தமிழகத்தில் மாநில பாடத்திட்டம், ஆங்கிலோ இந்தியன் பாடத் திட்டம், மெட்ரிக் பாடத்திட்டம், ஓரியன்டல் பாடத்திட்டம் என நான்கு வகையான பாடத்திட்டம் அமலில் இருந்தன. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே மாதிரியான பாடத்திட்டத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்திட தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு உயர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், மூட்டா அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம், உள்ளிட்ட ஆசிரியர் சங்கங்களும் கல்வியாளர்களும் சமூக சிந்தனையாளர்களும் கடந்த பல ஆண்டுகளாக நடத்திய கருத்தரங்குகள், மாநாடுகள், ஆர்ப்பாட்டங்கள் இவற்றின் காரணமாக கடந்த 2010-ம் ஆண்டு சமச்சீர் கல்வியை தமிழக அரசு மேற்சொன்ன நான்கு பாடத்திட்டங்களை ஒருங்கிணைத்து பொது பாடத்திட்டத்தில் 1மற்றும் 6-ம் வகுப்பிற்கு அமல்படுத்தியது. இக்கல்வியாண்டில் 2 முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி நடைமுறையில் வர இருந்தது. சமச்சீர் பாடத்திட்டம் தரமானதாக இல்லையென அரசு திட்டத்தை தற்காலிகமா ஒத்திவைத்தது. இது தொடர்பாக வழக்குகள் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றிற்கு சென்று இன்று (18.07.2011) சென்னை உயர்நீதிமன்றம் சமச்சீர் கல்வியை இந்தாண்டே அமல்படுத்திட உத்தரவிட்டுள்ளது.
பல அமைப்புகள் போராடி பெற்ற சமச்சீர் கல்வியினை அரசு காலம் தாழ்த்தாமல் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக அமல்படுத்திட கேட்டுக்கொள்கின்றோம். தமிழக அரசு சமச்சீர் கல்வியில் குறைபாடு இருக்கு என கருதினால் அரசு அமைத்துள்ள குழுவை பயன்படுத்தி அதில் மேலும் ஆசிரியர்களையும் கல்வியாளர்களையும் இணைத்து குறைகளை நிவர்த்தி செய்து அந்த பாடத்திட்டத்தினை அடுத்த கல்வியாண்டு முதல் அமல்படுத்தலாம். மிகுந்த உழைப்புடன் கடந்த ஓராண்டுகளாக தயாரிக்கப்பட்ட சமச்சீர் பாடத்திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புத்தகங்களின் அடிப்படையில் உடனடியாக சமச்சீர் கல்வியை அமல்படுத்திட தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் தமிழக மாணவர்களின் சார்பாக வேண்டிக் கேட்டுக்கொள்கின்றோம்.
இவண்
க. இசக்கியப்பன்,
மாநில அமைப்புச் செயலாளர்.
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்.
.
- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
19.7.11
சமச்சீர் கல்வி – தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
ஓய்வூதியம் பெறும், அரசு ஊழியர்களின் திருமணமாகாத, விவாகரத்தான, விதவை மகள்களுக்கு, வாழ்நாள் முழுவதும், குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்பட...
-
"அரசு முடிவெடுக்காததால, பள்ளி மாணவர்களுக்கு தான் பாதிப்பாம் வே...'' என்றபடி, பெஞ்சில் வந்து அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி. ...
-
ஜாக்டோ-ஜியோ’ அமைப்பு சார்பில், புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும். வரையறு...
-
1. அறிவியல் மையங்கள், கண்காட்சி ஆகியவை அகச் சிந்தனையை வளர்க்கும் சில வழிகள் என்று கூறியவர் - கூவர். 2. மாணவனின் சிந்தனை வினாவிற்கான விடைகள...
-
வேலூர் மாவட்டம் கணியம்பாடி உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஆசீர்வாதம். இவர் தலைமை ஆசிரியராக இருந்தபோது, படிக்காத மாணவர்கள் பெயரில் ஏராளமானோருக்க...
-
1. குமாரப் பருவத்தில் நடத்தையை பெருமளவு நிர்ணயிப்பது - ஒப்பார் குழு 2. குழந்தைகளின் இரண்டாம் பிறப்பு எனப்படுவது - குமாரப்பருவம் 3. ஸ்கீமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக