- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
26.1.13
23.1.13
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட் டம்
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட் டம் மதுரை அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் வைத்து 20-01-2013 ஞாயிறு மதியம் நடைபெற்றது.
மாநிலத் தலைவர் சு.கயத்தாறு, தலைமையிடச் செயலாளர் ச.வெங்கடேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டச் செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். மாநிலப்பொதுச்செயலாளர் க.இசக்கியப்பன் வேலை அறிக்கையையும், அமைப்புச்செயலாளர் அ.அருணகிரியார் தேர்தல் அறிக்கையையும் முன்மொழிந்தனர். வரவு செலவு அறிக்கையை மாநிலப் பொருளாளர் ஆ.மதலைமுத்து, இணைய செயல்பாடு குறித்து துணைப்பொதுச் செயலாளர் ம.எட்வின் பிரகாஷ் ஆகியோர் பேசினர்.
இக்கூட்டத்திற்கு பின் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் க.இசக்கியப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற் றும் 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் களை பட்டதாரி ஆசிரியர்களாக உட் படுத்த வேண்டும். 10 ஆம் வகுப்பு முடித்த ஆசிரியர் பயிற்சி பட்டயம் வாங்கியவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். விலைவாசி உயர்வு, புதிய பென்சன் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பிப்-20,21 ஆகிய தேதிகளில் நடைபெறும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் 25 ஆயிரம் இடை நிலை ஆசிரியர்கள் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக இசக்கியப்பன் கூறினார்.
.

"நமது முழக்கம்" மாத இதழ் வெளியீட்டு விழா
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க ஏடான "நமது முழக்கம்" மாத இதழ் வெளியீட்டு விழா மதுரை அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் 20-01-2013 ஞாயிறு அன்று நடைபெற்றது.
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் திரு. க. கயத்தாறு தலைமை தாங்கினார். அமைப்புச் செயலாளர் திரு. அ. அருணகிரியார், மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு. ம. எட்வின் பிரகாஷ், தலைமையிடச் செயலாளர் திரு. ச. வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் திரு. க. இசக்கியப்பன் அனைவரையும் வரவேற்றார்.
“புதிய ஆசிரியன்” இதழ் பதிப்பாளர் - ஆசிரியர் பேரா. கே. ராஜூ "நமது முழக்கம்" மாத இதழை வெளியிட்டார். TNPGTA மாநிலத் தலைவர் திரு. G. சுப்பையா முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
திரு. K. தேவராஜன், மேனாள் மாநிலத் தலைவர், TNPTF, திரு. A. சுப்பிரமணியன், மேனாள் பொதுச் செயலாளர், TIAS, திரு. M. குமரேசன், மேனாள் பொதுச் செயலாளர், TIAS, திரு. A. பாலசுப்பிரமணியன், மேனாள் பொருளாளர், TIAS, திரு. பாலசந்தர், TNPTF, திரு. S. நடராஜன், மதுரை மாவட்டச் செயலாளர், TNGEA, திருமதி. A. ஜெயராணி, மாநிலச் செயலாளர், TIAS, திரு. M. பாபு, மாநில தணிக்கையாளர், TIAS ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாநிலப் பொருளாளர் திரு. ஆ. மதலைமுத்து நன்றி கூறினார்.

22.1.13
எம்.பில்., முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் - அரசாணை வெளியீடு
எம்.பில்., முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், இளங்கலையுடன் பி.எட்., பட்டம் பெற்றவர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்படுகின்றனர். பணியில் சேர்ந்த பின், முதுகலை மற்றும் எம்.எட்., படித்தால், இரு ஊக்க ஊதியம் பெற தகுதி பெறுவர். ஆனால், முதுகலை பட்டம் பெற்று, எம்.பில்.,-ஆய்வு படிப்பு, பட்டம் பெற்றால், ஒரு ஊக்க ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டது.
தமிழகத்தில் எம்.பில்., பட்டம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என பல ஆசிரியர் சங்கங்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில், எம்.பில்., முடித்தவர்களுக்கும், ஊக்க ஊதியம் வழங்கப்படும் என, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, தற்போது பணியில் சேரும் எம்.பில்., பட்டதாரி ஆசிரியர்களுக்கு, அடிப்படை -.9,300 ரூபாய், மற்றும் தர ஊதியத்தில் -.4,600 ரூபாயில், 6 சதவீதம் வரை ஊக்க ஊதியம் வழங்கப்படும். குறைந்தது, ஒரு ஆசிரியரின் சம்பளம், 1500 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. இதுகுறித்து பட்டதாரி ஆசிரியர்கள் கூறுகையில், "ஆசிரியர்களின் பல ஆண்டுகள் கோரிக்கையை, அரசு தற்போது நிறைவேற்றியுள்ளது. இந்த உத்தரவால், மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் எம்.பில்., பட்டதாரி ஆசிரியர்கள் பயனடைவர்,'' என்றனர்.

தலைப்புகள்:
அரசாணைகள்,
அறிவிப்புகள்,
தோழமை இயக்கச் செய்திகள்
17.1.13
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகள் குழு அறிக்கை தாமதம்
தமிழகத்தில் 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு 6வது ஊதியக்குழு கடந்த 1.1.2006 முதல் அமல்படுத்தப்பட்டது. 1.1.2007 முதல் கணக்கிட்டு ஊதிய நிலுவைத் தொகை வழங்கப்படும். நிலுவைத் தொகை மூன்று தவணைகளாக வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஊதியக் குழுவில் பல்வேறு துறைகளுக்கு முரண்பாடுகள் இருப்பதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டின. ஊதிய முரண்பாடுகளை களைய ஒரு நபர் குழுவை அரசு நியமித்தது. இதிலும் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் இடையே திருப்தி ஏற்படவில்லை.
இதைத் தொடர்ந்து முரண்பாடுகளை களைவதற்காக அரசு செயலாளர் (செலவுகள்) கிருஷ்ணன் தலைமையில் உறுப்பினர்கள் அரசு கூடுதல் செயலாளர் (நிதித்துறை) பத்மநாபன், இணை செயலாளர் (நிதித்துறை) உமாநாத் அடங்கிய மூன்று நபர் குழுவை தமிழக அரசு அமைத்தது. பத்மநாபன் ஓய்வு பெற்றதால் அரசு கூடுதல் செயலாளர் (நிதி) சாந்தி உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
இந்த மூன்று நபர் குழு, கடந்த ஜூலை 9, 10, 11 ஆகிய தேதிகளில் ஊதிய முரண்பாடு தொடர்பாக 240க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள், தனி நபர்களிடம் ஆலோசனை நடத்தியது. இதில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் பங்கேற்றன.
அப்போது, இடைநிலை ஆசிரியர்களின் சாதாரண நிலை ஊதியம் 5200 & 20200, தர ஊதியம் 2800 பே பாண்ட் 1 ஆக உள்ளது. இதை பே பாண்ட் 2 ஆக மாற்றி 9300 & 34,800 தர ஊதியம் 4,200 வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் ஊதிய முரண்பாடுகளை களைதல் குழுவின் அறிக்கை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் குழுவின் பதவிக்காலம் கடந்த அக்.31ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. பதவிக்காலம் முடிந்து 3வது மாதம் பிறந்து விட்ட நிலையில் தமிழக அரசிடம் இதுவரை அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.
இதுகுறித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் கயத்தாறு, பொதுச் செயலாளர் இசக்கியப்பன், துணைப் பொதுச் செயலாளர் எட்வின் பிரகாஷ், பொருளாளர் மதலைமுத்து ஆகியோர் கூறுகையில், "ஊதிய முரண்பாடுகள் குழு தனது அறிக்கையை விரைவில் அரசிடம் சமர்ப்பித்து ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்", என்றார்கள்.
நன்றி:

ஊதிய குழு தகவல்கள்,
கோரிக்கைகள்,
நாளிதழ் செய்திகள்
11.1.13
தஇஆச மாநில பொதுக்குழு அழைப்பிதழ்
.
இடம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகம், மதுரை - 1.
நாள்
20.01.2013, மாலை 3.00 மணி
தலைமை
திரு. சு. கயத்தாறு, மாநிலத் தலைவர்
திரு. ச. வெங்கடேசன், தலைமையிடச் செயலாளர்.
முன்னிலை
திருமதி. அ. ஜெயராணி, மாநிலச் செயலாளர்.
திரு. செ. பாபு, மாநிலத் தணிக்கையாளர்
திரு. த.மு பாக்கியராஜ், மாநிலத் துணைத் தலைவர்
திரு. ப. நவநீத சுந்தர், மாநிலத் துணைத் தலைவர்
திரு. செ. அப்பாத்துரை, மாநில இணைச் செயலாளர்
திரு. பெ. ஸ்டீபன், மாநில இணைச் செயலாளர்

வரவேற்புரை
திரு. பாலமுருகன், மதுரை மாவட்டச் செயலாளர்
வேலை அறிக்கை
திரு. க. இசக்கியப்பன், பொதுச் செயலாளர்
தேர்தல் அறிக்கை
திரு. அ. அருணகிரியார், அமைப்புச் செயலாளர்
வரவு-செலவு அறிக்கை
திரு. ஆ. மதலைமுத்து, மாநிலப் பொருளாளர்
இணைய செயல்பாடு
திரு. ம. எட்வின் பிரகாஷ், துணைப் பொதுச் செயலாளர்
பொருள்
- 2012-13 உறுப்பினர் சேர்க்கை
- “நமது முழக்கம்” - இதழ் சந்தா
- உட்படுத்துதல்
- மாநில இணைப் பொறுப்பாளர் தேர்வு
- பிப்ரவரி-20, 21 அகில இந்திய வேலை நிறுத்தம்
- பொதுக்குழு உறுப்பினர் கொணர்வன
- பொதுச் செயலாளர் கொணர்வன
அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் தவறாது வருகை தந்திட, அன்புடன் அழைக்கின்றோம்.
அன்புடன்,
க. இசக்கியப்பன்,
பொதுச் செயலாளர்
.
அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு வகுப்பு மாலை 5 மணிக்குள் முடிக்க உத்தரவு - மாணவிகள் பாதுகாப்பு கருதி நடவடிக்கை
"பள்ளிகளில் மாலை நேர சிறப்பு வகுப்புகளை, 5:00 மணிக்குள் முடித்து, மாணவியரை பத்திரமாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும்" என, தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
டில்லியில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவி இறந்த சம்பவத்துக்கு பின், தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவியர் உட்பட்ட, பெண்கள் அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்ய, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.அதன்படி, பள்ளிகளில் நடைபெற்று வரும் மாலை நேர சிறப்பு வகுப்புகளும், கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவு:
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2பொதுத்தேர்வுக்கு, மாணவ, மாணவியரை தயார் செய்ய, காலை மற்றும் மாலை வேளைகளில், சிறப்பு வகுப்புகளை பள்ளிகள் நடத்துகின்றன. சில பள்ளிகளில், இரவு, 8:00 மணி வரை கூட, சிறப்பு வகுப்புகள் நடப்பதாக தகவல் வந்துள்ளது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, போக்குவரத்து வசதி கருதி, மாலை நேர சிறப்பு வகுப்புகளை, 5:00 மணிக்குள் முடித்து, அவர்களின் இருப்பிடங்களுக்கு பத்திரமாக அனுப்ப வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் வாயிலாக, பள்ளி தலைமை ஆசிரியர்கள், தனியார் பள்ளி முதல்வர்களுக்கு, இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அரசு உத்தரவு,
கல்வித் துறை செய்திகள்,
நாளிதழ் செய்திகள்
10.1.13
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, பொங்கல் போனஸ் வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, பொங்கல் போனஸ் வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள அரசுக்குறிப்பு:
கடந்த 2011-12ம் ஆண்டிற்கு, சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த, அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு, 3,000 ரூபாய் என்ற உச்ச வரம்பிற்குட்பட்டு, 30 நாட்கள் சம்பளத்திற்கு இணையாக, கூடுதல் சம்பளம் வழங்கப்படும். மேலும், ஏ மற்றும் பி பிரிவைச் சேர்ந்த, அலுவலர்கள், மற்றும் ஆசிரியர்கள், நிதியாண்டில் குறைந்த பட்சம், 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணியாற்றி, மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் பெறும், முழு நேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்களுக்கு, 1,000 ரூபாய் சிறப்பு போனஸ் வழங்கப்படும்.
தொகுப்பூதியம் பெறுவோர், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், பஞ்சாயத்து உதவியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், ஒப்பந்தம் மற்றும், தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள், தினக்கூலி மற்றும் தினக்கூலிகளாக பணியாற்றி, நிரந்தரம் செய்யப்பட்டவர்களும், இந்த, 1,000 ரூபாய் சிறப்பு போனசை பெறுவர்.
உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் அலுவலர், ஆசிரியர்கள், பல்கலைக் கழக மானியக் குழு, அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக்குழு, இந்திய வேளாண் ஆய்வு கழகம் மற்றும் அனைத்திந்திய பணி விதிமுறைகளின் கீழ், சம்பள விகிதம் பெறுவோருக்கும், இந்த போனஸ் வழங்கப்படும்.
ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், தலையாரி, கர்ணம் ஆகியோருக்கு, 500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படும். இதனால், அரசுக்கு, 311 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசாணை எண்: 5 நாள்: 09-01-2013

பொங்கல் பரிசு
தமிழ் உட்பட அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு 31.12.2012 முடிய தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயாரிக்க உத்தரவு
சென்னை-6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 97703/சி5/இ1/2012 நாள் 07.01.2013. இல் கூறியுள்ள “தமிழாசிரியர் பதவி உயர்வுக்கு 31.12.1998 முடியவும் இதர பாட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு 31.12.2012 முடியவும்” என்று உள்ளதை “தமிழ் உட்பட அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு 31.12.2012 முடியவும்” என்று திருத்தி வாசிக்கவும்.
.
.
தலைப்புகள்:
அறிவிப்புகள்,
பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல்
9.1.13
பொங்கல் பரிசு அறிவிப்பு வரவில்லை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றம்
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் பரிசுக்கான அறிவிப்பு வராததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டை பொறுத்தவரை ஜனவரி மாதம் 1ம் தேதி பொங்கல் பரிசுக்கான அரசு உத்தரவு வெளியிடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை பொங்கல் பரிசுக்கான அரசு ஆணை வெளியிடவில்லை. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே, உடனடியாக பொங்கல் பரிசுக்கான அரசாணையை அரசு வெளியிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசாக 3,500 ரூபாயும், ஏ, பி பிரிவு ஊழியர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசாக 1,500 ரூபாயும் வழங்க வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் ராஜ மார்த்தாண்டம், செயலாளர் சரவணன், பொருளாளர் ஆறுமுகதாஸ், கல்வி மாவட்ட செயலாளர் சாம்ராஜ், அகஸ்டின் ராஜன், செல்வ சுந்தர்ராஜ், மாநில தணிக்கையாளர் பாபு ஆகியோர் தெரிவித்தனர்.

3.1.13
எளிய அறிவியல் சோதனைகள்: குறுவளமையங்களில் 19ம் தேதி பயிற்சி
தமிழகத்தில் முப்பருவ பாடத் திட்டம், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை மாணவ மாணவியருக்கு எளிய அறிவியல் சோதனைகளும் பாட திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
எளிய அறிவியல் சோதனைகள் தொடக்க நிலை பயிற்சி வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்று 6 பேர் கருத்தாளர்களாகவும், மாவட்டத்திற்கு 4 பேர் பங்கேற்பாளர்களாகக் கொண்டு 128 பேருக்கு என்று சென்னை மாநில கல்வியியல் மேலாண்மை பயிற்சி கூடத்தில் வரும் 7ம் தேதி பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
தொடர்ந்து அனைத்து மாவட்ட தலைமையிடங்களில் 10ம் தேதியும், குறுவளமையங்களில் 19ம் தேதியும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற்றவர்களுக்கு 2ம் கட்ட பயிற்சியும் அளிக்கப்படும். அனைத்து தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், அனைத்து உயர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும்.
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டில் கல்வி இணை செயல்பாடுகளில் பயிற்சி பெற்ற சிறப்பு ஆசிரியர்களை அதிக எண்ணிக்கையில் மாவட்ட அளவில் நடக்கின்ற பயிற்சியிலும், குறுவள பயிற்சியிலும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அனைத்து கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபலமான இடுகைகள்
-
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி ப...
-
பிற்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, சீர்மரபினர் இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இணையதளம் மூலம் இந்தாண்டு உதவி தொகை வழங்கப்படும...
-
ஏற்கனவே அறிவித்தபடி, பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா காலணி மற்றும் புத்தகப் பைகளை வழங்க, ரூ.491 கோடியை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு...
-
1. அறிவியல் மையங்கள், கண்காட்சி ஆகியவை அகச் சிந்தனையை வளர்க்கும் சில வழிகள் என்று கூறியவர் - கூவர். 2. மாணவனின் சிந்தனை வினாவிற்கான விடைகள...
-
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், கன்னியாகுமரி மாவட்டக் கிளையின் வலைத்தளம் இது. சங்கத்தின் செயல்பாடுகள் இங்கே வெளியிடப்படும்.
-
பொது மாறுதல் கலந்தாய்வுக்கு(கவுன்சிலிங்) விண்ணப் பங்கள் பெறுவது நிறுத்தப்பட்டுள்ளதால் ஆசிரிய, ஆசிரியைகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ...
-
பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம். தமிழ்நாட்டிற்கும், தமிழ்ச் சமூகத்திற்கும், தமிழுக்கும் தன்னிகரற்ற த...