தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

9.1.13

பொங்கல் பரிசு அறிவிப்பு வரவில்லை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றம்

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் பரிசுக்கான அறிவிப்பு வராததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டை பொறுத்தவரை ஜனவரி மாதம் 1ம் தேதி பொங்கல் பரிசுக்கான அரசு உத்தரவு வெளியிடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை பொங்கல் பரிசுக்கான அரசு ஆணை வெளியிடவில்லை. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே, உடனடியாக பொங்கல் பரிசுக்கான அரசாணையை அரசு வெளியிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசாக 3,500 ரூபாயும், ஏ, பி பிரிவு ஊழியர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசாக 1,500 ரூபாயும் வழங்க வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் ராஜ மார்த்தாண்டம், செயலாளர் சரவணன், பொருளாளர் ஆறுமுகதாஸ், கல்வி மாவட்ட செயலாளர் சாம்ராஜ், அகஸ்டின் ராஜன், செல்வ சுந்தர்ராஜ், மாநில தணிக்கையாளர் பாபு ஆகியோர் தெரிவித்தனர்.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்