தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

23.1.13

"நமது முழக்கம்" மாத இதழ் வெளியீட்டு விழா

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க ஏடான "நமது முழக்கம்" மாத இதழ் வெளியீட்டு விழா மதுரை அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் 20-01-2013 ஞாயிறு அன்று நடைபெற்றது.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் திரு. க. கயத்தாறு தலைமை தாங்கினார். அமைப்புச் செயலாளர் திரு. அ. அருணகிரியார், மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு. ம. எட்வின் பிரகாஷ், தலைமையிடச் செயலாளர் திரு. ச. வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் திரு. க. இசக்கியப்பன் அனைவரையும்  வரவேற்றார்.

“புதிய ஆசிரியன்” இதழ் பதிப்பாளர் - ஆசிரியர் பேரா. கே. ராஜூ "நமது முழக்கம்" மாத இதழை வெளியிட்டார். TNPGTA மாநிலத் தலைவர் திரு. G. சுப்பையா முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

திரு. K. தேவராஜன், மேனாள் மாநிலத் தலைவர், TNPTF, திரு. A. சுப்பிரமணியன், மேனாள் பொதுச் செயலாளர், TIAS, திரு. M. குமரேசன், மேனாள் பொதுச் செயலாளர், TIAS, திரு. A. பாலசுப்பிரமணியன், மேனாள் பொருளாளர், TIAS, திரு. பாலசந்தர், TNPTF, திரு. S. நடராஜன், மதுரை மாவட்டச் செயலாளர், TNGEA, திருமதி. A. ஜெயராணி, மாநிலச் செயலாளர், TIAS, திரு. M. பாபு, மாநில தணிக்கையாளர், TIAS ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாநிலப் பொருளாளர் திரு. ஆ. மதலைமுத்து நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்