தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

12.7.11

69 சத இடஒதுக்கீட்டை தொடர முடிவு

தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் 69 சதவீத இடஒதுக்கீட்டை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக 1993ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., அரசு சட்டம் இயற்றியது. இதை நடைமுறைப்படுத்தும் பொருட்டு 1994ம் ஆண்டு அரசியலமைப்புச்சட்டத்தின் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 9வது விவர அட்டவணையில் சேர்க்கப்பட்டது. 

இந்நிலையில் 69 சதவீத இடஒதுக்கீட்டில் வளமான பிரிவினரை நீக்குவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இட ஒதுக்கீடு மற்றும் வளமான பிரிவினரை இடஒதுக்கீட்டிலிருந்து நீக்குவது தொடர்பாக பிற்பட்டோர் ஆணையத்தின் அறிக்கையை பெற்று உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்து எம் எஸ் ஜனார்தனம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 

இந்த குழு தனது அறிக்கையை கடந்த வாரம் முதல்வரிடம் வழங்கியது. இந்த அறிக்கை பற்றி முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து அரசுக்கு அளிக்கப்பட்ட அறிக்கையினை ஏற்றுக்கொள்வது என்றும், அதன் அடிப்படையில் 69 சதவீத இடஒதுக்கீட்டை தொடர்வது என்றும், இடஒதுக்கீட்டில் வளமான பிரிவினரை நீக்குவது தேவையில்லை என்றும் முடிவு செய்யப்பட்டது. 

இதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டு சட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவது என முடிவு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில், பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவீதமும், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினருக்கு 20 சதவீதமும், ஆதி திராவிடனருக்கு 18 சதவீதமும், பழங்குடியினருக்கு ஒரு சதவீதமும், மொத்தம் 69 சதவீத இடஒதுக்கீடு , வளமான பிரிவினரை நீக்காமால் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்