தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

3.1.11

பொங்கல் பரிசு : அரசாணை வெளியீடு

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு மூலம் அரசுக்கு ரூ.277 கோடி செலவாகும். ஆண்டுதோறும் வழங்கும் இந்த சிறப்பு போனஸ் இந்தமுறை ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும், தலா ரூ. 500 வீதம் வழங்கப்படுகிறது. 

போனஸ் குறித்த முழுவிவரம் வருமாறு: 
 
2009-2010ஆம் ஆண்டிற்கு "சி" மற்றும் "டி" தொகுதியை சேர்ந்த பிரிவு ஊழியர்கள் அனைவருக்கும் 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையாக ரூ. 3 ஆயிரம் உச்சவரம்பிற்குட்பட்டும், "ஏ" மற்றும் "பி" தொகுதியை சேர்ந்த ஊழியர்களுக்கு அனைவருக்கும் ரூ. ஆயிரம் சிறப்பு போனசும், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ. 500 ம் வழங்கப்படுகிறது. நீண்ட நாளாக கோரிக்கை வைத்த முன்னாள் கிராம அலுவலர்களுக்கு ரூ. 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும்.


சத்துணவு - அங்கன்வாடி பணியாளர்கள்: 

ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்த சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிலையான ஊதியம் பெற்றுவந்த முழு நேர மற்றும் பகுதிநேரப் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெற்று வந்த பணியாளர்கள், தொகுப்பூதியம் / சிறப்புக் கால முறை ஊதியம் பெற்று வந்த சத்துணவுத் திட்டப் பணியாளர்கள் / ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் , கிராம உதவியாளர்கள் , ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் பணிபுரிந்து வரும் சிறப்பு கால முறை ஊதிய விகிதத்தில் (ஸ்பெஷல் டைம் ஸ்கேல் பே) உள்ள பஞ்சாயத்து உதவியாளர்கள் , மக்கள் நலப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் மற்றும் ஒரு பகுதி தினக்கூலிகளாக பணியாற்றி பின்னர் தொடர்ந்து நிரந்தர பணியாளர்களாக பணியாற்றியவர்களுக்கும் சிறப்பு மிகை ஊதியம் ரூ.1000/- (ரூ. ஆயிரம் மட்டும்) வழங்கப்படும்.


ரூ.277 கோடி செலவு:

 உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக்குழு / அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு / இந்திய வோளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் சம்பள விகிதம் மற்றும் அனைத்திந்தியப் பணி விதிமுறைகளின் கீழ் வரும் அனைவருக்கும் இந்த போனஸ் வழங்கப்படும்.

இதனால் அரசுக்கு இந்த ஆண்டில் சுமார் ரூ.277 கோடி செலவாகும். இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்