தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

30.5.13

ஆசிரியர் பொது மாறுதல் விதியில் திருத்தம் - பெண்கள் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்களில் பெண் ஆசிரியரை மட்டுமே நியமிக்க ஆணை

Go.129 - Female Hm & Tr Should Appoint in Female High_hss Scls

கலந்தாய்வு மூலம் மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்கள் 07.06.2013க்குள் பணியில் சேர உத்தரவு

2013 - 14 Transfer Counselling Instruction

27.5.13

மே 28, 29ம் தேதிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அறிவிப்பு

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் மே 28, 29ம் தேதிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளி கல்வி இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு  அறிவிக்கப்படாமல் இருந்தது. இது தொடர்பாக தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. கயத்தாறு அவர்கள் இன்று காலை  பள்ளி கல்வி இணை இயக்குநரை சந்தித்தார். அப்போது பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் நாளிலேயே இடைநிலை ஆசிரியர்களுக்கும் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளி கல்வி இணை இயக்குநர் தெரிவித்தார்.இது தொடர்பாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நமது மாநிலப் பொதுச் செயலாளர் திரு. இசக்கியப்பன் அவர்கள் பள்ளி கல்வி இணை இயக்குநரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோதும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு மே 28, 29ம் தேதிகளில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
.

25.5.13

தகுதியுள்ள இடைநிலை ஆசிரியருக்கு பணிபுரியும் பள்ளியிலேயே பதவி உயர்வு - கல்வித்துறை முடிவு

நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை அந்தந்த பள்ளிகளிலேயே பதவி உயர்த்தி காலிப்பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தொடக்க கல்வித்துறையில் மட்டுமே இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பது என்றும் 6ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பது என்றும் கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த காலங்களில் 8ம் வகுப்பு வரையிலான நடுநிலை பள்ளிகளிலும், பத்தாம் வகுப்பு வரையிலான உயர்நிலை பள்ளிகளிலும் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர்.

அரசின் கொள்கை முடிவின்படி தற்போது நடுநிலை முதல் மேல்நிலை வரை அனைத்து வகுப்புகளுக்கும் பட்டதாரி அல்லது முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால் நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களை பதவி உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

இந்த தகுதி உயர்வுக்கு இடைநிலை ஆசிரியர்கள் தமிழ்ப்பாடமாக இருந்தால் பி.லிட் முடித்திருக்க வேண்டும், பிற பாட ஆசிரியர்களாக இருந்தால் இளநிலை பட்டம் மற்றும் பிஎட் முடித்திருக்க வேண்டியது அவசியம். தகுதி உள்ள இடைநிலை ஆசிரியர்களை அந்தந்த பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளி தலைமையாசிரியரிடமிருந்தும் தேவை பட்டியல் கோரப்பட்டுள்ளது.

இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் ஸ்ரீதேவி கூறுகையில், "இடைநிலை ஆசிரியர்களை அந்தந்த பள்ளிகளிலேயே உள்ள காலிப்பணியிடங்களில் தகுதியின் அடிப்படையில் அப்கிரேடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளியின் தலைமையாசிரியரிடமும் காலிப்பணியிட விபரம் மற்றும் அப்கிரேடு செய்ய தகுதியான இடைநிலை ஆசிரியர்களின் தேவை பட்டியல் கோரப்பட்டுள்ளது,” என்றார்.

நன்றி:

 

24.5.13

ஆசிரியர் பொதுமாறுதல் கவுன்சலிங் திடீர் நிறுத்தம்

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் வழங்கும் கவுன்சலிங் கடந்த 20ம் தேதி முதல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடந்து வருகிறது.

ஆன் லைன் மூலம் 4 நாட்களாக நடந்த இந்த கவுன்சலிங்கில் சில பிரிவு ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல், பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு, இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்களுக்கான மாறுதல் ஆகியவற்றுக்கான கவுன்சலிங் நடக்கும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.

 மேற்கண்ட கவுன்சலிங் நிறுத்தப்பட்டதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.
.

13.5.13

கன்னியாகுமரியில் சங்க பொறுப்பாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் சங்க பொறுப்பாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் வைத்து இரண்டு நாள்கள் நடைபெற்றது.

முதல் நாள் 12-05-2013 ஞாயிறு அன்று நடைபெற்ற முதல் அமர்வுக்கு மாநிலத் தலைவர் சு. கயத்தாறு தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் ந. பர்வதராஜன் “நேற்று இன்று நாளை” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

2-வது அமர்வுக்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் ம. எட்வின் பிரகாஷ் தலைமை வகித்தார். முன்னாள் மாநில பொதுச் செயலாளர் ஆ. சுப்பிரமணியன் "சங்க வரலாறு" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

3-வது அமர்வுக்கு விருதுநகர் மாவட்டச் செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் க. இசக்கியப்பன் "சங்கத்தின் எதிர்காலம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

13-05-2013 திங்கள் 4-வது அமர்வு நடைபெற்றது. மாநிலப் பொருளாளர் ஆ. மதலைமுத்து தலைமை தாங்கினார். திருநெல்வேலி மாவட்ட JCTU அமைப்பாளர் சி. முத்துக்குமாரசுவாமி “உலகமயத்தில் தொழிற்சங்கம் சந்திக்கும் சவால்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

5-வது அமர்வுக்கு கன்னியாகுமரி மாவட்ட மகளிரணி அமைப்பாளர்  ஆர் சுஜா ரோஸ் ரெக்ஸ்லின் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் அ. ஜெயராணி “தொழிற்சங்கத்தில் பெண்களின் பங்கு” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் ஆர். ஹெர்பர்ட் ராஜா சிங், மரிய ஜாண் டெல்லஸ், பால் செபாஸ்டின், ஞான செல்வ திரவியம் ஆகியோர் செய்திருந்தனர்.
.

12.5.13

பொது மாறுதல் கலந்தாய்வு 2012 - 13 பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

Transfer Norms 2013-14

பொது மாறுதல் கலந்தாய்வு 2012 - 13 அரசாணை

Transfer Counselling _2013-2014 GO 129

தஇஆச பொறுப்பாளர்களுக்கான இரண்டு நாள்கள் பயிற்சி பட்டறை தொடங்கியது


தஇஆச மாநில, மாவட்ட, கல்வி மாவட்ட பொறுப்பாளர்களுக்கான இரண்டு நாள்கள் பயிற்சி பட்டறை  கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் இன்று தொடங்கியது.

முதல் அமர்வு “நேற்று இன்று நாளை” என்ற  தலைப்பில் நடைபெற்றது.  
மாநிலத் தலைவர் திரு சு. கயத்தாறு தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின்  மேனாள் பொதுச் செயலாளர் திரு. ந. பர்வதராஜன் சிறப்புரையாற்றினார்.




9.5.13

"ஒரே பணி - இருவேறு ஊதியம்" மானிய கோரிக்கையிலாவது விடிவுகாலம் பிறக்குமா?

ஒரே பணி, இருவேறு ஊதியம் என்ற முரண்பாட்டை நீக்கக் கோரி தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் 8 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இதற்கு வருகிற மானிய கோரிக்கையிலாவது விடிவுகாலம் பிறக்குமா என எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 2004ம் ஆண்டு முதல் 6, 7, 8 வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர் நியமனம் என்பது நிறுத்தப்பட்டது. இதற்கு பதிலாக பட்டதாரி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். அதற்கு பின்னர் 6, 7, 8 வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் ஏற்கெனவே நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே தற்போது 6, 7, 8 வகுப்புகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இவர்களுடன் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஒரே பணி, இருவேறு ஊதியம் என்ற முரண்பாடு நிலவுகிறது.

தமிழகத்தில் உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள் 25 ஆயிரம் பேர். இதில் 90 சதவீதம் பேர் பட்டதாரி ஆசிரியருக்கான தகுதி பெற்றவர்கள். எனவே அனைவரையும் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டுமென்று கடந்த 8 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 இதற்காக கடந்த 2007ம் ஆண்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தை தர்ணா, 2008ல் சென்னை மெமோரியல் ஹால் முன்பு தர்ணா, 2010ல் சென்னை காயிதே மில்லத் மண்டபம் முன்பு அடையாள உண்ணாவிரதம், 2013 பிப்.26ல் முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாலை நேர ஆர்ப்பாட்டம், 2013 ஏப்.17ல் முதல்வர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆகியோருக்கு பேக்ஸ் அனுப்பும் போராட்டம் என கடந்த 8 ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனினும் தங்கள் கோரிக்கைக்கு இதுவரை விடிவுகாலம் பிறக்கவில்லை என்கின்றனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் இசக்கி யப்பன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை
:

கடந்த மார்ச் மாதம் தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் வைகை செல்வனை சந்தித்து இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் பட்ட தாரி ஆசிரியர் களாக உட்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். வருகிற மே 10ல் பள்ளிக் கல்வி மானிய கோரிக்கைக்கு முன்பு முதல்வருடன் விவாதித்து தீர்வு காண்பதாக கூறியுள்ளார்.

தொடக்க கல்வித் துறையில் 6, 7, 8 வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமிக்கும் போது அதில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் அந்தந்த ஒன்றியங்களில் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு கீழிறக்கம் செய்யப்படுகின்றனர். பள்ளிக் கல்வித் துறையில் அது போன்ற வாய்ப்புகள் கிடையாது. எனவே உயர், மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பணியிடம் முடிவுறு பணி தொகுதி ஆகி விட்டது.

கடந்த காலங்களில் முடிவுறு பணி தொகுதி ஆகிவிட்ட இளநிலை ஆசிரியர்கள் அரசாணை எண்.669, நாள் 25.4.1979ன் படி இடைநிலை ஆசிரியர்களாக உட்படுத்தப்பட்டனர்.

மேல்நிலைக் கல்வி உருவாக்கப்பட்ட போது மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் அரசாணை எண்.720, நாள் 28.4.1981ன் படி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தப்பட்டனர்.

இடைநிலை ஆசிரியர் ஊதிய விகிதம் பெற்று வந்த மேல்நிலைக் கல்வி தொழிற்கல்வி ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர் விகிதத்தில் முதல் நிலை தொழிற்கல்வி ஆசிரியர்களாக அரசாணை எண்.69, 29.7.2007ன் அடிப்படையில் தகுதி உயர்த்தப்பட்டனர்.

மேல்நிலைப் பள்ளிகளில் ஒப்பந்த ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் ஊதிய விகிதத்தில் அரசாணை எண்.187, பள்ளிக்கல்வி நாள் 4.10.2008ன் படி கணினி பயிற்றுநர்களாக நியமிக்கப்பட்டனர்.

எவ்வளவு செலவாகும்
?

பட்டதாரிகளாக உட்படுத்தக் கோரும் இடைநிலை ஆசிரியர்களில் 90 சதவீதம் பேர் பட்டதாரி ஆசிரியர் தகுதியுடன் உள்ளனர். தேர்வு நிலையில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் தற்போது தர ஊதியமாக ரூ.4,300 பெறுகின்றனர். பட்டதாரிகளாக உட்படுத்தும் போது இவர்களுக்கு ரூ.300 தர ஊதியம் அதிகமாக கிடைக்கும். அத்துடன் 3 சதவீத ஊதிய உயர்வு மட்டுமே வழங்கப்படும்.

சிறப்பு நிலையில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் தற்போது தர ஊதியமாக ரூ.4,500 பெறுகின்றனர். பட்டதாரிகளாக உட்படுத்தும் போது இவர்களுக்கு ரூ.100 தர ஊதியம் உயர்த்தி வழங்கப்படும். மேலும் 3 சதவீதம் ஊதிய உயர்வும் கிடைக்கும்.

எனவே அரசு இனியும் காலம் தாழ்த்தாது இடைநிலை ஆசிரியர்கள் 25 ஆயிரம் பேரையும் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தி அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
.

ஆசிரியர்கள் உரிமை காக்கும் போராட்டம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் மரிய மிக்கேல் மற்றும் செயலர் சசிகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தொடக்கக் கல்வித் துறையில் மீளாய்வுக் கூட்டம் என்ற பெயரில் தலைமை ஆசிரியர்களைத் தரக்குறைவாக பேசியும், கோடைக்கால சிறப்பு வகுப்பு என்ற பெயரில் மாணவர் மற்றும், ஆசிரியர் நலனைப் பாதிக்கச் செய்கின்ற கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் மற்றும் அனைவருக்கும் கல்வித்திட்ட இணை இயக்குனர் மற்றும் அனைவருக்கும் கல்வித் திட்ட அதிகாரிகளை கண்டித்து உரிமை காக்கும் அறப் போராட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு 9ம் தேதி மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை நடைபெறுகின்றது.

இதில் கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் உட்பட ஆயிரக்கணக்கான ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொள்வார்கள்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.

7.5.13

தஇஆச பொறுப்பாளர்களுக்கான இரண்டு நாள்கள் பயிற்சி பட்டறை

மாநில, மாவட்ட, கல்வி மாவட்ட பொறுப்பாளர்களுக்கான இரண்டு நாள்கள் பயிற்சி பட்டறை

நாள்
12.05.2013 & 13.05.201
 ஞாயிறு மற்றும் திங்கள் கிழமை
  
இடம் 
விவேகானந்த கேந்திரம், கன்னியாகுமரி.

பயிற்சி கட்டணம்
ரூ. 200/- (இருநூறு ) மட்டும்

நிகழ்ச்சி நிரல்

12.05.2013, ஞாயிறு

காலை 9.30 – 10.30 
பதிவு

காலை 11.00 மணி
அமர்வு - I

தலைமை
திரு சு. கயத்தாறு, மாநிலத் தலைவர்

தலைப்பு
“நேற்று இன்று நாளை”

வழங்குபவர் 
திரு. ந. பர்வதராஜன்,
மேனாள் பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

பகல் 1.30 – 2.45  
மதிய உணவு இடைவேளை 

பிற்பகல் 3.00 மணி
அமர்வு - II
தலைமை
திரு ம. எட்வின் பிரகாஷ், 
மாநில துணைப் பொதுச் செயலாளர்.

தலைப்பு
“சங்க வரலாறு”

வழங்குபவர் 
திரு ஆ. சுப்பிரமணியன்,
மேனாள் பொதுச் செயலாளர். 
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்.

மாலை 5.00 மணி 
தேநீர் இடைவேளை

மாலை 6.00 மணி
அமர்வு - III

தலைமை
அ. அருணகிரியார், 
மாநில அமைப்புச் செயலாளர்

தலைப்பு 
“சங்கத்தின் எதிர்காலம்”

வழங்குபவர் 
திரு. க. இசக்கியப்பன்,
மாநிலப் பொதுச் செயலாளர், 


13.05.2013, திங்கள் கிழமை

காலை 9.00 மணி
அமர்வு - IV

தலைமை
ஆ. மதலைமுத்து, மாநிலப் பொருளாளர்.

தலைப்பு 
“உலகமயத்தில் தொழிற்சங்கம் சந்திக்கும் சவால்கள்”

வழங்குபவர்
திரு. C. முத்துகுமாரசுவாமி (LIC),
அமைப்பாளர் - JCTU,
திருநெல்வேலி மாவட்டம்.

காலை 11 மணி
அமர்வு - V

தலைமை
திருமதி. அ. ஜெயராணி, மாநிலச் செயலாளர்

தலைப்பு 
“தொழிற்சங்கத்தில் பெண்களின் பங்கு”

வழங்குபவர் 
திருமதி மூ. மணிமேகலை,
மாநிலச் செயலாளர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

நன்றியுரை
திரு ரெ. ஹெர்பர்ட் ராஜா சிங், 
மாவட்டத் தலைவர், 
கன்னியாகுமரி மாவட்டம்.

பகல் 1.00 மணி
மதிய உணவு

பயிற்சி பட்டறை நிறைவு.

குறிப்பு: வெளியூர் பொறுப்பாளர்கள் வசதிக்காக 11.05.2013 முதல் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அனைத்து பொறுப்பாளர்களும், முன்னணி ஊழியர்களும் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மாநில அமைப்பின் சார்பில்  கேட்டுக் கொள்கின்றோம். 

என்றென்றும் சங்கப்பணியில்,
க. இசக்கியப்பன், 
பொதுச் செயலாளர்.
.

4.5.13

வரலாறு - பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு தற்காலிக முன்னுரிமைப் பட்டியல் - 2013

Sec. Gr. to Bt Social science Temp Panel 2013

அறிவியல் - பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு தற்காலிக முன்னுரிமைப் பட்டியல் - 2013

Sec Gr. to Bt-science-pannel - 2013 by edwin_prakash75

கணிதம் - பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு தற்காலிக முன்னுரிமைப் பட்டியல் - 2013

Sec. Gr. to Bt Promotion Panel Maths 2012 - 13 by edwin_prakash75

ஆங்கிலம் - பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு தற்காலிக முன்னுரிமைப் பட்டியல் - 2013

Sec. Gr. to Bt English Pannel 2012 - 13

2.5.13

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 8 சதவீதம் உயர்வு

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 8 சதவீதம் உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

சட்டசபையில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதா, அகவிலைப்படி உயர்வின் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ. 1631 கோடி செலவாகும் என்றும், இதன் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் என 18 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று தெரிவித்தார்.

அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படவுள்ளது. சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 சதவீதம் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
.

புத்தகம் இன்றி 2011 - ஆசிரியர் இன்றி 2013

பள்ளிக் கல்வியில் ஓரளவு தன்னிறைவு பெற்ற மாநிலமாக திகழும் தமிழகத்தில், ஆங்கில வழிக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு தமிழ் வழிக்கல்வி முறை பின்தங்கிவிட்டது. இதை சரிசெய்ய சமச்சீர் கல்வி முறையை கடந்த ஆட்சியில் அமலாக்கினர். ஆனால், கடந்த 2011ல் சமச்சீர் கல்விக்காக அச்சிடப்பட்ட புத்தகங்கள் கைவிடப்பட்டு புதிய புத்தகங்கள் அச்சிடப்பட்டன. இதனால் சுமார் 3 மாதங்கள் பிள்ளைகள் பள்ளி சென்று படிக்காமல், விளையாடியும் ஊர் சுற்றியும் பொழுதை போக்கினர். பல பள்ளிகளில் பாடம் நடத்தாமலேயே ஒப்புக்கு தேர்வு நடத்தப்பட்டது.

தமிழகத்தில் ஆசிரியர் காலி பணியிடங்கள் சுமார் 20 ஆயிரம் உள்ளன. இம்மாதம் கூடுதலாக சில ஆயிரம் பணியிடங்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடங்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க முடியாதவாறு ஆசிரியர் தகுதி தேர்வு தடையாக உள்ளது.

கல்வியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அதிகமில்லாத வடமாநிலங்கள் சிலவற்றில் கல்லூரி கல்வியை முடித்த வேகத்தில் பலரும் ஆசிரியரானதால், தகுதி தேர்வை மத்திய அரசு அமலாக்கியது.

இத்திட்டத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்தது. ஆனாலும் எதிர்ப்பை மீறி 2012 ஜூலையில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. அதில் ஒரு சதவீதம் பேர் கூட தேர்ச்சி அடையாததால் மறு தேர்வு நடத்தப்பட்டது. அக்டோபரில் நடந்த இத்தேர்வில் வென்றவர்களை டிசம்பரில் நியமித்தனர். இதனால் பாடம் நடத்தும் பணி பாதிப்படைந்தது.

சுமார் 30 ஆயிரம் ஆசிரியர்கள் தேவைப்படும் நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்க உள்ளது. எனவே, ஆசிரியர் தகுதி தேர்வை உடனடியாக நடத்த வேண்டும் அல்லது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் முருகேசன் கூறுகையில், "தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. ஆசிரியர் பணியோடு ஆசிரியர் அல்லாத அலுவலக பணிகளையும் செய்ய வேண்டிய பள்ளிகளில் தேவைக்கேற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்யாவிட்டால் சிக்கல் ஏற்படும். அதுவும் ஈராசிரியர் பள்ளிகளில் ஒரு இடம் காலியாகி ஓராசிரியர் பள்ளி ஆனால் சிரமம் தான்" என்றார்.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் இசக்கியப்பன் கூறுகையில், "வழக்கமான பணியிடங்கள் தவிர ஆர்ம்எஸ்ஏ, எஸ்எஸ்ஏ, தகுதி உயர்த்திய பள்ளி பணியிடங்களையும் சேர்த்தால் இந்த ஆண்டு சுமார் 30 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் தேவை. இதை முந்தைய முறையில் வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் உரிய காலத்தில், அதாவது ஜூன் முதல் ஆகஸ்டுக்குள் நிரப்பவேண்டும்" என்றார்.

கல்வி ஆண்டு தொடக்கத்திலேயே ஆசிரியர் நியமனம் நடந்தால் தான் திட்டமிட்டு, கால அட்டவணை போட்டு பாடம் நடத்தி முடிக்க முடியும். அதுவும் கலந்தாய்வு முடிந்த பிறகு ஆசிரியர்களை நியமனம் செய்வதே நல்லது என்று ஆசிரியர்கள் பலரும் வலியுறுத்துகின்றனர்.

நன்றி:

 

1.5.13

திறந்த வெளி பல்கலை.யில் பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு: சட்டப்பேரவையில் விவாதம்

திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் முறைசாரா திட்டத்தின் கீழ் பட்டம் பெற்ற வர்களுக்கு அரசுபணியில் பதவி உயர்வு அளிக்கவேண்டும் என்றும் இதற்கு எதிராக கடந்த ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை 107ஐ ரத்து செய்யவேண்டும் என்றும் சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆர்.ராம மூர்த்தி கேட்டுக்கொண்டார்.

செவ்வாயன்று (ஏப்.30) சட்டம் நீதி நிர்வாகம், பணியாளர் சீர்திருத்தத்துறை மானியக்கோரிக்கைகள் மீது நடைபெற்ற விவாதத்தில் அவர் இதுகுறித்து பேசியதாவது: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். காலத்தில் திறந்த நிலை பல்கலைக்கழகம் மூலம் படித்தவர்களுக்கும் அரசு பதவிகளில் நியமனம் பெறலாம் என்கிற நிலை இருந்தது. இதனால் ஏராளாமானோர் இன்று அரசின் பல பதவிகளுக்கு வந்துள்ளனர். கடந்த திமுக ஆட்சியில் அரசாணை 107- மூலம் 1979ல் திறந்தவெளி பல்கலைக் கழகம் மூலம் படித்து பட்டம் பெற்றவர்களுக்கு அரசு பதவியில் நியமனம் செய்யப்பட தகுதியில்லையெனவும், ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டவர்களுக்கும் பதவி உயர்வு பெற அருகதை இல்லையெனவும் தெளிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் அரசாணை 107 பிறப்பிப்பதற்கு முன்பு நியமனம் செய்யப்பட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அந்த அரசாணையை மறுபரி சீலனை செய்ய வேண்டும்.

அமைச்சர் கே.பி.முனுசாமி
: இதை ஒரு சமூகப்பிரச்சனையாக பார்க்கவேண்டி யுள்ளது. இந்த பிரச்சனையில் உயர் நீதி மன்றமும், உச்சநீதி மன்றமும் வேறு விதமாக தீர்ப்பு வழங்கியுள்ளன. இதை எப்படி தீர்க்கவேண்டும் என்பதை அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்.

உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன்: திறந்த வெளி பல்கலைக் கழகத்தில் முறையான கல்வி, முறைசாரா கல்வி என்று இரு முறைகள் உள்ளன. பத்தாம் வகுப்பு முடித்து பிளஸ் டூ முடித்து விட்டு நேரடியாக பட்டம் பெறும் முறை முறையான கல்வி. 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக பட்டம் முடிப்பது முறை சாரா கல்வி. கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசாணையால் திறந்த வெளி பல்கலைக் கழகத்தில் முறையாக பட்டம் பெற்றவர்களுக்கு எந்த விதபாதிப்பும் இல்லை. அவர்கள் அரசுப் பணியில் இருந்தாலும் எந்த பாதிப்பும் ஏற்பாடாது. ஆனால் முறைசாராக் கல்வி மூலமாக பட்டம் பெற்றவர்கள் பிரச்சனை நீதிமன்றத்தில் உள்ளது.

பாலபாரதி: அரசாணை 107ன் படி பழைய எஸ்எஸ்எல்சி முடித்தவர்கள் தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். 1988 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருவதால் அவர்களுடைய சர்வீஸ் 53 ஆண்டுகள் கடந்துவிட்டது. தற்போது 107 அரசாணை படி பிளஸ்டு முடித்து பட்டம் முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் பதவி உயர்வு வழங்கப் படுகிறது. பழைய எஸ்எஸ்எல்சி முடித்தவர்களுக்கு சர் வீஸ் அதிகமாக இருந்தா லும் பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை. ஆனால் பிளஸ்-2 முடித்து பட்டம் பெற்றவர்களுக்கு சர்வீஸ் குறைவாக இருந்தாலும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இதில் வித்தியாசம் பழைய எஸ்எஸ்எல்சிதான். எனவே இந்த அரசாணையில் ஒரு சிறு திருத்தத்தை அரசு கொண்டுவந்தால் தலைமைச் செயலகத்தில் பணி யாற்றி ஒய்வு பெறக் கூடிய வயதில் உள்ளவர்களுக்கு பெரிய நிவாரணமாக இருக் கும். பதவி உயர்வு பெற்றதாக இருக்கும். அதற்கு அமைச்சர் வழிவகை செய்ய வேண்டும்.

அமைச்சர் கே.பி.முனுசாமி: உறுப்பினர் கோரிக்கை வைத்துள்ளார். இந்த பிரச்சனையில் ஏற்கனவே நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உறுப்பி னருக்கு உள்ள உணர்வு போலவே அரசுக்கும் இந்த பிரச்சனையில் உணர்வு இருக்கிறது. யார் வளர்ச்சி யிலும் தடைக்கல்லாக அரசு இருக்காது. சட்டம் மற்றும் நீதிமன்ற தீர்ப்பு என்று வருகிறபோது அரசு கட்டுப்படவேண்டிய சூழ்நிலை இருக் கின்ற காரணத்தால் அரசு இந்த பிரச்சனையை பரிசீலனை செய்து 107 அரசா ணையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு எவ்வாறு நிவாரணம் தரலாம் என்பதை முடிவு செய்யும்.

ஆர்.ராமமூர்த்தி: அரசாணை 107 உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே அரசாணை 107ஐ ரத்து செய்யவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நன்றி:

 

பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்