- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
30.6.12
பள்ளிகளில் சாதி சான்றிதழ் வினியோகிக்க மாணவர்களிடம் ரூ.20ல் இருந்து ரூ.100 வரை கட்டணம் வசூல்
பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்கள் வினியோகிக்க எந்த கட்டணமும் கிடையாது. கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குமரி மாவட்ட கலெக்டர் எச்சரித்துள்ளார்.
குமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர் கூட்டம் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று (29ம்தேதி) நடந்தது. கலெக்டர் நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, மீன்வளத்துறை உதவி இயக்குனர் ரூபர்ட் ஜோதி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடலோர கிராம சாலைகள் மேம்பாடு, போக்குவரத்து வசதி, கடலரிப்பு தடுப்பு சுவர், தூண்டில் வளைவு, நல வாரிய பணிகள் உள்ளிட்டவை குறித்து மீனவர்கள் கேட்ட கேள்விகளுக்கு, அதிகாரிகள் பதில் அளித்தனர்.
கூட்டத்தில் மீனவர்கள் பேசியதாவது:
தமிழக அரசு பள்ளிகளிலேயே மாணவ, மாணவிகளுக்கு சாதி சான்றிதழ், வருமான வரி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஆனால் இது பற்றி விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவிகளிடம் ரூ.20 முதல் ரூ.100 வரை வசூலிக்கிறார்கள். அரசு இலவசமாக கொடுக்கப் படும் என அறிவித்துள்ளது. அப்படி இருந்தும் பள்ளிகளில் வசூல் வேட்டை நடப்பது ஏன்? இதை கலெக்டர் தடுக்க வேண்டும்.
அப்போது பேசிய கலெக்டர் நாகராஜன், பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்க எந்த வித கட்டணமும் கிடையாது. அப்படி கட்ட ணம் வசூலித்து இருந் தால் அவற்றை திருப்பி கொடுக்க வேண்டும். கல்வி அதிகாரிகள் இதை கண்காணிக்க வேண்டும் என்றார்.
நன்றி:

இடைநிலை ஆசிரியர் பதவியுயர்வு கலந்தாய்வு ஜூலை 30இல் நடைபெறுகிறது
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்பதவியுயர்வு கலந்தாய்வு ஜூலை 30இல் நடைபெறுகிறது. பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் ஜூலை 13-ந் தேதி தொடங்குகிறது
பணிநிரவல் கவுன்சிலிங்
1. ஜுலை 13 மற்றும் 14-ந் தேதி (வெள்ளி, சனி) - மாவட்டத்திற்குள் பணிநிரவல் (அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும்)
2. 16 மற்றும் 17-ந் தேதி (திங்கள், செவ்வாய்) - மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநிரவல்
இடமாறுதல் கவுன்சிலிங்
3. 23-ந் தேதி (திங்கள்) - இடமாறுதல் கவுன்சிலிங் (அதே மாவட்டம்- அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களும்)
4. 24-ந் தேதி (செவ்வாய்) - இடமாறுதல் கவுன்சிலிங் (வெவ்வேறு மாவட்டம்-அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களும்)
5. 27-ந் தேதி (வெள்ளி) - ஆசிரியர் பயிற்றுனர் பட்டதாரி ஆசிரியராக பணிமாறுதல்
இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்
6. 30-ந் தேதி (திங்கள்) - பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) - ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்கள்
.

தலைப்புகள்:
அறிவிப்புகள்,
ஆசிரியர் இடமாறுதல்,
பதவி உயர்வு
28.6.12
பள்ளி மாணவர்களுக்கு கணிதம் இனி, இனிக்கும்: புதிய வழிகாட்டுகிறார் கோவை ஆசிரியர்
"கணக்கு பாடமா... ஆளை விடுங்க...' என, ஓட்டம் பிடிக்கும் மாணவரா நீங்கள்? பரவாயில்லை. இதற்கு காரணம் நீங்கள் அல்ல. கணக்கு பாடம் கற்பிக்கும் உங்கள் ஆசிரியர்தான்'' என்கிறார், கோவையைச் சேர்ந்த கணித ஆசிரியர் உமாதாணு. கணித பாடத்தை எளிய முறையில் கற்பிக்க உதவும் சில வழிமுறைகளை வகுத்துள்ள இவர், தமிழக பள்ளிகளில் இவற்றை கற்பிக்க வாய்ப்பு கேட்டு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கோவை, வடவள்ளியைச் சேர்ந்தவர் உமாதாணு. ஓய்வு பெற்ற கணித ஆசிரியரான இவர், "மனிதநேய பேரவை' எனும் அமைப்பின் பொதுச் செயலராக இருந்து, சமுதாய சேவைகள் புரிந்து வருகிறார். "இன்றைய பள்ளி ஆசிரியர்கள் கணித பாடத்தை முறையாக கற்பிப்பதில்லை' என ஆதங்கப்படும் இவர், தனது, 35 ஆண்டு கால அனுபவத்தை வீணாக்காமல், கணித பாடங்களை கற்பிக்க உதவும் சில எளிய வழிமுறைகளை வடிவமைத்துள்ளார்.
இது குறித்து உமாதாணு கூறியதாவது: அனைத்து பள்ளி மாணவர்களும், "ஜியாமெட்ரிக் பாக்ஸ்' பயன்படுத்துகின்றனர். அதில் முக்கோண வடிவில் உள்ள "Set Square' (மூலை மட்டங்கள்) எதற்கு பயன்படுத்தப்படுகிறது என்பது பெரும்பாலான மாணவர்களுக்கு தெரியாது. ஏனென்றால், இது குறித்து ஆசிரியர்கள் விளக்குவதில்லை. இந்த மூலை மட்டங்களை பயன்படுத்தி, நுணுக்கமான பல கோணங்களை (Angle) அமைப்பது எப்படி என்பதை ஆய்வு செய்து, தீர்வு கண்டுள்ளேன். இன்ஜினியரிங், பாலிடெக்னிக் படிப்புகளில் சேரும்போது மூலை மட்டங்களின் உபயோகத்தை தவிர்க்க முடியாது. பள்ளியில் இது குறித்து எதுவுமே தெரியாத மாணவர்கள், கல்லூரியில்தான் முதல் முறையாக தெரிந்து கொள்கின்றனர். பள்ளி படிப்பின்போதே தெரிந்து கொண்டால் கணித பாடம் எளிதாகி விடும். உருளை (Cylinder), கூம்பு (Cone), கோளம் (Sphere), அரைக்கோளம் (Hemisphere) ஆகியவற்றின் கன அளவு, வளைபரப்பு, மொத்தப்பரப்பு ஆகியவற்றை கணக்கிட பயன்படும் சூத்திரங்களை எளிதாக புரிந்து கொள்ள வசதியாக, குறைந்த செலவில் சில உபகரணங்களை கண்டுபிடித்துள்ளேன். இதை உருவாக்க வெறும், 10 ரூபாய் போதும். இதை பயன்படுத்தி படித்தால், சூத்திரங்களை மனப்பாடம் செய்யத் தேவையில்லை. இந்த உபகரணங்களை மனக்கண்ணில் கொண்டு வந்தாலே, சூத்திரம் நினைவுக்கு வந்து விடும்.
அல்ஜிப்ரா பகுதியில் இருபடி கோவைகளை காரணிப்படுத்துதல், கணித பாடத்தில் தவிர்க்க முடியாத ஒரு பகுதி. ஒன்பதாம் வகுப்பில் காரணிப்படுத்துதல் பாடம் துவங்குகிறது. எவ்வளவு பெரிய எண்களாக இருந்தாலும், அதன் காரணிகளை கண்டுபிடிக்க சுலபமான முறையை உருவாக்கியுள்ளேன். உதாரணத்துக்கு, இரு எண்களின் பெருக்குத் தொகை, 4032ம் கூட்டுத் தொகை, 16ம் இருந்தால், இதன் காரணிகள் எவை? என்ற கேள்வி தேர்வில் கேட்கப்பட்டால், தற்போது கற்றுத்தரப்படும் முறையின்படி விடையளிக்க அதிக நேரம் தேவை. அதற்கு பதிலாக, மிகச்சிறிய எண்ணால் ஒரு பக்கம் வகுத்தும், அடுத்த பக்கம் பெருக்கியும் வந்தால், இரண்டே நிமிடத்தில் விடை கிடைத்து விடும். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காரணிகளை எளிதாக கண்டுபிடிக்கும் இந்த முறையை தெரிந்து கொண்டால், சமச்சீர் கல்வி கணித பாடத்தை மட்டுமல்ல, வேலைக்கான போட்டித் தேர்வுகளையும் எளிதாக கையாள முடியும். இவ்வாறு, உமாதாணு கூறினார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி மாவட்டங்களிலும் ஒரு நாள் பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்து, பட்டதாரி கணித ஆசிரியர்களுக்கு கருத்தாளராக இருந்து பயிற்சி அளிக்க உமாதாணு தயாராக உள்ளார். மாவட்டத்துக்கு மூன்று கணித ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களின் வாயிலாக தமிழகம் முழுவதும் உள்ள கணித ஆசிரியர்களுக்கு இந்த எளியமுறை வழிமுறைகளை சென்றடைய செய்யலாம் என்பதே இவரது திட்டம். தமிழக முதல்வர் அனுமதித்தால் மாணவர்களின் கணித திறன் மேம்படும்.

இட மாறுதல் கலந்தாய்வு நடைபெறாது என்ற அச்சம் தேவையில்லை.
உயர் / மேல் நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடத்துடன் கூடிய பணியிட மாறுதல்(Deployment) செய்யபட்ட பின்பு இடைநிலை ஆசிரியர்கள் சிறப்பாசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும். ஜூலை 15-25ம் தேதிக்குள் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தி முடித்திடவும் பள்ளிக் கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் க. இசக்கியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இடைநிலை ஆசிரியர்கள் சிறப்பாசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்படவில்லை. இதனால் உயர் / மேல் நிலைப்பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.
பல்வேறு உயர் / மேல் நிலைப்பள்ளிகளில் ஒரே பாடத்திற்கு தேவைக்கு அதிகமான பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். வேறு சில பள்ளிகளில், குறிப்பிட்ட பாடங்களுக்கு ஆசிரியர் இல்லை. தமிழக பள்ளிக் கல்வித்துறை 32 வருவாய் மாவட்டங்களிலும் உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை 2012 மே மாதத்தில் கணக்கெடுத்துள்ளது. ஒரே பள்ளியில் பணியாற்றும் கூடுதல் பட்டதாரி ஆசிரியர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு தேவையின் அடிப்படையில் பணிமாறுதல் செய்திட உத்தேசித்துள்ளது. உதாரணமாக, ஒரு பள்ளியில் வரலாறு பாடம் நடத்த தேவைக்கு அதிகமாக இரண்டு ஆசிரியர்கள் இருந்தால், அதில் ஒருவர், வரலாறு ஆசிரியர் இல்லாத பள்ளிக்கு பணியிடத்துடன் கூடிய பணியிட மாறுதல்(Deployment) செய்யப்படுவார். இதுபோல பணியிட மாறுதல் செய்த பின், காலியாக உள்ள இடங்களுக்கு மாறுதல் கவுன்சிலிங் நடக்கும்.
பெரும்பான்மையான மாவட்டங்களில் இந்தப் பணிகள் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலமாக நிறைவடைந்துள்ளது. சில மாவட்டங்களில் பள்ளிகளில் குறைவான தேவையே இருப்பதால் இப்பணி முழுமை அடையவில்லை. வருகிற 28, 29-ம் தேதி நடைபெறும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் ஏற்படும் காலிப்பணியிடம் மற்றும் ஜூலை 11-ம் தேதி நடைபெறும் பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெறுவதால் ஏற்படும் காலிப்பணியிடம் இவற்றை கணக்கிட்டு கூடுதல் பட்டதாரி ஆசிரியர் அனைவரும் அந்தந்த மாவட்டங்களிலேயே பணி நிரவல் செய்யப்படுவர் என பள்ளிக்கல்வி இணை இயக்ககம் (பணியாளர் தொகுதி) தகவல் தெரிவித்துள்ளது.
வெளி மாவட்டத்திற்கு எந்தவொரு பட்டதாரி ஆசிரியரும், இடைநிலை ஆசிரியரும் மாறுதல் செய்யப்படமாட்டார்கள்.
இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஜூலை 15-25ம் தேதிக்குள் நடத்தி முடித்திடவும் பள்ளிக்கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது. எனவே பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு, இட மாறுதல் கலந்தாய்வு நடைபெறாது என்ற அச்சம் தேவையில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கல்வித் துறை செய்திகள்
27.6.12
26.6.12
23.6.12
22.6.12
புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் 2012 - அரசாணை
அரசு ஊழியர்களுக்கான, புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த, "யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ்' நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், பழைய மற்றும் புதிய காப்பீட்டுத் திட்டத்திற்கு இடைப்பட்ட காலத்தில், மருத்துவ காப்பீட்டிற்கான இழப்பீடுகளை பெறுவதற்கான வழிமுறைகளையும் அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு, மருத்துவ சிகிச்சைக்காக நான்கு ஆண்டு காலத்திற்கு, நான்கு லட்சம் ரூபாய் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கான, காப்பீடு வழங்கும் புதிய நிறுவனத்தை தேர்வு செய்ய, தேசிய அளவில் ஒப்பந்தம் கோரப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம், 27ம் தேதி, வெளிப்படையான, "டெண்டர் நோட்டீஸ்' வெளியிடப்பட்டது. தொடர்ந்து, ஒப்பந்தத்தை இறுதி செய்யும் குழு, பொதுத்துறை மருத்துவ காப்பீட்டு நிறுவனம் ஒன்றை தேர்வு செய்து, தமிழக நிதித்துறையின் ஒப்புதலுக்கு பரிந்துரைத்தது.
புதிய நிறுவனம் தேர்வு: பரிந்துரையை பரிசீலித்த தமிழக அரசு, "தி யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிட்" நிறுவனத்தை, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமாக தேர்வு செய்துள்ளது. ஏற்கனவே, அமலில் உள்ள மருத்துவ காப்பீட்டு திட்டம், கடந்த 2008ம் ஆண்டு, ஜூலை 11 முதல் துவக்கப்பட்டு, நான்கு ஆண்டுகள் செயல்படுத்தப்பட்டு, இம்மாதம் 10ம் தேதியுடன், முடிவடைந்துள்ளது. புதிய திட்டம், வரும் ஜூலை முதல் தேதி முதல், துவக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.
இடைப்பட்ட காலத்திற்கும் இழப்பீடு: இதற்கிடையில், முதல் திட்டத்திற்கும், புதிய திட்டத்திற்கும் இடைப்பட்ட, அதாவது, இம்மாதம் 11ம் தேதிக்கும், 30ம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்திற்கான, இழப்பீடும் வழங்கப்படுகிறது. இந்த இழப்பீட்டிற்கான தொகையையும், தமிழக அரசு தற்போது அளித்துள்ளது. தொடர்ந்து, இதற்கான சில வழிமுறைகளையும் தமிழக அரசு வகுத்துள்ளது.
இதன் படி,

- தலைமைச் செயலக ஊழியர்களுக்கு, சம்பந்தப்பட்ட துறைகளின் செயலர்கள், சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு, அந்தந்த துறைகளின் தலைவர்கள், சென்னை தவிர, பிற மாவட்டங்களில், மாவட்ட கலெக்டர்கள், இதற்கான இழப்பீட்டு அனுமதி வழங்கும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
- இழப்பீடு கோரும் அரசு ஊழியர்கள், அதற்கான உண்மை ஆவணங்களை விண்ணப்பத்துடன், அனுமதி வழங்கும் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும்; அதிகாரிகள் அந்த விண்ணப்பங்களை சென்னை மாவட்டத்தில், மருத்துவ கல்வி இயக்குனருக்கும், மற்ற மாவட்டங்களாக இருப்பின், மாவட்ட மருத்துவ சேவை இணை இயக்குனர்களுக்கும் அனுப்பி வைப்பர்.
- விண்ணப்பத்தை பெறும் மருத்துவத் துறை அதிகாரிகள், அவற்றை முழுமையாக ஆய்வு செய்து, உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க ஏற்பாடு செய்வார். இதில், அதிகபட்சமாக இரண்டு லட்சம் ரூபாய் வரை இழப்பீடு பெற முடியும்.
ரூ.5 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு தற்போது, புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்திற்காக, ஐந்து கோடி ரூபாயை, முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னையில் உள்ள கருவூல மற்றும் கணக்கு பிரிவு கமிஷனர், தேவையான தொகையை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஒதுக்கீடு செய்வார். மேலும், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழங்கள், மாநில நிறுவனங்களில் பணியாற்றுவோரும் புதிய காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான அரசாணையை தமிழக அரசின் நிதித்துறை வெளியிட்டுள்ளது.
G.O.Ms.No.221, Finance (Salaries) Department, dated 20-06-2012

21.6.12
ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை, சிறப்பு நிலை: கூர்ந்தாய்வு முகாம் ஜூன் 27 தொடக்கம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தேர்வுநிலை, சிறப்பு நிலை வழங்குவதற்கான கூர்ந்தாய்வு சிறப்பு முகாம் நாகர்கோவிலில் ஜூன் 27-ம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தேர்வுநிலை, சிறப்புநிலை வழங்குவதற்கான கருத்துருக்களை விதிகளின்படி கூர்ந்தாய்வு செய்து உடனுக்குடன் அந்த இடத்திலேயே ஆணைகள் வழங்கப்படும். இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்கள் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகின்றன.

- குழித்துறை கல்வி மாவட்டத்துக்கான முகாம் ஜூன் 27ஆம் தேதியும்,
- தக்கலை கல்வி மாவட்டத்துக்கான முகாம் 28-ம் தேதியும்,
- நாகர்கோவில் கல்வி மாவட்டத்துக்கான முகாம் 29 ஆம் தேதியும்
நன்றி:
தலைப்புகள்:
அறிவிப்புகள்,
கல்வித் துறை செய்திகள்,
நாளிதழ் செய்திகள்
டி.இ.டி., தேர்வு : பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் ஜூலை 12ம் தேதி, ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்க இருக்கிறது. அன்றைய தினம் சி.பி.எஸ்.இ., பள்ளி உட்பட அனைத்து பள்ளிகளுக்கும், விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி, தேர்ச்சி பெற வேண்டும். ஆசிரியர் பணியில் சேர இருப்பவர்களும், இந்த தேர்வை எழுதி, தேர்ச்சி பெற வேண்டும். இதற்கான தகுதித் தேர்வு, வரும், ஜூலை 12ம் தேதி, 1,040 மையங்களில் நடக்கிறது. இதில் ஆசிரியர் பணியில் இருப்பவர்களும், பணிக்காக காத்திருப்பவர்களும் சேர்த்து, ஏறத்தாழ 6 லட்சத்து 56 ஆயிரம் பேர் எழுத உள்ளனர். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் பொதுவாக போட்டித் தேர்வுகள் நடைபெறும். இந்த நாட்களில், மற்ற போட்டித் தேர்வுகள் நடைபெற இருப்பதால், வேறு வழியில்லாமல் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
பணியில் இருக்கும் ஆசிரியர்கள், இந்தத் தேர்வில் அதிகளவில் பங்கேற்க இருப்பதால், வசதியாக அன்று ஒருநாள், சி.பி.எஸ்.இ., உட்பட அனைத்து பள்ளிகளுக்கும், விடுமுறை அளித்து உத்தரவிட இருப்பதாக, நேற்று இரவு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கு பதிலாக, வேறொரு நாளில் இந்த வேலை நாள் ஈடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு,
நாளிதழ் செய்திகள்,
TET
பெண் வாரிசுகளுக்கு திருமணமானாலும் கருணை அடிப்படையில் பணி : விதிமுறைகளைத் தளர்த்தியது அரசு
பெண் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் பணி நியமனம் தொடர்பான விதிமுறைகளை வகுத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
"பணியில் இருக்கும் போது, மரணமடைந்த அரசு ஊழியரின் நெருங்கிய உறவினர்கள் என்று குறிப்பிடப்பட்ட நபர்களில், திருமணமாகாத மகள் என்ற நிலையில், பணி நியமனம் கோரி விண்ணப்பம் அளித்து, பணி நியமனம் வழங்கப்படுவதற்கு முன்னதாகவே திருமணம் செய்து கொண்டவர்கள், கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு உரிய தகுதிகளை நிறைவு செய்யும் பட்சத்தில், பணி நியமனம் வழங்கலாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசாணை எண்: 96 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை நாள்: 18-06-2012

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தமிழக அரசால் வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம் அறிவிப்பு
.
ரூ.25 லட்சமாக உயர்ந்தது வீட்டுக்கடன் உச்சவரம்பு
அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்காக பெறும் முன்பணத்தொகை உச்சவரம்பு, 15 லட்சத்திலிருந்து 25 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில், தற்போது அரசு ஊழியர்கள் சொந்தமாக வீடு கட்டும்போது, அதற்காக குறைந்த வட்டியில், எளிய தவணையில் செலுத்தும் வகையில் முன்பணம் கடனாக வழங்கப்பட்டு வருகிறது. இப்போதைய நிலையில், அரசு ஊழியர்களுக்கு, ஆறு முதல் 15 லட்ச ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இதேபோல், ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., போன்ற அகில இந்திய பணி அதிகாரிகளுக்கு, 7.5லிருந்து 25 லட்ச ரூபாய் வரை, இக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதில், கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இத்தொகை வீடு கட்ட போதுமானதாக இல்லை. எனவே, இதற்கான உச்சவரம்பை அதிகரிக்க வேண்டுமென, அரசு ஊழியர்கள் தரப்பில், தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
அரசு அறிவிப்பு: இந்நிலையில், இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், அரசு ஊழியர்களுக்கான வீட்டுக்கடன் முன்பணத்தொகைக்கான உச்சவரம்பு, 15லிருந்து 25 லட்ச ரூபாயாக அதிகரிக்கப்படும் என்றும், நடப்பு நிதி ஆண்டின் வரவு-செலவு திட்டத்தில், 247 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.இது தொடர்பாக, நிர்வாக ரீதியான அரசாணையை, வீட்டுவசதித் துறை செயலர் பணிந்திர ரெட்டி நேற்று பிறப்பித்தார்.
அரசாணை விவரம் : பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, அரசு ஊழியர்கள் வீடு கட்ட கடனாக பெறும், முன்பணத்தொகைக்கான உச்சவரம்பு, 15லிருந்து 25 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல், அகில இந்திய பணி பிரிவு அதிகாரிகளுக்கான உச்சவரம்பு, 25லிருந்து 40 லட்ச ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்த உயர்வு, இந்த ஆண்டு, ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து அமலாக்கப்படுகிறது. இது தொடர்பாக, ஏற்கனவே உள்ள நிபந்தனைகள் அப்படியே தொடரும். அதே சமயத்தில், நடப்பு நிதி ஆண்டில் இவ்வசதியை பெறுவோர் செலுத்த வேண்டிய வட்டி விகிதங்கள் குறித்து, நிதித்துறை மூலம் தனியாக அறிவிப்பு வெளியிடப்படும்.
இவ்வாறு, அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
G.O.(Ms).No.135 HOUSING AND URBAN DEVELOPMENT (HBA) DEPARTMENT Dated.20.06.2012

ஆட்டம், பாட்டம் இன்றி இணையதளம் வழியில் கவுன்சிலிங் : எஸ்.சி.இ.ஆர்.டி., அசத்தல்
பணியிட மாறுதல், பதவி உயர்வு, "கவுன்சிலிங்' என்றாலே, பெரிய ஏற்பாடுகளும், அதிகாரிகள் வருவதும், போவதுமாக ஒரே பரபரப்பு போன்ற காட்சிகள் கல்வித்துறையில் தென்படும். இதற்கு மாறாக, சத்தமே இல்லாமல், காசை கரியாக்காமல், இணையதளம் மூலம் அமைதியாக நேற்று முதுநிலை விரிவுரையாளர் பதவி உயர்வு, "கவுன்சிலிங்'கை நடத்தியது.
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், விரிவுரையாளராக பணிபுரிந்து வருபவர்களில், 33 பேருக்கு, முதுநிலை விரிவுரையாளர் பதவி உயர்வு வழங்க, அரசு உத்தரவிட்டது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 75 முதுநிலை விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிட பட்டியல், எஸ்.சி.இ.ஆர்.டி., இணையதளத்தில், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
பட்டியல்: பதவி உயர்வு பட்டியலில் உள்ள 33 பேரிடமும், வரிசையாக தாங்கள் விரும்பும் 5 இடங்களை குறிப்பிட்டு, இணையதளத்தில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, நேற்று காலை 33 பேரும், தலா 5 இடங்களை, குறிப்பிட்டு பதிவு செய்தனர். இது முடிந்ததும், பணிமூப்பு முடிப்படையில், வரிசையாக ஒவ்வொரும், தாங்கள் விரும்பிய இடங்களை தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி, ஒவ்வொருவராக, தாங்கள் விரும்பும் இடங்களை தேர்வு செய்தனர். அனைத்துப் பணிகளும், ஒரு மணி நேரத்திற்குள் முடிந்தன. சென்னையில், தலைமையிடத்தில் இருந்தபடி, அனைத்துப் பணிகளையும், எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் தேவராஜன் பார்வையிட்டார்.
பதவி உயர்வு இடங்களை தேர்வு செய்து முடித்ததும், இதற்கான உத்தரவுகளும் இணையதளம் வழியாக பிறப்பிக்கப்பட்டன. ஒவ்வொருவரும், அவர்களுக்கான உத்தரவை, "டவுன்-லோட்' செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டனர். பேப்பர் இல்லாமல், போக்குவரத்து செலவு இல்லாமல், டீ, காபி, சாப்பாடு போன்ற எந்தச் செலவும் இல்லாமல், ஒரு மணி நேரத்தில் இணையதளம் வழியாக, அமைதியாக, பதவி உயர்வு, "கவுன்சிலிங்"கை நடத்தி முடித்த விவகாரம், கல்வித்துறையில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, இயக்குனர் தேவராஜன் கூறும்போது, ""வழக்கமாக, அனைவரையும் சென்னைக்கு அழைத்து, "கவுன்சிலிங்' நடத்தி, உத்தரவுகள் வழங்கப்படும். இதனால், வீணாக போக்குவரத்துச் செலவு உட்பட பல்வேறு செலவுகள் ஏற்பட்டு வந்தது. ஆசிரியர்களின் பணிகளும் பாதிக்கப்பட்டது. தற்போது, எந்த பாதிப்பும் இல்லாமல், செலவுகளும் இல்லாமல் பதவி உயர்வு, "கவுன்சிலிங்'கை நடத்தியுள்ளோம்'' என்றார்.
மற்ற துறைகளும் கடைபிடிக்குமா?
இதேபோன்ற நடைமுறையை, தொடக்க கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறைகள் கடைபிடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், பல ஆயிரம் பேர் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கான, "கவுன்சிலிங்'கை, இணையதளம் வழியாக நடத்துவது சாத்தியமில்லை எனவும், இதனால், பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் வரும் எனவும், கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பள்ளி மாணவர்களுக்கு கட்டணமில்லா கையடக்க பஸ் பயண அட்டை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
பள்ளி மாணவ, மாணவியருக்கு கையடக்க பஸ் பயண அட்டை வழங்குதல், புதிய வழித்தடங்கள் மற்றும் 560 புதிய பஸ்களின் இயக்கத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்களுக்கு கட்டணமில்லா கையடக்க பஸ் பயண அட்டை வழங்கும் திட்டத்தைத் துவக்கிவைத்து, மாணவர்களுக்கு பயண அட்டையை வழங்கினார்.

அரசின் செய்திக் குறிப்பு,
புகைப்படங்கள்,
விலையில்லா பொருள்கள்
19.6.12
இடைநிலை ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தடை நீக்கம் : ஐகோர்ட் உத்தரவு
இடைநிலை ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் பங்கேற்க வேண்டும் என்ற ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பிற்கு விதித்த தடையை நீக்கி, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி ஜஸ்டின் பிரபாகர் தாக்கல் செய்த மனு:
நான் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளேன். சுப்ரீம் கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து, மாநிலப் பதிவு மூப்பு அடிப்படையில், இடை நிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். தமிழகப் பள்ளிக் கல்வித் துறை, 2011 நவ., 15ல், அரசாணை - 181 வெளியிட்டது. அதில், "பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு அடிப்படையில் நியமிக்கப்படுவர். இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில், மாநிலப் பதிவு மூப்பு தொடர்ந்து பின்பற்றப்படும்' என தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம், இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு தகுதித் தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை.
ஆசிரியர் தேர்வு வாரியம், 2012, மார்ச் 7ல், "அரசு உதவி பெறும் மற்றும் அரசு உதவி பெறாத பள்ளிகளில், 2010 ஆக., 23க்கு பின் இடைநிலை அல்லது பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தால், அவர்கள் தகுதித்தேர்வு எழுத வேண்டும்' என, அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது, ஏற்கனவே வெளியான அரசாணை, 181க்கு முரணானது. இடைநிலை ஆசிரியர் பணிக்கு, தகுதித்தேர்வு எழுத வேண்டும் என்ற தேர்வு வாரிய அறிவிப்பை ரத்து செய்ய, உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், திருநெல்வேலி புதூரை சேர்ந்த ஜெயக்குமார் மற்றொரு மனு தாக்கல் செய்தார்.இம்மனுக்கள், ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, தனி நீதிபதி, ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பிற்கு, இடைக்காலத் தடை விதித்தார்.
நேற்று மனு, நீதிபதி கே.வெங்கட்ராமன் முன்னிலையில், விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்ல பாண்டியன், சிறப்பு வழக்கறிஞர் சம்பத்குமார், அரசு வழக்கறிஞர் பாரதி ஆஜராகினர்.
நீதிபதி உத்தரவு:
தடையால், இடைநிலை ஆசிரியர் தேர்வு நடைமுறைகள் பாதிக்கப்படும். அரசின் அறிவிப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்படுகிறது. இடைநிலை ஆசிரியர் தேர்வு நடைமுறைகளை வழக்கம்போல் மேற்கொள்ளலாம். மனுதாரர்களை பொறுத்தவரை, அவர்களின் மனுக்களை, அரசு பரிசீலிக்க வேண்டும். அவர்களுக்காக, இரண்டு இடங்களை காலியாக வைத்திருக்க வேண்டும். விசாரணை ஜூலை 6க்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

நீதி மன்ற தீர்ப்புகள்
17.6.12
பள்ளி மாணவர்களுக்கு 10 நாளில் இலவச பஸ் பாஸ்
பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் விநியோகம் அடுத்த 10 நாள்களில் தொடங்கப்படும் என சாலைப் போக்குவரத்து நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு இலவச பஸ் பாஸ் வழங்கி வருகிறது. இதனால், வெகு தொலைவிலிருந்து பள்ளிகளுக்குச் செல்லும் ஏழை மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் ஜூன் 1-ம் தேதி திறக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குமேல் ஆகிவிட்ட நிலையில், இன்னும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படவில்லை. பஸ் கட்டணங்களும் உயர்ந்துவிட்ட நிலையில், ஏழை மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்தி பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிக கட்டணம் செலுத்தி பயணிக்க முடியாத ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வெகு தொலைவு நடந்தே செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது என புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மாநகரப் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது:
மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் பணிகளை இம்முறை சென்னை தரமணியில் உள்ள சாலைப் போக்குவரத்து நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதுவரை சென்னையில் மட்டும் இருந்தவந்த ஸ்மார்ட் கார்டு திட்டம் இம்முறை தமிழகம் முழுவதும் அறிமுகம் செய்யப்படுவதால்தான், இம்முறை தாமதமாகி வருகிறது. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் சனிக்கிழமைதான் திறக்கப்பட்டன. இதிலிருந்து ஒப்பந்ததாரர் தேர்வு செய்ப்பட்டு பணிகள் ஒப்படைக்கப்படும் என்றார்.
இதுகுறித்து சாலைப் போக்குவரத்து நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறியது:
மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ்கள் இம்முறை தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு வடிவில் கொடுக்கப்பட உள்ளன. இந்த ஸ்மார்ட் கார்டு தயாரிப்புப் பணியை ஒப்படைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டு, அவற்றை பரிசீலனை செய்யும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்தப் பணிகள் முடிந்து, பணிகள் ஒப்பந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். இதில் எந்தவித தாமதமும் இல்லை. பெரும்பாலும் பள்ளிகள் தொடங்கி மூன்றாம் வாரத்துக்குப் பின்னரே இலவச பாஸ்கள் வழங்கப்படும். இதுபோல், இம்முறையும் அடுத்த 10 நாள்களில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வடிவிலான இலவச பஸ் பாஸ்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டு விடும் என்றார் அவர்.

கல்வி,
நாளிதழ் செய்திகள்,
விலையில்லா பொருள்கள்
மாற்றுத் திறனாளிகளுக்கு பதவி உயர்வு ஒதுக்கீடு கோரிய மனு தள்ளுபடி
அரசுப் பணிகளில் பதவி உயர்வின் போது, மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சதவீத ஒதுக்கீடு கோரிய மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
தென் ஆற்காடு, வள்ளலார் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கத் தலைவர் சண்முகம், செயலர் துரைசாமி ஆகியோர், தாக்கல் செய்த மனுவில், "பதவி உயர்வில், மாற்றுத் திறனாளிகளுக்கு, மூன்று சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும். குறிப்பிட்ட ஆண்டில், தகுதி வாய்ந்த ஊழியர் கிடைக்கவில்லை என்றால், அடுத்த மூன்றாண்டுகளுக்கு, அந்த காலியிடங்களை கொண்டு செல்ல வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.
மனுவை, நீதிபதி சந்துரு விசாரித்தார். அரசு தரப்பில், கூடுதல் அரசு பிளீடர் திக் விஜய் பாண்டியன் ஆஜரானார்.
மனுவை விசாரித்த, நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு:
அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்த பதிலில், "அரசுப் பணிகளில், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகிறது. பதவி உயர்வில் மூன்று சதவீதங்களை ஒதுக்க வேண்டும் என, அரசின் கொள்கை எதுவும் இல்லை. சீனியாரிட்டி, இடமாற்றம் மூலம் பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு குறித்த கொள்கை, தற்போது அரசிடம் இல்லை. தகுந்த நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் சம வாய்ப்பு, உரிமைகள் பாதுகாப்பு சட்டப்படி, பணிகளை அடையாளம் கண்ட பின் தான், இடஒதுக்கீடு அளிக்கப்படும். முதலில் நியமிப்பதற்கு தான் இந்த இடஒதுக்கீடே தவிர, பதவி உயர்வுக்கு இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்.

16.6.12
எஸ்.எஸ்.ஏ. கருத்தாளர்கள் வேறு பணிக்கு மாத்திக்கிட்டு போயிடலாமான்னு யோசிக்கிறாங்க!
"சர்வ சிக்ஷா அபியான் - எஸ்.எஸ்.ஏ., - எனும் திட்ட அலுவலர்கள், வேறு பணிக்கு மாத்திக்கிட்டு போயிடலா மான்னு யோசிக்கிறாங்க பா...'' என, கடைசி தகவலைக் கூறினார் அன்வர்பாய்.
""ஏன் வே... இந்த திட்டம் தான், நாடு முழுக்க, "ஓஹோ'ன்னு, கொடி கட்டிப் பறக்குதே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.
""திட்டம் நல்லது தான்... அதுல இருக்கற கருத்தாளர்களுக்கு, இப்ப, புதுப் பணி ஒண்ணு போட்டிருக்காங்க... நம் மாநிலத்துல முப்பருவ கல்வி முறை சம்பந்தமா, ஆசிரியர்களுக்கு இவங்க தான் பயிற்சி கொடுக்கறாங்க... இதுக்கான ஏற்பாட்டை, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தான் செய்யுது... இதுக்கு, எஸ்.சி.இ.ஆர்.டி.,ன்னு பேரு...""ஆனா, பயிற்சி நடக்குற இடங்கள்ல, குடிநீர், சாப்பாடு, நாற்காலின்னு எந்த அடிப்படை வசதியுமே இல்லியாம்... ஆசிரியர்கள் பசிக்குதுன்னு கேட்டா, கருத்தாளர்கள், சொந்த பணத்தைச் செலவு செய்ய வேண்டி இருக்கு... ரெண்டு திட்ட அதிகாரிகளும் கண்டுக்கறதே இல்லியாம்... அதனால தான், இந்தப் பணியே வேண்டாம், வேறு வேலைக்குப் போயிறலாம்ங்கற மனநிலைல, இந்த கருத்தாளர்கள் இருக்காங்க பா...''
என, மூச்சு விடாமல் கூறி முடித்து எழுந்தார் அன்வர்பாய்; பெஞ்ச் கலைந்தது.
நன்றி:
டீ கடை பெஞ்சு
தலைப்புகள்:
கல்வித் துறை செய்திகள்,
நாளிதழ் செய்திகள்,
SSA
15.6.12
'ஓ.பி.சி. கிரீமிலேயர்' உச்சவரம்பு உயர்வு ஒத்திவைப்பு
கல்வி, வேலைவாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓ.பி.சி.) இட ஒதுக்கீட்டுச் சலுகைகளைத் தொடர்ந்து பெற ஆண்டு வருமானம் அதிகபட்சம் ரூ.4.5 லட்சம் வரை இருக்கலாம் என்ற இப்போதைய வரம்பை ரூ.6 லட்சம் வரையில் உயர்த்துவது என்ற முடிவை மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான குழு வியாழக்கிழமை ஒத்திவைத்தது. இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும்.
சமூக நீதி - அதிகாரமளித்தல் அமைச்சகம் அனுப்பியிருந்த பரிந்துரையில் இந்த ஊதிய உச்சவரம்பு ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்றே கூறியிருந்தது. ஆனால் மத்திய அரசு அந்தப் பரிந்துரையை நிராகரித்தது. அதே சமயம் இந்த உச்சவரம்பு ரூ.6 லட்சமாக உயர்த்தப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. என்ன காரணத்தாலோ இந்த அளவும் ஏற்கப்படவில்லை.
விலைவாசி உயர்வாலும் மக்களின் வாழ்க்கைத்தரச் செலவுகளும் உயர்ந்து வருவதால் இந்த உச்ச வரம்பை ஆண்டுக்கு 12 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று அமைச்சகம் பரிந்துரைத்தது. மத்திய அரசின் வேலைகளிலும் ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்களிலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக ஒதுக்கப்படும் இடங்கள் இந்த வருவாய் உச்ச வரம்பு குறைவாக இருப்பதன் காரணமாக நிரப்பப்படாமலேயே வீணாகின்றன என்பதால் இதை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த உச்ச வரம்பு ரூ.2.5 லட்சமாக இருந்தது 2008-ல் ரூ.4.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. நகர்ப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களாக இருந்தால் அவர்களுடைய அதிகபட்ச குடும்ப வருமானம் ரூ.12 லட்சமாகவும் கிராமப்புறமாக இருந்தால் ரூ.9 லட்சமாகவும் இருக்கலாம் என்று அமைச்சகம் பரிந்துரைக் குறிப்பு அனுப்பியது.
எஸ்.சி. மாணவர்களுக்கு புதிய கல்வி உதவித்தொகை திட்டம்:
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் 9-வது 10-வது வகுப்புகளில் பயிலும்போதே அவர்களுடைய கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திட்டம் தேவை என்று அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பள்ளிக்கூட படிப்புக் கட்டணத்தைச் செலுத்துவதுடன் உயர்ந்துவிட்ட பாடப்புத்தக, நோட்டுப்புத்தகச் செலவுகளையும் கணக்கில் கொண்டு உதவித் தொகையைக் கணிசமாக உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. (அந்தத் தொகை எவ்வளவு என்று அரசின் தகவலில் குறிப்பிடப்படவில்லை).

இதர பிற்பட்ட வகுப்பு(OBC),
நாளிதழ் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு அழகிய புத்தகப்பை, காலணிகள்
ஏற்கனவே அறிவித்தபடி, பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா காலணி மற்றும் புத்தகப் பைகளை வழங்க, ரூ.491 கோடியை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே, விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் மற்றும் சைக்கிள்கள் ஆகியவை மாணவர்ளுக்கு வழங்கப்பட்டு வந்தன. தற்போது, அந்தப் பட்டியலில் புதிதாக, லேப்டாப், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப்பை, கலர் பென்சில், ஜியோமெட்ரி பாக்ஸ் மற்றும் அட்லஸ் ஆகியவை சேர்ந்துள்ளன. காலணிகளும் தற்போது புதிய டிசைன் மற்றும் வண்ணங்களில் வழங்கப்படவுள்ளன. இதனையடுத்து, அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பணியும் தனித்தனி துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காலணி மற்றும் கலர் பென்சில் வழங்கும் பொறுப்பு, தொடக்க கல்வி இயக்குனரகத்திடமும், அட்லஸ் வழங்கும் பொறுப்பு தமிழ்நாடு பாடநூல் கழகத்திடமும் வழங்கப்பட்டுள்ளது. டெண்டர் பணிகளும் நடைபெறுகின்றன.
விலையில்லா காலணிகள் 1 முதல் 10ம் வகுப்பு வரையில் படிக்கும், மொத்தம் 81 லட்சத்து 2 ஆயிரத்து 128 மாணவர்களுக்கு, காலணிகள் வழங்கப்படவுள்ளன. இதற்கு அரசு ஒதுக்கியுள்ள தொகை ரூ.94 கோடியே 76 லட்சம்.
விலையில்லா காலணிகளைப் பொறுத்தவரை, இந்தமுறை ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், ஒட்டுமொத்தமான ஒரு அளவில் தயாரித்து அனைவருக்கும் வழங்கி விடாமல், ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் தனித்தனியே அளவெடுத்து, அதற்கேற்றபடி தயாரித்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
லேசான பழுப்பு நிறம், அடர்த்தியான பழுப்பு நிறம் மற்றும் சாம்பல் நிறம் ஆகிய வண்ணங்களில் காலணிகளை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் படிக்கும் மாணவர்களின் கால் அளவுகள் எடுக்கப்பட்டு, மொத்தமாக, தொடக்கக்கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பப்படும். தமிழகம் முழுவதுமிருந்தும் வரும் அளவுகளை கணக்கிட்டு, அதற்கேற்ப காலணிகள் தயாரிக்க ஆர்டர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தள்ளாடும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம்
தனியார் பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீத ஒதுக்கீடு "கானல் நீராகவே" இருந்து வருவதால் கட்டாய கல்வி உரிமை சட்டம் "தள்ளாடி" வருகிறது.
இதனை கண்காணிக்க உயர் மட்ட குழு அமைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். அகில இந்திய அளவில் அனைவருக்கும் இலவச கல்வி என்று சுதந்திரம் பெறுவதற்கு முன்பே குரல்கள் ஓங்கி ஒலித்தன. கல்வி பெறுவது மக்களின் உரிமை, கல்வி கொடுப்பது அரசின் கடமை என்ற சமூக நீதியின் அடிப்படையில் இக்கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தன.
ஜனநாயக இயக்கங்களின் போராட்டங்கள், சுப்ரீம் கோர்ட் தலையீடு போன்றவற்றினால் இந்தியா சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகளுக்கு பிறகு அனைவருக்கும் இலவச கல்வி என்பது, கட்டாய கல்வி என சட்டமாகியுள்ளது. இதன்படி கடந்த 2010ம் ஆண்டு கட்டாய கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டது.
கல்வி பெறுவது மக்களின் அடிப்படை உரிமை என்று இச்சட்டம் கூறுகிறது. ஆனால் முழுமை பெறாத இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு பல்வேறு தடைகள் உள்ளன. ஆட்சியாளர்களின் உறுதியற்ற நிலை, அதிகாரிகளின் மெத்தன போக்கு, கல்வியை லாப வேட்டடைக்காக மாற்ற துடிக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் என இந்த தடை பட்டியல்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கிறது.
அரசின் நிதி உதவி பெறாத சிறுபான்மை நிறுவனங்கள் நீங்கலாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இச்சட்டம் பொருந்தும். இச்சட்டத்தின்படி பள்ளிகள் ஒவ்வொன்றும் தங்கள் பள்ளியில் மொத்த இடத்தில் 25 சதவீதம் அருகில் உள்ள ஏழை, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகளை சேர்க்க வேண்டும். இக்குழந்தைகளுக்கான கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும். இச்சட்டம் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க உயர் மட்ட குழுவை அரசு நியமிக்க வேண்டும் என இச்சட்ட விதிகள் கூறுகின்றன.
ஆனால் தமிழக அரசு இக்குழுவை நியமிக்காமல் காலம் தாழ்த்துவதாக பல்வேறு அமைப்புகள் குறை கூறுகின்றன. இதனால் தனியார் பள்ளிகள் இதனை கண்டு கொள்ளாதது ஒருபுறமிருக்க, அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை வசூலிக்காமல் பல மடங்கு கட்டணம் வசூலித்து அரசுக்கு சவால் விடுத்து வருகின்றனர். அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள் கட்டாய நன்கொடை என்ற பெயரில் பகல் கொள்ளை அடிப்பதாகவும் பல்வேறு புகார்கள் கூறப்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, கட்டாய கல்வி உரிமை சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். பள்ளிகளில் கட்டாய நன்கொடை என்ற பெயரில் கல்வி கட்டண கொள்ளையை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகள், பெற்றோர் விரும்புகின்றனர்.

ஓய்வூதியதாரர்களுக்கு நேர்காணல் கட்டாயம் கிடையாது; சான்றிதழ் அளித்தால் போதும்: முதன்மைச் செயலர்
"வயது முதிர்ந்தோர் மற்றும் நோயாளிகள், கருவூலக அலுவலகத்துக்கு வந்து நேர்காணலில் பங்கேற்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. இவர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழை பெற்று, கருவூலக அலுவலகத்தில் ஒப்படைத்தால் போதுமானது'' என, நிதித்துறை முதன்மைச் செயலர் சண்முகம் தெரிவித்தார்.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட கருவூலக அலுவலகத்தில், தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலர் சண்முகம், நேற்று, ஆய்வு மேற்கொண்டார். தானியங்கி கருவூலக முறையில், பட்டியல் ஏற்பளிப்பு செய்தல் (ஏ.டி.பி.பி.எஸ்.,) தொடர்பாக, தொழில்நுட்ப நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகளிடம் அவர் விசாரித்தார்.
கருவூலகத்தில் பணம் எடுக்க வரும் அலுவலர்களிடம், பட்டியல் பெறுவது, வங்கிக் கணக்குகளில் பணம் பரிமாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகள் கம்ப்யூட்டர் மயமாக்குதல், மின்-கருவூலக நடைமுறைகள் மற்றும் தகவல் வலையமைப்பு முறைகள், எந்தெந்த பிரிவுகளுக்கு வலையமைப்பின் இணைப்பு முனைகள் வழங்கப்பட்டுள்ளன என்பன குறித்து, துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர், முதன்மைச் செயலர் சண்முகம், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும், தானியங்கி முறையில் கருவூலக பட்டியல் ஏற்பளிப்பு முறை, செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை கருவூலக அலுவலகத்தில் இத்திட்ட செயல்பாடுகள் குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. ஓராண்டு காலத்துக்குள், மாநிலம் முழுவதும், முழுவீச்சில் அமல்படுத்தப்படும். இதன்படி, மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை திட்டத்தை மேற்கொள்ள முடியும். கருவூலக அலுவலகங்களின் அனைத்து பணிகளும், மின்-கருவூலக முறையில், காகித பயன்பாடு இல்லாத வகையில், "ஆன்லைன்' முறையில் கொண்டுவரப்படும்.
தமிழகம் முழுவதும் உள்ள, லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு வங்கிகள் வாயிலாக, இ.சி.எஸ்., முறையில் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இவர்கள் உயிருடன் இருப்பதை உறுதி செய்ய, ஆண்டுக்கு ஒருமுறை, கருவூலக அலுவலகத்துக்கு, நேர்காணலுக்கு வர வேண்டியுள்ளது. இதனால், பல்வேறு சிரமங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. வயது முதிர்ந்தோர் மற்றும் நோயாளிகள், கருவூலக அலுவலகத்துக்கு வந்து, நேர்காணலில் பங்கேற்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. இவர்கள், தாங்கள் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழை பெற்று, கருவூலக அலுவலகத்தில் ஒப்படைத்தால் போதுமானது. ஒய்வூதியதாரர்களுக்கு, "பயோட்மெட்ரிக்' முறையில், ஓய்வூதியம் வழங்கும் முறை, விரைவில் அமல்படுத்தப்படும். அப்போது, இதுபோன்ற சிரமங்களை தவிர்க்க முடியும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
ஆய்வின்போது, மாவட்ட கருவூலக அலுவலர் பூங்கோதை, உதவி கருவூலக அலுவலர்கள் நாகராஜன், சேதுராமன், பாஸ்கரன், சாமிநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

14.6.12
கிரிமிலேயர் உச்சவரம்பு அதிகரிக்கிறது?
மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர்கள் இடம்பெறுவதற்கான ஆண்டு வருமானம் 4.5லட்சத்திலிருந்து 6 லட்சமாக அதிகரிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1993-ம் ஆண்டு மத்திய அரசின் கல்வி நிறுவனம் மற்றும் வேலைவாயப்புகளில் ஓ.பி.சி., பிரிவினர் சேருவதற்கு கிரிமிலேயர் முறை கொண்டுவரப்பட்டது. அப்போது ஆண்டு வருமானம் ஒரு லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் 2004-ம் ஆண்டு இவை 2.5 லட்சமாகவும், தொடர்ந்து 2008-ல் 4.5 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிலவிய விலை குறியீட்டு எண் அடிப்படையில் தற்போது ஆறு லட்சமாக நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நன்றி:
கடந்த 1993-ம் ஆண்டு மத்திய அரசின் கல்வி நிறுவனம் மற்றும் வேலைவாயப்புகளில் ஓ.பி.சி., பிரிவினர் சேருவதற்கு கிரிமிலேயர் முறை கொண்டுவரப்பட்டது. அப்போது ஆண்டு வருமானம் ஒரு லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் 2004-ம் ஆண்டு இவை 2.5 லட்சமாகவும், தொடர்ந்து 2008-ல் 4.5 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிலவிய விலை குறியீட்டு எண் அடிப்படையில் தற்போது ஆறு லட்சமாக நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நன்றி:
தலைப்புகள்:
அறிவிப்புகள்,
இதர பிற்பட்ட வகுப்பு(OBC),
நாளிதழ் செய்திகள்
13.6.12
முப்பருவ கல்வி முறை பயிற்சி: கருத்தாளர்கள் "அதிருப்தி"
பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் முப்பருவ கல்வி முறை மற்றும் கற்றலின் தொடர் மதிப்பீடு தொடர்பான பயிற்சி வகுப்புகளில் திட்டமிடல் இல்லை என, கருத்தாளர்கள் (எஸ்.எஸ்.ஏ., ஆசிரியர் பயிற்றுனர்கள்) அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் முப்பருவ கல்வி முறை மற்றும் கற்றலின் தொடர் மதிப்பீடு குறித்த பயிற்சி முகாம் அரசு மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தப்படுகிறது.
பயிற்சியளிக்கும் கருத்தாளர்கள் சிலர் கூறியதாவது:
இந்த பயிற்சி வகுப்பு நடத்த "பவர் பாயின்ட்' மிக முக்கியம். தேர்வு செய்யப்படும் மையங்களில் இந்த வசதி சரியாக இருப்பதில்லை. படவிளக்க காட்சியுடன் பயிற்சி அளிக்க போராட வேண்டியுள்ளது. விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. இதற்காக பயிற்சி அளிக்கும் கருத்தாளர்களுக்கு பயணப்படியும் வழங்கப்படுவதில்லை. ஒரு மையத்தில் உள்ள பெண் கருத்தாளர்களை முன்னறிவிப்பு இன்றி தொலைவில் உள்ள மற்றொரு மையத்துக்கு உடனடியாக செல்ல உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. பயிற்சி அளிப்பதற்காக உரிய காலஅவகாசம் அளிக்கப்படுவதில்லை
என, கருத்தாளர்கள் தெரிவித்தனர்.
மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரி கூறுகையில்,
""முறையான திட்டமிடலுக்கு பின்னரே இப் பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. சில இடங்களில் "பவர் பாயின்ட்' பிரச்னை தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இது சரிசெய்யப்படும்,'' என்றார்.

12.6.12
வரிகள் பற்றி பள்ளி குழந்தைகளுக்கு போதிக்க மத்திய அரசு நடவடிக்கை
"வருமான வரி சட்டங்கள் குறித்தும், தேசிய கட்டமைப்புக்கு தேவையான வரிகளின் முக்கியத்துவம் குறித்தும் பள்ளிக் குழந்தைகளுக்கு போதிக்கும் வகையில், இது தொடர்பான விவரங்கள் பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம் பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது,'' என, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
டில்லியில் வருமான வரி உயரதிகாரிகள் கூட்டத்தில், அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதாவது:
வரிகள் விதிப்பது, தேசிய கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு மிகவும் அவசியம். வரி சட்டங்களை மக்கள் தானாகவே முன்வந்து ஏற்றுக்கொள்வது ஊக்கப்படுத்தப்பட வேண்டும். மேலும், இந்த விஷயத்தில் குழந்தைகளின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும். அதற்கு, வரிகளின் முக்கியத்துவம் குறித்து பள்ளிக் குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும்.
இது தொடர்பான விவரங்கள் பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம் பெற வேண்டும். அதற்கு என்.சி.இ.ஆர்.டி., அமைப்புடன் சேர்ந்து வருமான வரித்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.கணக்கில் வராத சொத்துக்கள் மற்றும் வருமானம் குறித்த ஆய்வு ஒன்றை, மத்திய அரசு துவக்கியுள்ளது. இந்த ஆய்வுப் பணி, செப்டம்பர் மாதத்தில் முடிவுக்கு வரும். அத்துடன் கறுப்பு பணம் தொடர்பான தற்போதைய சட்டங்களை பலப்படுத்துவது தொடர்பாக, கமிட்டி ஒன்று தெரிவித்த அறிக்கையையும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

வருமான வரி
விலையில்லா நோட்டுகள் வழங்குவதில் தாமதம்: பெற்றோர்கள் கவலை
நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகள் துவங்கி 12 நாட்களை கடந்த நிலையில் அரசு அறிவித்த விலையில்லா நோட்டுகள் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. பாடங்கள் நடத்தப்படுவதால் நோட்டுகளை கடைகளில் வாங்கி வரும்படி பள்ளிகளில் வற்புறுத்துவது பெற்றோர்களை கவலையடைய செய்துள்ளது.
இந்தாண்டு
பள்ளி துவங்கிய நாளில் மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள் வழங்கப்பட்டன. பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்படும் நிலையில் அவற்றை எழுத நோட்டுகள் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால், மாணவர்கள் எழுத நோட்டுகள் தேவை என்பதால் பள்ளிகளில், கடைகளில் விலைக்கு வாங்கி வரும்படி பெற்றோர்களை வலியுறுத்துகின்றனர்.
மதுரை மாவட்டம், சேடபட்டியை சேர்ந்த மாணவியின் தந்தை முருகன் கூறியதாவது:
எனக்கு பள்ளிகளில் படிக்கும் 3 பெண்கள் உள்ளனர். அரசு அறிவித்த விலையில்லா புத்தகம் உதவியாக இருந்தது. தற்போது நோட்டுகளை விலைகொடுத்து வாங்கி வர சொல்கின்றனர். ஒருவருக்கு ஒரு ஜோடி நோட்டுகள் வாங்க குறைந்தது ரூ.200 வரை செலவாகிறது. என்னை போன்ற பெற்றோர்களுக்கு சுமையாக உள்ளது. அரசு அறிவித்த விலையில்லா நோட்டுகள் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க
வேண்டும், என்றார்.
மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், ""அரசு அறிவித்த விலையில்லா பொருள்கள் வழங்கும் திட்டங்கள் மாணவர்களுக்கு ஒவ்வொன்றாக வழங்கப்படும். புத்தகங்கள் கொடுத்து முடித்தவுடன் நோட்டுகள் வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அரசின் விலையில்லா பொருட்கள் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும்,'' என்றார்.
நன்றி:
இந்தாண்டு
- விலையில்லா புத்தகங்கள் (1 முதல் பிளஸ் 2 வரை),
- நோட்டுகள் (1 முதல் 10ம் வகுப்பு வரை),
- புத்தகப் பை (1 முதல் பிளஸ் 2 வரை),
- சீருடை (1முதல் 8ம் வகுப்பு வரை),
- கலர் பென்சில் (1முதல் 5ம் வகுப்பு வரை)
பள்ளி துவங்கிய நாளில் மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள் வழங்கப்பட்டன. பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்படும் நிலையில் அவற்றை எழுத நோட்டுகள் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால், மாணவர்கள் எழுத நோட்டுகள் தேவை என்பதால் பள்ளிகளில், கடைகளில் விலைக்கு வாங்கி வரும்படி பெற்றோர்களை வலியுறுத்துகின்றனர்.
மதுரை மாவட்டம், சேடபட்டியை சேர்ந்த மாணவியின் தந்தை முருகன் கூறியதாவது:
எனக்கு பள்ளிகளில் படிக்கும் 3 பெண்கள் உள்ளனர். அரசு அறிவித்த விலையில்லா புத்தகம் உதவியாக இருந்தது. தற்போது நோட்டுகளை விலைகொடுத்து வாங்கி வர சொல்கின்றனர். ஒருவருக்கு ஒரு ஜோடி நோட்டுகள் வாங்க குறைந்தது ரூ.200 வரை செலவாகிறது. என்னை போன்ற பெற்றோர்களுக்கு சுமையாக உள்ளது. அரசு அறிவித்த விலையில்லா நோட்டுகள் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க
வேண்டும், என்றார்.
மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், ""அரசு அறிவித்த விலையில்லா பொருள்கள் வழங்கும் திட்டங்கள் மாணவர்களுக்கு ஒவ்வொன்றாக வழங்கப்படும். புத்தகங்கள் கொடுத்து முடித்தவுடன் நோட்டுகள் வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அரசின் விலையில்லா பொருட்கள் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும்,'' என்றார்.
நன்றி:
தலைப்புகள்:
கல்வித் துறை செய்திகள்,
நாளிதழ் செய்திகள்,
விலையில்லா பொருள்கள்
பள்ளி மாணவர்களுக்கு "ஸ்மார்ட் கார்டு' பஸ் பாஸ்
பள்ளி மாணவர்களுக்கு "ஸ்மார்ட் கார்டு' பஸ் பாஸ் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
மாணவர்களுக்கு அரசு டவுன் பஸ்களில் செல்ல தமிழக அரசு சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. அட்டை வடிவில் உள்ள பாஸை, மாணவர்கள் கல்வி ஆண்டு முழுவதும் பத்திரமாக வைத்திருக்க முடியவில்லை. இரண்டாக கிழிவதால் பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது.
புது திட்டம்: இந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு புகைபடத்துடன் கூடிய "ஸ்மார்ட் கார்டு' பஸ் பாஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று, மாணவர்களின் புகைப்படம் எடுத்து "ஸ்மார்ட் கார்டு' பாஸ் வழங்க உள்ளனர்.
தற்போது மாணவர்கள் சேர்க்கை நடப்பதால், அதன்பின் "ஸ்மார்ட் கார்டு' பஸ் பாஸ் தரப்படும் என போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

டி.இ.டி., தேர்வர்களுக்கு மொழிப்பாடம் : தேர்வு மையத்தில் தேர்வு செய்யலாம்
டி.இ.டி., தேர்வுக்கான விண்ணப்பத்தில், மொழிப்பாடத்தை அதிகமானோர் குறிப்பிடாததால், தேர்வு மையத்தில் தேர்வு செய்ய, டி.ஆர்.பி., அனுமதி வழங்கியுள்ளது.
ஜூலை 12ம் தேதி, டி.இ.டி., தேர்வு நடக்கிறது. காலையில், முதல் தாள் தேர்வும் (இடைநிலை ஆசிரியருக்கானது); பிற்பகலில், இரண்டாம் தாள் தேர்வும் (பட்டதாரி ஆசிரியருக்கானது) நடக்கிறது. தேர்வர்களுக்கு, 18ம் தேதியில் இருந்து, 22ம் தேதிக்குள், "ஹால் டிக்கெட்' அனுப்பி வைக்கப்படும் என, துறை வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
அனுமதி: இதுகுறித்து, அவர்கள் மேலும் கூறியதாவது: விண்ணப்பித்த தேர்வர்களில் பலர், மொழிப்பாடம் எது என்பதை குறிப்பிடவில்லை. தமிழ், கன்னடம், மலையாளம், உருது, தெலுங்கு ஆகிய மொழிப் பாடங்கள் உள்ளன. இதில், எதையுமே குறிப்பிடாத தேர்வர்கள், தேர்வு அறைக்குச் சென்றதும், தங்களது மொழிப்பாடத்தை தேர்வு செய்து, அதைப் பற்றி, தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும். ஓ.எம்.ஆர்., ஷீட்டில் (விடைத்தாள்) உள்ள விவரங்களை தவறில்லாமல், சரியாகக் குறிப்பிட்டால் போதும்.
ஐந்து மொழிகளில்... : இதற்கு வசதியாக, ஒரே கேள்வித்தாளில், ஐந்து மொழிகளில் அச்சிடப்பட்ட கேள்விகள் இருக்கும். இதில், தேர்வர்கள் தேர்வு செய்யும் மொழிக்கு தகுந்தபடி, சம்பந்தப்பட்ட மொழி கேள்வித்தாளைப் பார்த்து, விடை அளிக்கலாம். 6.5 லட்சம் பேர், டி.இ.டி., தேர்வை எழுதுவர். ஆங்கில மொழிப் பாடங்களை தேர்வு செய்த தேர்வர்களுக்கு, ஆங்கிலத்தில் கேள்வித்தாள் இருக்கும்.
இவ்வாறு டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

10.6.12
அடுத்த மாதம் அமலாகிறது அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டம்
பொது மக்களுக்கு இருப்பதைப் போலவே, தமிழகத்தில் உள்ள பல லட்சம் அரசு ஊழியர்களுக்கும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை, தமிழக அரசு அறிமுகம் செய்யவுள்ளது.
கடந்த தி.மு.க., ஆட்சியில், அரசு ஊழியர்கள் மற்றும் பொது மக்களுக்கு, "கலைஞர் காப்பீட்டுத் திட்டம்' என்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இருந்தது. அ.தி.மு.க., தலைமையில் புதிய அரசு உருவானதும், இந்த காப்பீட்டுத் திட்டம் கைவிடப்பட்டு, "முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்' என்ற புதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே இருந்த காப்பீட்டுத் திட்டம், "ஸ்டார் ஹெல்த்' என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.
இலவசம்: இந்நிறுவனம், ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வரையில் ஒரு நபருக்கு மருத்துவச் சிகிச்சைக்குரிய தொகையை வழங்கி வந்தது. இத்திட்டம் முழுவதும் இலவசம் என்பதால், ஸ்டார் ஹெல்த் நிறுவனம், சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு கொடுக்கும் தொகையை, ஸ்டார் ஹெல்த் நிறுவனத்துக்கு அரசு ஈடு செய்து வந்தது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், "முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்' அமலுக்கு வந்தது. இத்திட்டம் நான்கு ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். குடும்பத்தில் உள்ள அனைவரும் இக்காப்பீட்டுத் திட்டத்தில் பயன் பெற முடியும். ஒரு நபருக்கு ஆண்டுக்கு 1 லட்சம் வரை என்றிருந்த மருத்துவக் காப்பீட்டுத் தொகை, 1.50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. 113 வகையான நோய்களுக்கு இத்திட்டத்தில் சிகிச்சை பெற முடியும்.
ஒப்படைப்பு: முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலும், மூன்றாம் நபர் தான் மருத்துவச் செலவை மருத்துவமனைகளுக்கு அளித்து வருகிறார். ஆனால், "ஸ்டார் ஹெல்த்' என்ற தனியார் நிறுவனத்துக்கு பதில், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான "யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவன'த்திடம் தமிழக அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ஒப்படைத்துள்ளது.
அரசு ஊழியர் மருத்துவக் காப்பீடு:
அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை, அவர்களின் மாத ஊதியத்திலிருந்து மருத்துவக் காப்பீட்டுக்காக குறிப்பிட்ட தொகை பிடிக்கப்படுகிறது. இத்தொகையை, ஸ்டார் ஹெல்த் நிறுவனத்துக்கு அளித்து, மருத்துவக் காப்பீட்டுத் தொகை பெறுவதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஆலோசனை: "ஸ்டார் ஹெல்த் மூலம் அரசு ஊழியர்கள் பெற்று வந்த காப்பீட்டுக்கான காலம் ஜூன் மாதத்தோடுமுடிவடைவதால், ஸ்டார் ஹெல்த் நிவனத்தைக் கைவிட்டு, புதிய நிறுவனம் மூலம் காப்பீட்டுத் திட்டத்தை அமல் செய்ய, அரசு ஆலோசித்து வருகிறது. பொது மக்களுக்கு உள்ளது போல, மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்திடமே அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டமும் ஒப்படைக்கப்படலாம் என, அரசு வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதற்காக, தமிழக அரசின் உயர் அதிகாரி மட்டத்திலான ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
ரூ.2 லட்சம்? புதிய காப்பீட்டுத் திட்டத்தில், தற்போது அளிக்கப்படும் காப்பீட்டுத் தொகையின் அளவு, 2 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படலாம் எனத் தெரிகிறது. தற்போது, மாதத்துக்கு 25 ரூபாய் என, ஆண்டுக்கு 300 ரூபாய் மருத்துவக் காப்பீட்டுக்காக அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த பிரிமியத் தொகை, மாதத்துக்கு 75 ரூபாயாக அதிகரிக்கப்படலாம் எனவும் தெரிகிறது.
ஜூன் மாதத்துடன் ஸ்டார் ஹெல்த் நிறுவனத்துடனான காப்பீட்டு ஒப்பந்தம் முடிவடைவதால், இம்மாதம் முதலே அரசு ஊழியர்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டத்தை, அரசு அறிமுகம் செய்யும்.

பள்ளிகளில் பணிநிரவல்: ஆசிரியர்களுக்கு சிக்கல்
உயர் / மேல் நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் மாறுதல் கவுன்சிலிங் நடத்துவதற்கு முன், பணிநிரவல் மூலம் சில காலியிடங்களை நிரப்ப, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு மாறுதல் கவுன்சிலிங் விரைவில் துவங்க உள்ளது. இதற்கு முன் காலிப் பணியிடங்களை, பணிநிரவல் முறையில் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. உயர் / மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களில், ஒரே பாடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். பள்ளிகளில், குறிப்பிட்ட பாடங்களுக்கு ஆசிரியர் இல்லை.
உதாரணமாக, ஒரு பள்ளியில் வரலாறு பாடம் நடத்த இரண்டு ஆசிரியர்கள் இருந்தால், அதில் ஒருவர், வரலாறு ஆசிரியர் இல்லாத பள்ளிக்கு மாறுதல் செய்யப்படுவார். இதுபோல பணிநிரவல் செய்த பின், காலியாக உள்ள இடங்களுக்கு மட்டுமே மாறுதல் கவுன்சிலிங் நடக்கும்.
பணிநிரவல் அடிப்படையில் தான், காலிப் பணியிடங்கள் வெளியிடப்படும்.
நன்றி:
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு மாறுதல் கவுன்சிலிங் விரைவில் துவங்க உள்ளது. இதற்கு முன் காலிப் பணியிடங்களை, பணிநிரவல் முறையில் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. உயர் / மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களில், ஒரே பாடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். பள்ளிகளில், குறிப்பிட்ட பாடங்களுக்கு ஆசிரியர் இல்லை.
உதாரணமாக, ஒரு பள்ளியில் வரலாறு பாடம் நடத்த இரண்டு ஆசிரியர்கள் இருந்தால், அதில் ஒருவர், வரலாறு ஆசிரியர் இல்லாத பள்ளிக்கு மாறுதல் செய்யப்படுவார். இதுபோல பணிநிரவல் செய்த பின், காலியாக உள்ள இடங்களுக்கு மட்டுமே மாறுதல் கவுன்சிலிங் நடக்கும்.
பணிநிரவல் அடிப்படையில் தான், காலிப் பணியிடங்கள் வெளியிடப்படும்.
நன்றி:
தலைப்புகள்:
ஆசிரியர் இடமாறுதல்,
கல்வித் துறை செய்திகள்,
நாளிதழ் செய்திகள்
9.6.12
ஜூலை 2012 முதல் 7 சதவீத அகவிலைப்படி உயர்வு இருக்கும் என எதிர்பார்ப்பு
ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு, 7 சதவீத அகவிலைப்படி உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு ஊழியர்களுக்கு ஆண்டு தோறும், ஆறு மாதத்திற்கு ஒரு முறை, அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும். தற்போது, 65 சதவீத அகவிலைப்படி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், அதிகரித்து வரும் பணவீக்கம், விலைவாசி, பெடரோல் விலை உயர்வை கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை, 7 சதவீதம் உயர்த்துவதற்கு, வாய்ப்பு உருவாகியுள்ளது. அகவிலைப்படி உயர்வு நுகர்வோர் விலை குறியீட்டெண்ணை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது.

Expected DA from July 2012
Again the Dearness Allowance fever started among all the government employees, as the time for releasing additional installment of dearness allowance to the Government Employees and Dearness relief to pensioners is getting closer. Assumption, predictions and calculations on the rate of Dearness Allowance, which is going to be raised from July 2012, is the hottest subject of Government Employees to talk about.The reason is very simple. The unbelievable Price hike of petrol and essential commodities will swallow the major portion of their salary .In this condition providing quality education to the children is a very big challenge for working class. The rise in Dearness Allowance alone will not solve all financial problems of government employees especially those who are in Pay Band –I. But they don’t have any other option to raise their income apart from promotion, annual increment and Dearness Allowance. So their expectation over Dearness Allowance in every six month is inevitable. At present the rate of dearness allowance is 65%. The AICPIN-IW for April 2012 has been released recently. The AICPIN-IW has increased 4 points and reached 205. If the same trend continues for the coming two months, the Dearness Allowance may witness 7% increase and so that we can expect that the rate of DA from July 2012 will touch 72% level.
.
வட்டார வள மையஅளவிலான பயிற்சிகள் 2012-13
- ஜூன் - தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு பயிற்சி - 2 நாள்கள்
- ஜூலை - புதுமையான முறையில் கணிதம் கற்பித்தல் - 3 நாள்கள்
- ஆகஸ்ட் - உள்ளடங்கிய கல்வி - 2 நாள்கள்
- அக்டோபர் - அமைதி மற்றும் மதிப்புக் கல்வி - 2 நாள்கள்
- நவம்பர் - வகுப்பறை தொடர்புடைய ஆங்கிலம் - 2 நாள்கள்
குறுவள மைய பயிற்சி நாள்கள் 2012-13
- 23-06-2012 - தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு பயிற்சி
- 14-07-2012 - துணைக்கருவிகள் தயாரித்தல் பட்டறை
- 11-08-2012 - தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு - அனுபவல்களைப் பகிர்ந்து கொள்ளுதல்
- 15-09-2012 - செயல்திட்டம்
- 20-10-2012 - உள்ளடங்கிய கல்வி
- 17-11-2012 - சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
- 08-12-2012 - கலை மற்றும் கைவேலைப்பாடுகள் பட்டறை
- 12-01-2012 - எளிய அறிவியல் செய்முறைகள் பட்டறை
- 09-02-2012 - வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல்
- 09-03-2012 - பள்ளி சுகாதாரம் மற்றம் தன் சுத்தம்
8.6.12
6-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியிலேயே ஜாதிச் சான்றிதழ் வழங்குவது எப்போது?
ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியிலேயே ஜாதிச் சான்றிதழ் எப்போது கிடைக்கும் என்கிற தகவலை தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சட்டப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகளைச் செயல்படுத்தும் வகையிலான உத்தரவுகளை சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் வெளியிட்டு வருகின்றன. அந்த அறிவிப்புகளில் முக்கியமான அறிவிப்பாக கருதப்படுவது, "ஆறாம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் (மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.சி. உள்பட) பள்ளியிலேயே ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் பெற்றோரின் வருமானச் சான்றிதழ் வழங்கப்படும்' என்பது தான்.
எப்போது கிடைக்கும்?
முதல்வரின் அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் அதற்கான உத்தரவை வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா வெளியிட்டுள்ளார்.
அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

- ஒரு சாதாரண தாளிலோ அல்லது ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பத்தையோ மாணவர்களிடம் அளித்து அதை நிரப்பித் தரும்படி, சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.
- விண்ணப்பங்களுடன் உரிய ஆதாரங்களை இணைத்து வட்டாட்சியர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்தப் பணிகளை ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்குள் முடிப்பது அவசியம்.
- சான்றிதழ்களை வழங்குவதற்கான உரிய ஆய்வுகளை வருவாய்த் துறை அதிகாரிகளும், அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டும்.
- செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்குள் இந்தப் பணிகளை வருவாய்த் துறை முடிக்க வேண்டும்.
- பணிகள் முடிக்கப்பட்டதும் சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் டிசம்பர் மாதத்துக்குள்ளாக அளிக்க வேண்டும்.
- வட்டாட்சியர்கள் அளித்த சான்றிதழ்களை அடுத்த ஆண்டு (2013) ஜனவரி மாதத்துக்குள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும்
.
6.6.12
தமிழக அரசு பென்ஷன்தாரர்கள் குடும்பப் பாதுகாப்பு நிதி உயர்வு - அரசாணை
தமிழக அரசு பென்ஷன்தாரர்கள் குடும்பப் பாதுகாப்பு நிதி, 25 ஆயிரம் ரூபாயில் இருந்து, 35 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக அரசிடம் பென்ஷன் பெற்று வரும் பென்ஷன்தாரர்கள் இறந்தால், அவர்கள் குடும்பத்திற்கு, 25 ஆயிரம் ரூபாய் தமிழக அரசு பென்ஷன்தாரர்கள் குடும்பப் பாதுகாப்பு நிதியாக, வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி, 35 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என, சமீபத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தற்போது பென்ஷன்தாரர்கள் குடும்ப பாதுகாப்பு நிதி, 25 ஆயிரம் ரூபாயில் இருந்து, 35 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, இதற்கான அரசாணை, இம்மாதம் முதல் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணை வெளியிடப்பட்ட நாள் முதல், இந்த புதிய நிதி அமலுக்கு வருகிறது. இந்த நிதியை பெறுவதற்கான விதிகளில் மாற்றம் ஏதுமில்லை.
அரசாணை எண்: 184 நிதி(பென்சன்)த் துறை நாள்: 01-06-2012

5.6.12
4.6.12
3.6.12
சூரியனை மறைக்கும் வெள்ளிக்கிரகம் : ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
வெள்ளிக்கிரகம் சூரியனை, மறைத்துச் செல்லும் நிகழ்வை, ஆசிரியர்களுக்கு விளக்கும் பயிற்சி, மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நாளை (ஜூன் 4) நடக்கிறது. ஜூன் 6ல், காலை 7 முதல் 10.20 மணி வரை, மதுரையில் இந்நிகழ்வை பார்க்கலாம். இதுபோல ஒரு நிகழ்வு, 100 ஆண்டுகளுக்கு பின் நடக்கும். இதை வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது என அறிவியல் இயக்க செயலாளர் கடசாரி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: கறுப்பு அட்டையின் நடுவில் துளையிட்டு, கையளவுள்ள சிறிய கண்ணாடி மீது ஒட்ட வேண்டும். இதை சூரிய ஒளிக்கு நேராக வைத்து, துளையின் வழியாக வரும் ஒளியை, இருட்டான அறையை நோக்கி செலுத்த வேண்டும். அப்போது வட்டத் தட்டில் கடுகு நகர்வது போல, வெள்ளி கிரகம் நகர்வது தெரியும். சிறு பாத்திரத்தில் மணலை நிரப்ப வேண்டும். சிறிய பிளாஸ்டிக் பந்தின் மேல் கறுப்பு அட்டை ஒட்டிய சிறு கண்ணாடியை "டேப்பால்' ஒட்டி, மணல் மேல் வைக்க வேண்டும். அட்டையின் துளையின் வழியாக வெளிச்சத்தை அறையில் செலுத்த வேண்டும். திசைக்கேற்ப பந்தை சற்றே நகர்த்தலாம். பள்ளிகளில் மாணவர்களுக்கு இந்நிகழ்வை கற்றுத் தருவதற்காக, ஆசிரியர்களுக்கு மதியம் 2 முதல் 4 மணி வரை பயிற்சி அளிக்கிறோம். பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம், என்றார்.

2.6.12
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு புதிய சீருடை இம்மாத இறுதியில் கிடைக்கும்
அரசு பள்ளியில் படிக்கும் மாணவ & மாணவிகளுக்கு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள மெரூன் கலர் சீருடை இந்த மாத இறுதிக்குள் வழங்கப்பட உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ & மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு மாணவர்களுக்கு காக்கி கலர் அரைக்கால் சட்டை, வெள்ளை சட்டை, மாணவிகளுக்கு நீல நிற பாவாடை, நீல நிற தாவணி, வெள்ளை சட்டை வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ள இலவச சீருடையின் நிறம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்களுக்கு மெரூன் கலர் பேன்ட், வெளிர் பிரவுன் நிற மேல் சட்டையும், மாணவிகளுக்கு மெரூன் நிற சல்வார் கமீசும், வெளிர் பிரவுன் நிற துப்பட்டாவும் வழங்கப்பட உள்ளது. இந்த கல்வி ஆண்டில் 48.63 லட்சம் மாணவ & மாணவிகளுக்கு 4 செட் இலவச சீருடை வழங்க 329.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று முதல் அரசு பள்ளிகள் திறக்கப்பட்டன. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட சீருடைகளையே மாணவ & மாணவிகள் அணிந்து வந்தனர். புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள மெரூன் கலர் சீருடைகள் நேற்று வரை பள்ளிகளுக்கு வந்து சேரவில்லை.
இதுகுறித்து, பள்ளி கல்வித்துறை அமைச்சரக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், புதிய கலர் சீருடைகள் சமூகநலத்துறை மூலம் தைக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் அந்த பணிகள் முடிவடையும். புதுக் கோட்டை தேர்தல் பணியில் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். ஜூன் 15ம் தேதிக்கு பிறகுதான் அரசு பள்ளி மாணவ & மாணவிகளுக்கு இலவச சீருடைகள் வழங்கும் பணி குறித்து முடிவு செய்யப்படும். இந்த மாத இறுதிக்குள் ஒன்று அல்லது இரண்டு செட் சீருடை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
பெற்றோர் கூறுகையில், தனியார் பள்ளிகள் போன்று கோடை விடுமுறை நாட்களிலேயே அரசு பள்ளி மாணவ & மாணவிகளுக்கு இலவச சீருடைகள் வழங்கும் நடைமுறையை கல்வித்துறை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகளும் உள்ளது என்று பெயர் எடுக்க முடியும். பள்ளி திறக்கும் முதல் நாளில் புதிய சீருடைகளை அணிந்து மாணவ & மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வருவார்கள், என்றனர்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபலமான இடுகைகள்
-
ஓய்வூதியம் பெறும், அரசு ஊழியர்களின் திருமணமாகாத, விவாகரத்தான, விதவை மகள்களுக்கு, வாழ்நாள் முழுவதும், குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்பட...
-
"அரசு முடிவெடுக்காததால, பள்ளி மாணவர்களுக்கு தான் பாதிப்பாம் வே...'' என்றபடி, பெஞ்சில் வந்து அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி. ...
-
ஜாக்டோ-ஜியோ’ அமைப்பு சார்பில், புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும். வரையறு...
-
1. அறிவியல் மையங்கள், கண்காட்சி ஆகியவை அகச் சிந்தனையை வளர்க்கும் சில வழிகள் என்று கூறியவர் - கூவர். 2. மாணவனின் சிந்தனை வினாவிற்கான விடைகள...
-
வேலூர் மாவட்டம் கணியம்பாடி உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஆசீர்வாதம். இவர் தலைமை ஆசிரியராக இருந்தபோது, படிக்காத மாணவர்கள் பெயரில் ஏராளமானோருக்க...
-
1. குமாரப் பருவத்தில் நடத்தையை பெருமளவு நிர்ணயிப்பது - ஒப்பார் குழு 2. குழந்தைகளின் இரண்டாம் பிறப்பு எனப்படுவது - குமாரப்பருவம் 3. ஸ்கீமா...