- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
30.1.11
23.1.11
29 கேள்விகளுடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு
இந்தியா முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பிப்ரவரி 9-ம் தேதி தொடங்குகிறது. 29 கேள்விகள் அடங்கிய பட்டியலுடன் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. ஊழியர்கள் கணக்கெடுக்க வரும்போது வீட்டில் யாரும் இல்லாவிட்டாலும்கூட தொலைபேசி மூலம், எப்போது வீட்டில் இருப்போம் என தெரியப்படுத்தலாம். அந்த நேரத்தில் கணக்கெடுப்புப் பணியாளர்கள் வந்து விவரம் சேகரிப்பார்கள்.
இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட பின், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணி 1952-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி தொடங்கியது. அதிலிருந்து ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2001-ம் ஆண்டில் நடத்தப்பட்ட பிறகு, இப்போது 2011-ம் ஆண்டு கணக்கெடுக்கும் பணிகள் பிப்ரவரி 9-ல் தொடங்குகின்றன.
1.5 லட்சம் பணியாளர்கள்: தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் 1.5 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கு பகுதி பகுதியாக பயிற்சிகள் அளிக்கும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி 9 முதல் 28-ம் தேதி வரை அவர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணிகளை மேற்கொள்வர். காலை அல்லது மாலை ஏதாவது ஒரு வேளையைத் தேர்ந்தெடுத்து கணக்கெடுக்கும் பணியைச் செய்யவுள்ளனர்.
மொத்தம் 29 கேள்விகள்: மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வீட்டில் உள்ளவர்களிடம் 29 கேள்விகள் கேட்கப்படும். இதற்கான வினாக்களை இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் தயாரித்துள்ளது. ஒரே வகையான வினாக்கள் அனைத்து மாநில மொழிகளிலும் அச்சடிடப்பட்டுள்ளன. முதலில், நபரின் பெயர் (குடும்பத் தலைவரில் இருந்து தொடங்கும்), குடும்பத் தலைவருக்கு உறவு முறை, இனம், பிறந்த தேதி மற்றும் வயது, தற்போதைய திருமண நிலை, திருமணத்தின் போது வயது, மதம், தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவரா?, மாற்றுத் திறனாளியா?, தாய்மொழி, அறிந்த பிற மொழிகள், எழுத்தறிவு நிலை, கல்வி நிலையம் செல்பவர்களின் நிலை, அதிக பட்ச கல்வி நிலை, கடந்த ஆண்டில் எப்போதாவது பணி செய்தவரா?, பொருளாதார நடவடிக்கையின் வகை, நபரின் தொழில், வியாபாரம் அல்லது சேவையின் தன்மை, வேலை செய்பவரின் வகை, பொருளீட்டா நடவடிக்கை, வேலை தேடுபவரா அல்லது வேலை செய்யத் தயாரா?, பணி செய்யும் இடத்துக்கு பயணம், கிராமத்துக்கு அல்லது நகரத்துக்கு வெளியே பிறந்தவர்களின் பிறந்த இடம், கடைசியாக வசித்த இடம், இடப்பெயர்ச்சிக்கான காரணங்கள், இடப்பெயர்ச்சிக்குப் பின் வசித்து வரும் காலம், உயிருடன் வாழும் குழந்தைகள், உயிருடன் பிறந்த குழந்தைகள், கடந்த ஓராண்டில் உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை ஆகிய 29 கேள்விகள் அடங்கிய பட்டியலுடன் அதிகாரிகள் உங்கள் வீட்டுக்கு வருவார்கள். கல்வி நிலை குறித்து கேள்விகள் கேட்கப்படுவதால் எத்தனை பேர் எழுத்தறிவு பெற்றவர்கள், பள்ளி மற்றும் உயர் கல்வியைப் பயின்றவர்கள் எத்தனை பேர் என்கிற விவரங்கள் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் தெரிய வரும்.
வீட்டில் ஆள் இல்லாவிட்டால்...: சென்னை போன்ற நகரங்களில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருப்பார்கள். வீட்டில் ஆள் இல்லாத போது கணக்கெடுப்பு அதிகாரிகள் வந்தால் கவலை கொள்ளத் தேவையில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்தின் இலவச தொலைபேசி எண்ணை (1800 110 111) தொடர்பு கொள்ளலாம். மேலும், 94456 00992 மற்றும் 94456 38279 ஆகிய செல்போன் எண்களைத் தொடர்பு கொண்டு வீட்டில் எப்போது இருப்போம் என்கிற தகவலைத் தெரிவிக்கலாம்.
நன்றி:
தலைப்புகள்:
நாளிதழ் செய்திகள்,
மக்கள் தொகை கணக்கெடுப்பு
மின்னஞ்சலில் வந்த செய்தி: இடைநிலை ஆசிரியர் ஊதியம் 01 - 06 - 2009 முதல் குறைக்கப்பட்டுள்ளது?
நமக்கு மின்னஞ்சலில் வந்துள்ள கடிதத்தை இங்கு வெளியிடுகிறோம்.
Secondary grdae teacher pay degraded?
செய்தி - 1
tias kk |
Secondary grdae teacher pay degraded?
செய்தி - 1
selva raj | 20 ஜனவரி, 2011 4:54 pm | |||||||||||||||||||||||||||||||||||||||
பெறுநர்: tiaskk@gmail.com | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
22.1.11
மேலவை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
மேலவைத் தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பட்டதாரி தொகுதிகளின் பட்டியலில் வாக்காளர்களாக 7 லட்சத்து 38 ஆயிரத்து 509 பேரும், ஆசிரியர் தொகுதிகளின் பட்டியலில் வாக்காளர்களாக ஒரு லட்சத்து 37 ஆயிரம் பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.இத்தகவலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மேலவைத் தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் 78 இடங்கள் உள்ளன. அதில், ஆசிரியர், பட்டதாரி தொகுதிகளும் அடக்கம். தமிழகம் மொத்தம் ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
பட்டியல் வெளியீடு: தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, மேலவை இறுதி வாக்காளர் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. மாநிலத்தில் உள்ள 32 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், 250 தாலுகா அலுவலகங்கள், 76 மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளைப் பொறுத்தவரை அனைத்து மண்டல அலுவலகங்களிலும் பட்டியல் இடம்பெற்றுள்ளது.
எந்தெந்த தொகுதிகளில் எத்தனை பேர்: தமிழகம் கிழக்கு மத்தியத் தொகுதியில் (திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர்) அதிகபட்சமாக 1 லட்சத்து 29 ஆயிரத்து 251 பட்டதாரிகள் தங்களை பட்டியலில் சேர்த்துள்ளனர். இந்தத் தொகுதியில் 20 ஆயிரத்து 323 ஆசிரியர்கள் பெயர்களை இணைத்துள்ளனர். சென்னை (சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்) தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 18 பட்டதாரிகளும், 24 ஆயிரத்து 62 ஆசிரியர்களும் பட்டியலில் பெயர்களை இணைத்துள்ளனர். தமிழகம் வடக்கு (வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை) தொகுதியில் 82 ஆயிரத்து 874 பட்டதாரிகளும், 19 ஆயிரத்து 698 ஆசிரியர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழகம் வடக்கு மத்திய தொகுதியில் (விழுப்புரம், சேலம், நாமக்கல், கடலூர்) 1 லட்சத்து 20 ஆயிரத்து 571 பட்டதாரிகளும், 19 ஆயிரத்து 749 ஆசிரியர்களும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளனர். தமிழகம் மேற்கு தொகுதியில் (ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர்) 82 ஆயிரத்து 527 பட்டதாரிகளும், 17 ஆயிரத்து 375 ஆசிரியர்களும் பெயர்களைச் சேர்த்துள்ளனர். தமிழகம் தெற்கு மத்தியத் தொகுதியில் 1 லட்சத்து 83 ஆயிரத்து 81 பட்டதாரிகளும், 15 ஆயிரத்து 836 ஆசிரியர்களும், தமிழகம் தெற்கு தொகுதியில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 887 பட்டதாரிகளும், 20 ஆயிரத்து 886 ஆசிரியர்களும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துள்ளனர்.
மொத்தம் எத்தனை பேர்?கடந்த 2001-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி பட்டதாரிகள், ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை 15.5 லட்சமாக இருந்தது. பட்டதாரிகளின் எண்ணிக்கை 12 லட்சம், ஆசிரியர்களின் எண்ணிக்கை 3.5 லட்சம்.2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வைத்துக் கொண்டாலும் மொத்தமுள்ள 15.5 லட்சத்தில், 8.7 லட்சம் பேர் மட்டுமே தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி:
21.1.11
19.1.11
பேரவைத் தேர்தலுக்குப் பின் மேலவை? இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு
பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மேலவை அமைக்கப்படும் எனத் தெரிகிறது. இதனிடையே, ஆசிரியர், பட்டதாரி தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் சட்ட மேலவையை அமைப்பதற்கான அறிவிப்பாணையை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், செப்டம்பர் 30-ல் வெளியிட்டார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
மேலவைக்கு 78 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் மூலம் 26 பேர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மூலம் 26 பேர், ஆசிரியர்கள்-பட்டதாரிகள் தொகுதிகள் வழியாக தலா 7 பேர், ஆளுநர் நியமனம் மூலம் 12 பேர் என மொத்தம் 78 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
அதில், ஆசிரியர்-பட்டதாரிகளுக்கென தனியாக தொகுதிகள் அமைக்கப்பட்டு அவற்றுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளன. தமிழகம் ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுகிறது.
தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 22-ம் தேதி வெளியிடப்பட்டது. திருத்தங்கள், பெயர் சேர்ப்புக்கான பணிகளை மேற்கொள்ள டிசம்பர் 7-ம் தேதி காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. மழை, வெள்ளம், திருவிழா காலங்களை கருத்தில் கொண்டு பெயர் சேர்ப்புக்கான பணிகளை மேற்கொள்ள டிசம்பர் 16-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. வாக்காளர் பட்டியல் ஜனவரி 20-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் எத்தனை வாக்காளர்கள்?
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நேரத்தில், ஆசிரியர் தொகுதிகளுக்கான வாக்காளர்கள் 70 ஆயிரத்து 923 பேர் இருந்தனர். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு 68 ஆயிரத்து 16 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். அதில் தகுதியானவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அனைவரது பெயர்களும் சேர்க்கப்பட்டால் ஆசிரியர் தொகுதிகளுக்கான வாக்காளர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரமாக இருக்கும். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, பட்டதாரி தொகுதிகளுக்கான வாக்காளர்கள் 3 லட்சத்து 13 ஆயிரத்து 648 பேர் இருந்தனர். வரைவு பட்டியல் வெளியான பிறகு அதில் பெயர் சேர்க்க 4 லட்சத்து 31 ஆயிரத்து 59 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அனைவரின் பெயரும் சேர்க்கப்பட்டால் 7 லட்சம் பேர் வாக்காளர்களாக இருப்பார்கள்.
பேரவைத் தேர்தலுக்குப் பிறகு...
சட்ட மேலவைத் தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அந்தக் கூட்டத்தில், ஆளும் திமுக, அதன் தோழமைக் கட்சியான காங்கிரஸ் மற்றும் பாமக ஆகியன மட்டுமே மேலவைக்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால், அதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் மேலவை அமைப்பதில் அரசு அவசரம் காட்டுவதாக குற்றம்சாட்டின. இந்த நிலையில், சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ஆளும் கட்சி முதல் அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இதனால், மேலவை உடனடியாக அமைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலவைக்கான தேர்தலைத் தள்ளிப்போடவே அனைத்துக் கட்சிகளும் விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இறுதி வாக்காளர் பட்டியல்:
இதனிடையே, இறுதி வாக்காளர் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்படுகிறது. இந்தப் பட்டியலுடன் வாக்குச்சாவடி விவரங்களும் வெளியாகும். ஒரு தாலுகாவுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற வகையில் அமைக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, தேர்தலுக்கான தேதி உட்பட அனைத்துப் பணிகளையும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும். ஆளும் கட்சி உள்பட அனைத்துக் கட்சிகளும் பேரவைத் தேர்தலில் தீவிரம் காட்டி வருவதால் மேலவைக்கான பணிகள் தள்ளிப் போகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி:
12.1.11
திருத்திய ஊதிய விகிதம், தனி ஊதியம் - அரசாணை வெளியீடு
அரசாணை நிலை எண்: 23 நிதி(ஊதியப்பிரிவு)த் துறை நாள்: 12-01-2011
10.1.11
இதர பிற்பட்ட வகுப்பினர்(OBC)களில் முன்னேறிய பிரிவினர் வருமானம் தொடர்பான அரசின் அறிவிக்கை
7.1.11
5.1.11
தஇஆச மாநில செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெறுகிறது.
நாள்
09-01-2011, ஞாயிறு காலை 10:00 மணி
இடம்
பிஷப் ஷூப்பர் மேல்நிலைப் பள்ளி, தெப்பகுளம், திருச்சி.
தலைமை
திரு. G. குமார், மாநிலத் தலைவர்
விளக்க உரை
திரு. M. குமரேசன், மாநிலப் பொதுச்செயலாளர்
வரவு செலவு அறிக்கை
திரு. T. உதயசூரியன், மாநிலப் பொருளாளர்
பொருள்
மேலவைத் தேர்தல்
31-12-2010 அன்று நடைபெற்ற பள்ளிக் கல்வி அமைச்சர், பள்ளிக் கல்வி இயக்குநர் உடனான பேச்சுவார்த்தை
தஇஆச மாநில தேர்தல்
இன்ன பிற...
31-12-2010 அன்று நடைபெற்ற பள்ளிக் கல்வி அமைச்சர், பள்ளிக் கல்வி இயக்குநர் உடனான பேச்சுவார்த்தை
தஇஆச மாநில தேர்தல்
இன்ன பிற...
கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும்
மத்திய அரசுக்கு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் பெறப்படும் வரை போராட்டம் தொடரும். தமிழக அரசு அறிவித்துள்ள சலுகைகள் அனைத்தும் போராட்டத்தின் விளைவாக அளிக்கப்பட்டவையாகவே கருதலாம். மேலும் போராடினால் மறுக்கப்பட்டுள்ள உரிமைகளை பெறலாம் என்பதை நிருபிப்பதாகவும் கருதலாம் என ஆசிரியர் இயக்கங்கள் அறிவித்துள்ளன.
தொடர்ந்து போராடுவோம்...
மத்திய அரசுக்கு இணையான ஊதியம் பெற்றே தீருவோம்.
.
4.1.11
ஊதிய உயர்வு - முழு விபரம்
ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் ஊதிய உயர்வு வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆறாவது ஊதியக் குழு மற்றும் அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு நியமித்த ஒரு நபர் குழு ஆகிவற்றின் மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளைக் களைந்திட வேண்டுமென்றும், மத்திய அரசு அலுவலர்களுக்கு இணையான ஊதிய விகிதங்கள் வழங்குமாறும் தமிழக அரசுக்கு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்தன.
அவற்றின் அடிப்படையில் பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் தலைவர்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு, ஆசிரியர்களின் கோரிக்கைகள் கனிவுடன் பரிசீலிக்கப்பட்டன.
தமிழக ஆசிரியர் சமுதாயத்தின்பால் கொண்டுள்ள மிகுந்த பரிவின் காரணமாக ஆசிரியர் சங்கங்கள் அளித்த கோரிக்கைகளை ஏற்று, பின்வரும் சலுகைகளை வழங்கி முதலமைச்சர் கருணாநிதி இன்று (4.1.2011) ஆணையிட்டுள்ளார்.
தற்பொழுது சாதாரண நிலையில் தர ஊதியம் ரூ.2800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தற்போது வழங்கப்படும் சிறப்புப் படி 500 ரூபாய் என்பது 750 ரூபாயாக உயர்த்தப்பட்டு, அது தனி ஊதியமாக வழங்கப்படும். இதனால் இவர்கள் மாதம் ஒன்றுக்கு தற்போது பெற்று வரும் ஊதியத்துடன் கூடுதலாக 1088 ரூபாய் பெறுவார்கள். மேலும் இத்தனி ஊதியம் வரும் காலங்களில் ஆண்டு ஊதிய உயர்வுக்கும், அகவிலைப்படிக்கும், ஓய்வூதியத்திற்கும் கணக்கில் கொள்ளப்படும்.
ரூ.4300/- மற்றும் ரூ.4500/- தர ஊதியமாக பெற்று வரும் தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலை இடைநிலை ஆசிரியர்கள் தற்போது பெற்று வரும் சிறப்பு படியான ரூ.500/- தொடர்ந்து பெறுவார்கள்.
பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தற்போது பெற்று வரும் தர ஊதியத்துடன் 200 ரூபாய் கூடுதலாகப் பெறுவார்கள். அதாவது, பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியம் 4400 ரூபாய் என்பது 4600 ரூபாய் என்றும்; முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியம் 4600 ரூபாய் என்பது 4800 ரூபாய் என்றும்; தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியம் 4300 ரூபாய் என்பது 4500 ரூபாய் என்றும்; நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியம் 4500 ரூபாய் என்பது 4700 ரூபாய் என்றும் உயர்த்தி வழங்கப்படும்.
ரூ.4600/- தர ஊதியமாகப் பெற்றுவரும் சாதாரண நிலையில் உள்ள உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தற்போது வழங்கப்பட்ட சிறப்புப்படியான 500 ரூபாய்க்குப் பதிலாக மாதம் ஒன்று 750 ரூபாய் தனி ஊதியமாகப் பெறுவார்கள். இதனால் இவர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு 1088 ரூபாய் கூடுதலாகக் கிடைக்கும்.
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தற்போது பெற்று வரும் தர ஊதியம் 5400 ரூபாய்க்கு பதிலாக 5700 ரூபாய் பெறுவார்கள். இதனால் இவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 435 ரூபாய் கூடுதலாகக் கிடைக்கும்.
தற்போது கூடுதலாக அறிவிக்கப்பட்ட பணப்பலன் 1.1.2011 முதல் நடைமுறைக்கு வரும்.
மேற்கூறிய சலுகைகளினால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ஏறத்தாழ 163 கோடி ரூபாய் தொடர் செலவினம் ஏற்படும். இதனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஏறத்தாழ 2 இலட்சத்து 73 ஆயிரம் ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள்.
நன்றி:
தலைப்புகள்:
அரசின் செய்திக் குறிப்பு,
அறிவிப்புகள்,
நாளிதழ் செய்திகள்
ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு
ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர்களுக்கு 1088 ரூபாய் கூடுதல் சம்பளமும் பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களுக்கு 200 ரூபாய் கூடுதல் சம்பளமும், தொடக்கநிலை, நடுநிலை பள்ளிதலைமையாசிரியர்களுக்கு 200 ரூபாய் கூடுதல் சம்பளமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தேர்வு, சிறப்பு நிலை இடைநிலை ஆசிரியர்கள் சிறப்பு படியாக 500 ரூபாய்தொடர்ந்து வழங்கப்படும். உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் சிறப்பு படி 500 ரூபாயிலிருந்து 750 ரூபாயாக அதிகரிக்கப்படும். மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு மாதம்435 ரூபாய் சம்பளம் கூடுதலாக கிடைக்கும்.
இதனை தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
நன்றி:
3.1.11
பொங்கல் பரிசு : அரசாணை வெளியீடு
தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு மூலம் அரசுக்கு ரூ.277 கோடி செலவாகும். ஆண்டுதோறும் வழங்கும் இந்த சிறப்பு போனஸ் இந்தமுறை ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும், தலா ரூ. 500 வீதம் வழங்கப்படுகிறது.
போனஸ் குறித்த முழுவிவரம் வருமாறு:
2009-2010ஆம் ஆண்டிற்கு "சி" மற்றும் "டி" தொகுதியை சேர்ந்த பிரிவு ஊழியர்கள் அனைவருக்கும் 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையாக ரூ. 3 ஆயிரம் உச்சவரம்பிற்குட்பட்டும், "ஏ" மற்றும் "பி" தொகுதியை சேர்ந்த ஊழியர்களுக்கு அனைவருக்கும் ரூ. ஆயிரம் சிறப்பு போனசும், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ. 500 ம் வழங்கப்படுகிறது. நீண்ட நாளாக கோரிக்கை வைத்த முன்னாள் கிராம அலுவலர்களுக்கு ரூ. 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும்.
சத்துணவு - அங்கன்வாடி பணியாளர்கள்:
ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்த சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிலையான ஊதியம் பெற்றுவந்த முழு நேர மற்றும் பகுதிநேரப் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெற்று வந்த பணியாளர்கள், தொகுப்பூதியம் / சிறப்புக் கால முறை ஊதியம் பெற்று வந்த சத்துணவுத் திட்டப் பணியாளர்கள் / ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் , கிராம உதவியாளர்கள் , ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் பணிபுரிந்து வரும் சிறப்பு கால முறை ஊதிய விகிதத்தில் (ஸ்பெஷல் டைம் ஸ்கேல் பே) உள்ள பஞ்சாயத்து உதவியாளர்கள் , மக்கள் நலப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் மற்றும் ஒரு பகுதி தினக்கூலிகளாக பணியாற்றி பின்னர் தொடர்ந்து நிரந்தர பணியாளர்களாக பணியாற்றியவர்களுக்கும் சிறப்பு மிகை ஊதியம் ரூ.1000/- (ரூ. ஆயிரம் மட்டும்) வழங்கப்படும்.
ரூ.277 கோடி செலவு:
உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக்குழு / அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு / இந்திய வோளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் சம்பள விகிதம் மற்றும் அனைத்திந்தியப் பணி விதிமுறைகளின் கீழ் வரும் அனைவருக்கும் இந்த போனஸ் வழங்கப்படும்.
இதனால் அரசுக்கு இந்த ஆண்டில் சுமார் ரூ.277 கோடி செலவாகும். இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபலமான இடுகைகள்
-
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி ப...
-
பிற்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, சீர்மரபினர் இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இணையதளம் மூலம் இந்தாண்டு உதவி தொகை வழங்கப்படும...
-
ஏற்கனவே அறிவித்தபடி, பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா காலணி மற்றும் புத்தகப் பைகளை வழங்க, ரூ.491 கோடியை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு...
-
1. அறிவியல் மையங்கள், கண்காட்சி ஆகியவை அகச் சிந்தனையை வளர்க்கும் சில வழிகள் என்று கூறியவர் - கூவர். 2. மாணவனின் சிந்தனை வினாவிற்கான விடைகள...
-
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், கன்னியாகுமரி மாவட்டக் கிளையின் வலைத்தளம் இது. சங்கத்தின் செயல்பாடுகள் இங்கே வெளியிடப்படும்.
-
பொது மாறுதல் கலந்தாய்வுக்கு(கவுன்சிலிங்) விண்ணப் பங்கள் பெறுவது நிறுத்தப்பட்டுள்ளதால் ஆசிரிய, ஆசிரியைகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ...
-
பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம். தமிழ்நாட்டிற்கும், தமிழ்ச் சமூகத்திற்கும், தமிழுக்கும் தன்னிகரற்ற த...