மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. மிகவும் எதிர்பார்த்த 7-வது சம்பள கமிஷனை பிரதமர் மன்மோகன்சி்ங், அறிவித்து உத்தரவிட்டார். அத்துடன் ராணுவத்திற்கு தனியாக சம்பள கமிஷன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடையப்போகிறார்கள்.
6-வது சம்பள கமிஷன் அறிவிக்கப்பட்டு அதன் பரிந்துரைகள், 2006-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியன்று அமலுக்கு வந்தது. இதன் மூலம் அப்போதைய நிலவரப்படி 35 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைந்தனர். இந்நிலையில் 7-வது சம்பள கமிஷனை பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார்.
இது குறித்து மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "7-வது சம்பள கமிஷன் குழுவின் தலைவர், உறுப்பினர்கள் பெயர் குறித்த விவரம் விரைவி்ல் வெளியிடப்படும். இதற்கான பரிந்துரைகள் அமல்படுத்த 2 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்படும். 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும். இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவர்" என்றார்.
ராணுவத்திற்கு தனியாக சம்பள கமிஷன்
இதற்கிடையே நாட்டின் முதல்முறையாக ராணுவத்தினருக்கு தனியாக சம்பள கமிஷனும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ராணுவ உயரதிகாரிகள், தங்களது சம்பள பிரச்னை குறித்து மத்திய அரசிடம் முறையிட்டனர். இதில் 6-வது சம்பள கமிஷனின் கோரிக்கை குறித்து வலியுறத்தினர். இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 7-வது சம்பள கமிஷனுடன், முதன்முறையாக ராணுவத்தினருக்கான சம்பள கமிஷனும் அறிவிக்கப்பட்டுளளது.
.