தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

22.1.11

மேலவை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு


மேலவைத் தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பட்டதாரி தொகுதிகளின் பட்டியலில் வாக்காளர்களாக 7 லட்சத்து 38 ஆயிரத்து 509 பேரும், ஆசிரியர் தொகுதிகளின் பட்டியலில் வாக்காளர்களாக ஒரு லட்சத்து 37 ஆயிரம் பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.இத்தகவலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்  குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மேலவைத் தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் 78 இடங்கள் உள்ளன. அதில், ஆசிரியர், பட்டதாரி தொகுதிகளும் அடக்கம். தமிழகம் மொத்தம் ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

பட்டியல் வெளியீடு: தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, மேலவை இறுதி வாக்காளர் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. மாநிலத்தில் உள்ள 32 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், 250 தாலுகா அலுவலகங்கள், 76 மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளைப் பொறுத்தவரை அனைத்து மண்டல அலுவலகங்களிலும் பட்டியல் இடம்பெற்றுள்ளது.

எந்தெந்த தொகுதிகளில் எத்தனை பேர்: தமிழகம் கிழக்கு மத்தியத் தொகுதியில் (திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர்) அதிகபட்சமாக 1 லட்சத்து 29 ஆயிரத்து 251 பட்டதாரிகள் தங்களை பட்டியலில் சேர்த்துள்ளனர். இந்தத் தொகுதியில் 20 ஆயிரத்து 323 ஆசிரியர்கள் பெயர்களை இணைத்துள்ளனர். சென்னை (சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்) தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 18 பட்டதாரிகளும், 24 ஆயிரத்து 62 ஆசிரியர்களும் பட்டியலில் பெயர்களை இணைத்துள்ளனர். தமிழகம் வடக்கு (வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை) தொகுதியில் 82 ஆயிரத்து 874 பட்டதாரிகளும், 19 ஆயிரத்து 698 ஆசிரியர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழகம் வடக்கு மத்திய தொகுதியில் (விழுப்புரம், சேலம், நாமக்கல், கடலூர்) 1 லட்சத்து 20 ஆயிரத்து 571 பட்டதாரிகளும், 19 ஆயிரத்து 749 ஆசிரியர்களும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளனர். தமிழகம் மேற்கு தொகுதியில் (ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர்) 82 ஆயிரத்து 527 பட்டதாரிகளும், 17 ஆயிரத்து 375 ஆசிரியர்களும் பெயர்களைச் சேர்த்துள்ளனர். தமிழகம் தெற்கு மத்தியத் தொகுதியில் 1 லட்சத்து 83 ஆயிரத்து 81 பட்டதாரிகளும், 15 ஆயிரத்து 836 ஆசிரியர்களும், தமிழகம் தெற்கு தொகுதியில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 887 பட்டதாரிகளும், 20 ஆயிரத்து 886 ஆசிரியர்களும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துள்ளனர். 

மொத்தம் எத்தனை பேர்?கடந்த 2001-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி பட்டதாரிகள்,  ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை 15.5 லட்சமாக இருந்தது. பட்டதாரிகளின் எண்ணிக்கை 12 லட்சம், ஆசிரியர்களின் எண்ணிக்கை 3.5 லட்சம்.2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வைத்துக் கொண்டாலும் மொத்தமுள்ள 15.5 லட்சத்தில், 8.7 லட்சம் பேர் மட்டுமே தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்