ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. 
இடைநிலை ஆசிரியர்களுக்கு 1088 ரூபாய்  கூடுதல் சம்பளமும் பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களுக்கு 200 ரூபாய் கூடுதல்  சம்பளமும், தொடக்கநிலை, நடுநிலை பள்ளிதலைமையாசிரியர்களுக்கு 200 ரூபாய்  கூடுதல் சம்பளமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தேர்வு, சிறப்பு  நிலை இடைநிலை ஆசிரியர்கள் சிறப்பு படியாக 500 ரூபாய்தொடர்ந்து  வழங்கப்படும். உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் சிறப்பு படி 500  ரூபாயிலிருந்து 750 ரூபாயாக அதிகரிக்கப்படும்.  மாவட்ட கல்வி  அலுவலர்களுக்கு மாதம்435 ரூபாய் சம்பளம் கூடுதலாக  கிடைக்கும். 
இதனை தமிழக  அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. 
நன்றி: 


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக