தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

21.6.12

பெண் வாரிசுகளுக்கு திருமணமானாலும் கருணை அடிப்படையில் பணி : விதிமுறைகளைத் தளர்த்தியது அரசு

பெண் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் பணி நியமனம் தொடர்பான விதிமுறைகளை வகுத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

"பணியில் இருக்கும் போது, மரணமடைந்த அரசு ஊழியரின் நெருங்கிய உறவினர்கள் என்று குறிப்பிடப்பட்ட நபர்களில், திருமணமாகாத மகள் என்ற நிலையில், பணி நியமனம் கோரி விண்ணப்பம் அளித்து, பணி நியமனம் வழங்கப்படுவதற்கு முன்னதாகவே திருமணம் செய்து கொண்டவர்கள், கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு உரிய தகுதிகளை நிறைவு செய்யும் பட்சத்தில், பணி நியமனம் வழங்கலாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசாணை எண்: 96 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை நாள்: 18-06-2012
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்