தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

4.1.11

ஊதிய உயர்வு - முழு விபரம்

ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் ஊதிய உயர்வு வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
ஆறாவது ஊதியக் குழு மற்றும் அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு நியமித்த ஒரு நபர் குழு ஆகிவற்றின் மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளைக் களைந்திட வேண்டுமென்றும், மத்திய அரசு அலுவலர்களுக்கு இணையான ஊதிய விகிதங்கள் வழங்குமாறும் தமிழக அரசுக்கு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்தன.

அவற்றின் அடிப்படையில் பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் தலைவர்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு, ஆசிரியர்களின் கோரிக்கைகள் கனிவுடன் பரிசீலிக்கப்பட்டன.


தமிழக ஆசிரியர் சமுதாயத்தின்பால் கொண்டுள்ள மிகுந்த பரிவின் காரணமாக ஆசிரியர் சங்கங்கள் அளித்த கோரிக்கைகளை ஏற்று, பின்வரும் சலுகைகளை வழங்கி முதலமைச்சர் கருணாநிதி இன்று (4.1.2011) ஆணையிட்டுள்ளார்.

தற்பொழுது சாதாரண நிலையில் தர ஊதியம்  ரூ.2800 பெறும்  இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தற்போது வழங்கப்படும் சிறப்புப் படி 500 ரூபாய் என்பது 750 ரூபாயாக உயர்த்தப்பட்டு, அது தனி ஊதியமாக வழங்கப்படும். இதனால் இவர்கள் மாதம் ஒன்றுக்கு தற்போது பெற்று வரும் ஊதியத்துடன் கூடுதலாக 1088 ரூபாய் பெறுவார்கள்.  மேலும் இத்தனி ஊதியம் வரும் காலங்களில் ஆண்டு ஊதிய உயர்வுக்கும்,  அகவிலைப்படிக்கும், ஓய்வூதியத்திற்கும் கணக்கில் கொள்ளப்படும்.

ரூ.4300/- மற்றும் ரூ.4500/- தர ஊதியமாக பெற்று வரும் தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலை இடைநிலை ஆசிரியர்கள் தற்போது பெற்று வரும் சிறப்பு படியான ரூ.500/- தொடர்ந்து பெறுவார்கள்.

பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தற்போது பெற்று வரும் தர ஊதியத்துடன் 200 ரூபாய் கூடுதலாகப் பெறுவார்கள். அதாவது, பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியம் 4400 ரூபாய் என்பது 4600 ரூபாய் என்றும்; முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியம் 4600 ரூபாய் என்பது 4800 ரூபாய் என்றும்;  தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியம் 4300 ரூபாய் என்பது 4500 ரூபாய் என்றும்; நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியம் 4500 ரூபாய் என்பது 4700 ரூபாய் என்றும் உயர்த்தி வழங்கப்படும். 

ரூ.4600/- தர ஊதியமாகப் பெற்றுவரும் சாதாரண நிலையில் உள்ள உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தற்போது வழங்கப்பட்ட சிறப்புப்படியான 500 ரூபாய்க்குப் பதிலாக மாதம் ஒன்று 750 ரூபாய் தனி ஊதியமாகப் பெறுவார்கள். இதனால் இவர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு 1088 ரூபாய் கூடுதலாகக் கிடைக்கும். 

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தற்போது பெற்று வரும் தர ஊதியம் 5400 ரூபாய்க்கு பதிலாக 5700 ரூபாய் பெறுவார்கள்.  இதனால் இவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 435 ரூபாய் கூடுதலாகக் கிடைக்கும்.

தற்போது கூடுதலாக அறிவிக்கப்பட்ட பணப்பலன் 1.1.2011 முதல் நடைமுறைக்கு வரும். 

மேற்கூறிய சலுகைகளினால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ஏறத்தாழ 163 கோடி ரூபாய் தொடர் செலவினம் ஏற்படும்.  இதனால்  அரசு மற்றும் அரசு  உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஏறத்தாழ 2 இலட்சத்து 73 ஆயிரம் ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள்.

 நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்