தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

17.6.12

பள்ளி மாணவர்களுக்கு 10 நாளில் இலவச பஸ் பாஸ்

பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் விநியோகம் அடுத்த 10 நாள்களில் தொடங்கப்படும் என சாலைப் போக்குவரத்து நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு இலவச பஸ் பாஸ் வழங்கி வருகிறது. இதனால், வெகு தொலைவிலிருந்து பள்ளிகளுக்குச் செல்லும் ஏழை மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் ஜூன் 1-ம் தேதி திறக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குமேல் ஆகிவிட்ட நிலையில், இன்னும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படவில்லை. பஸ் கட்டணங்களும் உயர்ந்துவிட்ட நிலையில், ஏழை மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்தி பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிக கட்டணம் செலுத்தி பயணிக்க முடியாத ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வெகு தொலைவு நடந்தே செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது என புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மாநகரப் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது:
மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் பணிகளை இம்முறை சென்னை தரமணியில் உள்ள சாலைப் போக்குவரத்து நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதுவரை சென்னையில் மட்டும் இருந்தவந்த ஸ்மார்ட் கார்டு திட்டம் இம்முறை தமிழகம் முழுவதும் அறிமுகம் செய்யப்படுவதால்தான், இம்முறை தாமதமாகி வருகிறது. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் சனிக்கிழமைதான் திறக்கப்பட்டன. இதிலிருந்து ஒப்பந்ததாரர் தேர்வு செய்ப்பட்டு பணிகள் ஒப்படைக்கப்படும் என்றார்.

இதுகுறித்து சாலைப் போக்குவரத்து நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறியது:
மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ்கள் இம்முறை தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு வடிவில் கொடுக்கப்பட உள்ளன. இந்த ஸ்மார்ட் கார்டு தயாரிப்புப் பணியை ஒப்படைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டு, அவற்றை பரிசீலனை செய்யும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்தப் பணிகள் முடிந்து, பணிகள் ஒப்பந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். இதில் எந்தவித தாமதமும் இல்லை. பெரும்பாலும் பள்ளிகள் தொடங்கி மூன்றாம் வாரத்துக்குப் பின்னரே இலவச பாஸ்கள் வழங்கப்படும். இதுபோல், இம்முறையும் அடுத்த 10 நாள்களில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வடிவிலான இலவச பஸ் பாஸ்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டு விடும் என்றார் அவர்.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்