தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

15.6.12

ஓய்வூதியதாரர்களுக்கு நேர்காணல் கட்டாயம் கிடையாது; சான்றிதழ் அளித்தால் போதும்: முதன்மைச் செயலர்

"வயது முதிர்ந்தோர் மற்றும் நோயாளிகள், கருவூலக அலுவலகத்துக்கு வந்து நேர்காணலில் பங்கேற்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. இவர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழை பெற்று, கருவூலக அலுவலகத்தில் ஒப்படைத்தால் போதுமானது'' என, நிதித்துறை முதன்மைச் செயலர் சண்முகம் தெரிவித்தார்.

கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட கருவூலக அலுவலகத்தில், தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலர் சண்முகம், நேற்று, ஆய்வு மேற்கொண்டார். தானியங்கி கருவூலக முறையில், பட்டியல் ஏற்பளிப்பு செய்தல் (ஏ.டி.பி.பி.எஸ்.,) தொடர்பாக, தொழில்நுட்ப நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகளிடம் அவர் விசாரித்தார்.

கருவூலகத்தில் பணம் எடுக்க வரும் அலுவலர்களிடம், பட்டியல் பெறுவது, வங்கிக் கணக்குகளில் பணம் பரிமாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகள் கம்ப்யூட்டர் மயமாக்குதல், மின்-கருவூலக நடைமுறைகள் மற்றும் தகவல் வலையமைப்பு முறைகள், எந்தெந்த பிரிவுகளுக்கு வலையமைப்பின் இணைப்பு முனைகள் வழங்கப்பட்டுள்ளன என்பன குறித்து, துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர், முதன்மைச் செயலர் சண்முகம், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும், தானியங்கி முறையில் கருவூலக பட்டியல் ஏற்பளிப்பு முறை, செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை கருவூலக அலுவலகத்தில் இத்திட்ட செயல்பாடுகள் குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. ஓராண்டு காலத்துக்குள், மாநிலம் முழுவதும், முழுவீச்சில் அமல்படுத்தப்படும். இதன்படி, மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை திட்டத்தை மேற்கொள்ள முடியும். கருவூலக அலுவலகங்களின் அனைத்து பணிகளும், மின்-கருவூலக முறையில், காகித பயன்பாடு இல்லாத வகையில், "ஆன்லைன்' முறையில் கொண்டுவரப்படும்.

தமிழகம் முழுவதும் உள்ள, லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு வங்கிகள் வாயிலாக, இ.சி.எஸ்., முறையில் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இவர்கள் உயிருடன் இருப்பதை உறுதி செய்ய, ஆண்டுக்கு ஒருமுறை, கருவூலக அலுவலகத்துக்கு, நேர்காணலுக்கு வர வேண்டியுள்ளது. இதனால், பல்வேறு சிரமங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. வயது முதிர்ந்தோர் மற்றும் நோயாளிகள், கருவூலக அலுவலகத்துக்கு வந்து, நேர்காணலில் பங்கேற்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. இவர்கள், தாங்கள் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழை பெற்று, கருவூலக அலுவலகத்தில் ஒப்படைத்தால் போதுமானது. ஒய்வூதியதாரர்களுக்கு, "பயோட்மெட்ரிக்' முறையில், ஓய்வூதியம் வழங்கும் முறை, விரைவில் அமல்படுத்தப்படும். அப்போது, இதுபோன்ற சிரமங்களை தவிர்க்க முடியும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

ஆய்வின்போது, மாவட்ட கருவூலக அலுவலர் பூங்கோதை, உதவி கருவூலக அலுவலர்கள் நாகராஜன், சேதுராமன், பாஸ்கரன், சாமிநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 
நன்றி:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்