தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

21.6.12

ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை, சிறப்பு நிலை: கூர்ந்தாய்வு முகாம் ஜூன் 27 தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தேர்வுநிலை, சிறப்பு நிலை வழங்குவதற்கான கூர்ந்தாய்வு சிறப்பு முகாம் நாகர்கோவிலில் ஜூன் 27-ம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தேர்வுநிலை, சிறப்புநிலை வழங்குவதற்கான கருத்துருக்களை விதிகளின்படி கூர்ந்தாய்வு செய்து உடனுக்குடன் அந்த இடத்திலேயே ஆணைகள் வழங்கப்படும். இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்கள் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகின்றன.
  • குழித்துறை கல்வி மாவட்டத்துக்கான முகாம் ஜூன் 27ஆம் தேதியும், 
  • தக்கலை கல்வி மாவட்டத்துக்கான முகாம் 28-ம் தேதியும், 
  • நாகர்கோவில் கல்வி மாவட்டத்துக்கான முகாம் 29 ஆம் தேதியும் 
நடைபெறுகின்றன.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்