தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

10.1.13

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, பொங்கல் போனஸ் வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, பொங்கல் போனஸ் வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள அரசுக்குறிப்பு
:
கடந்த 2011-12ம் ஆண்டிற்கு, சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த, அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு, 3,000 ரூபாய் என்ற உச்ச வரம்பிற்குட்பட்டு, 30 நாட்கள் சம்பளத்திற்கு இணையாக, கூடுதல் சம்பளம் வழங்கப்படும். மேலும், ஏ மற்றும் பி பிரிவைச் சேர்ந்த, அலுவலர்கள், மற்றும் ஆசிரியர்கள், நிதியாண்டில் குறைந்த பட்சம், 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணியாற்றி, மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் பெறும், முழு நேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்களுக்கு, 1,000 ரூபாய் சிறப்பு போனஸ் வழங்கப்படும்.

தொகுப்பூதியம் பெறுவோர், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், பஞ்சாயத்து உதவியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், ஒப்பந்தம் மற்றும், தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள், தினக்கூலி மற்றும் தினக்கூலிகளாக பணியாற்றி, நிரந்தரம் செய்யப்பட்டவர்களும், இந்த, 1,000 ரூபாய் சிறப்பு போனசை பெறுவர்.

 உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் அலுவலர், ஆசிரியர்கள், பல்கலைக் கழக மானியக் குழு, அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக்குழு, இந்திய வேளாண் ஆய்வு கழகம் மற்றும் அனைத்திந்திய பணி விதிமுறைகளின் கீழ், சம்பள விகிதம் பெறுவோருக்கும், இந்த போனஸ் வழங்கப்படும்.

ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், தலையாரி, கர்ணம் ஆகியோருக்கு, 500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படும். இதனால், அரசுக்கு, 311 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசாணை எண்: 5 நாள்: 09-01-2013
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்