராவ் ஆஜராவதற்கு, தமிழக அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன்தான் பெயரைப் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது.
முன்னதாக தமிழக அரசின் சார்பில் ஆஜரான இன்னொரு மூத்த வக்கீலான குரு கிருஷ்ணகுமார் வாதிடுகையில்,
கடந்த திமுக ஆட்சியில் 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் மாநில சட்டப் பேரவையில் சமச்சீர் கல்வி தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா பேசியபோது தரமான சமச்சீர் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியும், அப்போதைய அரசால் கொண்டு வரப்பட உள்ள கல்வி திட்டங்கள் தமிழக மாணவர்களுக்கு எந்த நன்மையையும் அளிக்காது என்று தெரிவித்துள்ளது என்றார்.
இந்த வழக்கில் இன்றும் வாதங்கள் தொடர்கின்றன. பெற்றோர்கள் சார்பில் இன்று வக்கீல்கள் வாதம் நடைபெறவுள்ளது.

சமச்சீர் கல்வி விவகார வழக்கு : தமிழக சட்டத் திருத்தம் தேவையற்றது
"சமச்சீர் கல்வி அமல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் தேவையற்றது. இதனால், தேவையற்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன" என, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஒப்புக் கொண்டார். பின்னர், இது தன் தனிப்பட்ட கருத்து என்றும் அரசின் கருத்து அல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.
சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதை தள்ளிவைக்கும் வகையில், தமிழக அரசு, சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சட்டத் திருத்தத்தை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்" ரத்து செய்தது. இந்த கல்வியாண்டில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்றும் பாடப் புத்தகங்களை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகள் சார்பில் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை நீதிபதிகள் பாஞ்சால், தீபக்வர்மா, சவுகான் அடங்கிய "பெஞ்ச்" விசாரித்து வருகிறது. இரண்டாவது நாளாக நேற்று வாதம் நடந்தது. தமிழக அரசு சார்பில் டில்லி மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ் ஆஜராகி, "தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் தேவையற்றது. இது தேவையில்லை என வலுவான, உறுதியான சட்ட ஆலோசனைகளை அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்திருந்தால், இது நடந்திருக்காது'' என்றார்.
மாலையில் தனது வாதத்தை தெளிவுபடுத்தினார். ""காலையில் தான் தெரிவித்த கருத்து தனிப்பட்ட முறையிலானது. மாநில அரசின் கருத்து அல்ல'' என மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ் தெளிவுபடுத்தினார். அவர் வாதாடும் போது, ""சமச்சீர் கல்வி திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கிய பின், ஓராண்டில் அதை தமிழக அரசு அமல்படுத்தும். உலக அளவிலான மாணவர்களுடன் போட்டியிடும் விதத்தில் தமிழக மாணவர்கள் தகுதி பெற வேண்டும் என்றும், குறைகளை நீக்கி தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதை உறுதி செய்யும் விதத்தில், இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதை தமிழக முதல்வர் ஜெயலலிதா தள்ளிவைத்துள்ளார்'' என்றார். அப்போது, ""ஐகோர்ட் உத்தரவுக்குப் பின், சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டிய சந்தர்ப்பம் ஏன் ஏற்பட்டது?'' என, நீதிபதிகள் கேட்டனர். அதற்கு மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ், ""கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஐகோர்ட் பிறப்பித்த தீர்ப்பில், சில உத்தரவுகள் நிறைவேற்றப்படவில்லை. அந்த தீர்ப்பில், நிபந்தனைகளை பூர்த்தி செய்த பின், 2011-12ம் ஆண்டில் அல்லது அதற்குப் பின் சமச்சீர் கல்வியை தமிழக அரசு அமல்படுத்தலாம் என தெளிவாக கூறியுள்ளது'' என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ""ஐகோர்ட் பிறப்பித்த முந்தைய உத்தரவு அமல்படுத்தப்படவில்லை என நீங்கள் கூறும் போது, இந்தச் சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் ஏற்படவில்லை. இல்லாத சட்டத்தை இப்போது நீங்கள் அமல்படுத்த முடியாது'' என்றனர். அதற்கு மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ், ""சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டாம் என வலுவான, உறுதியான சட்ட ஆலோசனைகள் வழங்கப்படவில்லை. தேவையற்ற விஷயங்களை செய்ததால், தேவையில்லாமல் தற்போது பிரச்னையில் நாங்கள் சிக்கியிருப்பது உண்மை தான்'' என்றார்.
பின், மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ் வாதாடியதாவது: சட்டத் திருத்தத்தின் பின்னணியில் அரசியல் இருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. பாடத் திட்டத்தில் குறைபாடு உள்ளது. அதை சரிசெய்ய வேண்டும் என, பள்ளிகள் தரப்பில் அரசுக்கு மனுக்கள் வந்தன. எனவே, ஒரு குழுவை அமைத்து பாடத் திட்டங்களை ஆய்வு செய்வது என்றும் அதை சரிசெய்த பின், அமல்படுத்துவது என்றும் அரசு முடிவெடுத்தது. சட்டத் திருத்தம், சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறிய பின், இதில் அரசியல் என்ற கேள்வி எழவில்லை. சமச்சீர் கல்வியை அமல்படுத்த அரசு உறுதி கொண்டுள்ளது. பல்வேறு அம்சங்களை பூர்த்தி செய்த பின், அடுத்த கல்வியாண்டில் அமல்படுத்துவோம். சட்டத்தில் கூறியபடி, கல்வி ஆணையம் தொடர்பாக ஒரு வாரத்தில் அறிவிப்பாணை பிறப்பிக்கப்படும். மத்திய சட்டத்தில் கூறியபடி, மாநில ஆலோசனை கவுன்சில் ஒரு வாரத்தில் அமைக்கப்படும். கற்பிப்பதற்கான விதிமுறைகள் நிர்ணயம், உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்-மாணவர் விகிதம், கற்பிப்பு மற்றும் பயில்வதற்கான பொருட்கள், சாதனங்கள், உள்ளிட்டவற்றை ஒரு வாரத்தில் ஏற்படுத்துவோம். பாடத் திட்டம், பாடப் புத்தகங்கள் தயாரிப்பது, பாடப் புத்தகங்களுக்கு ஒப்புதல் வழங்குவது ஒரு வாரத்திலும், பாடத் திட்டம் வடிவமைப்பது இரண்டு மாதங்களிலும் நடக்கும். இவை செப்டம்பரில் முடிக்கப்படும். பாடத் திட்டம் வடிவமைக்கப்பட்ட பின், பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைப் பெறுவதற்காக வெப்சைட்டில் நகல் பாடத் திட்டம் வெளியிடப்படும். கருத்துக்கள், பரிந்துரைகளைப் பெற்று இரண்டு வாரங்களில் பாடத் திட்டம் இறுதி செய்யப்படும். அதன்பின், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான பாடப் புத்தகங்களை தயாரிப்பது, அவற்றை ஆய்வு செய்வது நான்கு மாதங்களில் நடத்தப்பட்டு, ஜனவரியில் முடிக்கப்படும். அடுத்த கல்வியாண்டில் சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதற்கு ஏதுவாக பாடப் புத்தகங்களை அரசு மற்றும் தனியார் பதிப்பாளர்கள் மே மாதத்துக்குள் அச்சிட்டு விடுவர். இவ்வாறு மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ் வாதாடினார்.
வழக்கறிஞரின் வாதம் இன்றும் தொடர்கிறது.

நாளிதழ் செய்திகள்,
நீதி மன்ற செய்திகள்
27.7.11
பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாடு
"மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர்களே, கட்டுப்படுத்த வேண்டும்,'' என, பள்ளிக்கல்வித்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வித்திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் கல்வி மட்டுமே கற்பிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, பள்ளி மாணவர்களை திரட்டி சமச்சீர் கல்வியை அமல்படுத்தகோரி, போராட்டம் நடத்த மாணவர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில், மாணவர்களை கட்டுப்படுத்த, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் படி,

- பள்ளி வரும் மாணவர்கள் பள்ளி நேரத்தில் வெளியில் சுற்றவும், பள்ளி வளாகம் வந்த பின் வெளியே செல்லவும் அனுமதிக்க கூடாது.
- பள்ளி நேரம் முடியும் வரை மாணவர்கள் பள்ளி வளாகத்தில் தான் இருக்க வேண்டும்.
- பள்ளிக்கு வந்த மாணவர்கள் இடையில் வெளியேறினால், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
நன்றி:
தலைப்புகள்:
கல்வித் துறை செய்திகள்,
நாளிதழ் செய்திகள்
சமச்சீர் கல்வித் திட்ட வழக்கு-சுப்ரீம் கோர்ட்டில் 2ம் நாள் விசாரணை தொடங்கியது
சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்துள்ள அப்பீல் மனு மீதான 2ம் நாள் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது.
சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பாண்டே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகியது தமிழக அரசு. உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் சமச்சீர் கல்வித் திட்ட பாடப் புத்தகங்களை விநியோகிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கில் இறுதி விசாரணை நேற்று தொடங்கியது. காலை முதல் மாலை வரை நடந்த விவாதத்தின்போது சமச்சீர் கல்வித் திட்டம் தரமானதாக இல்லை. புத்தகங்கள் தரமானதாக இல்லை. எனவே இந்த ஆண்டு இத்திட்டத்தை அமல்படுத்துவது இயலாத காரியம் என தமிழக அரசு வழக்கறிஞர் வாதிட்டார். மேலும் அடுத்த ஆண்டு அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் தமிழக அரசுத் தரப்பு வாதம் தொடங்கிநடந்து வருகிறது. இது முடிந்தவுடன் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சார்பில் மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான அபிஷேக் சிங்வி வாதிடவுள்ளார். அதன் பின்னர் பெற்றோர், மாணவர்கள் சார்பில் வக்கீல்கள் வாதிடவுள்ளனர்.

26.7.11
நேரடி 8ம் வகுப்பு தனித்தேர்வு திட்டம் ரத்து: ஆர்.டி.இ., சட்டம் காரணமாக அரசு நடவடிக்கை
கட்டாயக்கல்வி சட்டம் காரணமாக, நடப்பாண்டு முதல் நேரடியாக, 8ம் வகுப்பிற்கான தனித்தேர்வு திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இதனால், இனி, 8ம் வகுப்பு வரை பள்ளிகளில் படித்தால் மட்டுமே, நேரடியாக, 10ம் வகுப்பு தனித்தேர்வை எழுதமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
பள்ளிகளில் சேர்ந்து படிக்க முடியாதவர்களுக்கும், படிப்பை பாதியில் விட்டுவிட்டவர்களுக்கு படிக்கும் வாய்ப்பை தரும் வகையிலும், ஆண்டு தோறும் நேரடியாக, 8ம் வகுப்பு தனித்தேர்வை, அரசு தேர்வுத்துறை நடத்தி வந்தது.
ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடக்கும் இத்தேர்வை, 10 ஆயிரம் பேர் எழுதுவர். ரயில்வே துறையில், "கலாசி" வேலையில் சேர வேண்டுமெனில், குறைந்தபட்சம், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதேபோல், துப்புரவு பணியாளர்களாக இருப்பவர்கள், பதிவு எழுத்தர் (ரெக்கார்டு கிளார்க்) நிலைக்கு உயர வேண்டுமெனில், 8ம் வகுப்பு தேர்ச்சி முக்கியம். டிரைவர் லைசென்ஸ் எடுப்பதற்கும், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்படி, பல நிலைகளில், 8ம் வகுப்பு தேர்ச்சி அவசியமாக உள்ளது. இதற்காகவே, ஆயிரக்கணக்கானோர் இத்தேர்வை எழுதுகின்றனர்.
இந்நிலையில், 2009ம் ஆண்டு மத்திய அரசு கட்டாயக்கல்வி சட்டத்தை கொண்டுவந்து, நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தில், "அனைத்து வகையான பள்ளிகளிலும், 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை எக்காரணம் கொண்டும் தோல்வியடையச் செய்யக்கூடாது. அனைவரையும், 8ம் வகுப்பு வரை, தேர்ச்சி அடையச் செய்ய வேண்டும்" என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது, பள்ளிகளில், 8ம் வகுப்பு வரை மாணவர்களை தோல்வி அடையச் செய்வதில்லை.
நேரடியாக, 8ம் வகுப்பு தனித்தேர்வு நடத்தினால், தேர்ச்சி, தோல்வி என தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டியிருக்கும். எனவே, கட்டாயக்கல்வி சட்டத்தின்படி, நேரடி, 8ம் வகுப்பு தனித்தேர்வை நடப்பாண்டு முதல் ரத்து செய்துள்ளதாக, துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, "கடந்த ஆண்டே தேர்வு நடத்தியிருக்கக் கூடாது. ஆனால், நடத்திவிட்டதால் வேறு வழியின்றி அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக, சான்றிதழ் கொடுத்துவிட்டோம். இந்த ஆண்டு முதல், 8ம் வகுப்பிற்கு நேரடி தனித்தேர்வு நடைபெறாது' என்றார்.
அரசு தற்போது எடுத்துள்ள முடிவு காரணமாக, நேரடியாக, 8ம் வகுப்பு தேர்வை எழுத திட்டமிட்டிருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நேரடியாக, 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத வழியில்லை. எனவே, 8ம் வகுப்பு படிக்க வேண்டும் என நினைப்பவர்கள், 8ம் வகுப்பு வரை பள்ளிகளில் படிக்க வேண்டும்; வேறு வழியில்லை. அப்படி, பள்ளிகளில், 8ம் வகுப்பு படித்து முடித்துவிட்டால், அதன்பின் நேரடியாக, 10ம் வகுப்பு தேர்வையும், பிளஸ் 2 தேர்வையும் எழுதலாம்.
நன்றி:
தலைப்புகள்:
கல்வி உரிமைச் சட்டம்,
கல்வித் துறை செய்திகள்,
நாளிதழ் செய்திகள்
குற்றச்சாட்டுடன் ஓய்வு பெற அனுமதி சிறப்பு கமிஷனரின் உத்தரவு ரத்து: ஐகோர்ட் கிளை உத்தரவு
ராமநாதபுரத்தை சேர்ந்த குழந்தைகள் நல திட்ட அலுவலரை, குற்றச்சாட்டுடன் ஓய்வு பெற அனுமதித்த சமூக நலத்துறை சிறப்பு கமிஷனர் பிறப்பித்த உத்தரவை, மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது. அவருக்கு ஓய்வூதியம் வழங்கவும் உத்தரவிட்டது.
ராமநாதபுரத்தை சேர்ந்த பெண்ணரசி தாக்கல் செய்த ரிட் மனு:
குழந்தைகள் நல திட்டத்தில் பணிபுரிந்தேன். கமுதியில் திட்ட அலுவலராக பணிபுரிந்து, 2008 ஜூன் 30ல் ஓய்வு பெற அனுமதிக்கப் பட்டேன். ஓய்வு பெறும் நாளில், குற்றச்சாட்டுகளுக்கு குந்தகமின்றி ஓய்வு பெற அனுமதிக்கப்பட்டேன். இதனால், ஓய்வூதியம் உட்பட இதர பயன்கள் மூன்றாண்டுகளாக வழங்கப்படவில்லை. எனவே, குற்றச்சாட்டுகளுக்கு குந்தகமின்றி ஓய்வு பெற அனுமதித்த சமூக நலத்துறை சிறப்பு கமிஷனர் உத்தரவை ரத்து செய்ய வேண்டும், என கோரினார். மனுதாரர் சார்பில் வக்கீல் விஸ்வலிங்கம் ஆஜரானார்.
மனுவை விசாரித்த நீதிபதி கே.வெங்கட்ராமன் பிறப்பித்த உத்தரவு:
"சிறப்பு கமிஷனர் அரசு அடிப்படை விதிகளுக்கு முரணாக குற்றச்சாட்டுகளுக்கு குந்தகமில்லா ஓய்வு பெற அனுமதித்துள்ளார். அது ரத்து செய்யப்படுகிறது. அவருக்கு ஓய்வூதியம் மற்றும் இதர பயன்களை வழங்க வேண்டும்,'' என்றார்.
நன்றி:
தலைப்புகள்:
நாளிதழ் செய்திகள்,
நீதி மன்ற தீர்ப்புகள்
கருணை அடிப்படையில் வேலை மணமான பெண்ணுக்கும் உண்டு
"திருமணமான ஆணுக்கு, கருணை அடிப்படையில் வேலை வழங்கும் போது, திருமணமான பெண்ணுக்கும் அதை வழங்க மறுக்கக் கூடாது" என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கரூரைச் சேர்ந்தவர் ஞானவள்ளி. இவரது தாயார், நகராட்சியில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றினார். 1997ம் ஆண்டு இறந்தார். அதற்கு முன், ஞானவள்ளிக்கு திருமணம் நடந்தது. தாயாரின் மரணத்துக்குப் பின், விவாகரத்தும் ஏற்பட்டது. கணவரால் கைவிடப்பட்ட பெண் என்கிற அடிப்படையில், தாயாரின் வேலையை கருணை அடிப்படையில் வழங்க, ஞானவள்ளி கோரினார்.
நகராட்சி தரப்பில் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. நகராட்சி நிர்வாக கமிஷனருக்கு, கரூர் நகராட்சி சார்பில், கடிதம் அனுப்பப்பட்டது. தாயாரின் இறப்புக்குப் பின் விவாகரத்து பெற்றதால், கருணை அடிப்படையில் பணி வழங்க முடியுமா என, விளக்கம் கோரப்பட்டது. இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இதையடுத்து, கருணை அடிப்படையில், பணி வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் ஞானவள்ளி மனுத் தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் கோவர்த்தன், ஞானசேகர், அரசு தரப்பில் கூடுதல் அரசு பிளீடர் ஆர்.ரவிச்சந்திரன், நகராட்சி தரப்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜராகினர்.
மனுவை விசாரித்த நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:
திருமணமான ஆணுக்கு, கருணை அடிப்படையில் வேலை வழங்கும் போது, பெண்ணுக்கு திருமணமானால், அதைக் காரணம் காட்டி தகுதியிழப்பாக கருதக் கூடாது எனக் கோரி, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், கருணை அடிப்படையில் பெண்ணுக்கு வேலை வழங்க பரிசீலிக்கும் போது, அந்தப் பெண்ணின் திருமணத்தை தகுதியிழப்பாகக் கொள்ளக் கூடாது என, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கிலும், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளை கருத்தில் கொண்டு, மனுதாரரின் மனுவை, ஆறு வாரங்களில் பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.
நன்றி:
தலைப்புகள்:
நாளிதழ் செய்திகள்,
நீதி மன்ற தீர்ப்புகள்
சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த முடியாது; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு 'பிடி' வாதம்
சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த முடியாது என்றும் , இது தொடர்பாக இன்னொரு குழு அமைத்து முழு விவர அறிக்கை வந்தவுடன் மாற்றம் செய்து வரும் 2012 ல் சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த முயற்சிப்போம் என்றும் தமிழக அரசு சார்பி்ல் சுப்ரீம் கோர்ட்டில் வாதிடப்பட்டது. நாளையும் விசாரணை தொடர்ந்து நடக்கிறது. பெற்றோர் சார்பிலும், பொதுநலம் விரும்புவோர் சார்பிலும் வாதிடுகின்றனர். இது தொடர்பான தீர்ப்பு இன்னும் மூன்று அல்லது 4 நாட்கள் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு எந்தப்பாடம் என்பதில் தொடர் குழப்பம் நீடிக்கிறது.
கடந்த கால தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களில் பல்வேறு திட்டங்களை அ.தி.மு.க., அரசு ரத்து செய்தது . சிலவற்றை புதிய அரசு மாற்றம் செய்தது.
இந்நிலையில் சமச்சீர்கல்வி திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி , சென்னை ஐகோர்ட் விரைந்து விசாரித்து சமச்சீர் கல்வியையே நடப்பாண்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. தமிழக அரசின் சட்டத்திருத்தமும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசு கேட்டபடி சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு தடை விதிக்க கடந்த வாரம் மறுத்து விட்டனர். வரும் 2 ம் தேதிக்குள் மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி திட்டத்திற்கான புத்தகங்கள் வழங்கிடவும் ஆணை பிறப்பித்தனர் . இந்த ( செவ்வாய்க்கிழமை) விசாரணை இன்று இறுதி பைசலுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.பி..,ராவ் தனது வாதுரையில், "சமச்சீர் கல்வி தரமற்று இருப்பதால் அமல்படுத்துவது சாத்தியமற்றது. இதனால் மாணவர்கள் மன அழுத்த்திற்கு ஆளாவர். அத்துடன் மேல்நிலைத்தேர்வுக்கு தகுதி உடையவர்களாக்க முடியாது. இது தொடர்பாக குழு அமைத்து விவாதிக்கப்பட்டு பின்னர் அடுத்த ஆண்டில் செயல்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும். மேலும் இந்த பாடத்தில் ஒரு குறிப்பிட்ட நபர் தொடர்பான துதி பாடல்கள் உள்ளன. குறைகள் களைந்து பின்னர் நடைமுறைப்படுத்த ஓரு ஆண்டு காலமாவது தேவைப்படும்" என்றார்.
பெற்றோர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி பாடப்புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. ஏற்கனவே பல கோடி ரூபாய் செலவில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் வீணாக கிடக்கிறது. இன்னும் காலம் தாமதிக்காமல் பள்ளிகளை துவக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. நாளையும், நாளை மறுநாளும் விசாரணை தொடர்ந்து நடக்கவுள்ளது. இதனால் இதில் இறுதி தீர்ப்புக்கு இன்னும் மூன்று அல்லது 4 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்றும் தெரிகிறது.
தி.மு.க., போராட்டத்திற்கு அழைப்பு : இதற்கிடையில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்டாமல் காலம் தாமதிப்பதை கண்டித்து வரும் 29 ம் தேதி மாணவ, மாணவிகள் பள்ளியை புறக்கணிக்க வேண்டும் என போராட்டத்திற்கு தி.மு.க., அழைப்பு விடுத்துள்ளது.
நன்றி:
தலைப்புகள்:
சமச்சீர்க் கல்வி,
நாளிதழ் செய்திகள்,
நீதி மன்ற தீர்ப்புகள்
25.7.11
24.7.11
STFI - செயற்குழு தீர்மானங்கள்
குறிப்பு: தஇஆச அங்கம் வகிக்கும் எஸ்.டி.எப்.ஐ-யில் இணைந்துள்ள பிற சங்கங்களோடு அனைத்து மாவட்ட கிளைகளும் இணைந்து மிகச்சிறப்பாக செயல்பட வேண்டுகிறேன்.
தோழமையுடன்,
தஇஆச
STFI தோழமையுடன்,
மா.குமரேசன்
மாநிலப்பொதுச்செயலாளர்தஇஆச
சமச்சீர் கல்வி பிரச்னைகளுக்கு காரணம் என்ன?முத்துக்குமரன் குற்றச்சாட்டு
"சமச்சீர் கல்வி தொடர்பாக 109 பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை, அப்போதைய அரசிடம் வழங்கப்பட்டது. நான் அளித்த அறிக்கையை பார்த்து அமல்படுத்தும் பொறுப்பை, ஐ.ஏ.எஸ்., அதிகாரி விஜயகுமாரிடம் அப்போதைய அரசு அளித்தது. அவர், அவருடைய பொறுப்பை முழுமையாக செய்யவில்லை. பல பரிந்துரைகளை அரசு ஏற்கவே இல்லை,'' என பாரதிதாசன் பல்கலை முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் கூறியுள்ளார்.
சமச்சீர் கல்வி... இந்த வார்த்தை, இன்று படித்தவர் முதல் பாமரன் வரை, அனைவரது மத்தியிலும் அனல் பறக்கும் விவாதத்திற்குரிய பொருளாக மாறியுள்ளது. "சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தப்பட்டதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் காரணம்" என்று தி.மு.க.,வும், "சமச்சீர் கல்வி திட்டத்தை முறையாக, அனைத்து வகைகளிலும் தரமானதாக உருவாக்கவில்லை; அதனால், அந்தப் பணியை தமிழக அரசு செய்கிறது" என்று, ஆளும் அ.தி.மு.க., அரசும் கூறிவருகின்றன.மாணவர்கள் சம்பந்தபட்ட ஒரு பொருள், இன்று அரசியலாகி, பல மட்டங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. யார் செய்தது சரி, யார் செய்தது தவறு என, பட்டிமன்றம் நடத்தாத குறையாக, ஆங்காங்கே விவாதம் நடந்து வருகின்றன.
முந்தைய தி.மு.க., ஆட்சியில், சமச்சீர் கல்விக்குழு தலைவராக பொறுப்பேற்று, இத்திட்டம் குறித்து ஆய்வு செய்து, அப்போதைய அரசுக்கு அறிக்கை தந்தவர் பாரதிதாசன் பல்கலை முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன். சமச்சீர் கல்வி திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து, "தினமலர்" நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:
சமச்சீர் கல்வி என்றால் என்ன?
- நாட்டில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வேண்டும். அப்போது தான், நாடு முன்னேறும்; நாட்டின் பொருளாதாரம் மேம்படும். அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதில், யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அனைவருக்கும் கல்வி என்ற கருத்தில், அனைவருக்கும் தரமான கல்வி என்ற கருத்தும் இருக்கிறது.அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டுமெனில், முதலில் அனைத்துப் பள்ளிகளும் தரமானவையாக இருக்க வேண்டும். அப்படி ஒரு நிலையை உருவாக்கினால், மக்கள் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பார்கள். இதை பொதுப்பள்ளி முறை என்றும், அண்மைப்பள்ளி முறை என்றும் அழைக்கலாம். இது, அனைவருக்கும் தரமான கல்வி என்ற கருத்துக்குள் அடங்குகிறது. இந்த நிலையைத் தான் சமச்சீர் கல்வி என்கிறோம்.
- அனைத்து வகை பிரச்னைகளுக்கும் அரசு தலையீடுகள் தான் காரணம். சமச்சீர் கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டு விட்டது என்றால், அதை செயல்படுத்துபவர்களுக்கு அரசு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் மூக்கை நுழைக்கக் கூடாது. திட்டத்தின் செயல்பாடுகள், முடிவுகள் குறித்து ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வு செய்து, திட்டத்தை செயல்படுத்துபவர்களுக்கு தேவையான அறிவுரைகளை அரசு கூறலாம். அதைவிட்டுவிட்டு, திட்ட செயல்பாட்டின் சுதந்திரத்தில் தலையிடுவது தான், பிரச்னைகளுக்கு காரணம்.
- இதை வரவேற்கிறேன்.
- சமச்சீர் கல்வி திட்டத்தைப் பற்றி மக்கள் முழுமையாக புரிந்துகொள்வதற்கு, தற்போதைய சூழ்நிலை ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது. இத்திட்டத்தில், மக்களின் பங்கு அதிகம் என்றும், அதன் அவசியத்தைப் பற்றியும் எனது பரிந்துரை அறிக்கையில் விரிவாக கூறியுள்ளேன். 109 பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை, அப்போதைய அரசிடம் வழங்கப்பட்டது. அதில், எத்தனை பரிந்துரைகளை அப்போதைய அரசு ஏற்றது; எத்தனை பரிந்துரைகளை ஏற்கவில்லை என்பது அனைவருக்குமே தெரிந்தது தான்.
- நான் அளித்த அறிக்கையை பார்த்து அமல்படுத்தும் பொறுப்பை, ஐ.ஏ.எஸ்., அதிகாரி விஜயகுமாரிடம் அப்போதைய அரசு அளித்தது. அவர், அவருடைய பொறுப்பை முழுமையாக செய்யவில்லை என்பதை, பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளைப் பார்த்து நான் தெரிந்து கொண்டேன்.
- சமச்சீர் கல்வி திட்டம் என்பது திடீரென வந்துவிடவில்லை. இதை ஏதோ பிச்சை போடுவது போல் நினைக்கக் கூடாது. 50களிலேயே கூறப்பட்டுவிட்டது. அனைவருக்கும் தரமான கல்வி என்பது, அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளது. அதை இப்போது தான் அமல்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.
- கல்வித் திட்டங்களை அமல்படுத்த, தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அப்படி ஒரு அமைப்பை ஏற்படுத்தியபின், அதன் அன்றாட செயல்பாடுகளில் அரசு தலையிடக்கூடாது. ஆனால், எதற்கெடுத்தாலும் அரசு மூக்கை நுழைப்பது இங்கே நடக்கிறது. இதுதான் பிரச்னைகளுக்கு காரணம்.
நன்றி:
23.7.11
மாற்றுத் திறனாளிகளுக்கு, டிச., 3 ல் சிறப்பு தற்செயல் விடுப்பு
ஆண்டுதோறும் டிச., 3 ல் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
அன்று, அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு, சிறப்பு தற்செயல் விடுப்பு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இச்சலுகை, அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படவில்லை என்பதை அறிந்த முதல்வர் ஜெயலலிதா, அவர்களும் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தைக் கொண்டாட வசதியாக, ஆண்டுதோறும் டிச., 3 ல், ஊதியத்துடன் கூடிய சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

அரசு உத்தரவு,
நாளிதழ் செய்திகள்,
மாற்றுத் திறனாளிகள்
சமச்சீர் கல்வி விவகாரம்: இடைபருவ, காலாண்டு தேர்வுகள் நடப்பதில் கேள்விக்குறி
சமச்சீர் கல்வி விவகாரம் தொடர்பாக இடைநிலை, காலாண்டு தேர்வுகள் நடப்பதில் கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது.
பாட புத்தகங்கள் தட்டுப்பாட்டால் மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.சமச்சீர் கல்வி விவகாரம் ஓரளவு முடிவுக்கு வந்த நிலையில் பள்ளிகளுக்கு சமச்சீர் பாட புத்தகங்கள் வழங்குவதில் தொடர்ந்து தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. பழைய பாட திட்டம், சமச்சீர் கல்வி திட்டம் பாட புத்தகங்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்க தயாராக இருந்தும் எந்த புத்தகங்களையும் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் "ஹாயாக' உள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2: இதில் குறிப்பாக, எஸ்.எஸ்.எல்.சி மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. பொது பாட திட்டமாக இருந்தும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு போதுமான புத்தகங்கள் வழங்காத நிலையில் இந்த மாணவர்கள் பொது தேர்வில் அதிக மார்க்குகளை பெறுவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
தேர்வுகள் ரத்து: தமிழகத்தில் பொதுவாக ஜூன் மாதம் முதல் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும். தொடர்ந்து ஜூலை மாத இறுதிக்குள் இடைநிலை தேர்வுகளும், ஆகஸ்ட் மாத கடைசியில் கால் இறுதி தேர்வுகளும் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வி பிரச்னை தொடர்பாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டன.தொடர்ந்து பிரச்னை இழுபறியில் நீடித்து கொண்டிருக்க இதுவரை எந்த பாட புத்தகங்களையும் மாணவ, மாணவிகள் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இடைநிலை தேர்வுகள், கால் இறுதி தேர்வுகள் உரிய முறையில் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பாட புத்தகங்கள் இல்லாத நிலையில் மாதாந்திர தேர்வுகளும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
புத்தகங்கள் தட்டுப்பாடு: நெல்லை மாவட்டத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு முற்றிலுமாக வரலாறு புத்தகங்கள் வழங்கப்படவில்லை. தாவரவியல், விலங்கியல் பாட பிரிவு புத்தகங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பாட பிரிவு மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். போதிய பாட புத்தகங்கள் இல்லாததால் பிளஸ் 2 பொது தேர்வை சந்தித்து அதிக மார்க்குகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பணியிடங்கள் "அம்போ':மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர், நெல்லை கல்வி மாவட்ட அலுவலர், சேரன்மகாதேவி கல்வி மாவட்ட அலுவலர் பணியிடங்கள் தொடர்ந்து காலியாகவே உள்ளது.கல்வித் தரம் பாதிக்கும்:இதனை பொறுப்பு அலுவலர்கள் கவனிப்பதால் பல்வேறு பணிகளில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதால் பொறுப்பு உதவி தலைமை ஆசிரியர்கள் தங்கள் இஷ்டம் போல் செயல்படுவதால் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் இல்லாத சூழ்நிலையில் பல்வேறு ஆசிரிய, ஆசிரியைகளும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படாத நிலையில் தொடர்ந்து கல்வித் தரம் பாதிக்கப்படுகிறது.
நிர்வாகிகள் ஆவேசம்: இதுகுறித்து தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சேதுராஜ், செயலாளர் மனோகரன், மாநில துணைத் தலைவர் அய்யாதுரை, மாவட்ட அமைப்பு செயலாளர் மாரியப்பன் கூறும் போது, ""தமிழகத்தில் உடனடியாக சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்தி பாட புத்தகங்களை விரைந்து வழங்கி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும். கடந்த 2 மாதங்களாக பாட புத்தகங்கள் இல்லாத சூழ்நிலையில் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்பட்டுள்ளது. ஆசிரிய, ஆசிரியைகளும் பாடங்களை கற்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த இரண்டு மாதங்கள் மட்டுமே இக்கல்வி ஆண்டிற்கான ஒவ்வொரு பாட பிரிவுகளுக்கும் பொதுவாக அடிப்படை கல்வியை கற்றுத் தர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்வுகளும் நடத்தவில்லை. மாணவர்கள், பெற்றோர்கள் நலன் கருதி உடனடியாக சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்தி பாட புத்தகங்களை விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

சமச்சீர் கல்வி பிரச்னையால் கல்வித் துறையில் பல்வேறு பணிகள் தேக்கம்
சமச்சீர் கல்வி பிரச்னையால் கல்வித் துறையில் பல்வேறு பணிகள் தேக்கம் அடைந்துள்ளாக ஆசிரிய, ஆசிரியைகள் புகார் தெரிவிக்கின்றனர்.
வழக்கமாக ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பதற்கு முன்பே தமிழகத்தில் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு உரிய விதிமுறைகளை வெளியிட்டு இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட்டு இடமாறுதல் ஆணைகள் வழங்கப்படும். ஆனால் இந்த கல்வி ஆண்டை பொறுத்தவரை இதுவரை கவுன்சிலிங் நடத்தப்படாததால் ஆசிரிய, ஆசிரியைகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் இடமாறுதல் கவுன்சிலிங்கை எதிர்பார்த்து சுமார் 3.50 லட்சம் ஆசிரிய, ஆசிரியைகள் காத்திருக்கின்றனர்.
பதவி உயர்வில் சிக்கல்: மேலும், இடைநிலை ஆசிரியர் பணியில் இருந்து பட்டதாரி ஆசிரியர் பணி, பட்டதாரி ஆசிரியர் பணியில் இருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணி, முதுகலை ஆசிரியர் பணியில் இருந்து தலைமை ஆசிரியர் பணி உட்பட பல்வேறு பணியிடங்களுக்கு பதவி உயர்வு பட்டியலை அறிவிப்பதிலும், இதனை நடைமுறைப்படுத்துவதிலும் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக, தமிழகத்தில் சுமார் 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் ஒவ்வொரு ஆண்டும் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவர். ஆனால் இதுவரை பதவி உயர்வு பட்டியல் அறிவிக்கப்படாததால் இந்த ஆசிரியர்கள் விரக்தி அடைந்தனர். மேலும், சிலர் ஓய்வு பெறுவதற்கு ஒரு சில மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் பதவி உயர்வு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதால் இவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பணியிடங்கள் "காலி": கல்வித் துறையில் இணை இயக்குனர்கள், பல்வேறு மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாகவே உள்ளது. இதனால் மாவட்ட அளவில் கல்வித் துறையில் பல்வேறு தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதிலும் அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
ஆசிரியர் பணி எப்போது...: ஏற்கனவே காலியாக உள்ள ஆசிரிய பணியிடங்களை நிரப்ப வசதியாக கடந்த காலங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதியானவர்களுக்கு சான்றிதழ் சரி பார்ப்பு பணி முடிவடைந்துள்ளது. இவர்களுக்கு இதுவரை நியமன ஆணை வழங்காததால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, உடனடியாக இவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
மொத்தத்தில் பாட புத்தகங்கள் இல்லாத பாட திட்ட முறைகளை மாற்றி கள ஆய்வு என்ற பெயரில் வீண் பயணங்களை மாணவ, மாணவிகளை அழைத்து செல்வதை தவிர்த்து உடனடியாக பாட புத்தகங்களை வழங்கி கல்வித் தரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சமச்சீர் கல்வி பிரச்னையால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து கல்வித் துறையில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை உடனடியாக தீர்க்கவும் உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.
நன்றி:
தலைப்புகள்:
ஆசிரியர் இடமாறுதல்,
கல்வித் துறை செய்திகள்,
நாளிதழ் செய்திகள்
அரசின் உத்தரவை எதிர்பார்த்து கல்வித் துறை அதிகாரிகள் காத்திருப்பு
தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து கல்வித் துறையில் நீண்ட நாட்களாக நிலவிய குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஏற்கனவே அனைத்து மாவட்டங்களிலும் சமச்சீர் கல்வி பாட புத்தகங்களும், பழைய பாட திட்ட புத்தகங்களும் மாணவ, மாணவிகளுக்கு வழங்க தயாராக உள்ள சூழ்நிலையில் அரசின் உத்தரவை எதிர்பார்த்து கல்வித் துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
அரசின் உத்தரவை தொடர்ந்துதான் இப்புத்தகங்களை வழங்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், வரும் 2ம் தேதிக்குள் புத்தகங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதால் உடனடியாக இதனை வழங்கும் பணி ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி:
தலைப்புகள்:
கல்வித் துறை செய்திகள்,
சமச்சீர்க் கல்வி,
நாளிதழ் செய்திகள்
21.7.11
சமச்சீர் கல்வி: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு ஜூலை 26ம் தேதி இறுதி விசாரணை
தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் சமச்சீர் கல்வி தொடரட்டும் என்ற சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. இதனால் சமச்சீர் கல்வியே நடப்பாண்டில் நடைமுறைக்கு வரும் என தெரிகிறது.
சமச்சீர் கல்வியில் தரம் இல்லையென்றும், இதனை அமல்படுத்த முடியாது என்றும் தமிழக அரசு முடிவு செய்திருந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட் மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என தீர்ப்பளித்தது.
தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. இந்த மனு தொடர்பாக இன்று விசாரித்த ஜே.எம்,. பாஞ்சால் தலைமையிலான பெஞ்ச் நீதிபதிகள் , சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். வரும் ஆகஸ்ட் 2 ம் தேதிக்குள் பாடப்புத்தகங்களை விநியோகம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
ஜூலை 26ம் தேதி இறுதி விசாரணை : கடந்த திங்கட்கிழமை சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பில் 22 ம் தேதிக்குள் பாடப்புத்தம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதற்கு கால அவகாசம் போதாது என்றும் அரசு தரப்பில் கோரப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வரும் 2 ம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளனர். வரும் ஜூலை 26ம் தேதி இறுதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. அந்நாளில் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
அரசு தரப்பில், சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அவசரமாக தயாரிக்கப்பட்டது , கல்வித்தரம் உயராது என்றும், எதிர் மனுதாரர் தரப்பில் சமச்சீர் கல்வியில் எந்தக்குறையும் இல்லை, ரூ. 200 கோடியில் 9 கோடி புத்தகங்கள் தயாராக உள்ளது. காலம் தாமதித்தால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவர் என்றும் வாதிடப்பட்டது.
நிபுணர்கள் குழு அமைத்து அறிக்கை விவரம் பெற்று சென்னை ஐகோர்ட்டே முடிவு செய்யலாம் என்று கடந்த முறை அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட போதே மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி:
தலைப்புகள்:
சமச்சீர்க் கல்வி,
நாளிதழ் செய்திகள்,
நீதி மன்ற தீர்ப்புகள்
சமச்சீர் கல்வி: ஐகோர்ட் தீர்ப்புக்கு தடைவிதிக்க மறுப்பு
சமச்சீர் கல்வி தொடர்பாக ஐகோர்ட் அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் பாடப்புத்தகங்களை விநியோகிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. சமச்சீர் கல்வித்திட்ட வழக்கில், சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார். மேலும் வரும் 2ம் தேதிக்குள் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை விநியோகிக்கவும் உத்தரவு பிறப்பித்தார்.
நன்றி:
நன்றி:
தலைப்புகள்:
சமச்சீர்க் கல்வி,
நாளிதழ் செய்திகள்,
நீதி மன்ற தீர்ப்புகள்
20.7.11
சமச்சீர் கல்வி குறித்து முடிவு செய்ய அரசு காத்திருப்பு : அப்பீல் மனு மீது நாளை விசாரணை?
சமச்சீர் கல்வி குறித்து முடிவுசெய்ய, இரண்டு நாள் காத்திருக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கிடையே, ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது நாளை விசாரணை நடைபெறும் என தெரிகிறது.
சமச்சீர் கல்வி வழக்கு தொடர்பாக, ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவின்படி, சமச்சீர் கல்வி திட்டத்தை ஆராய தலைமைச் செயலர் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டது. இக்குழு, சமச்சீர் கல்வி திட்டத்தை ஆய்வு செய்து, அதன் அறிக்கையை, சென்னை ஐகோர்ட்டில், கடந்த 5ம் தேதி தாக்கல் செய்தது. இதன் மீது விசாரணை நடந்து முடிந்ததும், நேற்று முன்தினம் சென்னை ஐகோர்ட் முதல் பெஞ்ச் தீர்ப்பு வழங்கியது. "ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை, நடப்பு கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 22ம் தேதிக்குள் பாடப் புத்தகங்களை வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்ட ஐகோர்ட் நீதிபதிகள், தமிழக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வி சட்ட திருத்தத்தை ரத்து செய்வதாகவும் அறிவித்தனர்.
ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதற்காக, நேற்று முன்தினம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், துறை செயலர் சபீதா, தமிழக அரசு அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் உள்ளிட்டோர், டில்லி புறப்பட்டுச் சென்றனர். ஐகோர்ட் தீர்ப்பு குறித்தும், இதை எதிர்த்து அப்பீல் மனு தாக்கல் செய்தால், தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்பது குறித்தும், நேற்று காலை முதல், மூத்த சட்ட நிபுணர்களுடன் அமைச்சரும், அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினர். இறுதியில், அப்பீல் செய்வது என முடிவெடுக்கப்பட்டது.
நேற்று மாலை சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு சார்பில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை அவசர மனுவாக ஏற்று, விரைவாக விசாரணை நடத்தி, தீர்ப்பு வழங்குமாறு, தமிழக அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, அப்பீல் மனு மீது நாளை விசாரணை நடக்கும் என தெரிகிறது.
இதற்கிடையே, இந்த வழக்கில் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட ஐந்து பேர், "கேவியட்' மனு தாக்கல் செய்தனர். தங்களின் கருத்துக்களை கேட்காமல், அப்பீல் மனு மீது தீர்ப்பு வழங்கக் கூடாது என, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். எனவே, விசாரணையின்போது, அவர்கள் தரப்பு கருத்துக்களும் கேட்கப்படும்.
இதற்கிடையே, ஐகோர்ட் உத்தரவின்படி பாடப் புத்தகங்கள் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே ஏற்பட்டு உள்ளது. பாடப் புத்தகங்கள் வழங்குவது தொடர்பாக, தமிழக அரசிடம் இருந்து, கல்வித்துறை அதிகாரிகளுக்கு நேற்று எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அதனால், நேற்று பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை.
அப்பீல் மனு மீது விரைவாக தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதால், சமச்சீர் கல்வி குறித்து முடிவு செய்ய இரண்டு நாள் வரை காத்திருக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
நன்றி:
19.7.11
சமச்சீர் கல்வி குறித்த ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு
"ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த கல்வியாண்டில் அமல்படுத்த வேண்டும். வரும் 22ம் தேதிக்குள், மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை வழங்க வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டது. சமச்சீர் கல்வி அமல்படுத்துவதை தள்ளி வைக்க வகை செய்யும், சட்டத் திருத்தத்தையும் ஐகோர்ட் ரத்து செய்தது. ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப் போவதாக அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த தி.மு.க., ஆட்சியில், சமச்சீர் கல்வி முறை கொண்டு வரப்பட்டது. ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு கடந்த ஆண்டு சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன், சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்துவதை தள்ளி வைக்கும் வகையில், சட்டத் திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.
இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய "முதல் பெஞ்ச்', தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்துக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல் மனு தாக்கல் செய்தது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, தமிழக அரசு தலைமைச் செயலர் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழுவை, தமிழக அரசு அமைத்தது. இக்குழு, சமச்சீர் கல்வித் திட்டத்தை ஆய்வு செய்து, கடந்த 5ம் தேதி, ஐகோர்ட்டில் அறிக்கையை தாக்கல் செய்தது. இதையடுத்து, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய "முதல் பெஞ்ச்' முன் விசாரணை நடந்தது. தமிழக அரசு சார்பில் டில்லி சீனியர் வக்கீல் பி.பி.ராவ், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் குரு கிருஷ்ணகுமார், மனுதாரர்கள் தரப்பில் சீனியர் வழக்கறிஞர் விடுதலை, வழக்கறிஞர்கள் வி.செல்வராஜ், எஸ்.பிரபாகரன், உள்ளிட்ட வழக்கறிஞர்கள் வாதாடினர்.
இவ்வழக்கில், "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: சமச்சீர் பாடத் திட்டம் மற்றும் பாடப் புத்தகங்களை இந்த ஆண்டில் கைவிட வேண்டும் என, குழு உறுப்பினர்களிடம் ஒருமனதான கருத்து இல்லை. சில மாற்றங்கள், இணைப்புகளை ஒவ்வொரு உறுப்பினரும் சுட்டிக் காட்டியுள்ளனர். இதே கருத்தை, கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் பிரதிநிதிகளும் தெரிவித்துள்ளனர். இது தான் நிலை என்றால், சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைக்கும் அரசு முடிவு, பின்னோக்கி அடியெடுத்து வைப்பது என்பதில் சந்தேகமில்லை; இதை நாங்கள் அனுமதிக்க முடியாது. ஏற்கனவே, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. மீண்டும் பழைய நிலைக்கு செல்வது என்பது, ஐகோர்ட் உத்தரவை மீறுவது மட்டுமல்லாமல், சமச்சீர் கல்வி சட்டத்தை ரத்து செய்தது போலாகி விடும். அரசின் திருத்தச் சட்டத்தை அமல்படுத்தினால், மாணவர்களின் நலன்களுக்கு ஆபத்தாகி விடும். தமிழக அரசு கொண்டு வந்த திருத்தச் சட்டம், அரசியலமைப்புச் சட்டத்தில் கூறியுள்ள சம உரிமையை மீறுவதாக உள்ளது. இது ரத்து செய்யப்படுகிறது. வகுப்புகளை ஆசிரியர்கள் துவங்க ஏதுவாக, சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை உடனடியாக வினியோகிக்க வேண்டும். வரும் 22ம் தேதிக்குள் வினியோகித்து முடிக்க வேண்டும்.
மூன்று மாதங்கள்: குழு உறுப்பினர்கள் அளித்த பரிந்துரைகளின்படி, பாடத் திட்டங்கள், பாடப் புத்தகங்களை ஆய்வு செய்யலாம். ஆட்சேபனைக்குரிய பகுதிகளை நீக்கிவிட்டு, சேர்க்க வேண்டிய பகுதிகளைச் சேர்த்து, அவற்றை கூடுதல் தொகுப்பாக மூன்று மாதங்களுக்குள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட பாடப் புத்தகங்களில் அங்கீகரிக்கப்பட்ட பாடப் புத்தகங்களை அரசு தெரிவிக்க வேண்டும். இன்றைய மாணவர்கள் தான், நமது நாட்டின் நாளைய எதிர்காலம் என்பதை கருத்தில் கொண்டு, சமச்சீர் கல்வியை அமல்படுத்த மாநில அரசு முயற்சிகளை எடுக்கும் என நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
டில்லி பறந்தார்...! : உத்தரவை தலைமை நீதிபதி வாசித்து முடித்த உடன், "ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்துவதை தள்ளி வைக்க வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய உள்ளோம்" என அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் கூறினார். ஆனால், அவர் கேட்ட கால அவகாசத்தை முதல் பெஞ்ச் ஏற்கவில்லை. தங்களுக்கு உத்தரவின் நகல் உடனடியாக வழங்க வேண்டும் என, அட்வகேட் ஜெனரல் கோரினார். உத்தரவு நகல் வழங்க, தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அப்பீல் செய்வதற்காக நேற்று அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், டில்லி புறப்பட்டு சென்றார். தற்போது சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள், மாவட்ட தலைநகரங்களில் முதன்மை கல்வி அலுவலர்கள் கட்டுப்பாட்டில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு, மேல் முறையீடு செய்தால், அதன் மீது உத்தரவு வர சில நாட்கள் ஆகும். அதுவரை பாடப் புத்தகங்கள் வழங்கப்படுமா, இல்லையா என்பது தெரியவில்லை.
மாணவர்களுக்கு புத்தகம் கிடைக்குமா? : சமச்சீர் கல்வி வழக்கில், நடப்பு கல்வியாண்டில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, சென்னை ஐகோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. 22ம் தேதிக்குள், மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்கி, வகுப்புகளை ஆரம்பிக்க வேண்டும் என, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பின்படி, மாணவர்களுக்கு இன்று முதல், சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து, அரசு வட்டாரங்கள் கூறியதாவது: வரும் 22ம் தேதிக்குள், சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை வழங்க வேண்டும் என்று தான், ஐகோர்ட் கூறியுள்ளது. 19ம் தேதியில் இருந்து வழங்க வேண்டும் என கூறவில்லை. எனவே, 22ம் தேதி வரை கால அவகாசம் இருக்கிறது. தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் உடனடியாக மேல் முறையீடு செய்ய உள்ளது. கடந்த முறை, விரைவாக தீர்ப்பு பெற்றதுபோல், இந்த முறையும் தமிழக அரசின் அப்பீல் மனுவை, அவசர மனுவாக ஏற்று விசாரிக்க வலியுறுத்தப்படும். நாளையே (இன்று) அப்பீல் மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், விரைவாக தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தெரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்பட அரசு திட்டமிட்டுள்ளது. சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை, மாணவர்களுக்கு வினியோகம் செய்ய ஒரு நாள் போதும். அதனால், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரும் வரை, எந்தவித நடவடிக்கையும் இருக்காது. இவ்வாறு அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், 22ம் தேதி வரை மாணவர்களுக்கு புத்தக வினியோகம் உடனடியாக இருக்க வாய்ப்பில்லை.
கல்வி அமைச்சர் டில்லி பயணம் : சமச்சீர் கல்வி குறித்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பை அடுத்து மேல் முறையீடு செய்வதற்காக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று டில்லி புறப்பட்டுச் சென்றனர். சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே செயல்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வதற்காக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், பள்ளிக்கல்வித்துறை செயலர் ஷபீதா, அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் நேற்று இரவு 9.10 மணிக்கு சென்னையில் இருந்து டில்லி செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் டில்லி புறப்பட்டனர்.

அரசு, மெட்ரிக் பள்ளிகள் கருத்தை ஏற்க முடியாது : ஐகோர்ட் தீர்ப்பில் விளக்கம்
சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்துவதை தள்ளி வைக்கும் வகையில், தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மனோன்மணி, தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட உதவி பெறும் தனியார் பள்ளி மேலாளர்கள் சங்கம் உள்ளிட்ட சிலர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இம்மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
இம்மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
- அறிக்கை தயாரித்ததில் பள்ளி கல்வித் துறை செயலர் சபிதா, முக்கிய பங்கு வகித்துள்ளார்.
- அந்த அறிக்கையின் முடிவில், பாடப் புத்தகங்கள் அவசர கதியில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த கல்வியாண்டுக்கு அதை பயன்படுத்த முடியாது என்றும், அதில் மாற்றங்கள், திருத்தங்கள் செய்ய வேண்டியதுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
- இதே பள்ளி கல்வித் துறை செயலர் தான், அரசு கொண்டு வந்த திருத்தச் சட்டத்தை ஆதரித்து பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
- சமச்சீர் கல்வியை அமல்படுத்தும் வழிமுறைகளையும், அதற்கான பாடத் திட்டம், புத்தகங்களை ஆராயவும், குழுவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
- குழுவின் விசாரணை வரம்பு பற்றி தவறுதலாக கருதப்பட்டுள்ளது.
- குழுவின் முடிவு மட்டுமல்லாமல், பாடத் திட்டங்கள், புத்தகங்கள் மற்றும் மெட்ரிகுலேஷன் பாடத் திட்டத்தோடு ஒப்பீடு குறித்த குழுவின் கருத்துக்களையும் நாங்கள் படித்தோம்.
- குழுவே தவறுதலாக வழிகாட்டப்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.
- சமச்சீர் கல்வியை அமல்படுத்தும் வழிமுறைகளை ஆராய்வதில் முக்கியமாக குழு ஈடுபட்டிருக்க வேண்டும்.
- குழுவின் இறுதி அறிக்கையில், சமச்சீர் பாடப் புத்தகங்களை இந்த கல்வியாண்டில் பயன்படுத்த முடியாது என முடிவாகக் கூறியுள்ளது.
- குழு உறுப்பினர்களின் கருத்துக்களைப் பார்க்கும் போது, சமச்சீர் பாடத் திட்டம், புத்தகங்களை ஒட்டுமொத்தமாக அவர்கள் புறக்கணித்து விடவில்லை.
- குழு உறுப்பினர் ஒருவர், மெட்ரிகுலேஷன் பாடத் திட்டம் மற்றும் சமச்சீர் பாடத் திட்டம் இரண்டும் தேசிய பாடத்திட்ட அமைப்பின் கொள்கைக்கு உட்பட்டு இல்லை எனக் கூறியுள்ளார்.
- சில மாற்றங்கள், திருத்தங்கள், இணைப்புகள் இருக்க வேண்டும் என்றும் படிப்படியாக அமல்படுத்தலாம் என்றும் குழு உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- எனவே, சமச்சீர் பாடத் திட்டம், புத்தகங்களை ஒட்டு மொத்தமாக நிராகரிக்க, கைவிட வேண்டும் என, குழு உறுப்பினர்கள் மத்தியில் ஒரே மாதிரியான கருத்து இல்லை.
- கோர்ட்டுக்கு தாக்கல் செய்த அறிக்கையில், ஒவ்வொரு உறுப்பினர் தெரிவித்திருந்த முழுமையான க ருத்துக்கள் இடம் பெறவில்லை எனத் தெரிகிறது.
- அவர்களின் கருத்துக்களைப் பார்க்கும் போது, சமச்சீர் பாடத்திட்டம், பாடப் புத்தகங்களை கைவிட வேண்டும் என பரிந்துரைக்கவில்லை.
- சமச்சீர் கல்விச் சட்டம் செல்லும் என, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்த மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. அப்படியிருக்கும் போது, திருத்தச் சட்டம் என்கிற போர்வையில், சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதை தள்ளி வைக்கும் வகையில், அரசு செயல்படுவதை அனுமதிக்க முடியுமா?
- திருத்தச் சட்டத்தின் விளைவை பார்த்தால், சமச்சீர் கல்விக்காக கொண்டு வரப்பட்ட பிரதான சட்டத்தை ரத்து செய்வது போலாகும். ஏற்கனவே பிரதான சட்டம் அமலுக்கு வந்துவிட்டது.
- நேரடியாக சாதிக்க முடியாததை, மறைமுகமாக சாதிக்க அரசு முயற்சித்துள்ளது.
- சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி குழு அமைக்கப்பட்டாலும், கோர்ட் உத்தரவை அந்தக் குழுவானது தவறாக பொருள் கொண்டுள்ளது.
- சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை இந்த கல்வியாண்டில் பயன்படுத்த முடியுமா என முடிவு செய்யுமாறு, குழுவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிடவில்லை.
- ஆனால், இந்த கல்வியாண்டில் பாடப் புத்தகங்களை பயன்படுத்த முடியாது என குழு முடிவுக்கு வந்துள்ளது.
- அதே முறையில், தமிழக அரசும் ஒரு நிலையை எடுத்துள்ளது.
- இந்த கல்வியாண்டில் புத்தகங்களை பயன்படுத்த முடியாது என, குழு உறுப்பினர் ஒருவர் கூட கருத்து தெரிவிக்கவில்லை.
- சமச்சீர் கல்வியை ரத்து செய்ய வேண்டும் என்பதற்காக, சட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்கும் வகையில் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
- ஏற்கனவே சட்டம் செல்லும் என ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பின், அதை நிறுத்தி வைக்கும் வகையில் திருத்தச் சட்டம் கொண்டு வர, அரசுக்கு அதிகாரமில்லை.
- திருத்தச் சட்டத்தை அமல்படுத்தினால், மாணவர்கள் மத்தியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும்; இளையவர்களின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும்.
- டாக்டர் முத்துக்குமரன் குழு, 2006ம் ஆண்டிலிருந்து கடுமையான முயற்சிகளை எடுத்துள்ளது. அந்தக் குழுவின் அறிக்கையையும், ஒரு நபர் குழு ஆராய்ந்துள்ளது.
- நான்கு ஆண்டுகளுக்குப் பின், சமச்சீர் கல்வி முறை அமலுக்கு வந்துள்ளது. எனவே, சமச்சீர் கல்வியை அவசர கதியில் அறிமுகப்படுத்தினர் என மாநில அரசும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் கூறுவதை ஏற்க முடியாது.
- சட்டத்தில் உள்ள சில பிரிவுகளை அமல்படுத்தவில்லை என, அரசு கூறியுள்ளது.
- அதிகாரிகளின் நடவடிக்கையின்மையால் மாணவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்?
- கல்வியாளர்கள் குழுவை அறிவிப்பதில், அதிகாரிகளை எதுவும் தடுக்கவில்லை.
நன்றி:
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபலமான இடுகைகள்
-
ஓய்வூதியம் பெறும், அரசு ஊழியர்களின் திருமணமாகாத, விவாகரத்தான, விதவை மகள்களுக்கு, வாழ்நாள் முழுவதும், குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்பட...
-
"அரசு முடிவெடுக்காததால, பள்ளி மாணவர்களுக்கு தான் பாதிப்பாம் வே...'' என்றபடி, பெஞ்சில் வந்து அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி. ...
-
ஜாக்டோ-ஜியோ’ அமைப்பு சார்பில், புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும். வரையறு...
-
1. அறிவியல் மையங்கள், கண்காட்சி ஆகியவை அகச் சிந்தனையை வளர்க்கும் சில வழிகள் என்று கூறியவர் - கூவர். 2. மாணவனின் சிந்தனை வினாவிற்கான விடைகள...
-
வேலூர் மாவட்டம் கணியம்பாடி உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஆசீர்வாதம். இவர் தலைமை ஆசிரியராக இருந்தபோது, படிக்காத மாணவர்கள் பெயரில் ஏராளமானோருக்க...
-
1. குமாரப் பருவத்தில் நடத்தையை பெருமளவு நிர்ணயிப்பது - ஒப்பார் குழு 2. குழந்தைகளின் இரண்டாம் பிறப்பு எனப்படுவது - குமாரப்பருவம் 3. ஸ்கீமா...