தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

22.1.13

எம்.பில்., முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் - அரசாணை வெளியீடு

எம்.பில்., முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், இளங்கலையுடன் பி.எட்., பட்டம் பெற்றவர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்படுகின்றனர். பணியில் சேர்ந்த பின், முதுகலை மற்றும் எம்.எட்., படித்தால், இரு ஊக்க ஊதியம் பெற தகுதி பெறுவர். ஆனால், முதுகலை பட்டம் பெற்று, எம்.பில்.,-ஆய்வு படிப்பு, பட்டம் பெற்றால், ஒரு ஊக்க ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டது.

தமிழகத்தில் எம்.பில்., பட்டம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என பல ஆசிரியர் சங்கங்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில், எம்.பில்., முடித்தவர்களுக்கும், ஊக்க ஊதியம் வழங்கப்படும் என, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, தற்போது பணியில் சேரும் எம்.பில்., பட்டதாரி ஆசிரியர்களுக்கு, அடிப்படை -.9,300 ரூபாய், மற்றும் தர ஊதியத்தில் -.4,600 ரூபாயில், 6 சதவீதம் வரை ஊக்க ஊதியம் வழங்கப்படும். குறைந்தது, ஒரு ஆசிரியரின் சம்பளம், 1500 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. இதுகுறித்து பட்டதாரி ஆசிரியர்கள் கூறுகையில், "ஆசிரியர்களின் பல ஆண்டுகள் கோரிக்கையை, அரசு தற்போது நிறைவேற்றியுள்ளது. இந்த உத்தரவால், மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் எம்.பில்., பட்டதாரி ஆசிரியர்கள் பயனடைவர்,'' என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்