தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

31.3.12

நாடு முழுவதும் ஏப். 20ல் ஜாதி வாரி கணக்கெடுப்பு துவக்கம்


நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு ஏப்ரல் 20ம் தேதி தொடங்குகிறது. இதற்காக பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு கையடக்க கணினி வழங்கப்படுகிறது. கணக்கெடுப்பு பணிக்காக அவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என அரசு வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக, பொருளாதார, சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த நாடாளுமன்றத்தில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏப்ரல் 20ம் தேதி முதல் நாடு முழுவதும் கணக்கெடுப்பு துவங்குகிறது. 40 நாள் நடைபெற உள்ள கணக்கெடுப்பு பணியில் கணக்கெடுப்பாளர்கள், கண்காணிப்பாளர்கள், மாஸ்டர் டிரெய்னர்ஸ் நியமிக்கப்பட உள்ளனர்.

சென்னையில் பயிற்சி 
மாஸ்டர் டிரெய்னர்களுக்கு சென்னை மறைமலை நகரில் உள்ள மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் பயிற்சி அளிக்கப்படும். பின்னர். மாஸ்டர் டிரெய்னர்ஸ் கணக்கெடுப்பாளர்கள், கண்காணிப்பாளர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். கணக்கெடுப்பில் குடியிருப்பாளர்களின் அனைத்து விவரங்களையும் பெறும் வகையில், கேள்வி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்புக்கு செல்வோருக்கு உதவியாக கையடக்க கம்ப்யூட்டருடன் (டேப்ளட் பிசி) அதை இயக்கவும் உதவியாளர் நியமிக்கப்பட உள்ளனர். கணக்கெடுப்பாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொதுமக்கள் அளிக்கும் பதில்களை உதவியாளர்கள் உடனுக்குடன் பதிவு செய்வர்.

காகிதத்தில் குறிக்க வேண்டியதில்லை. இந்த பதிவுகள் அனைத்தும் உடனே சென்னை மற்றும் டெல்லியில் உள்ள தலைமை கணக்கெடுப்பு அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்காக தேசிய தகவல் மையம் சார்பில் இணையதள வசதியும் செய்யப்பட்டுள்ளது. கணக்கெடுப்பாளர்கள் கணக்கெடுத்த பின் அடுத்த நாள் கண்காணிப்பாளர்கள் அப்பகுதிக்கு சென்று விவரங்களை சரிபார்ப்பார்கள். கணக்கெடுப்பு நடத்திய வீடுகளின் முகப்பில் ஸ்டிக்கர் ஒட்டப்படும். எனவே கணக்கெடுப்பு அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பாளர்கள் தினமும் பணிக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும்.

ரூ.15000 சம்பளம் 

கணக்கெடுப்புக்குத் தேவையான கையடக்க கம்ப்யூட்டர், ஸ்டிக்கர், அட்டை உள்ளிட்ட டூல் கிட்ஸ் மற்றும் கணக்கெடுப்பாளர்களுக்கான பணி நியமன உத்தரவு ஆகியவை வரும் 15ம் தேதி வழங்கப்படும். கடந்தாண்டு நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் இக்கணக்கெடுப்பிற்கு தேர்வு செய்யப்படுகின்றனர். 40 தினங்களில் ரூ.15 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் வழங்கப்படும் என தெரிகிறது. வீடுகளில் வசிப்பவர்கள் கூறும் தகவலின் அடிப்படையில் சாதி, பொருளாதார கணக்கெடுப்பு விவரங்கள் தெரிய வரும். இதனடிப்படையில் மக்களின் பொருளாதார வசதியை அறிந்து வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பட்டியல் தயாரிக்க உதவும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி:

ஆசிரியர் தேர்வு முறையில் கொள்கை முடிவு மாற்றம்: இனி ஒரே தேர்வு தான்!

இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில், கொள்கை முடிவை மாற்றம் செய்து, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

"ஒரே ஒரு தேர்வு தான்"

'தகுதித் தேர்வு மூலமே, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்' என, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, நேற்று சட்டசபையில் அறிவித்தார். ஆசிரியர் தேர்வு முறை கொள்கையில், தமிழக அரசு திடீரென மாற்றம் செய்துள்ளது, தேர்வு எழுத உள்ளவர்களை, மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு முன் வரை, "இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருமே, ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டும்; இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம், மற்றொரு போட்டித் தேர்வை நடத்தி, அதன் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்யும் என, பள்ளிக்கல்வி அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் கூறியிருந்தார்.
 

புதிய அரசாணை விவரம்:
கொள்கை மாற்றம் குறித்து, கடந்த 28ம் தேதியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:
*கடந்த ஆண்டு நவ., 15ம் தேதியிட்ட அரசாணை குறித்து, தெளிவுரை வழங்கும் வகையில், இந்த அரசாணை வெளியிடப்படுகிறது.
*இதன்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறை கொள்கையை, தமிழக அரசு மாற்றியுள்ளது. இவர்களுக்கான போட்டித் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு என்ற பெயரில் நடக்கும்.
*பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை, ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், இன சுழற்சி முறை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் இருக்கும்.
*இடைநிலை ஆசிரியர்களைப் பொறுத்தவரை, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால், மாநில அளவிலான வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலேயே, தேர்வு செய்யப்படுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அறிவிப்பு புதிதல்ல...:

இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, "ஆசிரியர் தகுதித் தேர்வு என்ற, போட்டித் தேர்வு மூலம் தான், ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என, கடந்த நவம்பர் 15ம் தேதியிட்ட அரசாணையிலேயே கூறப்பட்டுள்ளது. இது ஒன்றும் புதிய அறிவிப்பு இல்லை,'' எனத் தெரிவித்தனர். இருப்பினும் இது செயல்பாட்டிற்கு வரவில்லை. இரு தேர்வுகளை நடத்துவது கடினமாக இருக்கும் என்றும்; ஆசிரியர் தகுதித் தேர்வையே, முக்கிய தேர்வாகக் கருதி, ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும்; பல தரப்பினரும் வலியுறுத்தி வந்துள்ளனர். அது மட்டுமல்லாமல், ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையில், தெளிவான விளக்கம் கேட்டு, ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழக அரசுக்கு கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 25ம் தேதி, திருச்சியில், சில ஆசிரியர் சங்க பிரதிநிதிகளும், ஆசிரியர்களும், அமைச்சர் சிவபதியை சந்தித்து, இரு வகையான தேர்வு முறைகள் குறித்து கேட்டுள்ளனர். அதற்கு, "விரைவில் நல்ல அறிவிப்பு வரும்,'' எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து தான், சட்டசபையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 

மதிப்பெண்கள் தான் முக்கியம்:
இந்த அரசாணை குறித்து, கல்வித் துறை வட்டாரங்கள் கூறியதாவது: இடைநிலை ஆசிரியர்களைப் பொறுத்தவரை, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். பதிவு மூப்பு அடிப்படையில், அவர்கள் தேர்வு செய்யப்படுவர். பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை, டி.இ.டி., தேர்வில், 60 சதவீத மதிப்பெண்கள் வாங்கினாலேயே, அவர்களுக்கு வேலை உறுதி எனக் கூற முடியாது. இவர்களில், அதிகபட்ச மதிப்பெண்கள் பெறுபவர்கள் மட்டுமே, இன சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு வட்டாரங்கள் தெரிவித்தன.

கால அவகாசம் நீட்டிப்பு:

கடந்த 22ம் தேதியில் இருந்து, மாநிலம் முழுவதும், டி.இ.டி., தேர்வுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 11 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏப்., 4ம் தேதியுடன், விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி முடிகிறது.இந்நிலையில், ஆசிரியர் தேர்வுக்கு, டி.இ.டி., தேர்வையே பிரதான தேர்வாக தமிழக அரசு அறிவித்திருப்பதால், இதுவரை விண்ணப்பம் செய்யாதவர்கள் கூட, இனி விண்ணப்பிப்பர். எனவே, அனைவரும் விண்ணப்பம் செய்ய, போதுமான கால அவகாசம் வழங்க, டி.ஆர்.பி., தீர்மானித்துள்ளது. அதன்படி, விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள், ஏப்., 10 அல்லது 12ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு, வரும் 2ம் தேதிக்குள் வெளியாகும்.

நன்றி:

 

30.3.12

பார்வையற்ற 10 மாற்றுத்திறனாளிக்கு இடைநிலை ஆசிரியர் பணி நியமன ஆணை


தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டம் "கிளவுடு கம்ப்யூட்டிங்"

 தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டமான, அரசு துறைகளில், "கிளவுடு கம்ப்யூட்டிங்' முறை சாத்தியமானால், தனியார் நிறுவனங்களை விட, எளிதில் பணிகள் நடக்கும் இடமாக, அரசு அலுவலகங்கள் மாறிவிடும். ஆனால், இந்தத் திட்டத்தை அமலாக்குவது அத்தனை சுலபமல்ல. 

கணினி மயம்
இதுவரை, தொழில் நிறுவனங்களிடையே மட்டுமே பிரபலமாக இருந்த, "கிளவுடு கம்ப்யூட்டிங்' முதல் முறையாக, அரசுத் துறையில் பயன்படுத்தப்பட உள்ளது. இணையம் வசதி, ஒரு துறை சம்பந்தப்பட்ட சேவையை மட்டும் பெறுவது; "கிளவுடு கம்ப்யூட்டிங்' பல்வேறு துறைகளின் வசதிகளையும் பெற்றுத் தர கூடியது. முதலில், சம்பந்தப்பட்ட துறைகளை கணினி மயமாக்க வேண்டும். பிறகு, அனைத்து துறைகளுக்கும், பொதுவான, "சர்வர்' ஒன்று உருவாக்கப்படும். அதில், துறைகளின் சேவை, தகவல், ஆவணங்கள் உள்ளிட்டவை பதியப்படும். அவற்றை, சம்பந்தப்பட்ட துறையினர் மட்டுமின்றி, இணைப்பில் உள்ள பிற துறையினரும் கையாள முடியும்.
 
லாபம் என்ன

 திட்டம் நடைமுறைக்கு வந்தால், ஒவ்வொரு சேவைக்கும் மக்கள், ஒவ்வொரு அலுவலகத்தின் படியேற வேண்டிய அவசியம் இல்லை. உதாரணமாக, நில உரிமை தொடர்பாக சர்ச்சை வந்தால், பத்திரப்பதிவு அலுவலகம் சென்று, வில்லங்கச் சான்று வாங்கி, அதை தாசில்தாரிடம் காட்ட வேண்டும். "கிளவுடு கம்ப்யூட்டிங்' முறையில், தாசில்தார், அவரது அலுவலகத்திலிருந்தே, வில்லங்கச் சான்றிதழைப் பார்வையிட முடியும் என்பதால், இரண்டு அலுவலகங்களுக்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல, ஒருவர் கடைசியாக கட்டிய வரி; அவர் மீது இருக்கக் கூடிய வழக்குகள்; அவர் பெயரில் உள்ள சொத்துக்கள்; சம்பந்தப்பட்ட நபர், இருக்கிறாரா, இறந்துவிட்டாரா என, ஏராளமான தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். இதனால், நேர விரயம் தவிர்க்கப் படுவதோடு, மக்களுக்கும், அரசுக்கும் இடையிலான பரிமாற்றங்கள் எளிதாகும். அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகளில், வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும். 

கனவுத் திட்டம்
இது, முதல்வர் ஜெயலலிதாவின் கனவுத் திட்டம் மட்டுமல்லாது, ஒரு முன்னோடித் திட்டமும் கூட, ஆன்-லைன் சேவையில், முன்னணியில் உள்ள குஜராத் அரசியலில் கூட, இத்திட்டம் செயல்படுப் படவில்லை. திட்டம் நடைமுறைக்கு வந்தால், பிற மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் ஒரு வழிகாட்டியாக, தமிழகம் திகழ முடியும். இத்திட்டத்தை செயல்படுத்துவதில், தாம் உறுதியாக உள்ளதாக, தகவல் தொழில்நுட்பத் துறை அதிபர் ஒருவரிடம், முதல்வர் தெரிவித்துள்ளார். அவருடைய தனிப்பட்ட ஆர்வமும், மேற்பார்வையும் இருப்பதால், இத்திட்டம் நிறைவேறுவது சாத்தியமே.

ஒருங்கிணைப்பு கடினம்
ஆனால், திட்டத்தை நடைமுறைப்படுத்த, சம்பந்தப்பட்ட துறைகளின் முழு ஒத்துழைப்பு தேவை. தகவல்களைப் பரிமாறுவதில், துறைகளுக்குள் கருத்து வேறுபாடும், மோதலும் ஏற்படும் என, அஞ்சப்படுகிறது. ஆவணத்தின் ரகசியத் தன்மை போய்விடும்; தங்களின் அதிகாரம் பறிக்கப்படும் என, அலுவலர்கள் பயமுறுத்தலாம். ஆனால், ஒவ்வொரு சேவைக்கும், தங்களுக்கு கிடைத்து வந்த மாமூல் பாதிக்கப்படும் என்ற அச்சமே, உண்மையான காரணம் என, தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

எப்போது துவங்கும்
இப்போது தான், திட்டத்துக்கு அடித்தளமே போடப்பட்டுள்ளது. துறைகளின் கணினி மயமாக்கல் முடிந்த பின் தான், "கிளவுடு கம்ப்யூட்டிங்' கொண்டு வர முடியும். அதற்கு எப்படியும், இரண்டு ஆண்டுகளாவது ஆகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
 
செய்யப் போவது யார்

மிகப் பெரிய திட்டம் என்பதால், இதை வடிவமைத்து, செயல்படுத்தும் பணி, தனியார் நிறுவனங்களுக்கே கொடுக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், தமிழக அரசின் மின் ஆளுமை நிறுவனமான, "எல்காட்' அல்லது தேசிய தகவல் மையமான, "நிக்' மூலம், இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது. சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான, "கிளவுடு கம்ப்யூட்டிங்' வசதியை, ஏற்கனவே, "இயான்' என்ற பெயரில், டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனமும், இதில் நிபுணத்துவம் பெற்றது.

நன்றி:

 

29.3.12

ஆசிரியர் தகுதி தேர்வு: 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்


ஆசிரியர் தகுதி தேர்வு எழுத தமிழகம் முழுவதும் பல லட்சம் பேர் எழுதுகின்றனர். விண்ணப்பம் வாங்க கூட்டம் அலைமோதுவதைத் தொடர்ந்து 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்பதை மேலும் 8 நாட்கள் நீட்டித்து 12ஆம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

பிளஸ்-2 முடித்து டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித் தேர்வு நடத்துகிறது. 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற விரும்புபவர்கள் தகுதித் தேர்வில் வெற்றி காண வேண்டும்.

இத்தேர்வில் 60 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் பெறுபவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த தகுதித்தேர்வு ஜூன் மாதம் 4ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பம் கடந்த 22ஆம் தேதி முதல் வினியோகம் செய்யப்படுகிறது. விண்ணப்பிக்க 4ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆசிரியர் தகுதி தேர்வு எழுத தமிழகம் முழுவதும் பல லட்சம் பேர் தயாராகி வருகிறார்கள். விண்ணப்பம் வாங்க கூட்டம் அலைமோதியது. முதல் கட்டமாக 4 லட்சம் விண்ணப்ப படிவம் அச்சடித்து வழங்கப்பட்டது. அவை அனைத்தும் ஒரே நாளில் விற்பனையானது. இதையடுத்து விண்ணப்ப விற்பனை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் மேலும் 8 லட்சம் விண்ணப்பம் அச்சடித்து வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 16 லட்சம் விண்ணப்பம் அச்சடிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் தொடர்ந்து விண்ணப்பம் வாங்கி செல்வதால் விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்க தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. 4ஆம் தேதி மாலை 5.30 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்பதை மேலும் 8 நாட்கள் நீட்டித்து 12ஆம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

நன்றி:
 

28.3.12

நடுரோட்டில் ஆசிரியர் தம்பதியை தாக்கிய தர்மபுரி டிஎஸ்பி-பொய் வழக்கு மிரட்டல் வேறு!

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பம் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாக கூறி, தர்மபுரியில் ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பட்டதாரி ஆசிரியரை நடுரோட்டில் டிஎஸ்பி கன்னத்தில் அறைந்தார். அதைத் தடுக்க வந்த அவரது மனைவியையும் பிடித்து கீழே தள்ளிவிட்டார்.

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பம் தர்மபுரி மாவட்ட கல்வி அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பங்கள் வாங்குவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஆண், பெண் பட்டதாரிகள் அதிகாலை முதலே வந்திருந்தனர். இதனால் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில் விண்ணப்பங்கள் விற்று தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சிலர் விண்ணப்பங்களை கூடுதல் விலைக்கு வெளியே விற்பது தெரியவந்தது.

இதையடுத்து விண்ணப்பம் வாங்க வந்து காத்திருந்தவர்களுக்கும் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எங்களுக்கு விண்ணப்பம் தர மறுக்கிறீர்கள், ஆனால் வெளியில் தாராளமாக கூடுதல் விலைக்கு விற்கிறார்களே என்று அவர்கள் வாக்குவாதம் செய்தனர். பின்னர் அவர்கள் விண்ணப்பம் வழங்கும் மையத்தின் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த தர்மபுரி நகர டி.எஸ்.பி. சந்தானபாண்டியன், மறியலை கைவிட்டு கல்வி அலுவலகத்திற்கும் வருமாறு அவர்களை அழைத்தார். அதற்கு ஒரு ஆசிரியை வர முடியாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது டி.எஸ்.பி. சந்தானபாண்டியனுக்கும், அந்த ஆசிரியைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைடுத்து அந்த ஆசிரியையை போலீசார் பிடித்து தள்ளி அப்புறப்படுத்தினர்.

இதை அந்த ஆசிரியையுடன் வந்த அவரது கணவர் கண்டித்தார். அப்போது ஆத்திரமடைந்த டி.எஸ்.பி. சந்தானபாண்டியன் அந்த ஆசிரியரின் கன்னத்தில் அறைந்தார்.

இதற்கு அந்த ஆசிரியர் எதிர்ப்புத் தெரிவிக்கவே அவரை டி.எஸ்.பி. சந்தாபாண்டியன் மீண்டும் தாக்கினார். கணவரை மீட்க வந்த ஆசிரியையும் டி.எஸ்.பி. கழுத்தை பிடித்து கீழே தள்ளினார். ஆசிரியை தடுமாறி கீழே விழுந்தார்.

அப்படியும் விடாமல் அந்த ஆசிரியரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை குடிபோதையில் இருந்ததாக கூறி வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்ததாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் போலீசாரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதையடுத்தே அவரை விடுவித்துள்ளனர். பட்டதாரி ஆசிரியரையும் அவரது மனைவியையும் தாக்கிவிட்டு, அவர் மீது பொய் வழக்கு போட நடவடிக்கை எடுத்து தாக்கப்பட்டவரையே மன்னிப்பும் வாங்க வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட எஸ்பி அமித்குமார் சிங் கூறுகையில், அது தொடர்பாக டி.எஸ்.பி. சந்தானபாண்டியனிடம் அறிக்கை கேட்டு இருக்கிறேன். தொடர்ந்து இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

நன்றி:
 

'நமது முழக்கம்' மின்னிதழ் - டிசம்பர் 2011

N-M Dec. 2011

26.3.12

தமிழக பட்ஜெட் 2012 முழு விவரம்

தமிழக பட்ஜெட் 2012 முக்கிய அம்சங்கள் - பள்ளிக் கல்வித் துறை

  •  பள்ளிக் கல்வி - நிதி ஒதுக்கீடு: ரூ.14,552 கோடி
  • 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும்.
  • மாணவர்களுக்கு ஜியாமெட்ரி பாக்ஸ், ஸ்கேல், பென்சில், அட்லஸ் உள்ளிட்டவையும் இலவசமாக வழங்கப்படும்.

தமிழக பட்ஜெட் 2012 முக்கிய அம்சங்கள்

கிராமப்புற பெண்களுக்கு விலையில்லா நாப்கின்கள் வழங்க ரூ. 55 கோடி ஒதுக்கீடு

மதுரை, கோவையில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும்

அண்ணா, எம்.ஜி.ஆர். நினைவிடங்களைப் புதுப்பிக்க ரூ. 6.83 கோடி

தமிழறிஞர்களுக்கு கபிலர், உ.வே.சா விருது

தமிழ் ஆராய்ச்சிக்கு ரூ. 1 கோடி ஒதுக்கீடு

புதிய காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ. 750 கோடி ஒதுக்கீடு

மருத்துவத் துறைக்கு ரூ. 5569 கோடி

பழனி, ஸ்ரீரங்கம் கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம்-புதிய திட்டம்

1006 கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறை மூலம் புதுப்பிக்கப்படும்

மேலும் 50 கோவில்களுக்கு திருக்கோவில் அன்னதானத் திட்டம் விரிவுபடுத்தப்படும்

கோவில் சொத்துக்களை மீட்கர நடவடிக்கை எடுக்கப்படும்

தானே புயல் பாதித்த பகுதிகளில் மின் கட்டமைப்பை சீரமைக்க ரூ. 300 கோடி ஒதுக்கீடு

ரூ. 8000 கோடியில் உடன்குடி மின் திட்டம் செயல்படுத்தப்படும்

உடன்குடி திட்டத்திற்கு ரூ. 1500 கோடி ஒதுக்கீடு

வெளி மாநிலத்திலிருந்து மின்சாரம் கொண்டு வர வழியில்லை

புதிய பேருந்துகள் வாங்க ரூ. 508 கோடி நிதி

அனைத்துப் அரசு பஸ்களிலும் மின்னணு பயணச்சீட்டு வழங்கும் முறை அமல்

மோனோ ரயில் திட்டத்தில் 4வது வழித்தடமாக வண்டலூர்-புழல் இணைக்கப்படும்

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ. 250 கோடி ஒதுக்கீடு

விரைவில் சென்னையிலும் அரசு கேபிள் சேவை

2வது கட்ட சென்னை புற வழிச் சாலை மேம்பாட்டுத் திட்டம்- மாநில அரசே நிறைவேற்றும்

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொழிற்பேட்டைகளுக்கு மாற்றப்படும்

ரூ. 20 ஆயிரம் கோடியில் புதிய முதலீடுளை ஈர்க்க புதிய திட்டம்

பிளாஸ்டிக் சாலைகள் அமைக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு

உணவு மானியத்திற்கு ரூ. 4900 கோடி ஒதுக்கீடு

துவரை உள்ளிட்ட பருப்புகள் சலுகை விலையில் தரப்படும்

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும்

ரூ. 50 கோடியில் விலைக் கட்டுப்பாட்டு நிதியம்

3 ஆண்டுகளில் 3307 ஏரிகள் மேம்படுத்தப்படும்

காண்டூர் கால்வாய் திட்டம் 2013 ஆகஸ்ட்டில் நிறைவடையும்

காவிரி உள்ளிட்ட நதி நீர்ப் பிரச்சினைகளில் தமிழக உரிமை பாதுகாக்கப்படும்

நதி நீர் இணைப்புக்கு ரூ. 50 கோடி ஒதுக்கீடு

அணைகளை மேம்படுத்த ரூ. 50 கோடி

விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ. 4000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும்

49 விரைவு நீதிமன்றங்கள் நிரந்தர நீதிமன்றங்களாக்கப்படும்.

2012-13ல் 1 லட்சம் வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்படும்

விவசாயிகளின் வட்டி்ச சலுகைக்கு ரூ. 160 கோடி ஒதுக்கீடு

சங்கரன்கோவில், விழுப்புரத்தில் கறிக்கோழி, முட்டைக் கோழி வளர்ப்பு ஊக்குவிப்புத் திட்டம்

கால்நடை பராமரிப்புத் துறைக்கு ரூ. 814.03 கோடி ஒதுக்கீடு

ரூ. 244 கோடியில் 12,000 பேருக்கு கறவைப் பசுக்கள், 1.5 லட்சம் பெண்களுக்கு தலா 4 வெள்ளாடு அல்லது செம்மறியாடு

நெல்லுக்கு ஊக்கத் தொகை வழங்க ரூ.200 கோடி

10 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவர்

ஓட்டுப் பயிற்சிப் பள்ளி அமைக்க ரூ. 15 கோடி ஒதுக்கீடு

நீதித்துறை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ. 736 கோடி

வேளாண்துறைக்கு ரூ.3804.96 கோடி ஒதுக்கீடு

சாலைப் பாதுகாப்பு நிதி ரூ. 65 கோடி உயர்வு

டி.கல்லுப்பட்டி, ஆலங்குளம், சின்னசேலத்தில் புதிய தீயணைப்பு நிலையங்கள்

தீயணைப்புத் துறைக்கு ரூ. 197.58 கோடி ஒதுக்கீடு

ரூ.400 கோடியில் 4340 கூடுதல் காவலர் குடியிருப்புகள் அமைக்கப்படும்

சென்னை போக்குவரத்துக் காவலுக்கு 87 கூடுதல் ரோந்து வாகனங்கள் ஒதுக்கீடு

சென்னையில் ரூ. 150 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மைத் திட்டம்

ரூ. 20.75 கோடியில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு

நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க 25 சிறப்பு நீதிமன்றங்கள்

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரூ. 22.49 கோடியில் லேப்டாப், பிரிண்டர்கள் வழங்கப்படும்

ரூ. 1.93 கோடியில் தனியார் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்க அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட உதவி மையங்கள்

பேரிடர்களை சமாளிக்க சிறப்புப் பயிற்சி பெற்ற அமைப்பு உருவாக்கப்படும்.

தமிழ்நாடு கட்டமைப்பு வாரியம் அமைக்க விரைவில் சட்டத் திருத்தம்.

தானே புயல் பாதித்த கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் வீடுகள் கட்ட ரூ. 1000 கோடி ஒதுக்கீடு.
.

25.3.12

தமிழகத்தின் 2341 பள்ளிகளில் கம்ப்யூட்டர் வழி கல்வி: ஜெ. உத்தரவு

சென்னை: தமிழகத்தில் கம்ப்யூட்டர் வழியிலான கல்வித் திட்டத்தை அமல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 5 ஆண்டுகளில் 2341 பள்ளிகளில் இந்தத் திட்டத்தை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கல்வி சிறந்த தமிழ்நாடு என்ற பாரதியின் கூற்றினை மெய்ப்பிக்கும் வகையில் மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் தரமான கல்வியைப் பெற முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

தற்போதைய உலகம் கணினி உலகம். தற்பொழுது நடைபெறும் அன்றாட நடவடிக்கைகள் அனைத்தும் கணினியை சார்ந்தே அமைந்துள்ளது. எனவே மாணவர்களுக்கு கணினி வழி கல்வி வழங்குவது இன்றியமையாததாக உள்ளது.

இதன் அடிப்படையில், அனைவருக்கும் கணினி வழி கல்வி அளிக்கும் திட்டம் 5 ஆண்டு காலத்தில் 1880 மேல்நிலைப்பள்ளி மற்றும் 461 உயர்நிலைப் பள்ளி என மொத்தம் 2341 பள்ளிகளில் பூட் அடிப்படையில் நடைமுறைப்படுத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இத்திட்டத்திற்காக முதல் தவணையாக 31 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் ஆர்.புதுப்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர் மாவட்டம், வீரசோழனில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 பள்ளிகளில் முதற்கட்டமாக 1 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் அறிவுசார் பள்ளிகள் (ஸ்மார்ட் பள்ளி) நிறுவுவதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதற்கென முதல் தவணையாக 26 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் விடுவிக்க ஆணையிட்டுள்ளார். இவையன்றி, திருச்சி மாவட்டத்தில் திருச்செந்துறை, அயிலாப்பேட்டை, சோமரசம்பேட்டை, எட்டரை, இனாம்குளத்தூர் ஆகிய 5 இடங்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 1 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் அறிவுசார் பள்ளிகள் தொடங்குவதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அனுமதி வழங்கியுள்ளார்.

மாணவர்கள் இடைநிற்றல் இன்றி கல்வி பயிலுவதற்கு ஏதுவாக பள்ளிகள் அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே இருக்கும் பொருட்டு, தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே ஆணையிட்டுள்ளார்.

நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதால், நிலையிறக்கம் செய்யப்பட்ட 1040 தொடக்கப் பள்ளிகளில் உள்ள ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடத்தை தலைமை ஆசிரியர் பணியிடமாக நிலை உயர்த்தி முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

நடுநிலைப் பள்ளிகளிலிருந்து உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்ட 544 பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட சோதனைக் கூடங்களை பராமரிக்க 544 ஆய்வக உதவியாளர் பதவியினை ஏற்படுத்தவும் பள்ளிகளின் அலுவலக பணிக்காக 344 இளநிலை உதவியாளர் பதவியினை ஏற்படுத்தவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.

24.3.12

ஜாதிச் சான்று இல்லாத இட ஒதுக்கீட்டு விண்ணப்பங்களை நிராகரிக்கலாம்

"இடஒதுக்கீட்டின் கீழ் சலுகை கோரும் விண்ணப்பதாரர்கள், ஜாதிச் சான்றிதழை விண்ணப்பத்துடன் சேர்த்து அனுப்பவில்லை என்றால், அந்த விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும்" என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கடந்த, 2010ம் ஆண்டு ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., நடத்தியது. இதில் பமிலா என்பவர், தேர்வில் கலந்து கொண்டார். தனது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இவர் இணைக்கவில்லை. இவர், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நேர்முகத் தேர்வு நடந்தது.

சான்றிதழ் சரிபார்க்கப்பட்டபோது, ஜாதிச் சான்றிதழை இணைக்காதது தெரிய வந்தது. எனவே, அனைவருக்குமான பொதுப் பிரிவாக இவர் கருதப்பட்டார். தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

இதையடுத்து, ஐகோர்ட்டில் இவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பின், அப்பீல் மனுவைத் தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்" பிறப்பித்த உத்தரவு:

டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பாணையின்படி, இடஒதுக்கீட்டின் கீழ் வரும் விண்ணப்பதாரர்கள், ஜாதிச் சான்றிதழை இணைக்கவில்லை என்றால், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட வேண்டும். ஆனால், டி.என்.பி.எஸ்.சி., உத்தரவில் உள்ள ஒரு பிரிவின்படி, விண்ணப்பதாரருக்கு தகுதியிருந்தால், அவர்களை அனைவருக்குமான பொதுப் பிரிவாகக் கருதி தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். இன்னொரு பிரிவின்படி, சான்றிதழ்கள் உரிய அதிகாரியிடம் சென்றடையவில்லை என்றால், அதைச் சமர்ப்பிக்க, 15 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என உள்ளது.

இந்த இரண்டு பிரிவுகளும், ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன. எனவே, விண்ணப்பதாரர்களின் நலன் கருதி, இந்த இரண்டு பிரிவுகளையும் ரத்து செய்ய வேண்டும். 2006ம் ஆண்டு நவம்பரில், பிறப்பிக்கப்பட்ட இந்த நிபந்தனை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இது பொதுக் கொள்கைக்கு, நலன்களுக்கு எதிராக உள்ளதால் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்" உத்தரவிட்டுள்ளது.

நன்றி:

23.3.12

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அகவிலைப்படி 58 சதவீதத்திலிருந்து, 65 சதவீதமாக உயருகிறது. மேலும் 2012 ஜனவரி முதல் அகவிலைப்படி கணக்கிட்டு வழங்கப்படும்.
.

22.3.12

முப்பருவ தேர்வு முறை - பள்ளி நாட்கள் பிரிப்பு

அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றவுடன், கல்லூரிகளில் செமஸ்டர் முறை போல், பள்ளிகளில் முப்பருவ தேர்வு முறையை செயல்படுத்த உத்தரவிட்டது. இது, வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும்.

ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை, சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, முப்பருவமுறை குறித்து, சென்னையில் பயிற்சி அளிக்கப்படும். ஒரு பாடத்திற்கு, மாவட்டத்திற்கு இருவர் தேர்வு செய்யப்படுவர். இவர்கள், மற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பர்.

பள்ளி நாட்கள், மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
  • ஜூன் 1 முதல் அக்டோபர் 1 வரை- முதல் பருவம்; மொத்த வேலை நாள்- 81.
  • அக்., 3 முதல் டிச., 31 வரை- இரண்டாம் பருவம்; வேலை நாள்- 56.
  • ஜன., 1 முதல் ஏப்., 26 வரை- மூன்றாம் பருவம்; வேலை நாள்- 73.
ஒவ்வொரு பருவம் முடிவிலும், தேர்வு நடக்கும்.
 
நன்றி:
 
 

தமிழக பட்ஜெட்: பள்ளிக் கல்வி துறையின் 4 அறிவிப்புகள் கிடப்பில்

கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது வெளியிட்ட அறிவிப்புகளில், பெரும்பாலானவற்றை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களின் தரத்தை மேம்படுத்த நிபுணர்கள் குழு அமைப்பு உள்ளிட்ட, நான்கு அறிவிப்புகள் மட்டுமே பாக்கி உள்ளன.

நிலுவையில் உள்ளவை:

கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, 17 அறிவிப்புகளை, அப்போது பள்ளிக் கல்வி அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் மற்றும் முதல்வர் வெளியிட்டனர்.அமைச்சரின் அறிவிப்புகளில், நான்கு அறிவிப்புகள் மட்டுமே, இன்னும் நிலுவை இருப்பதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
  • சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களின் தரத்தை மேம்படுத்த வல்லுனர் குழு அமைப்பு.
  • ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகத்தை, அரசு மாநில கல்வி ஆராய்ச்சி பயிற்சி குழுமமாக தரம் உயர்த்துதல்.
  • கல்வி தகவல் மேலாண்மை முறை.
  • பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தும், நமது குழந்தைகள் திட்டம்
மற்ற திட்டங்கள்:
  • புதிய ஆசிரியர் நியமனத்தைப் பொறுத்தவரை, 2,682 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பங்கள், தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.
  • 5,790 பட்டதாரி ஆசிரியர்கள், 4,342 இடைநிலை ஆசிரியர்களை தேர்வு செய்ய, முதலில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும். இதற்கும், இன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன; 1,538 சிறப்பாசிரியர்கள் தேர்வு முடிந்த நிலையில், தேர்வுப் பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
  • வேளாண் பயிற்றுனர், 25 பேரை, பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்வதா, எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்வதா என, அரசிடம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆலோசனை கேட்டுள்ளது.
  • நூலகத் துறையில், 1,353 நூலகர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
  • உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் முதுநிலை விரிவுரையாளர்களை தேர்வு செய்ய, விரைவில் போட்டித் தேர்வு நடைபெற உள்ளது.
  • மாணவர்களுக்கான, "ஸ்மார்ட் கார்டு' திட்டம், வரும் கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வருகிறது.
  • அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு இணையதள வசதியும் கொடுக்கப்பட்டு வருகிறது.
மற்ற திட்டங்களுக்கு அரசாணை வெளியாகி, முதல் கட்ட பணிகள் துவங்கி உள்ளதாக, துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி:


ஏப்ரல் இறுதிவரை பள்ளிகள் செயல்பட உத்தரவு

ஏப்ரல் இறுதி வரை அனைத்து பள்ளிகளையும் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜூனில் பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதை ஈடுகட்டும் நடவடிக்கையாக பள்ளிகளின் வேலை நாட்கள் அதிகரிக்கப்பட்டு, ஏப்.,30 வரை பள்ளிகள் நடத்தப்பட உள்ளது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆசிரியர்களின் வேலை நாட்கள் ஆண்டிற்கு 200 நாட்கள் என்பதும், ஈடு செய்யப்படும். தேர்வுகள், ஏப்.,30ல் முடியும் வரை அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது" என்றார்.

நன்றி:

 

21.3.12

முதல்வர் தலைமையில் பள்ளிக் கல்வி ஆய்வுக் கூட்டம்


"லஞ்சம் சட்ட விரோதமானது": தலைமைச் செயலர் புது உத்தரவு

"லஞ்சம் சட்ட விரோதமானது" எனக் குறிப்பிட்டு, லஞ்சம் பற்றிய புகார்களை தெரிவிக்க வேண்டிய முகவரியை, அனைத்து துறைகளும் தங்களது இணையதளத்தில் வெளியிட வேண்டும் என, புது உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.
 

இதுதொடர்பாக, அனைத்து துறை செயலர்கள், துறை தலைவர்களுக்கு, தலைமை செயலர் தேவேந்திரநாத் சாரங்கி அனுப்பியுள்ள கடிதம்
லஞ்சம் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த, அனைத்துத் துறைகளும், தங்களது அதிகாரபூர்வ இணையதளத்தில், குறிப்பிட்ட வாசகத்தை வெளியிட உத்தரவிடுமாறு, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர், அரசை கேட்டுக் கொண்டுள்ளார். 

அதன்படி, "லஞ்சம் சட்ட விரோதமானது; லஞ்சம் பற்றிய புகார்களை, பின் வரும் முகவரிக்கு எழுதி அனுப்பவும்; விழிப்புப் பணி, லஞ்ச ஒழிப்பு இயக்குனர், சென்னை -28, வலைதளம்: www.dvac.tn.gov.in; தொலைபேசி எண் : 24615989, 929, 949' என்ற வாசகத்தை, அனைத்துத் துறைச் செயலகமும், தலைமையகமும், தங்களது அதிகாரபூர்வ இணையதளங்களில், ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளியிடுவதோடு, லஞ்ச ஒழிப்புத் துறையின் இணையதளத்துக்கான இணைப்பையும் அளிக்க வேண்டும். 

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 நன்றி:

Central Government revises General Provident Fund (GPF) interest rates…

Interest at the rate of 8% (Eight percent) for the period from 1.4.2011 to 30.11.2011

Interest Rates On GPF – 8.6% (eight point six percent) with effect from 1.12.2011
GPF Interest Rate 2011 - 12

20.3.12

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET) பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET) பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்
.

கல்விச் சான்றிதழில் உள்ள பிறந்த தேதி மட்டுமே வேலைக்காக பரிசீலிக்கப்படும் - ஐகோர்ட்

"கல்விச் சான்றிதழில் குறிப்பிட்டுள்ள பிறந்த தேதியை மட்டுமே, பணியில் சேரும் போது பரிசீலிக்க வேண்டும். அதன்பின் எந்த மாற்றத்தையும் அனுமதிக்கக் கூடாது' என, சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

திருச்சியில் உள்ள குமாரபெருமாள் பண்ணை அறிவியல் மையத்தில், உதவிப் பேராசிரியராக, டாக்டர் ஆறுமுகம் என்பவர், 1984ம் ஆண்டு அக்டோபரில் நியமிக்கப்பட்டார். எஸ்.எஸ்.எல்.சி., புத்தகத்தில், இவரது பிறந்த தேதி, 1952ம் ஆண்டு, ஏப்ரல் 13 என குறிப்பிடப்பட்டது. பணியில் சேர்ந்த நான்கு ஆண்டுகளுக்குப் பின், தனது பிறந்த தேதி, 1953ம் ஆண்டு, ஏப்ரல் 12 என குறிப்பிட்டு, அதற்கு ஆதாரமாக, களக்காட்டில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் பெற்ற சான்றிதழை சமர்ப்பித்தார்.
 

சில விளக்கங்கள் கேட்டு, அந்த விண்ணப்பம் திருப்பி அனுப்பப்பட்டது. கடைசியில், பிறந்த தேதியில் மாற்றம் கோரிய விண்ணப்பத்தை, கோவையில் உள்ள வேளாண் பல்கலையின் பதிவாளர் நிராகரித்தார். 2010ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், டாக்டர் ஆறுமுகம் மனு தாக்கல் செய்தார்.

மனுவை நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். வேளாண் பல்கலை சார்பில், வழக்கறிஞர் அப்துல் சலீம் ஆஜரானார். 


நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:

கல்விச் சான்றிதழ்படி பார்த்தால், 1970ம் ஆண்டில், 18 வயதை மனுதாரர் அடைகிறார். வேலையில் இவர் சேரும் போது, "மைனர்' அல்ல. 18 வயதை எட்டிய பின், மேலும் 19 ஆண்டுகள் கழித்து, அதாவது 37வது வயதில், பிறந்த தேதியில் மாற்றம் கோருகிறார். கால தாமதம் என்கிற முகாந்திரத்தின்படி, இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட வேண்டும்.


பணியில் சேரும்போதாவது, மனுதாரர் முறையான கவனத்துடன், சரியான பிறந்த தேதியை குறிப்பிட்டிருக்க வேண்டும். அப்போது, ஆவணங்களில் பிறந்த தேதியை மாற்ற, எந்த முயற்சியும் எடுக்காமல், பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். பணியில் சேர்ந்து நான்கு ஆண்டுகளுக்குப் பின், பிறந்த தேதியை மாற்ற வேண்டும் என, மனுதாரர் நினைத்துள்ளார்.


களக்காட்டில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் இருந்து, தனது பிறந்த தேதி சான்றிதழை கொண்டு வர முடியும் போது, அவரின் இளைய சகோதரியின் பிறந்த தேதி சான்றிதழையும் கொண்டு வருவதில் எந்த தடங்கலும் இருக்காது. ஆனால், அதை கண்டுபிடிக்க முடியவில்லை என மனுதாரர் கூறியுள்ளார். இது, சந்தேகமாக உள்ளது.

பணி நீட்டிப்புக்காக மாற்றம் கோருவதா?


பள்ளிச் சான்றிதழில் உள்ள பிறந்த தேதியை வைத்து, பலன் அடைந்து விட்டு, பிற்காலத்தில் பணி நீட்டிப்பு பெறலாம் என்கிற ரீதியில், பிறந்த தேதியில் மாற்றம் கோருவது சரியல்ல. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு, வேலைக்காக தமிழகத்தில் லட்சக்கணக்கில் உள்ளனர். அவ்வாறு இருக்கும் போது, பிறந்த தேதியில் மாற்றம் கொண்டு வந்து, பணி காலத்தை நீட்டிப்பதில் நியாயமில்லை. இது, பொது நலனுக்கு எதிரானது.


தமிழ்நாடு பணி விதி, 49ன்படி, பணியில் சேர்ந்து ஐந்து ஆண்டுகளுக்குள், பிறந்த தேதியில் மாற்றம் இருந்தால் விண்ணப்பிக்கலாம் என உள்ளது. இந்த விதி, அரசு ஊழியர்களை தேவையின்றி ஊக்குவிப்பது போல உள்ளது.
இந்த விதியில் திருத்தம் கொண்டு வர வேண்டும். இதேபோன்று, மாநில நீதித்துறை பணி விதிகள், அரசு நிறுவனங்கள், கார்ப்பரேஷன்கள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வங்கி ஊழியர்களின் பணி விதிகளிலும், திருத்தம் கொண்டு வர வேண்டும்.

தவறான பிறந்த தேதியாக இருந்தால், அந்த நபர், 18 வயதை அடைந்த பின், மூன்று ஆண்டுகளுக்குள் தவறான பிறந்த தேதியை திருத்திக் கொள்ளும் வகையில், தகுந்த பிரிவை சட்டத்தில் கொண்டு வர, சம்பந்தப்பட்ட அரசு பரிசீலிக்கலாம்.


தேர்வுக்கான அறிவிப்பாணையில், கல்விச் சான்றிதழில் உள்ள பிறந்த தேதி மட்டுமே வேலைக்காக பரிசீலிக்கப்படும் என்றும், ஓய்வுபெறும் வரை பிறந்த தேதியில் மாற்றம் செய்யப்படாது என்றும், மத்திய, மாநில அரசுகள், நிறுவனங்கள் தெளிவுபடுத்தி விட வேண்டும். அப்போது தான், அரசு ஊழியர்களின் இத்தகைய முயற்சிகளுக்கு, முற்றுப்புள்ளி வைப்பது போலாகும். 


இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.


நன்றி:

டி.இ.டி., பாடத்திட்டம் வெளியாவதில் இழுபறி

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டம் வெளியாவதில், இழுபறி ஏற்பட்டுள்ளது. 

வரும் 22ம் தேதி முதல், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பம், மாநிலம் முழுவதும் வழங்கப்படும் நிலையில், தேர்வு விவரங்கள் அனைத்தையும், ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து விட்டது. இதைத் தொடர்ந்து, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கென, தனித்தனியே பாடத் திட்டங்களை வெளியிட வேண்டும். ஆனால், இதுவரை வெளியிடவில்லை.
 

 தேர்வெழுதத் திட்டமிட்டுள்ள பட்டதாரிகளும், டி.இ.டி., தேர்வை வைத்து, "கல்லா" கட்ட திட்டம் போட்டிருக்கும் பயிற்சி மையங்களும், தேர்வு வாரியத்தின் பாடத் திட்ட விவரங்களுக்காக, காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரத்தில் விசாரித்தால், "வெளியிடுவோம்" என, தொடர்ந்து, ஒரே பதிலை கூறி வருகின்றனர். 


பாடத் திட்டங்களை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள இழுபறி, தேர்வு எழுத திட்டமிட்டுள்ளவர்களை, கவலை அடையச் செய்துள்ளது.

நன்றி:

 

18.3.12

ஆசிரியர் கல்வி இயக்குனர் தான், அடுத்த பள்ளிக் கல்வி இயக்குனர்?



"ஆசிரியர் கல்வி இயக்குனர் தான், அடுத்த பள்ளிக் கல்வி இயக்குனர்ன்னு பேச்சு அடிபடுதுங்க...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார் அந்தோணிசாமி.

""விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.

""சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை தரமா மாத்தற வேலை, ஆசிரியர் கல்வி இயக்குனர் தலைமையில நடந்துட்டு இருக்குங்க... இந்த வேலையை, இயக்குனர் சிறப்பா செய்திருக்காருங்க... இவரோட திறமையான செயல்பாடுகள், செயலரை ரொம்பவே ஈர்த்திருக்காம்...

பள்ளிக் கல்வி இயக்குனரா இருப்பவர், ஜூலையில ரிட்டையர்டு ஆகப் போறார்... அதுக்கப்பறம், செயலரின் ஆசீர்வாதத்தோட, ஆசிரியர் கல்வி இயக்குனர் தேவராஜன், பள்ளிக் கல்வி இயக்குனரா பதவியேற்பார்ன்னு பேச்சு அடிபடுதுங்க...'' என்றார் அந்தோணிசாமி.

நன்றி:

டீ கடை பெஞ்சு

17.3.12

தனிநபர் வருவாயும் வரி விலக்கும்

 
  • ஆண்டு வருமானம், 2 லட்சம் ரூபாய் வரையில் வருமான வரி இல்லை. 2 லட்சத்திற்கு மேல் 5 லட்சம் ரூபாய் வரை இருந்தால் 10 சதவீதமும், 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையில், 20 சதவீதமும், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது. 
  • இந்த புதிய வரி விதிப்பு மூலம் வரிசெலுத்தும் ஒவ்வொரு குடிமகனும், ஆண்டுக்கு தங்களது வருமானத்தில், 2 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. 
  • ராஜிவ்காந்தி பெயரில் ஒரு திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இதன்படி, 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள ஒருவர், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கி அவற்றை மூன்று ஆண்டுகளுக்கு விற்பனை செய்யாமல் வைத்திருந்தால் அதற்கு 50 சதவீத வரிவிலக்கு அளிக்கப்படும். 
  • ஆண்டொன்றுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ள ஒருவர் வங்கியில் சேமிப்பு கணக்கில் போட்டு வைத்திருக்கும் பணத்திற்கு வட்டியாக 10 ஆயிரம் ரூபாய் வரையிலான வட்டிக்கு வரி விலக்கு அளிக்கப்படும். 
  •  ரத்தச் சோதனை உள்ளிட்ட நோய் கண்டறியும் சோதனைகளை மேற்கொண்டால் அதற்கான செலவு தொகையில், 5 ஆயிரம் ரூபாய் வரை வரிவிலக்கு அளிக்கப்படும். 
  •  வெளிநாட்டில் சொத்துக்கள் வைத்திருந்தால், அதுபற்றி வருமான வரி கணக்குகளில் தகவல் தெரிவித்தே ஆக வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அந்த சொத்து வாங்கியதில் இருந்து 16 ஆண்டுகள் வரை, அந்த சொத்துக்களைப் பற்றி விசாரணை நடத்துவதற்கு வருமான வரித்துறையினருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 
  •  இரண்டு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நகை வாங்கினால், அவற்றுக்கு உடனடியாக அங்கேயே வரி செலுத்தியாக வேண்டும்.
 நன்றி:

16.3.12

மாத ஊதியம் வாங்குவோருக்கு இன்னொரு அடி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான(ஈ.பி.எஃப்) வட்டி குறைப்பு!


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (பி.ஃஎப்) வட்டி விகிதத்தை மத்திய அரசு குறைத்துள்ளது.

பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன் இந்த 'நல்ல வேலையை' மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி செய்துள்ளார்.

இதன்படி 2011-12-ம் நிதி ஆண்டுக்கு பி.ஃஎப் வட்டி விகிதம் 9.5 சதவீதத்திலிருந்து 8.25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மாத ஊதியதாரக்களுக்கு இருக்கும் ஒரே கட்டாய சேமித்து இந்த பி.ஃஎப் தான். ஓய்வு பெற்றுச் செல்லும்போது இந்தத் தொகை மாத ஊதியதாரக்களுக்கு மித உதவிகரமாக இருக்கும்.

இந்தத் தொகைக்கு மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை வட்டி அளித்து வருகிறது. நமது பி.ஃஎப் தொகையை மத்திய அரசு தனது திட்டப் பணிகளுக்கு எடுத்து பயன்படுத்தி வருகிறது. இதனால், அதற்கு வட்டியைத் தருகிறது.

இந்த வட்டியைக் குறைக்கப் போவதாக பல மாதங்களாகவே மத்திய அரசு கூறி வந்தது. ஆனால், 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு பி.ஃஎப் வட்டி விகிததில் மத்திய அரசு கை வைக்காமல் இருந்து வந்தது.

இந் நிலையில் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு சாதகமாக தேர்தல் முடிவு அமையாததால், இந்த வட்டியை அதிரடியாக 1.25 சதவீதம் வரை குறைத்து 'புண்ணியம்' தேடிக் கொண்டுள்ளார் பிரணாப்ஜி.

கடந்த 10 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய அளவுக்கு பி.ஃஎப் வட்டி விகிதம் குறைக்கப்பட்டதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர்களுக்கு 9.5 சதவீத வட்டி அளித்தால் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியத்துக்கு ரூ. 526.44 கோடி பற்றாக்குறை ஏற்படும் என்றும், இப்போது நிர்ணயிக்கப்பட்ட 8.25 சதவீத வட்டி அளித்தால் ரூ. 24 லட்சம் மட்டுமே நஷ்டம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:
 

பட்ஜெட்: வருமான வரி கட்டுவோருக்கு பெரிய சலுகைகள் ஏதும் இல்லை..

வருமான வரி கட்டுவோருக்கு பெரிய சலுகைகள் ஏதும் இல்லை.. கொஞ்சமே கொஞ்சம் சலுகை

வருமான வரி விலக்கு ரூ. 2 லட்சமாக உயர்வு (ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சம் வரை வரி இல்லை)

ரூ. 2 முதல் 5 லட்சம் வரையிலான ஆண்டு ஊதியத்துக்கு 10% வருமான வரி

ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு 20%

ரூ. 10 லட்சத்துக்கு மேலான ஆண்டு வருமானத்துக்கு 30% வருமான வரி.

.

14.3.12

பிப்ர"வரி' வந்தாலே சம்பளதாரருக்கு ஜுரம்: அரசியல்வாதிகளின் கணக்கோ வேறு மாதிரி


கட்சி வித்தியாசமின்றி, எம்.பி.,க்களும், எம்.எல்.ஏ.,க்களும் வருமான வரி கணக்கு தாக்கலின் போது, உரிய வகையில் வரி செலுத்துவதில்லை.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தனது வருமானத்துக்கு ஏற்ப, ஆண்டுதோறும் வருமான வரி செலுத்த வேண்டும். இதில், பெரும்பாலும் சரியாக வருமான வரி செலுத்துபவர்கள், மாதாந்திர சம்பளம் பெறும் நடுத்தர வர்க்கத்தினர் தான். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, மார்ச் மாதங்கள் வந்துவிட்டால், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் போன்றோர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் பரபரப்பாக இருப்பர். எப்படியாவது வரியை குறைக்கணுமே, என்ன செய்யலாம். இதுல முதலீடு செய்யலாமா, போஸ்ட் ஆபீசில் போடலாமா, பிக்சட் டெபாசிட்டா பேங்கில் போடலாமா என பரபரப்பாக இருப்பர். ஆனால், எதிலும் கமிஷன் பார்க்கும் அரசியல்வாதிகளோ, அது பற்றி கவலை எதுவும் பட்டதாகத் தெரியவில்லை. போதாக்குறைக்கு ஆளுங்கட்சி எம்.பி.,க்களாக இருந்தால், நாங்க வரப்போற நிதியாண்டுல வருமான வரி விலக்கு குறைக்கப்போறோம் என, பிரசாரம் பண்ணிக் கொண்டு இருப்பர்.

எதிர்க்கட்சியினரோ அதற்கு மேலே ஒரு தொகையைச் சொல்லி, வருமான வரி விலக்கு தொகையை கூட்ட வேண்டும் என கோரிக்கை வைப்பர். அப்படியே வருமான வரி கட்டணும் என்ற நிலை வந்தாலும், தங்களிடம் ஏதாவது காரியத்துக்கு அணுகும் நபர்களின் தலையில் கட்டிவிடுவது, "கை' வந்த கலையாக இருக்கும். தங்கள் சொந்த காசிலிலிருந்து வருமான வரி கட்டியிருந்தால், அதன் வலி தெரியும். வரி கட்டுவதில்லை... அப்படி கட்டினால், அவருக்காக யாரோ கட்டியிருக்கிறார் என அர்த்தம். விலக்குன்னு அவங்க பிரசாரம் செய்தாலே, வரி கட்டாம விலகியிருக்கிறதை தான் அப்படி சொல்றாங்க என்று நினைக்கத் தோணுது!

பொதுவாக அரசியல்வாதிகளுக்கு வருமான வரியைப் பற்றி கவலைப்படுவதில்லை. எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் தங்களது வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டுமென வலியுறுத்தி, தகவல் உரிமை சட்ட ஆர்வலர் கோபாலகிருஷ்ணன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில், சில எம்.பி.,க்கள் பற்றிய விவரங்களையும் விரைவில் சேர்க்க உள்ளனர். வருமான வரி கணக்கு காட்டுவதில் எம்.பி.,க்கள் எப்படி செயல்படுகின்றனர் என்பதற்கு, சில உதாரணங்களைப் பார்க்கலாம். கடந்த 2009 லோக்சபா தேர்தலின் போது, சில எம்.பி.,க்கள் காட்டிய கணக்கின் அடிப்படையில் இவை தொகுக்கப்பட்டுள்ளன. கடந்த 2004 முதல் 2009ம் ஆண்டு வரை, எம்.பி.,க்களின் ஆண்டு சம்பளம், 4 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய். இந்த தொகைக்கு இவர்கள் குறைந்தபட்சமாக 18 ஆயிரத்து 200 ரூபாய் முதல், 28 ஆயிரத்து 200 ரூபாய் வரை வருமான வரி செலுத்த வேண்டும். அவ்வாறு தான் மற்ற ஊழியர்கள் செலுத்தி வருகின்றனர். ஆனால், அ.தி.மு.க., எம்.பி.,யான தம்பிதுரை தனக்கு, "பான்' எண் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். பா.ம.க., எம்.பி.,யாக இருந்த தன்ராஜ், தான் 35 ரூபாய் வருமான வரி செலுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தமிழக பொதுப்பணித் துறை அமைச்சராக இருக்கும் கே.வி.ராமலிங்கம், கடந்த 2010 ஜூன் 30ம் தேதி ராஜ்யசபா எம்.பி., ஆனார். இவர் 2011 மே 20ம் தேதி, பதவியை ராஜினாமா செய்தார். கடந்த ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் போது இவர் தாக்கல் செய்த கணக்கில், தனக்கு விவசாய வருமானம் மட்டுமே உள்ளதால், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மார்க்சிஸ்ட் எம்.பி.,யாக இருந்த பெல்லார்மின், தனக்கு 2008-09ம் ஆண்டுக்கு, 4,160 ரூபாய் வருமான வரி செலுத்தியதாகவும், 2009-10ம் ஆண்டுக்கு அட்வான்ஸ் வரியாக 20 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மத்திய அமைச்சராக 1996 முதல் 2009ம் ஆண்டு வரை இருந்து வந்துள்ள தி.மு.க.,வைச் சேர்ந்த டி.ஆர்.பாலுவோ, தான் வருமான வரி சர்சார்ஜ் ஆக, 2008-09ம் ஆண்டுக்கு 7,583 ரூபாய் செலுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இன்ஜினியரிங் கல்லூரி நடத்தி வரும், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலுவோ, சர்சார்ஜ் உட்பட வருமான வரியாக ஒரு ரூபாய் கூட செலுத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் எம்.பி.,யாக இருந்த கார்வேந்தன், 2008-09ம் ஆண்டுக்கு, 15 ஆயிரத்து 840 ரூபாய் வருமான வரி செலுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் இவர்கள், இப்படி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வார்களாம். ஆனால், சாதாரண குடிமகன்கள் மட்டும், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் வரி கட்ட வேண்டுமாம். வருமான வரி மட்டுமன்றி, தொழில் வரி உட்பட பல்வேறு வரிகளை சாதாரண மக்கள் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

நன்றி:

 

இலவச பஸ் பாஸ் அனுமதி - அரசு முதன்மைச் செயலரின் கடிதம்

Trans Dept Free Bus Pass 6-3-12

13.3.12

உமா மகேஸ்வரியின் மகள்களுக்கு ரூ.2 லட்சம்: அரசாணை வெளியீடு

சென்னையில், மாணவனால் கொலை செய்யப்பட்ட ஆசிரியை உமா மகேஸ்வரியின், இரு மகள்களுக்கு, தலா 1 லட்சம் ரூபாய் வீதம், 2 லட்சம் ரூபாயை, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை பாரிமுனையில் உள்ள, செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில், அறிவியல் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த உமா மகேஸ்வரியை, அதே பள்ளியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவன், கடந்த மாதம், 9ம் தேதி, கத்தியால் குத்தி கொலை செய்தான். இச்சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

"கொலை செய்யப்பட்ட ஆசிரியையின் குடும்பத்திற்கு, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும்' என, கடந்த மாதம், 16ம் தேதி, முதல்வர் அறிவித்தார். இதையடுத்து, உமா மகேஸ்வரியின் மகள்கள் சங்கீதா மற்றும் ஜனனி ஆகியோருக்கு, தலா, 1 லட்சம் ரூபாய் வழங்கவும், அந்த நிதியை வைப்பு நிதி திட்டத்தின் கீழ் முதலீடு செய்யவும், தமிழக அரசு உத்தரவிட்டு, அரசாணை வெளியிட்டுள்ளது.

நன்றி:

 

ஆசிரியர் தேர்வு பாடத் திட்டம் 22ம் தேதிக்குள் வெளியீடு

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டங்கள், 22ம் தேதிக்குள் வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணி புரிவோர் மற்றும் வேலைக்காக எதிர்பார்த்து காத்திருப்பவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரு வகை தேர்வுகளாக, ஜூன் 3ம் தேதி நடைபெறும் நிலையில், இதற்கான விண்ணப்பங்கள், 22ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. எனினும், தேர்வுக்கான பாடத்திட்டங்கள், இன்னும் வெளியிடப்படவில்லை.

இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறும்போது, ""பாட வாரியாக, பாடத் திட்டங்களை தயாரித்து, அரசுக்கு அனுப்பி, ஒப்புதலையும் பெற்று விட்டோம். ஆனால், அவை இன்னும் அரசின், "கெஜட்டில்' வெளியாகவில்லை. விண்ணப்பங்களை வழங்குவதற்குள் இணையதளத்தில் பாடத் திட்டங்கள் வெளியிடப்படும்,'' என்றனர்.

நன்றி:

 

தேர்வு மையம் செல்ல இலவச பஸ் பாஸ் அனுமதி

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு மையங்களுக்கு கட்டணம் இல்லாமல் செல்ல, தங்கள் இலவச பஸ் பாஸ்களை பயன்படுத்தலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொதுத் தேர்வு எழுதுபவர்கள், தங்கள் பள்ளிகள் அல்லாத தேர்வு மையமாக நிர்ணயிக்கப்பட்ட பள்ளிகளுக்குச் செல்கின்றனர். இதற்காக, இவர்கள் இலவச பஸ் பாஸ் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது.இந்த நிலையில், தமிழக அரசு, "அங்கீகரிக்கப்பட்ட இலவச பஸ் பாஸ் பயன்படுத்தும் மாணவ, மாணவியர், தங்களின் இருப்பிடத்தில் இருந்து, தேர்வு நடக்கும் மையம் வரை சென்று வர, பஸ் பாஸ்களை அனுமதிக்க வேண்டும்' என, போக்குவரத்து மண்டல மேலாளர்களுக்கு, உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்தரவு குறித்து, கிளை மேலாளர் ஒருவர் கூறியதாவது:

தேர்வு எழுதச் செல்லும் மாணவ, மாணவியரை, பஸ்சின் கண்டக்டர், டிரைவர்கள், இலவசமாக அழைத்துச் செல்ல வேண்டும். சந்தேகம் ஏற்படின், அவர்கள் ஹால் டிக்கெட் கேட்டு, உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

10.3.12

வருமான வரி விலக்கு - சபாநாயகரிடம் பார்லி. நிலைக் குழு அறிக்கை அளித்தது

வருமான வரி விலக்கு வரம்பை 1 லட்சத்து 80 ஆயிரத்தில் இருந்து 3 லட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும் என யஷ்வந்த்சின்கா தலைமையிலான பார்லிமென்ட் நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது.

வரும் பட்ஜெட்டில் அறிமுகமாக உள்ள நேரடி வரி திட்டத்தை ஆய்வு செய்த இக்குழு, அதன் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை, பார்லிமென்ட் சபாநாயகர் மீரா குமாரிடம் நேற்று அளித்தது.

இந்த அறிக்கையில், 
  • வருமான வரி விலக்கு வரம்பை 3 லட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும், 
  • வரி சேமிப்பு திட்டங்களுக்கான முதலீட்டு வரம்பை 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும்,
  • செல்வ வரி வரம்பை 5 லட்ச ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும், 
  • பங்கு பரிவர்த்தனை வரியை நீக்க வேண்டும்,
என்பது உள்ளிட்ட பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.

நன்றி:

 

7.3.12

ஜூன் 3ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு: 22ம் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம்

கட்டாயக் கல்வி சட்டத்தின்படி, தமிழகத்தில், முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு, ஜூன் 3ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள், 22ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன.

* கடந்த 2010, ஆக., 23ம் தேதிக்குப் பின், அரசு, அரசு நிதியுதவி, தனியார் என எந்தப் பள்ளிகளில் பணியில் சேர்ந்தவரானாலும், ஆசிரியர் தகுதித் தேர்வை கண்டிப்பாக எழுதி, தேர்ச்சி பெற வேண்டும்.

* ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, ஆசிரியர் வேலைக்கு வர வேண்டும் என விரும்புபவர்களில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் என, இரு வகையினரும் இத்தேர்வை எழுத வேண்டும்.

* இடைநிலை ஆசிரியர் பணிக்கு வருபவர்கள், முதல் தாள் தேர்வையும்; பட்டதாரி ஆசிரியர் பணியில் இருப்பவர்கள் மற்றும் இந்தப் பணிக்கு வர விரும்புபவர்கள், இரண்டாம் தாள் தேர்வையும் எழுத வேண்டும்.

* இடைநிலை மற்றும் பட்டதாரி என, இரு வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் இரு வகுப்புகளுக்கும் சேர்த்து பணி செய்ய விரும்புபவர்கள், இரு தேர்வுகளையும் எழுத வேண்டும்.

* கேள்விகள், தமிழ் மற்றும் ஆங்கில வழியில், "அப்ஜக்டிவ்' முறையில் இருக்கும். தலா, 150 மதிப்பெண்களுக்கான தேர்வில், தேர்ச்சி பெற, 60 சதவீத மதிப்பெண்கள் (90) பெற வேண்டும்.

* விண்ணப்பம் விலை, 50 ரூபாய்; தேர்வுக் கட்டணம், 500 ரூபாய். இரு தாள் தேர்வுகளை சேர்த்து எழுதவும், 500 ரூபாய் கட்டணமே போதுமானது.

* ஏப்., 4ம் தேதி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களிலேயே சமர்ப்பிக்க வேண்டும். ஜூன் 3ம் தேதி, தகுதித் தேர்வு நடைபெறும்.

* ஆறு லட்சம் பேர் தேர்வு எழுதுவர் என, ஆசிரியர் தேர்வு வாரியம் எதிர்பார்க்கிறது. எனினும், ஏழு லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


நன்றி:

 

பள்ளிகளில் ஆபத்தான விளையாட்டுப் பொருட்களை வைக்க கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்

பள்ளி குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் விளையாட்டுப் பொருட்களை பள்ளிகளில் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் குற்றாலத்தைச் சேர்ந்தவர் வெள்ளிமலை. இவரது மகள் முத்துலட்சுமி குற்றாலம் கணபதி தேசிய நடுநிலைப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 22.12.2003 அன்று மதிய உணவு இடைவேளையின் போது முத்துலட்சுமி பள்ளி அருகே தோழிகளுடன் சேர்ந்து ராட்டினம் ஆடினார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் முத்துலட்சுமியின் கையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் வலது கை அப்பறப்படுத்தப்பட்டது.

இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளிமலை வழக்கு தொடர்ந்தார். அதில் தனது மகள் வலது கையை இழக்க பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவு தான் காரணம். எனவே அவளது எதிர்காலத்தை கருத்து கொண்டு ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கே.என்.பாஷா நேற்று வழங்கிய தீர்ப்பில் கூறியதாவது,

வழக்கு விசாரணையில் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களின் கவனக் குறைவு மூலம் சிறுமி வலது கையை இழந்துள்ளது தெரிய வருகின்றது. சிறுமியின் தந்தை அரசிடம் இழப்பீடு அளிக்க கோரிக்கை விடுத்தும் கிடைக்கவில்லை.

வழக்கின் தன்மை, ஆவணங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மொத்தம் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இதில் பள்ளி நிர்வாகம் ரூ.1.5 லட்சமும், அரசு ரூ.1.5 லட்சமும் வழங்க வேண்டும். மேலும் இழப்பீட்டுத் தொகையை 2005ம் ஆண்டு முதல் 12 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும்.

ஆரம்ப பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை பள்ளி நேரத்தில் வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது. இதனால் பல விபத்துகள், கடத்தல் சம்பவங்கள் நடக்கின்றன. மேலும் பள்ளி வளாகம் அல்லது பள்ளியையொட்டிய பகுதியில் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய விளையாட்டு பொருட்களை வைக்க அனுமதிக்கக் கூடாது. குழந்தைகளின் சுகாதாரத்தை கெடுக்கும் உணவுப் பொருட்களை பள்ளியின் அருகே விற்கக் கூடாது என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.


நன்றி:
 

4.3.12

பள்ளிகளுக்கு ஜெனரேட்டர் - கண்காணிக்க குழு அமைப்பு

12 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு தேர்வு நடக்கும் காலத்தில் பள்ளிகளுக்கு ஜெனரேட்டர்கள் வழங்கப்படுவதை கண்காணிக்க அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தற்போது உள்ள இக்கட்டான சூழ்நிலையில் மின் நிலைமைகளை சமாளிக்கும் வகையிலும், தொழில் துறையினர் மற்றும் நுகர்வோர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையிலும், தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்படுத்த உள்ள மின் விநியோக கட்டுப்பாட்டு முறைகளை 25.2.2010 அன்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தால் செயல்படுத்த உள்ள இந்த மின்வெட்டு காரணமாக பொதுத்தேர்வு எழுதவுள்ள 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதால் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு மின்வெட்டு இல்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எனினும், அவ்வாறு இயலாத சூழ்நிலையில் மின்வெட்டு உள்ள நேரங்களிலும் தொடர்ந்து மின்சாரம் கிடைக்கும் வகையில் அரசே ஜெனரேட்டர்களை வாடகைக்கு பெற்று வழங்கும், ஜெனரேட்டர்களை இயக்குவதற்கான டீசல் உள்பட அனைத்து செலவையும் அரசே ஏற்கும். இதேபோன்று அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகள், ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து இயக்கிக்கொள்ளலாம். அதற்கு ஏற்படும் கூடுதல் செலவினை அரசு அவர்களுக்கு ஈடு செய்யும்.

பள்ளி கல்வி இயக்குனரகம் மற்றும் தமிழ்நாடு உற்பத்தி மற்றும் விநியோக கழகத்தின் இயக்குனர் (விநியோகம்) ஆகியோர் அனுப்பிய திட்டங்கள் பரிசீலித்து அரசு சில உத்தரவுகளையும் வழிமுறைகளையும், முதல்வரின் உத்தரவுக்கு இணங்க அமல்படுத்துவதற்கு முன்வந்துள்ளது.

1. ஒவ்வொரு அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பள்ளி குழந்தைகளின் தேர்வுக்கு எந்தவொரு தடங்கலும் வராத வகையில் ஜெனரேட்டர் வழங்குவதை உறுதி செய்தவதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக மாவட்ட கலெக்டர் இருப்பார். உறுப்பினராக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயல் பொறியாளர், உறுப்பினர் செயலாளராக பள்ளிக்கல்வித்துறையின் தலைமை கல்வி அதிகாரி, மற்றொரு உறுப்பினராக பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர்(கட்டிடங்கள்) ஆகியோர் இந்த குழுவில் இடம் பெறுவார்கள்.

12ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 8ம் தேதி தொடங்கி 30ம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 4ம் தேதி தொடங்கி ஏப்ரல் 23ம் தேதியும் முடிவடைவதால் மார்ச் மற்றும் ஏப்ரல் காலங்களில் உயர் நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட வேண்டும்.

தமிழ்நாடு உற்பத்தி மற்றும் விநியோக இயக்குனர் கொடுத்த மதிப்பீட்டின் அடிப்படையில் ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுப்பதற்கு உள்ள செலவினங்களை மாவட்ட குழு அங்கீகரிக்க வேண்டும். அதற்கும் சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிகளிலும் மின் தேவையை அடைவதற்கு 5 கே.வி.ஏ. திறனுக்கு மேம்பட்ட ஜெனரேட்டர்களை வாங்க கூடாது.

2. ஒவ்வொரு அரசு பள்ளிகளும் மாதம் ஒன்றுக்கு 40 ஆயிரத்து 200 ரூபாய்க்கு மேல் மின் செலவு ஏற்படுத்தக் கூடாது. அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் இந்த தொகையின் 3-ல் 2 பகுதி தொகை (26 ஆயிரத்து 800 ரூபாய்) என்ற அளவை தாண்டக் கூடாது. ஜெனரேட்டர்களை எடுத்துச் செல்வது அவற்றை கையாளுவதற்கான உணவு செலவு, கேபிள்கள், வயர்கள் போன்ற மின் உபகரணங்கள் பொருத்துவது, எரிபொருள் செலவு போன்றவை இந்த அனுமதிக்கப்பட்ட 40 ஆயிரத்து 200 தொகைக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தமிழ்நாடு மின்சாரம் வாரியம் அளிக்கும் மின்சாரம் தடை செய்யப்பட்ட நேரத்தில் மட்டும் தான் பள்ளி நிர்வாகிகள் ஜெனரேட்டர்களை பயன்படுத்த வேண்டும். மின்தடை நாள் ஒன்றுக்கு 6 மணி நேரம் மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகளுக்கு ஆகும் வாடகை தொகையை மாவட்ட அளவிலான குழு அங்கீகரிக்கும். அரசு பள்ளிகளை பொருத்தவரையில் ஆரம்ப கட்ட செலவு பி.டி.ஏ. நிதி, சிறப்பு கட்டணம், மாவட்ட பொது தேர்வு நிதி ஆகியவை மூலம் செலவு எதிர்கொள்ளப்படும்.

அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை பொருத்தவரையில் ஜெனரேட்டர்களை வெளியில் இருந்து அவர்கள் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். விதிமுறைகளுக்கு உட்பட்ட சலுகையினம் அரசால் திருப்பி கொடுக்கப்படும். அனைத்து பள்ளிகளுக்காகும் செலவை, பள்ளி கல்வி இயக்குனரின் அனுமதியின் படி தனியாக பெற்றுக் கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி:
 

பள்ளிகளுக்கு ஜெனரேட்டர் - அரசாணை

G O edu _48_2012

வருமான வரி விலக்கு வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த பரிசீலனை

வருமான வரி விலக்கு வரம்பை, 3 லட்சமாக உயர்த்த பார்லிமென்ட் குழு பரிந்துரை செய்துள்ளது.

பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 12ம்தேதி துவங்குகிறது. 16ம்தேதி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பொது பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்நிலையில், நேர்முக வரிகள் குறியீட்டு மசோதா குறித்து ஆய்வு செய்து வரும், பார்லிமென்ட் நிலைக்குழுவின் கூட்டம் நேற்று நடந்தது.இந்த கூட்டத்தில், வருமான வரி விலக்கு வரம்பை, 3 லட்ச ரூபாயாக உயர்த்தவும், 2.5 லட்ச ரூபாய் வரையிலான சேமிப்புக்கு வரித்தள்ளுபடி அளிக்கும்படி, பரிந்துரை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


வருமான வரி விலக்கு வரம்பு, தற்போது 1.8 லட்சமாக உள்ளது. இதை, 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என, குழுவில் உள்ள சில உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அதை ஏற்க மறுத்த குழு, வருமான வரி விலக்கு வரம்பை, 3 லட்சமாக உயர்த்த ஒப்புக் கொண்டுள்ளது.இதற்கேற்ற வகையில், 1961ம் ஆண்டுக்கான வருமான வரி சட்டத்தில் மாற்றம் செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.


நன்றி:

 

3.3.12

வரையறுக்கப்பட்ட விடுமுறைகள் பட்டியலில் வைகுண்டசாமி பிறந்த தினம் சேர்ப்பு

அரசு ஊழியர்களுக்கான வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் பட்டியலில், பகவான் வைகுண்டசாமி பிறந்தநாள் சேர்க்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் ஆண்டுக்கு, மூன்று நாட்கள் வரையறுக்கப்பட்ட விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். இதற்காக, 35 பண்டிகைகள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த பண்டிகைகளின் எண்ணிக்கை, கடந்த 2007ல், 32 நாட்களாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில், பகவான் வைகுண்டசாமி பிறந்த தினத்தை, வரையறுக்கப்பட்ட விடுமுறைகள் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதை பரிசீலித்த அரசு, பகவான் வைகுண்டசாமி பிறந்த தினத்தை, வரையறுக்கப்பட்ட விடுமுறைகள் பட்டியலில் சேர்த்து நேற்று உத்தரவிட்டது.

இதன்மூலம், பட்டியலில், 33 பண்டிகைகள் இடம்பெற்றுள்ளன.

அரசாணை நிலை எண்: 36 (பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை) நாள்: 02-03-2012
.

பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்