தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

22.6.12

புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் 2012 - அரசாணை

அரசு ஊழியர்களுக்கான, புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த, "யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ்' நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், பழைய மற்றும் புதிய காப்பீட்டுத் திட்டத்திற்கு இடைப்பட்ட காலத்தில், மருத்துவ காப்பீட்டிற்கான இழப்பீடுகளை பெறுவதற்கான வழிமுறைகளையும் அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு, மருத்துவ சிகிச்சைக்காக நான்கு ஆண்டு காலத்திற்கு, நான்கு லட்சம் ரூபாய் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கான, காப்பீடு வழங்கும் புதிய நிறுவனத்தை தேர்வு செய்ய, தேசிய அளவில் ஒப்பந்தம் கோரப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம், 27ம் தேதி, வெளிப்படையான, "டெண்டர் நோட்டீஸ்' வெளியிடப்பட்டது. தொடர்ந்து, ஒப்பந்தத்தை இறுதி செய்யும் குழு, பொதுத்துறை மருத்துவ காப்பீட்டு நிறுவனம் ஒன்றை தேர்வு செய்து, தமிழக நிதித்துறையின் ஒப்புதலுக்கு பரிந்துரைத்தது.

புதிய நிறுவனம் தேர்வு: பரிந்துரையை பரிசீலித்த தமிழக அரசு, "தி யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிட்" நிறுவனத்தை, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமாக தேர்வு செய்துள்ளது. ஏற்கனவே, அமலில் உள்ள மருத்துவ காப்பீட்டு திட்டம், கடந்த 2008ம் ஆண்டு, ஜூலை 11 முதல் துவக்கப்பட்டு, நான்கு ஆண்டுகள் செயல்படுத்தப்பட்டு, இம்மாதம் 10ம் தேதியுடன், முடிவடைந்துள்ளது. புதிய திட்டம், வரும் ஜூலை முதல் தேதி முதல், துவக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.

இடைப்பட்ட காலத்திற்கும் இழப்பீடு
: இதற்கிடையில், முதல் திட்டத்திற்கும், புதிய திட்டத்திற்கும் இடைப்பட்ட, அதாவது, இம்மாதம் 11ம் தேதிக்கும், 30ம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்திற்கான, இழப்பீடும் வழங்கப்படுகிறது. இந்த இழப்பீட்டிற்கான தொகையையும், தமிழக அரசு தற்போது அளித்துள்ளது. தொடர்ந்து, இதற்கான சில வழிமுறைகளையும் தமிழக அரசு வகுத்துள்ளது.

இதன் படி,
  • தலைமைச் செயலக ஊழியர்களுக்கு, சம்பந்தப்பட்ட துறைகளின் செயலர்கள், சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு, அந்தந்த துறைகளின் தலைவர்கள், சென்னை தவிர, பிற மாவட்டங்களில், மாவட்ட கலெக்டர்கள், இதற்கான இழப்பீட்டு அனுமதி வழங்கும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • இழப்பீடு கோரும் அரசு ஊழியர்கள், அதற்கான உண்மை ஆவணங்களை விண்ணப்பத்துடன், அனுமதி வழங்கும் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும்; அதிகாரிகள் அந்த விண்ணப்பங்களை சென்னை மாவட்டத்தில், மருத்துவ கல்வி இயக்குனருக்கும், மற்ற மாவட்டங்களாக இருப்பின், மாவட்ட மருத்துவ சேவை இணை இயக்குனர்களுக்கும் அனுப்பி வைப்பர்.
  • விண்ணப்பத்தை பெறும் மருத்துவத் துறை அதிகாரிகள், அவற்றை முழுமையாக ஆய்வு செய்து, உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க ஏற்பாடு செய்வார். இதில், அதிகபட்சமாக இரண்டு லட்சம் ரூபாய் வரை இழப்பீடு பெற முடியும்.
ரூ.5 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு தற்போது, புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்திற்காக, ஐந்து கோடி ரூபாயை, முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னையில் உள்ள கருவூல மற்றும் கணக்கு பிரிவு கமிஷனர், தேவையான தொகையை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஒதுக்கீடு செய்வார். மேலும், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழங்கள், மாநில நிறுவனங்களில் பணியாற்றுவோரும் புதிய காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான அரசாணையை தமிழக அரசின் நிதித்துறை வெளியிட்டுள்ளது.

G.O.Ms.No.221, Finance (Salaries) Department, dated 20-06-2012
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்