தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

13.6.12

முப்பருவ கல்வி முறை பயிற்சி: கருத்தாளர்கள் "அதிருப்தி"

பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் முப்பருவ கல்வி முறை மற்றும் கற்றலின் தொடர் மதிப்பீடு தொடர்பான பயிற்சி வகுப்புகளில் திட்டமிடல் இல்லை என, கருத்தாளர்கள் (எஸ்.எஸ்.ஏ., ஆசிரியர் பயிற்றுனர்கள்) அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் முப்பருவ கல்வி முறை மற்றும் கற்றலின் தொடர் மதிப்பீடு குறித்த பயிற்சி முகாம் அரசு மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தப்படுகிறது.

பயிற்சியளிக்கும் கருத்தாளர்கள் சிலர் கூறியதாவது:
இந்த பயிற்சி வகுப்பு நடத்த "பவர் பாயின்ட்' மிக முக்கியம். தேர்வு செய்யப்படும் மையங்களில் இந்த வசதி சரியாக இருப்பதில்லை. படவிளக்க காட்சியுடன் பயிற்சி அளிக்க போராட வேண்டியுள்ளது. விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. இதற்காக பயிற்சி அளிக்கும் கருத்தாளர்களுக்கு பயணப்படியும் வழங்கப்படுவதில்லை. ஒரு மையத்தில் உள்ள பெண் கருத்தாளர்களை முன்னறிவிப்பு இன்றி தொலைவில் உள்ள மற்றொரு மையத்துக்கு உடனடியாக செல்ல உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. பயிற்சி அளிப்பதற்காக உரிய காலஅவகாசம் அளிக்கப்படுவதில்லை

என, கருத்தாளர்கள் தெரிவித்தனர்.

மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரி கூறுகையில்,
""முறையான திட்டமிடலுக்கு பின்னரே இப் பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. சில இடங்களில் "பவர் பாயின்ட்' பிரச்னை தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இது சரிசெய்யப்படும்,'' என்றார்.

நன்றி:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்